Tamil News | Online Tamil News |
- கிலானிக்கு பாஸ்போர்ட் கிடையாது : மத்திய அரசு திட்டவட்டம்
- 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத சாதனை: முதல் மூன்று இடங்களை பெற்று 773 பேர் முன்னிலை
- கிராமங்களுக்கு 'ஆப்டிகல் பைபர்' இணைப்பு வழங்க ரூ.70,000 கோடி: இணையதள சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம்
- ஜெ., மீண்டும் முதல்வராக பதவியேற்க தடை கோரி மனு
- பொது சொத்து சேதப்படுத்தினால் 'பத்தாண்டு': விரைவில் வருகிறது புதுச்சட்டம்
- குழந்தைகளை விற்பனை செய்யும் வறட்சி பாதித்த ம.பி., விவசாயிகள்
- ஜெ., நாளை முதல்வராக பதவியேற்பு: சென்னை முழுவதும் அனைத்து துறையினரும் 'உஷார்'
- ஜெ., விழாவில் பங்கேற்கும் பா.ஜ., தலைவர் யார்?
- மதிப்பெண் பேரலையில் கரையேறிய அரசு பள்ளியின் 19 மாணவ, மாணவியர்
- காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி
| கிலானிக்கு பாஸ்போர்ட் கிடையாது : மத்திய அரசு திட்டவட்டம் Posted: புதுடில்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலிஷா கிலானி, பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிவர பூர்த்தி செய்யாமல், உரிய பணத்தை செலுத்தாமல் உள்ளதால், அவருக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது என, வெளியுறவு அமைச்சம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னதாக, பாஸ் போர்ட் பெறுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை. அதை பெற, உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிறகே, பாஸ்போர்ட் வழங்குவது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலிக்கும் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. கிலானிக்கு பாஸ் போர்ட் வழங்குவது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ள ... |
| 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத சாதனை: முதல் மூன்று இடங்களை பெற்று 773 பேர் முன்னிலை Posted: சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில், முதல் இடத்தை, 41; இரண்டாம் இடத்தை, 192; மூன்றாம் இடத்தை, 540 மாணவ, மாணவியர் பிடித்து, அரிய சாதனையை நிகழ்த்தி உள்ளனர். மொத்தமாக, 773 பேர், 497 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட, இரண்டு லட்சம் மாணவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில், 'சென்டம்' எடுத்து உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ம் தேதி துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 11,15,906 பேர், தேர்வுக்கு பதிவு செய்து, அதில், 10.60 லட்சம் பேர் ... |
| Posted: புதுடில்லி: நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், அதிவேக இணையதள சேவையை வழங்கும் விதத்தில், 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 'ஆப்டிகல் பைபர்' இணைப்பு வழங்கும் பணியை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்தப் பணியை விரைந்து முடித்து, கிராமப்புற மக்களுக்கும் இணையதள சேவையை விரிவுபடுத்த, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களாக, மூன்று திட்டங்களை குறிப்பிட லாம். 'சுவாச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா, 'டிஜிட்டல் இந்தியா' எனப்படும், 'இந்தியா முழுவதும் கம்ப்யூட்டர் மயம்' மற்றும், 'மேக் இன் ... |
| ஜெ., மீண்டும் முதல்வராக பதவியேற்க தடை கோரி மனு Posted: புதுடில்லி: 'அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்பதற்கு, தடை விதிக்க வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, கர்நாடக ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, நாளை மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேல் முறையீடு: அந்த மனுவில் கூறியுள்ளதாவது: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ... |
| பொது சொத்து சேதப்படுத்தினால் 'பத்தாண்டு': விரைவில் வருகிறது புதுச்சட்டம் Posted: புதுடில்லி: ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பொதுச் சொத்துகளை போராட்டக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற தேவையான இந்த சட்டம் குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசியல் தலைவர்கள் கைது, மரணம், அரசின் முடிவை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம், எதிர்க்கட்சிகளின் பேரணி போன்றவற்றின் போது, பொதுச் சொத்துகளுக்கு ... |
| குழந்தைகளை விற்பனை செய்யும் வறட்சி பாதித்த ம.பி., விவசாயிகள் Posted: போபால்: ம.பி.,யில், பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் தங்கள் கடனை அடைக்க, குழந்தைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில், கடந்த பல ஆண்டுகளாக வறட்சி நிலவி வருகிறது; விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்காக கடனை வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்த முடியாத ஆயிரக்கணக்கான விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.அது போன்று, பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி.,யிலும் இந்த ஆண்டில் இந்நிலைமை ஏற்பட்டு உள்ளது. ஓரண்டு முழுவதும் கடும் வறட்சி ... |
| ஜெ., நாளை முதல்வராக பதவியேற்பு: சென்னை முழுவதும் அனைத்து துறையினரும் 'உஷார்' Posted: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக நாளை, முதல்வராக பதவியேற்கிறார். இன்று பகல், 2:00 மணிக்கு, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதில், அ.தி.மு.க.,வினர் திரளாக கலந்து கொள்ள உள்ள தால், சென்னையில் போலீசார் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும், உஷார் நிலையில் உள்ளனர். |
| ஜெ., விழாவில் பங்கேற்கும் பா.ஜ., தலைவர் யார்? Posted: ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும்படி, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் அழைப்பு விடுக்கப்படுமா; அப்படி விடுக்கப்பட்டால், பங்கேற்பது யார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. |
| மதிப்பெண் பேரலையில் கரையேறிய அரசு பள்ளியின் 19 மாணவ, மாணவியர் Posted: சென்னை: பத்தாம் வகுப்பில் பள்ளிக் கல்வித்துறை அள்ளி வழங்கிய மதிப்பெண் பேரலையில், மாநில 'ரேங்க்' பெற்றவர் களில், மொத்தம் 773 பேரில், அரசுப் பள்ளிகளின் 19 மாணவ, மாணவியரும் உண்டு. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 773 பேர் மாநில ரேங்க் பிடித்து உள்ளனர். இதில் தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முன்னிலைக்கு வந்துள்ளன. 18 அரசுப் பள்ளி மாணவ, மாணவியரும், மாநில ரேங்க் பெற்றுள்ளனர். இவர்களில், முதலிடம் வந்த பாரதிராஜா, இரண்டாம் இடம் பெற்ற ஸ்வாதி, மூன்றாம் இடம் பெற்ற தமிழரசு, பாலாஜி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் ... |
| காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி Posted: சென்னை: பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல் போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், முன்கூட்டியே வெளியானதால் கல்வித் துறையினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 22,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |