Tamil News | Online Tamil News |
- லக்வி விடுதலை விவகாரத்தில் ஐ.நா.தலையிடவேண்டும்: இந்தியா கோரிக்கை
- ஊழல் பட்டியலில் சிக்கிய தமிழக மந்திரிகளுக்கு சிக்கல்: கவர்னரிடம் காங்கிரஸ் ஆதாரங்களுடன் மனு
- உஷார்:கார், ஆட்டோக்கள் புகை கக்கினால் பறிமுதல்: வாகன பதிவை ரத்து செய்யவும் அரசு திட்டம்
- அதிர்ச்சி: 59 சதவீத இந்திய நகரங்களுக்கு நிலநடுக்க பாதிப்பு: நவீன முறையில் கட்டடங்கள் கட்டப்படுவது இல்லை
- சி.ஏ.ஜி., அறிக்கை: கட்காரிக்கு சிக்கல்: பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
- 'ரியல் எஸ்டேட் மசோதா பில்டர்களுக்கு சாதகமானது!'
- போலீசாரிடம் சரண் அடைய விரும்பிய தாவூத்: 'மாஜி' அதிகாரி தகவல்
- சிறுமி இறந்தது கடவுளின் விருப்பமா? பஞ்சாப் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
- தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் போக்குவரத்து மசோதாவுக்கு கருணாநிதி எதிர்ப்பு
- வி.ஐ.பி.,க்களின் 'பிரைவேட் நம்பர்' மொபைல் போன் வசதி: மத்திய அரசு அதிரடியால் ஸ்டாலின், கார்த்திக்கு சிக்கல்
| லக்வி விடுதலை விவகாரத்தில் ஐ.நா.தலையிடவேண்டும்: இந்தியா கோரிக்கை Posted: புதுடில்லி: மும்பை தாக்கதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி லக்வி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா.தலையிட வேண்டும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 2008-ம் ஆண்டு நவ.11-ம் தேதி மும்பையில்நடந்த தாக்கதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடல்வழியாக வந்த 10 பயங்கரவாதிகள் இத்தாக்குதலை அரங்கேற்றினர். இதற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கரே தொய்பா பயங்கரவாதி ஜாகீ உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டான். அந்நாட்டுபயங்கரவாத தடுப்புகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.இந்நிலையில் லக்வியை ஏப். 9-ம் தேதி கோர்ட் ... |
| ஊழல் பட்டியலில் சிக்கிய தமிழக மந்திரிகளுக்கு சிக்கல்: கவர்னரிடம் காங்கிரஸ் ஆதாரங்களுடன் மனு Posted: தமிழக அரசின், 25 துறைகளில் நடந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை ஆதாரங்களுடன், தமிழக காங்கிரஸ் தலைவர், இளங்கோவன், நேற்று, கவர்னர் ரோசய்யாவை சந்தித்து வழங்கி, 'தமிழக அரசை கலைக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார். இதனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள மந்திரிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. தமிழக அமைச்சர்களில் சிலர், பெருமளவில் ஊழல் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் தலைவர், இளங்கோவன் தலைமையில், நேற்று மாலை, சென்னை, லாங்ஸ் கார்டன் சாலை சந்திப்பில் இருந்து காங்கிரஸ் பேரணி ... |
| உஷார்:கார், ஆட்டோக்கள் புகை கக்கினால் பறிமுதல்: வாகன பதிவை ரத்து செய்யவும் அரசு திட்டம் Posted: புதுடில்லி: சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக, அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிக புகை கக்கும் கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்யவும், அந்த வாகனங்களை பறிமுதல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகர் டில்லியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், காற்றின் தரம் மாசு அடைவதாக புகார் எழுந்துஉள்ளது. |
| Posted: புதுடில்லி: நேபாள நாட்டில் கடந்த மாதம் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், அது போன்ற பாதிப்பு, 59 சதவீத இந்திய நகரங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில், நிலநடுக்கத்தை தாக்குபிடிக்கும் வகையிலான கட்டடங்கள் இல்லை என்பதால், இந்த நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டால், பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்டை நாடான நேபாளத்தில், கடந்த மாதம், 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ... |
| சி.ஏ.ஜி., அறிக்கை: கட்காரிக்கு சிக்கல்: பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: மும்பை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனம், அரசிடமிருந்து கடன் பெற்று முறைகேடு செய்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி, கட்காரிக்கு எதிராக, காங்., கட்சியினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்காரிக்கு சொந்தமாக, 'புர்தி சாகர் கர்கானா' என்ற எரிசக்தி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசுக்கு சொந்தமான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏஜென்சி, 84 ... |
| 'ரியல் எஸ்டேட் மசோதா பில்டர்களுக்கு சாதகமானது!' Posted: புதுடில்லி: ''மத்திய அரசின் ரியல் எஸ்டேட் மசோதா, பில்டர்களுக்கு சாதகமானது; நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது,'' என, காங்கிரஸ்துணைத் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார். நிலம் கையகப்படுத்துதல் மசோதா மற்றும் விவசாயிகள் பிரச்னையில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல், தற்போது, ரியல் எஸ்டேட் மசோதாவை கையில் எடுத்துள்ளார். |
| போலீசாரிடம் சரண் அடைய விரும்பிய தாவூத்: 'மாஜி' அதிகாரி தகவல் Posted: புதுடில்லி: 'மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய பயங்கரவாதி தாவூத் இப்ராகிம், போலீசில் சரண் அடைய விரும்பினான். ஆனால், சி.பி.ஐ., அதை கண்டு கொள்ளவில்லை' என, டில்லி மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். |
| சிறுமி இறந்தது கடவுளின் விருப்பமா? பஞ்சாப் அமைச்சர் பேச்சால் சர்ச்சை Posted: சண்டிகார்: ''ஓடும் பஸ்சில், பாலியல் தொல்லைக்கு ஆளாகி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், கடவுளின் விருப்பம்,'' என, பஞ்சாப் கல்வி அமைச்சர் சுர்ஜித் சிங் ராக்ரா கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. |
| தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் போக்குவரத்து மசோதாவுக்கு கருணாநிதி எதிர்ப்பு Posted: சென்னை: 'சாலை போக்குவரத்து மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கூட்டாட்சி தத்துவத்தை மறந்து, மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து, அதிகார ஆக்கிரமிப்புக்கும், அத்துமீறலுக்கும் மத்திய அரசின் புதிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு மசோதா வழிவகுக்கும். இதை கண்டித்து, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்தம் பெருமளவுக்கு பரவலாகவும், வெற்றிகரமாகவும் நிறைவேறி இருக்கிறது.மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொண்டு, புதிதாக ... |
| Posted: அரசியல் தலைவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கு, 'பிரைவேட் நம்பர்' என்ற சிறப்பு வசதி அளிக்கப்படுவது உண்டு.'எண் அறிய முடியாத தொலைபேசி இணைப்பு வசதி' என, இதற்கு பெயர். அதாவது, அவர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி எண்ணை, யாராலும் அறிந்து கொள்ள முடியாது; பாதுகாப்பு கருதி மறைக்கப்படும்.அந்த மொபைல் போனில் இருந்து, அவர்களால் யாருடனும் தொடர்பு கொண்டு பேச முடியும். ஆனால், எதிர்முனையில் பேசும் நபருக்கு, அழைத்தவரது தொலைபேசி எண் தெரியாது. அதற்கு பதிலாக, 'பிரைவேட் நம்பர்' என்ற ஆங்கில வார்த்தைகள் மட்டுமே திரையில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 03,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |