ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மரணம் துரத்துகிறது!
- இந்த ஆண்டின் அழகான பெண்!
- 36 வயதினிலே - விமர்சனம்
- யாருக்கு யார் சொந்தம்?
- தமிழக அரசியல் செய்திகள்
- எனது கவிதைகள் !
- ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
- இளமைக்கும் பேராண்மைக்கும் உயர் சித்த மருந்து இரகசியங்கள்!
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (115)
- தெரிந்த திருக்குறளும் தெரியாத தகவல்களும்
- இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!
- 'அப்பா நாம ஜெயிச்சோமா... தோத்தோமா?'- ஷாரூக்கை திணறடித்த வாட்'சன்'!
- உடல் நலன் எனும் தலையாய நலன்!
- 1000 மதிப்பீடுகளை கடந்த நம் அன்பு கல்வியாளர் , மாணிக்கம் நடேசன் ஐயாவை வாழ்த்தலாம் வாங்க :)
- மூளைக்குணவு
- தெரிஞ்சுக்கோங்க!................கறிவேப்பிலை!
- மனைவி என்றொரு தெய்வம்!
- நான் ரசித்தவை - மிமீஸ்
- திருக்குறள் உலகப் பொதுமறையா ?
- ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும் 1800 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகளுக்கு மூடுவிழா
- படித்ததில் பிடித்தது :) --மொபைல் போனால் புதுவகை பிரச்னை!
- உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா?
- களிமண் மேல் விழும் மழை!
- எனது கதைகள்
- 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்
- அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில் :)
- கிழட்டுப் பருவம்..!! - Mano Red
- சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு !
- நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.
- திருடினால் மயங்க செய்யும் கருவி!
- திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
| Posted: 19 May 2015 03:56 PM PDT நெத்திலிமேடு என்ற ஊருக்கு ஒரு சாது வந்திருந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவர் சொன்ன நல்லுரைகளால் அங்குள்ள மக்கள் நல்வழிப்படுத்தப் பட்டனர். எனவே, அவருக்கு அவ்வூரில் செல்வாக்கு உயர்ந்தது. ஒருநாள் அவர் தம்முடைய உபதேசத்துக்கு இடையில் சொன்னார். ""பணத்தை நீங்கள் எல்லாரும் தர்ம வழியில் தான் தேட வேண்டும். தர்மம் தவறி குறுக்கு வழியில் சம்பாதிக்கப் படும் பணம் அந்த வழியிலேயே போய் விடும். அது மட்டுமல்ல... பணம் எப்படிப்பட்ட இணை பிரியாத நண்பர்களையும், விரோதிகளாக மாற்றிவிடும் ... |
| Posted: 19 May 2015 03:51 PM PDT அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'பீப்புள்' என்ற பத்திரிகை, இந்த ஆண்டின் உலகின் அழகான பெண்ணாக, 'மில்லியன் டாலர் பேபி' என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக்கை தேர்வு செய்துள்ளது. சாண்ட்ரா கூறுகையில், 'அழகு என்பது, ஒருவரின் உருவத்தை பொறுத்தது அல்ல; அவரது உள்ளத்தை பொறுத்தது. மேலோட்டமான அழகு, காலப் போக்கில் மறைந்து விடும். ஆனால், நல்ல மனிதராக இருப்பது தான் காலத்தை கடந்து நிற்கும் உண்மையான அழகு...' என்கிறார். அதெல்லாம் சரி, உலகின் அழகான பெண்ணாக ... |
| Posted: 19 May 2015 12:51 PM PDT ஜோதிகா, ஜோதிகா சூர்யா ஆனதற்கு பிறகு நடித்து, வெளிவந்திருக்கும் திரைப்படம் என்பதில் இருந்தே தெரிந்திருக்கும் எத்தனை கனமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் பொருந்திய படமாக இருக்கும் 36 வயதினிலே என்பது! கணவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மனைவி ஜோதிகாவே நடித்து வந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாளம் படத்தின் தழுவல் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி தகதக தங்கமாக ஜொலித்திருக்கும் ஜோவின் 36 வயதினிலே படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை ... |
| Posted: 19 May 2015 12:18 PM PDT ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, ""இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார். துறவி கேட்டார்: ""இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார். ""அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அரசன். ""ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி. துறவியின் பதிலைப் புரிந்து கொண்ட அரசர்,""அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான். ""இருபது ... |
| Posted: 19 May 2015 10:59 AM PDT ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் ... |
| Posted: 19 May 2015 08:12 AM PDT மெரீனா ======= அதுவொரு அழகிய நிலாக் காலம் கடற்கரை பூண்டது விழாக் கோலம் சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில் நித்திரை துறந்த இத்தரை மக்கள் காற்று வாங்க கடற்கரை மணலில் களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க அழகிய நிலவு மெல்ல எழுந்து அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட பழகிய நட்பில் பரவைக் காதலி அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும். நிலவும் கடலும் நடத்தும் காதலை உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும் பறவைக் கூட்டமும் பலபட நின்று மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும். நடுக்கடல் தன்னில் நாவாய்க் ... |
| ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும் Posted: 19 May 2015 07:44 AM PDT ஒரு சமயம், அரசனொருவன் புலவர்களை அழைத்து, நாளை அரசவையில் நாலுகோடிப் பாடல் சொல்ல வேண்டுமென பணித்தான். இந்தக் கட்டளை கேட்டு திக்கு முக்காடிப் போன புலவர்களில் ஒருவரை ஒளவையார் சந்திக்கிறார். கவலையை மறந்து விடுங்கள், நான் உங்களுக்கு நான்கு கோடிப் பாடல்களை ஒரு நொடியில் சொல்கிறேன் என பாடல்வரிகளை ஒளவையார் சொல்லி முடிக்கிறார். 1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும். மதியாதவர் வாசலை மதித்து சென்று மிதிக்காமல் இருப்பது கோடிப் பொருளைத் தருவதாகும். 2. உண்ணீர் உண்ணீரென்று ... |
| இளமைக்கும் பேராண்மைக்கும் உயர் சித்த மருந்து இரகசியங்கள்! Posted: 19 May 2015 07:31 AM PDT 1. அதிமதுரம் 5 கிராம் தூளை பசும்பால் தேனுடன் கலந்து சாப்பிடலாம் (5 வயது குழந்தை முதல் சாப்பிடலாம்) 2. நன்னாரி வேர் 70 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் விட்டு அரை லிட்டராக காய்ச்சி வடிகட்டி காலை, மதியம், மாலை ஒரு அவுன்ஸ் வீதம் பருகவும் (5 வயது குழந்தை கால் அவுன்ஸ் இரு வேளை மட்டும்) 3. கசகசா பாதாம் பருப்பு கற்கண்டு வால்மிளகு, ஆகிய நான்கு பொருட்களையும் 50 கிராம் வீதம் 2௦௦ கிராம் அளவு அரைத்து தேவையான அளவு தேன் சேர்த்து காலை மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். 4.புளியங்கொட்டையை உடைத்து ... |
| Posted: 19 May 2015 07:10 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| தெரிந்த திருக்குறளும் தெரியாத தகவல்களும் Posted: 19 May 2015 07:01 AM PDT திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அதில், நம்மில் தெரியாத சில தகவல்களை காண்போம். 1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை 2. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194 3. 247 தமிழ் எழுத்துகளில் 37 எழுத்துகள் மட்டுமே இடம் பெறவில்லை. 4. திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை 5. திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழகம் நெருஞ்சிப்பழம் 6. திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை குன்றிமணி 7. திருக்குறளில் ... |
| இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Posted: 19 May 2015 06:56 AM PDT அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்தவர் டி.எம். என்ற பெண். அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அதன் பிறகு அவருக்கும், அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதையடுத்து, டி.எம். தன்னையும், தன் குழந்தைகளுக்கும் பிரிந்து சென்ற காதலர் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக் கோரி பசைக் கவுன்ட்டி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி சொஹைல் முகமது முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகளின் ... |
| 'அப்பா நாம ஜெயிச்சோமா... தோத்தோமா?'- ஷாரூக்கை திணறடித்த வாட்'சன்'! Posted: 19 May 2015 06:44 AM PDT மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி அடைந்த தோல்வி குறித்து ஷாரூக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடியாக பதிவு வெளியிட்டுள்ளார். நேற்று பெற்ற வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஹைதராபாத் - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே கொல்கத்தாவின் ப்ளேஆப் வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான், " ராஜஸ்தான் ... |
| Posted: 19 May 2015 05:57 AM PDT நாம் அனைவருமே உடல்நலத்தில் அக்கறை இருப்பது போல் நடிக்கிறோம். ஆனால், உண்மையில், நமக்கு அதில் அக்கறையோ, ஈடுபாடோ இருப்பதில்லை. என் வகுப்புத் தோழர் இருவரில் ஒருவருக்கு, உயர் ரத்த அழுத்தம்; மாத்திரை எடுத்துக் கொண்டாலும், ஊறுகாய், அப்பளம் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார். நல்லவேளை, அவர் சைவம் என்பதால், கருவாட்டை மட்டும் விலக்கி விட்டார். சரி... நடைபயிற்சி செய்தாவது ரத்த அழுத்தத்தை குறைக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. கேட்டால், 'இதெல்லாம் இல்லாம சாப்பிட்டா சாப்பிட்ட மாதிரியே இல்ல...' என்பார். அடுத்தவரோ ... |
| 1000 மதிப்பீடுகளை கடந்த நம் அன்பு கல்வியாளர் , மாணிக்கம் நடேசன் ஐயாவை வாழ்த்தலாம் வாங்க :) Posted: 19 May 2015 05:50 AM PDT 1000 மதிப்பீடுகளை கடந்த நம் அன்பு கல்வியாளர் , மாணிக்கம் நடேசன் ஐயாவை வாழ்த்தலாம் வாங்க ரொம்ப சந்தோஷம் மாமா, வாழ்த்துகள் ! |
| Posted: 19 May 2015 05:48 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| தெரிஞ்சுக்கோங்க!................கறிவேப்பிலை! Posted: 19 May 2015 05:42 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 19 May 2015 05:27 AM PDT திருமணமாகி, 35 ஆண்டுகளில் நினைக்காத மனைவியை, அவள் இறந்த இந்த மூன்று மாதங்களில் அதிகப்படியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்கம். ஆரம்ப காலத்திலிருந்தே ராமலிங்கத்திற்கு, மனைவி லட்சுமி மீது எந்தவித ஈடுபாடும் இருந்ததில்லை. 'மனைவி என்பவள், தன் தேவைகளை நிறைவேற்றி, சேவகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வேலையாள்...' என்ற நினைப்பில் தான், இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்திருந்தார். ஆனால், மனைவி இறந்த பின், இந்த மூன்று மாதங்களில், அவளைப் பற்றி நினைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அமைந்து, மனைவியின் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ... |
| Posted: 19 May 2015 05:23 AM PDT வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட் |
| Posted: 19 May 2015 05:21 AM PDT திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக ... |
| ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும் 1800 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகளுக்கு மூடுவிழா Posted: 19 May 2015 05:20 AM PDT சென்னை: தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களுடன், ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும் 1,800 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகளை தமிழக அரசு இழுத்து மூடுகிறது. தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவுசெய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம். நர்சிங் கவுன்சில் அனுமதி இல்லாமல், தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளின் ... |
| படித்ததில் பிடித்தது :) --மொபைல் போனால் புதுவகை பிரச்னை! Posted: 19 May 2015 05:06 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Posted: 19 May 2015 04:59 AM PDT கோடை வெயில் சுட்டெரிப்பது ஒரு புறம் என்றால், அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றொரு புறம் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும், மின் சிக்கனத்தை கடைப்பிடித்தால், ஆண்டுதோறும் இப்படி புலம்ப வேண்டியதில்லை. எதற்கெடுத்தாலும் அரசை குற்றம் சொல்லிக் கொண்டே இருக்காமல், நம்மால் முடிந்ததை செய்தாலே, பாதி பிரச்னை தீர்ந்து விடும். மின் வெட்டு பிரச்னைக்கு முக்கிய காரணம், மின் பயன்பாடு அதிகரித்திருப்பது தான். முன்பெல்லாம், பணக்காரர்கள் வீட்டில் தான், 'ஏசி'யும், குளிர்சாதனப் பெட்டியும் இருக்கும். இப்போது, ... |
| Posted: 19 May 2015 04:54 AM PDT நடைபயிற்சி முடித்து, அருண் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பாவும், அம்மாவும் முகம் முழுக்க மலர்ச்சியுடன் வாசலில் நின்றிருந்தனர். ''என்னப்பா... ஏன் இங்கே நிக்கறீங்க?'' என்று, காலணிகளை அவிழ்த்தபடியே கேட்டான். ''எல்லாம் நல்ல செய்திதாம்பா. மிகப் பெரிய அமெரிக்க கம்பெனிக்கு, ஐ.ஐ.டி.,ல முதல் தடவையா, நீங்க 12 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்கள்ல... அதுக்கு, உங்க எல்லாருக்கும் பாடம் எடுத்த எட்டு ஆசிரியர்களுக்கு, நீங்க, 12 பேரும் சேர்ந்து பாராட்டு விழா எடுத்து, நினைவுப் பரிசு கொடுக்கணும்ன்னு உன் ... |
| Posted: 19 May 2015 02:37 AM PDT ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ... |
| 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம் Posted: 19 May 2015 02:16 AM PDT பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக சுயநினைவின்றி (கோமா) மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் அருணா ஷான்பாக் திங்கள்கிழமை மரணமடைந்தார். மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் கெம் மருத்துவமனையில் இருந்த அவர் திங்கள்கிழமை மரணமடைந்தார். ஆளுநர் இரங்கல்: அருணாவின் மரணம் குறித்து மகாராஷ்டிர ... |
| அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில் :) Posted: 19 May 2015 01:54 AM PDT அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில் நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் உங்களுக்கு கிடைக்க , என்னுடைய மனமார்ந்த ஆசிகள் செந்தில் |
| கிழட்டுப் பருவம்..!! - Mano Red Posted: 19 May 2015 12:57 AM PDT ] முதுமையின் பருவ வயது அது..!! இரண்டு மனைவிகள் தவறியிருந்தாலும், மூன்றாவது காலின் முக்கிய துணை(வி)யுடன் தவறாமல் இருப்பவர்..!! ஒரு குரல் கேட்டு ஓடி ஓடி வேலை செயதவர்கள் அவர் முதுமையின் தொல்லையால் எங்கோ ஓடிவிட்டனர்..!! இப்போது அவரின் காது கூட எதுவுமே கேட்பதில்லை..!! நாட்டு நடப்புகளை தினசரியில் தினசரி மேயந்தவருக்கு, நரை வந்து நடை தளர்ந்து நடப்பதற்கு முடியாத போது செய்தி சொல்ல ஆளில்லை..!! தரையில் எதையோ தடவிக் கொண்டிருந்தார்..!! கண்ணாடியால் பதித்த அத்தனை பெரிய வீட்டில் கீழே ... |
| சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு ! Posted: 19 May 2015 12:52 AM PDT புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம், சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு உள்ளது தெரியவந்தது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரசிகர்கள், அவர்களது அணிக்கு அதிக ஆதரவு தருகின்றனர். அதேநேரம், அணிகள் இல்லாத ஆமதாபாத், ஒடிசா, மத்திய பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு உள்ளது. பேஸ்புக்கில் ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு அடிப்படையில் ... |
| நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. Posted: 19 May 2015 12:23 AM PDT அவன் கழுத்தில் ஏறியது தூக்குக் கயிறு! காரணம், அவன் - அவள் கழுத்தில் கட்டிய தாலிக் கயிறு. |
| திருடினால் மயங்க செய்யும் கருவி! Posted: 18 May 2015 10:41 PM PDT திருடினால் மயங்க செய்யும் கருவி: மதுரை கண்டக்டர் கண்டுபிடிப்பு! புதூர் :தமிழகத்தில் தினமும் திருட்டு, நகைபறிப்பு நடக்கிறது. யார் குற்றவாளி என போலீசார் விழிபிதுங்கும் நிலையில், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் நவீன கருவியை மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பழனிவேல்,46, கண்டுபிடித்துள்ளார். எம்.காம் பட்டதாரி.அவர் கூறியதாவது:இக்கருவியை லாக்கர், பீரோ, ஏ.டி.எம்., இயந்திரங்களில் பொருத்தலாம். இதில் உள்ள 'எலக்ட்ரானிக் சென்சார்', 'லாக்கரில்' உள்ள அலைபேசியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ... |
| திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Posted: 18 May 2015 10:28 PM PDT திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால் இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |