Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!

Posted: 02 May 2015 12:30 PM PDT

திரும்பிய திசையெல்லாம் பசுமையான வயல் வெளிகள், தூய்மையான காற்று, சுத்தமான தண்ணீர் என ஒரு காலத்தில் செழிப்பாய் காட்சியளித்த கேரள நெற்களஞ்சியத்தின் ஒரு பகுதி பாலக்காடு அருகே உள்ள பிளாச்சி மடா கிராமம். இப்போது அந்த கிராமம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனம். ஒரு சில ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த தலைகீழ் மாற்றத்துக்கான ஒற்றை காரணம் கோக கோலா ஆலைதான். பிளாச்சி மடா கிராமத்தில் 2000ம் ஆண்டில் தொழிற்சாலையை கட்டியது கோக கோலா நிறுவனம். பல ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து நிலத்தடியில் தண்ணீரை அளவு கடந்து உறிஞ்சியது. 'வேலை ...

மே 3 சித்ரா பௌர்ணமி !

Posted: 02 May 2015 12:24 PM PDT

சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை ...

மே 2: ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே பிறந்ததினம்!

Posted: 02 May 2015 11:53 AM PDT

சத்யஜித் ரே இந்திய சினிமாவின் போக்கை மாற்றிய இணையற்ற திரை நாயகன். எளிமையாக வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் இவர். மொத்தம் வாழ்நாளில் எடுத்ததே முப்பத்தி ஆறு படங்கள் தான். ஆனால், அவர் இந்திய சினிமாவை மடைமாற்றியவர். அப்பா இளம் வயதிலேயே தவறி விட அம்மாவின் சொற்ப வருமானத்தில் தான் வாழ்க்கை கழிந்தது அவருக்கு. தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து ஓவியம் கற்றுத்தேறிய பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு உண்டானது .அங்கே தாகூரிடம் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற போனார்; ஒரு படபடக்கும் தாளில் ஒரு கவிதை எழுதி ...

வரலாற்றில் இன்று - மே

Posted: 02 May 2015 11:42 AM PDT

அறிமுகம்

Posted: 02 May 2015 11:38 AM PDT

vanakam eegarai,..,

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Posted: 02 May 2015 11:27 AM PDT

சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த செல்பி யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக நிர்வாணப்படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் நிர்வாணப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. மேடம் உங்க டிரஸ் சூப்பரா இருக்கு, உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா? என்று ...

உங்களுக்கு கொழுப்பு அதிகமா?

Posted: 02 May 2015 11:25 AM PDT

கொழுப்பு என்றாலே அது ஒரு கெட்ட பொருள் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. கொழுப்பு என்பது நம் உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற ஒரு முக்கியமான சத்துப்பொருள். கொழுப்பு இல்லாமல் நம்மால் உயிர் வாழமுடியாது. குடலில் 'வைட்டமின் பி' உருவாவதற்கும், தோல் பாதுகாப்புக்கும், இனப்பெருக்க ஹார்மோன்களின் உற்பத்திக்கும் கொழுப்பு தேவை. மூளையின் நினைவாற்றலுக்கும், நரம்புகள் உருவாவதற்கும் கொழுப்பு அவசியம். கொழுப்பு குறைந்தால் உடல் வளர்ச்சிக் குறைவு, மலட்டுத்தன்மை, சரும நோய்கள், மாதவிலக்குப் பிரச்னைகள் ...

சிவப்பு சிந்தனை...!! -Mano Red

Posted: 02 May 2015 07:54 AM PDT

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிவப்பு புரட்சிக்காரன் ஒளிந்து கொண்டுதானிருக்கிறான்..!! விளக்கை ஏற்றி வைத்த தீக்குச்சி ஒன்று பிரகாசம் தந்துவிட்டு தன்னை மாய்த்துக் கொள்வது போல எத்தனை எத்தனை சிவப்பு சிந்தனையாளர்கள்..!! மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாது இப்படியாகப்பட்ட நிலையில் புரட்சி செய்ய துணிவு வேண்டாம் உரிமைகளின் வெறி ரத்தத்தை சூடேற்றினால் போதும்..!! இந்த சமுதாயம் எனக்காக ஒன்றும் செய்யாத போது, நான் ஏன் இந்த சமுதாயத்திற்காக செத்து ...

பிட்டுக் கன்னம்.

Posted: 02 May 2015 07:15 AM PDT

கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை !

Posted: 02 May 2015 02:50 AM PDT

சென்னை: தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையால், நடிகர் கமலின், 'உத்தம வில்லன்' படம், தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்து, சென்னை மற்றும் திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கு: நடிகர் கமல்ஹாசன் - பூஜாகுமார் நடிப்பில், 'உத்தம வில்லன்' படம் உருவாகி உள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமியின், 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. கமலின், 'விஸ்வரூபம்' படத்தை, டி.டி.எச்., ...

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Posted: 02 May 2015 01:26 AM PDT

என் அன்பு அப்பா தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நெல்லை மண்ணில். கடலை முகக்கும் கருவி என்னிடம் இல்லை என்றாலும் இந்தச் சிப்பியும் (நானும்) பேசுகிறது ஒரு நூலைப் பற்றி. தமிழ் வாழ்க!  தமிழ்க்கடல் தாள் வாழ்க!  இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!  இமிழ் கடல் உள்ளளவும் இனிதே தமிழ் பொழிக!

நான் ரசித்தவை - மிமீஸ்

Posted: 02 May 2015 12:59 AM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Posted: 02 May 2015 12:40 AM PDT

இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது    ஆகி விட்டால்....................) ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு ...

இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !

Posted: 02 May 2015 12:25 AM PDT

முனிவர் சாபம் பெற்ற பெருமாளின் துவார பாலகர்களான ஜெய விஜயர்களே இரண்யனும் இரண்யகசிபுவும். இந்தப் பெயர்களில்தான் அவர்கள் நரசிம்மாவதாரத்தில் தோன்றினார்கள். விஷ்ணுவின் ராமாவதாரத்தில் அவர்கள் ராவணனும் கும்பகர்ணனுமாய்ப் பிறந்தார்கள். அவர்களே கிருஷ்ணாவதாரத்தில் தந்த வக்த்ரனும் சிசுபாலனாகவும் பிறந்தார்கள் என்கிறது பாகவதம். விஷ்ணு, கணத்தில் தோன்றி அருள்பாலித்தது நரசிம்ம அவதாரத்தில்தான். அதனால் ஆண்டாளும் நரசிம்மருக்கு என்றே ஒரு பாசுரம் பண்ணி இருக்கிறாள். "மாலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்" ...

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 01 May 2015 07:21 PM PDT

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™