Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முப்பரிமாண விளையாட்டு செய்யும் முழுமையான டூடொரியல்

Posted: 23 May 2015 01:06 PM PDT

நண்பர்களே இன்றுமுதல் முப்பரிமாண விளையாட்டு செய்யும்  ஒருசில மெபொருட்கள் பற்றியும் அதன் கற்பித்தலூடன வழிமுறை காட்டியும் இங்கே இடம் பெறும். நான் சொந்தமாக இந்த டியூடொரியலை செய்ய முயன்று இயலாமல் கைவிட்டிருகிறேன் அத்னால் இந்த தடவை யூ ரியூப் ல் ஒரு வேறுமொழி டூடோரியலைகண்டபோது அது என்னைக் கவர்ந்ததால் அதன் தமிழாக்கத்தை குறிப்பிட்ட  ஒருஜினலை பாதிக்காத வண்ணம் தரலாமென எண்ணியுள்ளேன் எப்படி இருக்கிறது என வழிமொழியுங்கள் இப்போது முதலாவது வீடியோ mega kerma 3D gamemaker www.megakerma.com

நான் ரசித்தவை - மிமீஸ்

Posted: 23 May 2015 12:57 PM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்

Posted: 23 May 2015 12:57 PM PDT

திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால்  இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது ...

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Posted: 23 May 2015 12:45 PM PDT

துப்­பாக்கிப் பிர­யோ­க­மொன்றின் போது நப­ரொ­ரு­வரின் மார்பை நோக்கி வந்த துப்­பாக்கி ரவை, சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் தடுக்­கப்­பட்­டதால் அவர் உயிர் தப்­பிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. செஷி­யரைச் சேர்ந்த டானியல் கென்­னடி என்ற 25 வயது நபரே இவ்­வாறு ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் உயிர்­தப்­பி­யுள்ளார். உள்ளூர் நீர் விநி­யோ­கத்தை குறும்­பாக நிறுத்­திய இளை­ஞர்­க­ளு­ட­னான வாக்­கு­வா­தத்தின் போதே கென்­னடி மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. சுமார் ...

என்னைப்பற்றி - ஷோபனா !

Posted: 23 May 2015 12:42 PM PDT

பெயர்:shobana
சொந்த ஊர்:usa
ஆண்/பெண்:female
ஈகரையை அறிந்த விதம்: சொந்த muyarchi
பொழுதுபோக்கு: புத்தகம் வாசிப்பது மற்றும் கேட்பது
தொழில்: இல்லத்தரசி
மேலும் என்னைப் பற்றி: எல்லா வித பூக்சும் படிப்பேன், தமிழ் ட்ய்பிங் தெரியாது அட்ஜஸ்ட் ப்ளீஸ்.

108 எண்ணுக்குத் தனிச் சிறப்பு உண்டா?

Posted: 23 May 2015 12:36 PM PDT

எட்டு எட்டா உலக வாழ்வை பிரிச்சுக்கோ என்பார்கள். தள்ளிப்போயிட்டே இருக்கும் என்மகளுக்கு திருமணம் நடந்தா 108 தேங்காய் உடைக்கிறேன் சாமி என்று வேண்டிக் கொள்வார்கள். கோயில்களில் வடிக்கப்படும் தெய்வ சொரூபங்களை பூஜிக்கும்போது, மந்திரங்களை 108 முறை ஜபிப்பார்கள். திருவிளக்கின் சுடரில் சுவாமியை ஆவாகம் செய்யும் தருணங்களிலும் 108 முறை மந்திரங்களை ஜபிப்பார்கள். பரமாத்மாவை, ஜீவாத்மா சென்று தரிசிக்கும் ஆன்மிக வாய்ப்பை 108 வைணவத் தலங்கள் அருளுகின்றன. இறைவனுக்கும் அவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் இடையேயான ...

நினைவுகள்

Posted: 23 May 2015 12:28 PM PDT

உன்னைப் பற்றி எழுதுவதற்கு நான் என்றைக்கும் வார்த்தைகளை தேடியதே இல்லை கண்மூடி அமர்ந்து "உனக்காக" என்று எழுத தொடங்கும் போதே கவிதை ஆரம்பமாகி முடிந்தும் விடுகிறது ஒரு மெல்லிசை நம்மை கண்மூட வைத்து அதனோடே கூட்டிச் செல்வது போல் உன்னைப் பற்றிய நினைவுகள் கை நிறைய வசந்த காலத்துடன் எப்போது போனாலும் எனை அள்ளித் தழுவுகின்றன சொல்லப் போனால் நிஜத்தை விட கற்பனை கனவாயினும் கலைத்துவமாகவே தோன்றுகிறது நாள் பொழுதும் உனையே பேசுவது எனைப் பொருத்தமட்டில் சர்க்கரை பாகில் ...

இது எப்படி இருக்கு

Posted: 23 May 2015 12:27 PM PDT

10th ரிசல்ட் பாத்துக்கொண்டிருந்த ஒரு பையன்கிட்ட தம்பி என்ன மார்க்குன்னு கேட்டேன் 490ன்னு சொன்னான்... நான் ஒவ்வொரு பாடமா மார்க் கேட்டேன் TAMIL - 70 ENG - 66 MATH - 75 SCI - 80 SOSC - 70 ன்னு சொன்னான் என்னப்பா கூட்டுனா 361 தானே வருது 490ன்னு சொல்றியே.. உன் பேரு என்னப்பான்னு கேட்டேன் குமாரசாமின்னு சொல்லிட்டு என்னை நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு போறான்........ ==========================================================================================

கூகுள் டோன் - குரோமில் ஒலி வடிவில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்

Posted: 23 May 2015 12:25 PM PDT

ஒலி வடிவில் கூகுள் டோன் என்னும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் குரோம் கூகுள் குரோம் புதிதாக கூகுள் டோன் என்னும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கூகுள் டோன் சேவை மூலம் ஆடியோவாக அதாவது ஒலி வடிவில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த முதலில் கூகுள் டோன் நீட்டிப்பு சேவையை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். பிரவுசர் டூல்பாரில் இந்த சேவை நீல நிற பட்டனாக குடிகொண்டு விடும். அதன் பிறகு எப்போது இணையதள முகவரிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலும் சரி, நீல நிற பட்டனை கிளிக் செய்தால் ...

தேவதை மகளும், நண்பர்களும்!

Posted: 23 May 2015 12:19 PM PDT

நள்ளிரவின் கரிய இருட்டில் அந்த வீட்டைக் கண்டுபிடித்ததே பெரிய விஷயமாய்ப் பட்டது பட்டாபிக்கு. "இனிமேல் நடந்து போய் நம்ம குரூப் மாணவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அவங்களும் நம்மைத் தேடிகிட்டுத்தான் இருப்பாங்க. அதனால ராத்திரி இந்த இடத்துல பாதுகாப்பா இருப்போம். விடிஞ்சதும் ஈஸியா அவங்க கூட சேர்ந்துடலாம். என்ன சொல்றீங்க?" என்று கேட்டான். நேசமலரும், ஷிவானியும் அதிக பயத்தில் இருந்தார்கள். அச்சுதனுக்கும் ஒரே உதறலாய்த்தான் இருந்தது. இதில் அலட்சியமாய் இருந்தது ஜஸ்டின் மட்டும்தான். "இதுல என்ன இருக்கு. ...

புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!

Posted: 23 May 2015 12:14 PM PDT

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வசித்து வந்தார். அவர் மிகவும் திமிர் பிடித்தவர். ஊர் மக்கள் அனைவரும் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பது அவருடைய எண்ணம். அந்த கிராமத்தில் மூஸு எனும் சிறுவன் வசித்து வந்தான். அவன் மிகவும் புத்திக்கூர்மை உடையவன். ஒரு நாள் பண்ணையார் தனது குதிரையில் அமர்ந்து கிராமத்தைச் சுற்றி வந்தார். ஊர் மக்கள் அவரைக் கண்டால் நடுங்குவார்கள். அதனால் அவர் எதிரே வருவதைக் கண்டவுடன் அவரை வணங்க ஆரம்பித்தார்கள். மூஸு மட்டும் அவரை வணங்கவில்லை. இதைக் கவனித்த அந்தப் பண்ணையார் ...

உரம் விழுதல் என்றால் என்ன?

Posted: 23 May 2015 12:12 PM PDT

சில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும்."பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதை உடனடியாக கவனிக்காமல் இருந்துவிடக்கூடாது. அதனால் உண்டாகும் பின்விளைவுகள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்தான கட்டத்துக்குப் போகலாம்'' என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம். பச்சிளம் குழந்தைகளுக்கு உரம் விழுவதும் ...

ஆண் பேச்சு, பெண் பேச்சு - ஓர் ஒப்பீடு!

Posted: 23 May 2015 12:06 PM PDT

ஒரே உரையாடலை ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமாக அர்த்தம் செய்துகொள்வதால்தான் குழப்பம் ஏற்படுகிறது. ரயில் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு எதிரேயிருந்த இருக்கையில் கணவனும் மனைவியும் அமர்ந் திருந்தனர். இரண்டு பேருக்கும் வயது நாற்பதுக்குள் இருக்கும். ஒரு இளைஞர் 'காபி… காபி' என்று குரல்கொடுத்தவாறு காபி டிரம்முடன் வந்தார். "காபி சாப்பிடுகிறீர்களா?'' என்று மனைவி கேட்டார். "வேண்டாம்" என்று தலையசைத்தார் கணவர். உடனே கோபத்துடன் திரும்பி உட்கார்ந்துகொண்டார் மனைவி. அதைப் பார்த்த கணவர், இவள் எதற்கு முகத்தைத் ...

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

Posted: 23 May 2015 12:04 PM PDT

தமிழகத்தில் பிறந்தவர். அறிவாளிகளின் தத்துவ விசாரணையாக இயங்கிவந்த விஷயத்தை எல்லாம் ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றியவர். சொல்வதன் சிறப்பு செயலில்தானே இருக்கிறது! அதன்படி வாழ்ந்த ஞான சூரியன். இவர் தோற்றுவித்த 'விசிஷ்டாத்வைதம்' என்பது வெறும் கொள்கை முழக்கமல்ல; வழிகாட்டும் தத்துவ விளக்கம். முற்போக்கான சீரிய நெறி! தீண்டாமை ஒழிப்பு சட்டரீதியாக கடந்த நூற்றாண்டில் செயல்பட்டதென்றாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆலயங்களில் ஹரிஜனப் பிரவேசத்துக்கு வழிவகுத்தவர் என்பது சரித்திர உண்மை. ராம ராஜ்யம் என்று காந்தியடிகள் ...

கொளுத்தும் வெயிலில் குளிர்பானம் குடிக்கலாமா?

Posted: 23 May 2015 12:01 PM PDT

கொளுத்தும் இந்தக் கோடை நாட்களில், குளிரான இடம் தேடி ஓடுவதும், குளிராக எதாவது பருக விரும்புவதும் எல்லோரது இயல்பு. அதனால் கடைகளில் வண்ணவண்ணமாய் வசீகரிக்கும் குளிர் பானங்களை பலரும் போட்டிபோட்டு அருந்துகிறார்கள். தாகம் வாட்டும் வேளையில் 'ஜில்'லென்று ஏதாவது அருந்தினால் போதும் என்று நினைக் கிறார்கள். வீடுகளில் குளிர்பதனப் பெட்டிகளிலும் லிட்டர் கணக்கில் குளிர்பானங்களை வாங்கி அடுக்குகிறார்கள். ஆனால் வெயில் நேரத்தில் இந்த செயற்கைக் குளிர்பானங்களை அருந்துவது நல்லதா? இவற்றால் உடம்புக்கு ஏதும் நன்மை, ...

இந்நாட்டு மன்னர் - சிறுகதை

Posted: 23 May 2015 12:01 PM PDT

பிரமிப்பாய் இருந்தது ராமநாதனுக்கு. கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களுக்குள் ஒருவன் பொருளாதார நிலை இப்படிக் கூட மாற முடியுமா என்ற வியப்பில் ஆழ்ந்து நின்றார். நகரத்தின் மையப்பகுதியில் வீடு, கார்,ஆள், அம்பலம் என்று எதிலும் பெருமை. எப்படி இருந்த பழனி, எப்படி மாறிவிட்டான்? "வள்ளி… அது… வந்து.. பழைய சாதம் மிச்சம் இருக்கு.. வாங்கிக்கிறியா?" "எதுக்கு மேகலா அக்கா இப்படித் தயங்கறீங்க. வெறும் தண்ணியைக் குடிச்சு வயத்தை நிரப்பிக்கிறதுக்கு, பழைய சாதம் அமிர்தமாச்சே…? போடுங்க தாராளமாய்" தன் மனைவிக்கும், ...

வயலோடு உறவாடி…

Posted: 23 May 2015 11:56 AM PDT

முற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து விளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்….. பார்த்துப் பார்த்து எடுத்தது எல்லாம் ஸ்லைட் ஷோவில் ஒவ்வொன்றாக விரிந்தன. "நுணுக்கமாய் கவனிச்சு எடுத்திருக்கீங்க. ம்ம். நல்லாத்தானிருக்கு. ஆனா வளச்சு வளச்சு ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 23 May 2015 11:33 AM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்!

Posted: 23 May 2015 11:30 AM PDT

விமானத்தில் செல்வோரும் கட்சியினரின் ப்ளெக்ஸ் போர்டு மூலம் தரை இறங்கும் அளவிற்கு வானுயர ப்ளெக்ஸ் போர்டுகள், காது கேட்காதவரும் காது அடைக்க வைக்கும் கட்சி கானாப் பாடல்கள், தெருவெங்கும் கட்சிக் கொடிகள், சிங்கப்பூர் சாலையை நினைவுபடுத்தும் துப்புரவு பணிகள், வழி நெடுக காது கிழியும் கேரளா செண்டை மேளம், குத்துப் பாட்டை கண்டுபிடித்தவர்களையே கலங்க வைக்கும் குத்தாட்டங்கள், இலவச டாஸ்மாக் சரக்கு, பிரியாணி இவை எல்லாம் நவ நாகரீக அரசியலின் அடையாளமாக மாறி விட்டன. இவை அனைத்தையும் நேற்று ஒரே இடத்தில காணக்கிடைத்த ...

5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Intex Cloud M5 II ஸ்மார்ட்போன்

Posted: 23 May 2015 11:04 AM PDT

இன்டெக்ஸ் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் கிளவுட் தொடர் ஸ்மார்ட்போனான கிளவுட் M5 II ஸ்மார்ட்போனை ரூ.4,799 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக Flipkart வலைத்தளத்தில் இருந்து கிடைக்கும். டூயல் சிம் (WCDMA+GSM) ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. பட்டியலின் படி, இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து ...

'தமிழில்' கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Posted: 23 May 2015 10:53 AM PDT

நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள். தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!   இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! http://goo.gl/RBNbnk http://eegarai.org/apps/Kitchen4All.apk http://eegarai.com/apps/Kitchen4All.apk http://goo.gl/mKFgVO குறிப்பு: இன்று 23.5.2015 முதல் ...

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Posted: 23 May 2015 09:56 AM PDT

* எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும். * ''எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வார்கள்,'' என்று புராதன மனு கூறியுள்ளார். * பெண்களின் முன்னேற்றமும், பொதுமக்களின் விழிப்பும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும்.அதன் பிறகுதான் நமது நாட்டிற்கு உண்மையான நன்மை ஏதாவது ஏற்படும். * மாதர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் ...

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:46 AM PDT

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி ! தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டுவோம் ! தமிழோடு ஆங்கிலக் கலப்பின்றிப் பேசிடுவோம் ! ஆரம்பக்கல்வியை தமிழில் மட்டும் வழங்குவோம் ! அதன் பின் மற்ற மொழிகள் எதுவும் படிக்கட்டும் ! அப்பா அம்மா என்றழைப்பதைக் கட்டாமாக்கிடுவோம் ! டாடி மம்மி என்றால் தண்டத்தொகை வாங்கிடுவோம் ! குழந்தைகளுக்கு பெயர்களை நல்ல தமிழில் சூட்டுவோம் ! குழந்தைகளுக்கு சிந்திக்க தமிழைப் பயிற்றுவிப்போம் ! ஊடகங்களின் தமிழ்க் கொலையைத் தடுத்திடுவோம் ! உரிமைகளைத் தமிழ் ...

விவேகானந்தர் மொழி: பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது

Posted: 23 May 2015 09:39 AM PDT

"என் சோகம் சொல்லி மாளாது" - என்று சொல்வது ஆன்மிகம் ஆகாது. அது வெறும் காட்டுமிராண்டித்தனம். ஒவ்வொருவனுக்கும் சுமக்க அவனது சொந்தச் சுமை உள்ளது. நீங்கள் சோகமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள். பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது. ஒருபோதும் பலவீனர்களாக இருக்காதீர்கள். வலிமை படைத்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுள் அளவற்ற பலம் இருக்கிறது. இல்லாவிடில் எப்படி எதனையும் வெற்றிகொள்ள முடியும்? எப்படிக் கடவுளை நெருங்க முடியும்? அதேசமயம் அளவுக்கு ...

ஹைக்கூ கவிஞர் இரா இரவி

Posted: 23 May 2015 09:12 AM PDT

யானை வரும் பின்னே
மணி ஓசை வரவில்லை முன்னே
காட்டு யானை !

பாதாளம் மட்டுமல்ல
மேலோகமும் பாயும்
பணம் !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:12 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிரித்துக் கொண்டே இரு
கலங்காதே கற்பிக்கும்
மலர்கள் !

மரணிக்கும் வேளையிலும்
சிரிக்கும்
மலர்கள் !

ஒரு நாள் வாழ்க்கை
ஓயாத புன்னகை
மலர்கள் !

ஒவ்வொரு மலரும்
ஒவ்வொரு
அழகு !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:11 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பிறந்தது எங்கோ ?
இணைந்தன இங்கே !
மலர்கள் !

பிரிந்து இருந்தவைகளை
இணைத்தது நார்
மலர்கள் !

பயணம் எங்கோ
கோவிலுக்கா ? மயானத்திற்கா ?
மாலை !

யாருக்கோ ?
மணமக்களுக்கா ? மரணித்தவர்களுக்கா ?
மாலை !
ஆடாதே மனிதா
ஆடி உணர்த்தியது
மாலை !

ஹைக்கூ கவிஞர் இரா இரவி

Posted: 23 May 2015 09:10 AM PDT

ரசித்துப் பார்த்தால்
அழகுதான்
எருக்கம் பூவும் !

ஹைக்கூ கவிஞர் இரா இரவி

Posted: 23 May 2015 09:10 AM PDT

யானை வரும் பின்னே
மணி ஓசை வரவில்லை முன்னே
காட்டு யானை !

பாதாளம் மட்டுமல்ல
மேலோகமும் பாயும்
பணம் !

கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:09 AM PDT

கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி ! பிராத்தனையிலும் சிறந்தது பிறர் கண்ணீர் துடைப்பது ! நல்ல கணவன் மனைவியைக் கண்ணீரின்றிக் காப்பவன் ! இறப்பிற்கு ஊரே அழுதால் உத்தமன் ! இறப்பிற்கு குடும்பம் மட்டுமே அழுதால் தன்னலமிக்கவன் ! பிறப்பில் தொடங்கி இறப்பு வரை தொடர்கிறது ஏழைகளுக்கு கண்ணீர் ! துகிலுரிபவனையும் கண் கலங்க வைப்பாள் வெங்காயம் ! சோகத்தில் மட்டுமல்ல மகிழ்விலும் வரும் கண்ணீர் ! . சிரிக்க வைப்பது சிறப்பு அழ வைப்பது வெறுப்பு ! அழுது பிறக்கும் ...

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:09 AM PDT

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி ! தோல்விக்குத் துவண்டு விடும் சராசரியல்ல தோல்விக்குப் பின்னும் முயன்று வெல்வோம் ! ஆயிரம் முறை முயன்று வென்றிட்ட அற்புத எடிசன் வரலாறு அறிந்தவர்கள் நாங்கள் ! பதினேழு முறை முயன்று வென்றிட்ட பண்டைய கசினிமுகமது கதை படித்தவர்கள் நாங்கள் ! ஒரே ஒரு முறை முயன்று தோற்றதும் ஓடி விடும் கோழைகள் அல்ல நாங்கள் ! வீரத்தை இந்த உலகிற்கு கற்பிதா ஆசான் வீரத்தின் அடையாளமாக விளங்குபவர் நாங்கள் ! இந்தமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெல்வோம் ! எல்லாமுறையும் ...

கொடியது மது !கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:08 AM PDT

கொடியது மது !கவிஞர் இரா .இரவி ! மது மதியை இழக்க வைக்கும் ! மது கல்லறைக்கு விரைவில் அனுப்பும் ! மது தொடாமல் இருந்தால் சிறப்பாய் ! மது தொட்டு விட்டால் சீரழிவாய் ! மது சிந்தனையை சிதைத்து விடும் ! மது சீரழிவை விதைத்து விடும் ! மது ஆற்றலை அழித்து விடும் ! மது அறிவை குறைத்து விடும் ! மது தவறான வழியைக் காட்டும் ! மது தாயையும் மதிக்க மறுக்கும் ! மது குழந்தைகளை வெறுக்க வைக்கும் ! மது குவளயம் தூற்ற வைக்கும் ! மது கேடுகளை வரவழைக்கும் ! மது கோபத்தை அழைத்து வரும் ...

அப்பா ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:06 AM PDT

அப்பா ! கவிஞர் இரா .இரவி ! திடிரென ஒரு நாள் அப்பா காணாமல் போனார் ! திக்குத் தெரியாத காட்டில் விட்டது போலானேன் ! காவல் நிலையம் சென்று புகார் தந்தேன் ! காவலரோடு சென்று தம்பியும் நானும் தேடினோம் ! கடவுள் நம்பிக்கை இல்லாத நான் இராமேஸ்வரம் கோயில் பழனி கோயில் என்று சென்று தேடினேன் ! முதியோர் விடுதிகள் தோறும் தேடினோம் ! மதுரை விடுதிகள் அனைத்திலும் தேடினோம் ! அரசு ராசாசி மருத்துவமனையிலிருந்து அழைப்பார்கள் ! அங்குள்ள பிணவறைக்கு பலமுறை சென்று பார்த்தேன் ! நடமாடும் நடைப்பிணமாக ...

திருக்குறளில் ஆளுமைத் திறன் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 09:03 AM PDT

திருக்குறளில் ஆளுமைத் திறன் ! கவிஞர் இரா .இரவி ! eraeravik@gmail.com திருக்குறள் உலக இலக்கியங்களில் தலைசிறந்த இலக்கியம் என்று உலக அறிஞர்கள் பலர் எழுதி உள்ளனர். திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் திருவள்ளுவர். உலகில் தமிழ்மொழியை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து வைத்து இருக்கிறார்கள். காரணம் உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட ஒப்பற்ற நூல் திருக்குறள். ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 May 2015 08:58 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வருந்தாதே தேற்று மனதை சாதனையாளர்கள் பலர் பத்தில் தோற்றவர்கள் ! ( நான் உள்பட ) எப்பக்கம் திருப்பினாலும் மேல்நோக்கியே எரியும் நெருப்பு வறுமையிலும் செம்மையாக ஏழைகள் ! கிளைகள் வெட்டிட வளரும் பனை பாராட்டிட மலரும் குழந்தை ! காகம் அமர பனம்பழம் விழுந்த கதை சோதிடர் சொல்லிய கதை ! தந்தது குதூகலம் கோடை மழை ! உலகத்தில் உண்டு நம்ப முடியாத உண்மை ஆட்டை  விழுங்கும்   பாம்பு ! இரைக்காக ஓடிய புலி தோற்றது வென்றது உயிருக்காக ஓடிய மான் !

ராஜீவ் கொலை வழக்கு - கே.ரகோத்தமன்

Posted: 23 May 2015 04:36 AM PDT

இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள். வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம். சதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன? யாரால், ...

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;

Posted: 23 May 2015 03:54 AM PDT

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, முதல்வராக பதவியேற்றார்; . சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடந்தன.. கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது; ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் ...

கி.ராஜநாராயணன் எழுதிய மறைவாய்ச் சொன்ன கதைகள் கிடைக்குமா?

Posted: 23 May 2015 01:51 AM PDT

நண்பரே

கி.ராஜநாராயணன் எழுதிய மறைவாய்ச் சொன்ன கதைகள் கிடைக்குமா?

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

Posted: 23 May 2015 12:18 AM PDT

தெளிவு குருவின் திருமேனி கண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™