Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழக நீர்நிலைகளில் தினமும் கலக்கும் கர்நாடக கழிவுநீர்: காவிரியில் 59 கோடி லிட்டரை திருப்பி விடுவதாக ஒப்புதல்

Posted:

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிர்ணயித்த அளவை விட, 10 மடங்கு மாசு அதிகம் உள்ளதை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளதால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தடுக்க, அரசு ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு, குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, தமிழக அரசு, 1,928 கோடி ரூபாயில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ...

வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்படும் தங்கத்திற்கு வரி விலக்கு: தங்க இறக்குமதியை தவிர்க்க அரசு புதிய திட்டம்

Posted:

புதுடில்லி : வீடுகளிலும், பெரிய நிறுவனங்களிலும் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு, வருமான வரி விலக்கு அளிக்கவும், அத்துடன், மூலதன ஆதாய வரி விலக்கு அளிக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் மூலம் இறக்குமதி தங்கத்தை குறைக்கவும், தங்க இறக்குமதியால் ஏற்படும் அன்னியச் செலாவணி சுமையை தவிர்க்கவும், மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

கவுரவம்:
மஞ்சள் நிற உலோகம் தங்கத்திற்கு, எந்த காலத்திலும் மவுசு தான். அதனால், இந்தியர்களின் தங்க மோகம், உலக அளவில் மிகவும் அதிகம். உலக நாடுகளில், ...

விளம்பரங்களில் முதல்வர் படத்திற்கு தடை: மறுபரிசீலனை கோரி தமிழக அரசு மனு

Posted:

புதுடில்லி: 'அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்கள் மற்றும் அரசு வெளியீடுகளில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். அதில், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது' என, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது, 'மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல்' என்றும், முக்கிய அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரசு விளம்பரங்களில் ...

அமைச்சரை தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்

Posted:

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள, ஜெயபிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில், பயணிகள் வெளியேறும் வழி வழியாக, உள்ளே நுழைய முயன்ற மத்திய அமைச்சரை, பெண் போலீஸ் ஒருவர், தைரியத்துடன் தடுத்து நிறுத்தினார்.பீகார் மாநிலம் பாடலி புத்திரா தொகுதி எம்.பி.,யாகவும், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் குடிநீர் துறை இணை அமைச்சராகவும் இருப்பவர் ராம்கிரிபால் யாதவ். இவர், நேற்று தன் ஆதர வாளர்களுடன், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை வரவேற்க, பாட்னாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். வந்தவர், பயணிகள் உள்ளே செல்வதற்கான வழியில் செல்லாமல், ...

ஆசியாவில் பகைமை விலக வேண்டும்: தென் கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு

Posted:

சியோல் : ''ஆசியா கண்டத்திலிருந்து வன்முறை, பகைமை, பயங்கரவாதம் விலக வேண்டும். அதற்கு, ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டும்,'' என, தென் கொரியாவில், பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார். சீனா, மங்கோலியா, தென் கொரியா நாடுகளுக்கு, ஒரு வார சுற்றுப்பயணமாக, கடந்த, 14ம் தேதி டில்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, நேற்று மதியம், இரண்டு நாள் தென் கொரியா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, இரவில் நாடு திரும்பினார்.நேற்று முன்தினம், தென் கொரியா அதிபரை சந்தித்து பேசிய அவர், நேற்று, 'ஆசியா லீடர்ஷிப் போரம்' என்ற, ஆசியாவின் தலைமைப்பண்பு அமைப்பு ...

'வளர்ச்சியை முடக்கும் மோடி': ராகுல் குற்றச்சாட்டு

Posted:

அமேதி : ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளர்ச்சிப் பணிகளை எல்லாம் முடக்கி விட்டது. முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில் செய்தவற்றை எல்லாம், தங்கள் ஆட்சியின் சாதனைகளாக கூறி, பெருமை கொள்கிறது,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார். உ.பி.,யில் உள்ள, தன் அமேதி தொகுதியில், நேற்று வளர்ச்சிப் பணிகள் பலவற்றை துவக்கி வைத்த, ராகுல் கூறியதாவது: காங்., ஆட்சியில் இருந்த போது, அனைத்து பணமும், அமேதி தொகுதிக்கு செல்வதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டினர். ஆனால், இன்று அமேதி தொகுதிக்கு, எதுவுமே செய்யப்படவில்லை என்றும் குறை கூறுகின்றனர். வளர்ச்சிப் பணிகளை ...

ஜனாதிபதியிடம் கெஜ்ரிவால் புகார்: ராஜ்நாத்திடம் ஆளுனர் குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: தன்னுடன் ஆலோசிக்காமல், தலைமைச் செயலரை நியமனம் செய்த, டில்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங்கின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுனரிடம் ஆலோசிக்காமல், தானாக, தலைமைச் செயலர் பதவிக்கு ஒருவரை நியமித்து பரபரப்பை அதிகரித்து உள்ளார்.துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுடன், 'ராஷ்டிரபதி பவன்' சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுனர் ஜங் பற்றி பல புகார்களை கூறினார்.அவையாவன:*தற்காலிக தலைமைச் செயலராக சகுந்தலா கேம்லினை நியமிக்கும் முன், என்னிடம் ஆளுனர் ஆலோசிக்கவில்லை. *தலைமைச் ...

ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி ஏற்கும் ஜெ., : 32 அமைச்சர்களுடன் 23ம் தேதி பதவி பிரமாணம்

Posted:

தமிழக முதல்வராக, ஐந்தாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வரும் 23ம் தேதி, பதவியேற்க உள்ளார்.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 1991ம் ஆண்டு, முதன் முறையாக முதல்வரானார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், முதல்வராக இருந்தார். அடுத்து வந்த தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. மீண்டும், 2001ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. ஜெயலலிதா, இரண்டாவது முறையாக, முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது டான்சி வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக, முதல்வர் பதவியை இழந்தார். பன்னீர்செல்வம் முதல்வரானார்.பின் வழக்கில் இருந்து ...

பெட்ரோல் டீசல் விலை ஓர் எல்லைக்குள் நிறுத்த வழி கண்டுபிடிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை: 'பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஓர் எல்லைக்குள் நிறுத்த சரியான வழியை, மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதை போலத்தான் காங்கிரஸ் ஆட்சி ஆனாலும், பா.ஜ., ஆட்சி ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தபடாமல் உயர்ந்து கொண்டு போகிறது. கேட்டால், மத்திய அரசில் உள்ளவர்கள், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாங்கள் காரணமில்லை' என, கூறி தப்பித்துக் கொள்கின்றனர்.வேறு எது எதற்கோ, எத்தனையோ மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் மத்திய அரசு, ...

ஜெ., விடுதலையை எதிர்த்து அப்பீல்: ஸ்டாலின் சந்திப்புக்கு பின் சாமி பேட்டி

Posted:

'ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், நான் மேல்முறையீடு செய்வேன்' என, சுப்பிரமணியன் சாமி கூறினார்.

மேல் முறையீடு:
சென்னையில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமியை, அவரது வீட்டில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சந்தித்தார். தன் தம்பி தமிழரசு மகன் அருள்நிதி திருமண அழைப்பிதழை வழங்கினார். பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு பற்றி, சுப்பிரமணியன் சாமியிடம் எதுவும் பேசவில்லை; மேல்முறையீடு செய்வது பற்றி, அவர் தான் ...

மெட்ரோ ரயில் துவக்குவதில் சிக்கல் தீர்ந்தது

Posted:

சென்னையில், அசோக் நகர் முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், பாதுகாப்பு ஆய்வுக்கு தடையாக இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டது. இதற்காக, மெட்ரோ ரயில் சேவை பொது விதிகளில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உயர்த்தப்பட்ட சாலையில், 10 கி.மீ., தூரத்திற்கு, முதற்கட்டமாக, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. இந்த வழித்தடத்தில், கடந்த மாதம், 6ம் தேதி, ரயில் இயக்கம், சிக்னல் தொழில்நுட்பம் குறித்த முதற்கட்ட ஆய்வு நடந்தது.ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் தலைமையிலான, மூன்று பேர் கொண்ட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™