Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அக்பருக்கு நிகரானவர் ராணா; ஆனால் புகழப்படுவதில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம்

Posted:

புதுடில்லி: 'முகலாய பேரரசர் அக்பரை புகழ்வது போல், அவரை கடுமையாக எதிர்த்த ராஜபுத்ர வீரர் மகாராணா பிரதாப் சிங்கை, யாரும் புகழ்வதில்லை' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.விவாதம்: ராஜஸ்தானில், பிரதாப் சிங் ராணாவின் சிலையை திறந்து வைத்த போது, ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியது, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமாகியுள்ளது.ராஜ்நாத் சிங்கின் வருத்தத்தை போக்கும் வகையில், அரியானாவை ஆளும் பா.ஜ., அரசு, பிரதாப் சிங் நினைவை போற்றும் வகையில், அரசு சார்பில் விளம்பரம் வெளியிட்டது.மாவீரர் மகாராணா குறித்து, வரலாற்று ...

ஜெ.,வை வரவேற்க 1050 பேனர்கள்: செலவு ரூ.ஒரு கோடி!

Posted:

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, 217 நாட்களுக்கு பின் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, காரில் இருந்தபடியே தொண்டர்களை சந்தித்தார். அவரை வரவேற்று 1050க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.தமிழக முதல்வராக, இன்று பதவி ஏற்கும் ஜெயலலிதா, நேற்று, போயஸ்கார்டனில் இருந்து ராஜ்பவன் சென்று கவர்னரை நேரில் சந்தித்தார். பின், அண்ணாசாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., அண்ணா, ஈ.வெ.ரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, காமராஜர் சாலை வழியாக, போயஸ்கார்டன் திரும்பினார்.ஜெயலலிதாவை, 217 நாட்களுக்கு பின் நேரில் சந்திக்கும் உற்சாக மிகுதியில், அ.தி.மு.க., ...

பால் லிட்டர் ரூ.18 க்கு விற்கும் கொடுமை: ஆவின் பால் விலையை குறைக்குமா அரசு

Posted:

மதுரை: தமிழகத்தில் கடந்தாண்டை விட பால் உற்பத்தி ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. தனியார், ஆவின் சார்பில் பால் கொள்முதல் குறைந்ததால் வேறுவழியின்றி விவசாயிகள் ஒரு லிட்டர் பாலை ரூ.18 வரை குறைத்து விற்கின்றனர். விவசாயிகள், நுகர்வோர் நலன் கருதி ஆவின் பால் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்த நான்கு மணி நேரத்தில் பாலை விற்கின்றனர். ...

சென்னையில் ஜெ., நகர்வலம்: பல இடங்களில் 'டிராபிக் ஜாம்!'

Posted:

ஏழு மாதங்களுக்கு பின், சென்னையில் நேற்று, ஜெயலலிதா, தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க சென்றதால், ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எட்டு மணி நேரம், கொளுத்தும் வெயிலில், போக்குவரத்து நெரிசலில், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு:
நேற்றைய நிகழ்விற்காக, காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, அதாவது, எட்டு மணி நேரம், சென்னையில் பல சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நகரின் முக்கிய சாலையான, அண்ணா சாலையில், பல இடங்களில், பகல் 1:00 மணியில் இருந்து, வாகனங்கள் ...

ஐ.டி., துறையில் தொடரும் தற்கொலை சம்பவங்கள்: தமிழக அரசு தலையிடுமா?

Posted:

சென்னையில், வேலையின்றி தவித்த தகவல் தொழில்நுட்ப தம்பதியின் தற்கொலை முடிவு, கவர்ச்சி கரமான அத்துறையின், மற்றொரு பக்கத்தை, மீண்டும் உலகுக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது. சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த, முன்னாள் ஐ.டி., நிறுவன ஊழியர் ராதாகிருஷ்ணன், வேலையில்லாத விரக்தியில், குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார். தன்னுடன் பணிபுரிந்த, ஜாக்குலினை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆறு மாத குழந்தை உள்ளது.இருவருக்கும் வேலை இல்லை. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில், ஜாக்குலின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ராதாகிருஷ்ணன் ரயில் முன் பாய்ந்து ...

இரண்டாவது முறையாக பதவி துறந்த ஓ.பி.எஸ்.,

Posted:

சென்னை: கட்சி தலைவருக்காக, இரண்டாவது முறையாக, முதல்வர் பதவியை, பன்னீர்செல்வம் துறந்து, வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.டான்சி வழக்கில், ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால், 2001 செப்டம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.அதைத் தொடர்ந்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதும், அவர் முதல்வராக பொறுப்பேற்பதற்காக, 2002 மார்ச்சில், பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.அடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், கடந்த ஆண்டு, செப்., 27ம் தேதி, ஜெயலலிதா முதல்வர் பதவி பறிபோனது. ...

2 அமைச்சர்கள் நீக்கம் ஏன்?

Posted:

சென்னை: அமைச்சர்கள் எண்ணிக்கை, 28 வர வேண்டும் என்பதற்காக, இரண்டு அமைச்சர்கள், அமைச்சரவையில் இருந்து, கழற்றி விடப்பட்டதாக கூறப்படுகிறது.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். மூத்த அமைச்சர்கள் உட்பட, பலர் நீக்கப்படுவர்; புதுமுகங்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும், அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்படும் என, தகவல் வெளியானது. ஆனால், அமைச்சரவையில் இருந்து, இரண்டு அமைச்சர்கள் கழற்றி விடப்பட்டு உள்ளனர்; புதிதாக யாரும் சேர்க்கப்படவில்லை.இது, அமைச்சர் பதவியை எதிர்பார்த்த, எம்.எல்.ஏ.,க்களிடம் பலத்த ...

ஊழலை வெளிப்படுத்திய அதிகாரிக்கு மீண்டும் 'நோட்டீஸ்'

Posted:

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சங்கத்திற்கு ஆதரவாக, கருத்து தெரிவித்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டு மீண்டும், 'நோட்டீஸ்' அனுப்பப் பட்டு உள்ளது.பொதுப்பணித் துறையில் நடக்கும் பணிகளுக்கு, 45 சதவீத கமிஷன் கேட்பதாக, ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் புகார் எழுப்பினர். அதிக லஞ்சம் வாங்கும், 10 அதிகாரிகள் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர். ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக, பொதுப்பணித் துறையின் நீராய்வு நிறுவன செயற்பொறியாளர் தேவராஜன் கருத்து தெரிவித்தார். அரசு பணியாளர் விதிகளை மீறி பேட்டியளித்ததாக கூறி, அவரிடம் விளக்கம் கேட்டு, நீராய்வு நிறுவன ...

ஜெ., இன்று முதல்வராக பதவி ஏற்க ஏற்பாடுகள் தயார்: 2 பேருக்கு மந்திரி பதவி மறுப்பு; மற்றவர்கள் தப்பினர்

Posted:

சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, 11 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்; அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன் ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது; ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் ...

நாங்கள் வெடிகுண்டு வீசினோம்: ஒப்புக்கொண்டார் பா.ஜ., தலைவர்

Posted:

கோல்கட்டா: ''திரிணமுல் காங்கிரசார் எங்கள் கட்சியினர் மீது வெடிகுண்டுகளை வீசும் போது, எங்கள் கட்சியினர், பூவையா வீசுவர்; வெடிகுண்டுகளை வீசத் தான் செய்வர்,'' என, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவரான ராகுல் சின்கா கூறினார்.திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை நடைபெற உள்ளது. இதில், திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., துடிக்கிறது. இதனால், இரு கட்சிகளின் தொண்டர்களும், ஆங்காங்கே, அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். இந்த மோதல், நான்காண்டுகளுக்கு முன், திரிணமுல் - மார்க்சிஸ்ட் ...

கறைபடியாத 400 அதிகாரிகள் தேர்தல் கமிஷனுக்கு தேவை

Posted:

புதுடில்லி: 'இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள, பீகார் சட்டசபை தேர்தலை மேற்பார்வையிட, கறைபடியாத, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 400 பேரை அனுப்புங்கள்' என, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:
மொத்தம், 243 தொகுதிகளை கொண்ட, பீகார் சட்டசபைக்கான தேர்தல், செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெற உள்ளது. இதற்காக, 400 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். ஏற்கனவே பலமுறை தேர்தல் மேற்பார்வையாளர்களாக பணியாற்றியோரை அனுப்ப வேண்டாம். தேர்தல் ஆணையத் தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி, ஓய்வு ...

கான்பூர் கழிவுநீர் வாய்க்காலால் கங்கையை சுத்தப்படுத்துவதில் சிக்கல்

Posted:

புதுடில்லி: மத்திய அரசின், புனித கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்து செல்ல, கான்பூர் நகரில் உள்ள, சிசா மாவ் கழிவுநீர் வாய்க்கால் பெரும் தடையாக உள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கங்கை நதியை தூய்மைபடுத்துவதில், தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கங்கை சுத்தப்படுத்தும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உ.பி.,யின், கான்பூர் - வாரணாசி இடையிலான பகுதியில், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகள், சிசா மாவ் கழிவுநீர் வாய்க்காலால் தடைபட்டு உள்ளது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™