Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆனைக்குளம் ஸ்ரீஅழகுநாச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Posted: 22 May 2015 01:29 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅழகுநாச்சியம்மன், ஸ்ரீநிறதலமுடைய அய்யனார், ஸ்ரீசித்தி விநாயகர் ஆகிய கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் பகுதிகளில் மீன்பிடி விசைப் படகுகளில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 22 May 2015 01:28 PM PDT

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுகள் விதிமுறைகளுக்கு உள்பட்டு தகுதியாக உள்ளதா என, கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீன்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி: ரயில்கள் தாமதமாக பாலத்தை கடந்தன

Posted: 22 May 2015 01:27 PM PDT

பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசி வருவதால், ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்ட ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக பாம்பன் பாலத்தை கடந்து சென்றன.

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்

Posted: 22 May 2015 01:26 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகளை ஆட்சியர் க. நந்தகுமார் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் 47 தனியார் மெட்ரிக். பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 22 May 2015 01:26 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 47 தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

ராமேசுவரம் பள்ளி மாணவிக்கு நகர்மன்றத் தலைவர் பாராட்டு

Posted: 22 May 2015 01:24 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள ராமேசுவரம் பள்ளி மாணவி நித்யாஸ்ரீக்கு, நகர்மன்றத் தலைவர் வெள்ளிக்கிழமை பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

அமைச்சரின் உறவினர் எனக் கூறி விடுதியில் தங்கியவர் கைது

Posted: 22 May 2015 01:23 PM PDT

திருப்பத்தூர் சுற்றுலாப் பயணியர் விடுதியில் அமைச்சரின் உறவினர் என்று கூறி தங்கியவரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று ராமநாதபுரத்தில் உதடு பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம்

Posted: 22 May 2015 01:23 PM PDT

ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள பி.வி.எம். அறக்கட்டளை அலுவலகத்தில், உதடு பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ராமநாதபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 22 May 2015 01:22 PM PDT

ராமநாதபுரத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மே 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மின்வாரியச் செயற்பொறியாளர் கு. யோகானந்தன் தெரிவித்துள்ளார்.

திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது

Posted: 22 May 2015 01:21 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக, 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இரு வேறு வீடுகளுக்குள் புகுந்து 15 பவுன் நகைகள், பணம் திருட்டு

Posted: 22 May 2015 01:20 PM PDT

கீழக்கரையில் இரு வேறு வீடுகளுக்குள்  வியாழக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள், 15 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

சகோதரிகளின் 20 பவுன் தாலிச் சங்கிலிகள் பறிப்பு

Posted: 22 May 2015 01:19 PM PDT

ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை கிராமத்தில், வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சகோதரிகளிடமிருந்து 20 பவுன் தாலிச் சங்கிலிகள் திருடப்பட்டுள்ளன.

போலீஸ்காரரின் தாயாரிடம் 3 பவுன் நகை பறிப்பு

Posted: 22 May 2015 01:16 PM PDT

சிங்கம்புணரியில் போலீஸ்காரரின் தாயாரை வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்தி, 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகங்கையில் மே 23, 24 இல் சார்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தேர்வு

Posted: 22 May 2015 01:14 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் நேரடி சார்பு-ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, பொது விண்ணப்பதாரர்களுக்கு சனிக்கிழமையும் (மே 23), காவலர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலந்து கொள்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (மே 24) நடைபெறுகிறது.

மே 27 இல் ராமேசுவரம் திருக்கோயில் நடைகள் திறப்பு நேரம் மாற்றம்

Posted: 22 May 2015 01:14 PM PDT

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மே 27 ஆம் தேதி நடைகள் திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சிவகங்கையில் 9 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

Posted: 22 May 2015 01:13 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் 163 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றுக்கான ஆய்வு நடத்தப்பட்டதில், 9 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

Posted: 22 May 2015 01:09 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 79 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

ஸ்ரீவிலி.யில் கோல்டு அரிமா சங்கம் சார்பில் தடுப்பு வேலி

Posted: 22 May 2015 01:08 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேர் அருகே கோல்டு அரிமா சங்கம் சார்பில் தடுப்பு வேலி வியாழக்கிழமை அமைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 98.52

Posted: 22 May 2015 01:07 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகா, மாவட்டக் கல்வி அலுவலர் சர்வேஸ்வரன் வியாழக்கிழமை கூறினார்.

வத்திராயிருப்பு சாதனை மாணவிக்கு பாராட்டு

Posted: 22 May 2015 01:06 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் வத்திராயிருப்புப் பள்ளி மாணவி பெ.லோக பிரியதர்ஷினி 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அவரை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மருத்துவர்களுக்கான கருத்தரங்கு

Posted: 22 May 2015 01:06 PM PDT

விருதுநகர் மாவட்ட இந்திய மருத்துவக் கழகம் சார்பில் மருத்துவர்களுக்கான தொடர் கல்வி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை, மாவட்டத் தலைவர்  காசிராஜன் தலைமையில் நடைபெற்றது. ஐ.எம்.ஏ. மாவட்டச் செயலர் ஏ.செல்வராஜன் வரவேற்றார். சென்னை, பில்ராத் சிறப்பு மருத்துவமனையில் சுவாச நோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பி.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். சுவாச நோய் பிரச்சனைகளைத் தீர்க்க வந்துள்ள நவீன மருத்துவ முறைகள், புதிய கண்டு பிடிப்புகள் குறித்து அவர் விளக்கினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ஜெகதீசன், சந்திரசேகரன், அசோகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சண்முகராஜன் நன்றி கூறினார்.

கண்மாயில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி

Posted: 22 May 2015 01:05 PM PDT

ராஜபாளையம் கருங்குளம் கண்மாய்க்கு மழையால் வந்து தேங்கிய தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர்.

ராஜபாளையம் ஸ்ரீரமணா வித்யாலயா மாணவிகள் சாதனை

Posted: 22 May 2015 01:04 PM PDT

ராஜபாளையம் ஸ்ரீரமணா வித்யாலயா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இரு மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பணி வழங்க வலியுறுத்தி ஓட்டுநர் உண்ணாவிரதம் இருக்க முயற்சி

Posted: 22 May 2015 01:04 PM PDT

பணி வழங்க வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்துகழக மண்டல அலுவலக வளாகம் முன்பு ஓட்டுநர் தனது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். போலீஸார் அவரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

சிவகாசியில் 3 பள்ளிகளில் நூறுசதம் தேர்ச்சி

Posted: 22 May 2015 01:03 PM PDT

பத்தாம் வகுப்பு தேர்வில் சிவகாசியில் மூன்று பள்ளிகளில் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஸ்ரீவிலி. கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

Posted: 22 May 2015 01:02 PM PDT

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விவரம்:

பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை பிரிவினர் தனியார் பள்ளிகளில் சேர நிதியுதவி

Posted: 22 May 2015 01:02 PM PDT

அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் சேர நிதி உதவி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மகா சம்ப்ரோக்ஷனம்: சிறப்பு அன்னதானம்

Posted: 22 May 2015 01:01 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ர சயனர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதையொட்டி, பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

ராஜபாளையம் ராம்கோ குழும பள்ளிகள் சாதனை

Posted: 22 May 2015 01:00 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் ராஜபாளையம் ராம்கோ குழும பள்ளிகளின் மாணவர் ஒருவரும், மாணவியர் இருவரும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

அரிமா பள்ளி மாணவர் மாநில மூன்றாமிடம்

Posted: 22 May 2015 12:59 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளி மாணவர் புவனேஷ்வரன் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற நோபிள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

Posted: 22 May 2015 12:58 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 2,3ஆம் இடங்களைப் பெற்று விருதுநகர் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

"இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது விருதுநகர் மாவட்டம்'

Posted: 22 May 2015 12:58 PM PDT

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து 97.98 சதவீதம் பெற்று மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 2-ஆம் இடம் பெற்றுள்ளது. 

விருதுநகர் கல்வி மாவட்டத்தில்  63 பள்ளிகள் சதம்

Posted: 22 May 2015 12:57 PM PDT

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 63 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

காற்றை மாசாக்கும் கட்டடக் கழிவுகள்

Posted: 22 May 2015 12:56 PM PDT

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கோரிக்கைகள் மக்களால் முன் வைக்கப்படுகின்றன.

செம்மரங்கள் சிந்தும் கண்ணீர்

Posted: 22 May 2015 12:56 PM PDT

நம் தேசத்தில் மண்ணோடும், மனிதர்களோடும் வேரூன்றி நிற்பன மரங்கள். ஒரு வீடு மணக்கோலம் கொண்டிருப்பதை,

கொடைக்கானல் அருகே அருவியில் விழுந்த இளைஞர் மாயம்

Posted: 22 May 2015 12:55 PM PDT

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு பகுதியிலுள்ள அருவியில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருத்தம் கூடாது!

Posted: 22 May 2015 12:54 PM PDT

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதை நமது ஆட்சியாளர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.

ஆற்றில் மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 22 May 2015 12:54 PM PDT

ஆண்டிபட்டி அருகே வைகையாற்றில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் வங்கிகள் மூலம்  இலக்கை விஞ்சி ரூ.3,615 கோடி கடன்

Posted: 22 May 2015 12:53 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 2014-15-ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.3,615 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் கூறினார்.

கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தல்

Posted: 22 May 2015 12:53 PM PDT

தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரத்தில்  ஜமாபந்தி

Posted: 22 May 2015 12:52 PM PDT

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை திண்டுக்கல் உதவி ஆணையர் (கலால்) குமார் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

தடையை மீறி பயன்படுத்திய ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Posted: 22 May 2015 12:51 PM PDT

போடியில் தடையை மீறி கடைகளில் பயன்படுத்திய ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருள்களை வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் மஹாகும்பாபிஷேகம்

Posted: 22 May 2015 12:48 PM PDT

பழனி அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

குஜிலியம்பாறை பகுதியில் மே 23 மின்தடை

Posted: 22 May 2015 12:47 PM PDT

பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகிறது.

பேருந்து மோதியதில் பைக்கில் சென்றவர் சாவு

Posted: 22 May 2015 12:45 PM PDT

தேனியில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வியாழக்கிழமை இரவு  உயிரிழந்தார்.

ஆண்டிபட்டி அருகே முதியவர் மர்மச்சாவு

Posted: 22 May 2015 12:42 PM PDT

ஆண்டிபட்டி அருகே கண்மாயில் மர்மமான முறையில் இறந்துகிடந்த முதியவர் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

பிரெஞ்சு ஓபன்: காலிறுதியில் நடால் - ஜோகோவிச் மோத வாய்ப்பு

Posted: 22 May 2015 12:40 PM PDT

பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள

குழந்தை திருமணம் நிறுத்தம்

Posted: 22 May 2015 12:39 PM PDT

பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.

மே 27-இல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Posted: 22 May 2015 12:39 PM PDT

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மே 27-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முக்தர் அகமது விளாசல்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்

Posted: 22 May 2015 12:38 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில், பாகிஸ்தானின் தொடக்க வீரர்

மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

Posted: 22 May 2015 12:37 PM PDT

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிகரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

தேசிய கூடைப்பந்து: ஐ.சி.எப், ஓ.என்.ஜி.சி அணிகள் வெற்றி

Posted: 22 May 2015 12:37 PM PDT

57-ஆவது தேசிய அளவிலான கே.சி.பி. இந்திராணி நினைவு, எல்.ஆர்.ஜி கோப்பைகளுக்கான

லார்ட்ஸ் டெஸ்ட்: நியூஸிலாந்து நிதானம்

Posted: 22 May 2015 12:36 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வில்லியம்சன், ராஸ் டெய்லர் சிறந்த பார்ட்னர்ஷிப்

"இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உடனடியாகத் தொடங்க வாய்ப்பில்லை'

Posted: 22 May 2015 12:34 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உடனடியாக போட்டி தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று,

பளுதூக்குதல் பயிற்சியாளர்கள் 8 பேர் இரண்டு ஆண்டுகள் இடை நீக்கம்

Posted: 22 May 2015 12:34 PM PDT

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பளுதூக்குதல் வீரர்களின் பயிற்சியாளர்கள் எட்டு பேரை, இந்திய பளுதூக்குதல்

விளைச்சல் குறைவால் இலவம் பஞ்சு விலை உயர்வு: தொழிலாளர்கள் பாதிப்பு

Posted: 22 May 2015 12:33 PM PDT

போடி பகுதியில் குறைவான விளைச்சல் காரணமாக இலவம் பஞ்சு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: அங்கித் சர்மாவுக்கு வாய்ப்பு

Posted: 22 May 2015 12:33 PM PDT

சீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில்,

வட்டாட்சியர்கள் 4 பேர் பணியிடமாற்றம்

Posted: 22 May 2015 12:33 PM PDT

திண்டுக்கல் ஆட்சியரின் உதவியாளர் உள்பட 4 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் இளைஞர் கொலை

Posted: 22 May 2015 12:32 PM PDT

திண்டுக்கல் அருகே குடும்பத்தகராறில் மாமனாருடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திண்டுக்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

"ஐபிஎல் தொடரில் பங்கேற்பவர்கள் மே.இ.தீவு அணியில் இடம்பெறக் கூடாது'

Posted: 22 May 2015 12:31 PM PDT

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவு வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாகக்

ஐ.டி.சி. காலாண்டு லாபம் ரூ. 2,361 கோடி

Posted: 22 May 2015 12:28 PM PDT

ஐ.டி.சி. 4-ஆம் காலாண்டு நிகர லாபமாக ரூ. 2,361.18 கோடி ஈட்டியுள்ளதாக அறிவித்தது.

பிரிட்டானியா லாபம் 55% உயர்வு

Posted: 22 May 2015 12:28 PM PDT

பால் பொருள்கள், பேக்கரி உணவு வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்

ரானே பிரேக் லைனிங் லாபம் சரிவு

Posted: 22 May 2015 12:27 PM PDT

ஆட்டோ மொபைல் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து வரும் ரானே பிரேக் லைனிங் நிறுவனத்தின்

சி.பி.சி.எல். நிறுவனத்தில் கூடுதல் முதலீடு செய்ய இந்தியன் ஆயில் முடிவு

Posted: 22 May 2015 12:27 PM PDT

சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் (சி.பி.சி.எல்.) கூடுதலாக ரூ. 1,000 கோடி முதல் ரூ. 1,500 கோடி வரை

எஸ்.பி.ஐ. லாபம் 23 சதவீதம் உயர்வு

Posted: 22 May 2015 12:26 PM PDT

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) 4-ஆம் காலாண்டு நிகர லாபம் 23 சதவீதம் உயர்வு பெற்று

அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 5,223 கோடி மானியம்

Posted: 22 May 2015 12:26 PM PDT

அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு கடந்த நிதி ஆண்டின் 4-ஆம்

"கூகுள்' மூலம் "ஸ்மார்ட் போன்'களில் ஊடுருவ திட்டமிட்டது அமெரிக்க உளவு அமைப்பு

Posted: 22 May 2015 12:25 PM PDT

"கூகுள் ஸ்டோர்' வலைதளத்தில் ஊடுருவி அதன் மூலம் நவீன செல்லிடப்பேசிகளான "ஸ்மார்ட் போன்'களைப்

"கடலைக்காக கடுங்கோபம்': விமான நிறுவன உரிமையாளர் மகள் சிறையிலிருந்து விடுவிப்பு

Posted: 22 May 2015 12:24 PM PDT

"மேகடேமியா' என்ற கடலை உணவு பரிமாறப்பட்ட விதம் பிடிக்காததால் கடும் கோபத்துடன் அத்துமீறி நடந்து

காவலில் கருப்பின இளைஞர் மரணம்: அமெரிக்க போலீஸார் 6 பேர் மீது நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி

Posted: 22 May 2015 12:23 PM PDT

அமெரிக்காவில், போலீஸ் காவலில் கருப்பின இளைஞர் மரணமடைந்தது தொடர்பாக, 6 காவலர்கள் மீது

பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலி

Posted: 22 May 2015 12:22 PM PDT

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள்

அந்தமான் கடலில் 3,000 அகதிகள் தத்தளிப்பு: ஐ.நா. தகவல்

Posted: 22 May 2015 12:21 PM PDT

மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து பிற நாடுகளில் புகலிடம் தேடி வந்த சுமார் 3,000 அகதிகள்,

மீண்டும் இராக் மீது படையெடுக்க மாட்டோம்: அமெரிக்கா திட்டவட்டம்

Posted: 22 May 2015 12:20 PM PDT

இராக்கில் முன்னேறி வரும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை ஒடுக்க, அந்த நாட்டில் அமெரிக்க ராணுவத்தை

சியாச்சினில் பாரிக்கர் ஆய்வு

Posted: 22 May 2015 12:18 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பாறை மிகுந்துள்ள சியாச்சின் பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து

நிலக்கரி முறைகேடு: ஜிண்டால் உள்பட 10 பேருக்கு ஜாமீன்

Posted: 22 May 2015 12:18 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், தொழிலதிபருமான

மகாராஷ்டிரம்: கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு 5 மடங்கு இழப்பீடு

Posted: 22 May 2015 12:17 PM PDT

மகாராஷ்டிரத்தில் அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, ஊரகப் பகுதிகளில் கையகப்படுத்தப்படும்

இரண்டாவது நாளாக குஜ்ஜார் சமூகத்தினர் ரயில் மறியல்:  இட ஒதுக்கீடு கோரிக்கை

Posted: 22 May 2015 12:17 PM PDT

ராஜஸ்தானில், அரசு வேலைவாய்ப்பில் குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று

ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் புதிய நெல் ரகம்

Posted: 22 May 2015 12:15 PM PDT

ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில், துத்தநாக (ஸிங்க்) சத்து நிறைந்த புதிய நெல் ரகத்தை

செல்லிடப்பேசியில் அம்பேத்கர் பாடல்: மகாராஷ்டிரத்தில் தலித் இளைஞர் படுகொலை

Posted: 22 May 2015 12:15 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் அம்பேத்கர் பாடலை செல்லிடப்பேசியின் அழைப்போசையாக (ரிங்டோன்) வைத்திருந்த

மனை வணிக மசோதா: பொதுமக்களின் கருத்தைக் கேட்கிறது நாடாளுமன்றக் குழு

Posted: 22 May 2015 12:14 PM PDT

மத்திய அரசின் மனை வணிக மசோதா தொடர்பாக பொதுமக்கள், 10 நாள்களுக்குள் தங்களது கருத்துகளைத்

ஜாதிய அடிப்படையில் வாக்களிக்காதீர்கள்: பிரதமர் மோடி

Posted: 22 May 2015 12:13 PM PDT

"ஜாதிய அடிப்படையில் வாக்களிக்காமல், உங்களுக்கு நன்மை செய்வோருக்கு வாக்களிக்க வேண்டும்' என

ரூ.12 கோடி ஹெராயின் பறிமுதல்

Posted: 22 May 2015 12:11 PM PDT

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டம், கெüர் பகுதியில் 2.5 கிலோ ஹெராயின் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது

பயங்கரவாத ஒழிப்பு: பாரிக்கரின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

Posted: 22 May 2015 12:10 PM PDT

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெளியிட்ட கருத்துக்கு

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் நிலம் கையக மசோதா நிறைவேறும்: ஜேட்லி

Posted: 22 May 2015 12:10 PM PDT

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேறும் என்று

பொது சேவை மையங்களில் விண்ணப்பித்தால் 6 மாதங்களுக்குள் திருமண உதவித் தொகை

Posted: 22 May 2015 12:08 PM PDT

 பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கப்படும் திருமண உதவித் தொகை மனுக்கள் மீது விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு, 6 மாத காலத்துக்குள் உதவித் தொகை வழங்கப்படும் என்றார் ஆட்சியர் கே.எஸ். பழனிóச்சாமி.

சட்டப்பள்ளியில் அயல்நாடு வாழ் இந்தியர் பிரிவு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 22 May 2015 12:08 PM PDT

தேசிய சட்டப்பள்ளியில் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு சேர்க்கைக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என திருச்சி, தமிழ்நாடு சட்டப்பள்ளி துணைவேந்தர் நா. முருகவேல் தெரிவித்துள்ளார்.

வயலூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று தொடக்கம்

Posted: 22 May 2015 12:08 PM PDT

திருச்சி மாவட்டம், குமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா சனிக்கிழமை (மே 23) தொடங்குகிறது.

"காஷ்மீர்: 370-ஆவது பிரிவை நீக்குவதில் பாஜக உறுதி'

Posted: 22 May 2015 12:07 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் 370-ஆவது பிரிவை நீக்க

விவசாயிகள் நூதனப் போராட்டம்

Posted: 22 May 2015 12:07 PM PDT

தமிழகத்தில் செயல்படாத வேளாண் பொறியியல் துறையைத் கலைத்துவிட்டு, அதை விவசாயத் துறையுடன் இணைக்கக் கோரி திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

31-ஆவது இடத்துக்கு திருவண்ணாமலை முன்னேற்றம்

Posted: 22 May 2015 12:07 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 31-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இன்று பிரம்மோத்ஸவ பெருவிழா தொடக்கம்

Posted: 22 May 2015 12:07 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வடமாத்தூர் மரகதாம்பிகை சமேத மதுரநாதீஸ்வரர் கோயிலில் பிரம்மோத்ஸவ பெருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.

மரத்தில் மோதியதில் வாகன ஓட்டி சாவு

Posted: 22 May 2015 12:06 PM PDT

வந்தவாசி அருகே மரத்தில் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார்.

அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை

Posted: 22 May 2015 12:06 PM PDT

"அரசு உயரதிகாரிகள் நியமன விவகாரத்தில், துணைநிலை ஆளுநருக்கே தன்னிச்சையான அதிகாரம் உள்ளது.

லாடவரம் அரசுப் பள்ளி 78 சதவீதம் தேர்ச்சி

Posted: 22 May 2015 12:06 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 78 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 89 பள்ளிகள் சதம்

Posted: 22 May 2015 12:05 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 89 அரசு, தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.

3,562 பேர் நூற்றுக்கு நூறு

Posted: 22 May 2015 12:05 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3,562 பேர் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கல்லால் தாக்கி இளைஞர் கொலை: நண்பர் கைது

Posted: 22 May 2015 12:05 PM PDT

ஆரணி அருகே கல்லால் தாக்கி இளைஞரை கொன்ற சக நண்பரை போலீஸார் கைது செய்தனர். ஆரணியை அடுத்த பையூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜா (30).

மதுரநாதீஸ்வரர் கோயிலில் இன்று பிரம்மோத்ஸவ பெருவிழா தொடக்கம்

Posted: 22 May 2015 12:05 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வடமாத்தூர் மரகதாம்பிகை சமேத மதுரநாதீஸ்வரர் கோயிலில் பிரம்மோத்ஸவப் பெருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 22 May 2015 12:04 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு:மேலும் 2 பேர் மீட்பு

Posted: 22 May 2015 12:04 PM PDT

திருவண்ணாமலை அருகே குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனர். மேலும், 2 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

இன்று சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 May 2015 12:04 PM PDT

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட சமையல் எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™