Tamil News | Online Tamil News |
- சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி? எம்.எல்.ஏ., வெற்றிவேல் ராஜினாமாவை ஏற்றார் சபாநாயகர்
- மங்கோலியா நாட்டுக்கு பிரதமர் மோடி ரூ.6,000 கோடி கடனுதவி: பார்லி.,யில் தாமரை சின்னத்தை பார்த்ததும் மகிழ்ச்சி
- பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை: சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு
- அ.தி.மு.க., அடக்கி வாசிப்பு?ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவு: அ.தி.மு.க., அடக்கி வாசிப்பது ஏன்?
- தலைமை செயலர் கோப்புகளை பார்ப்பேன்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த 'அடம்'
- கைகளை இழந்த ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை
- துணை ராணுவ படை பிரிவுகளில் 11 ஆயிரம் பெண்களுக்கு வேலை
- அன்னா ஹசாரே கார் ரூ.9 லட்சத்துக்கு ஏலம்
- கர்நாடகா முடிவுக்கு காத்திருக்கும் தி.மு.க.,: ஜெ., விடுதலையை எதிர்த்து 'அப்பீல்' எப்போது?
- உலக முதலீட்டாளர் மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா?ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்தால் மீண்டும் சிக்கல்
- கடத்தல் கும்பலால் ஆண்டவன் சிலைகள் அம்போ: அக்கறை காட்டுமா அறநிலைய துறை
- சரிந்தது கோடைக்கால மின் தேவை : அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு
| சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி? எம்.எல்.ஏ., வெற்றிவேல் ராஜினாமாவை ஏற்றார் சபாநாயகர் Posted: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் எம்.எல்.ஏ.,வாக வசதியாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வெற்றிவேல், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை, நேற்று அவர், சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் வழங்கினார். இதனால், அந்த தொகுதியில், ஜெயலலிதா போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கும், மற்றவர்களுக்கும், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை ... |
| Posted: உலான் படோர்: மங்கோலியா நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அந்நாட்டிற்கு, 6,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார். விடுமுறை நாளான நேற்று, விசேஷமாக கூடியிருந்த அந்நாட்டின் பார்லிமென்டில் உரையாற்றிய மோடி, அங்கு தாமரை சின்னம் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.சீனாவில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் ஷாங்காய் நகரிலிருந்து, சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மங்கோலியாவுக்கு, நேற்று முன்தினம் இரவு சென்றார். மங்கோலியா செல் லும், முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடிக்கு, ... |
| பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை: சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு Posted: புதுடில்லி: 'மாமியார், மாமனாரை சிறையில் தள்ள வேண்டும்' என, மோசடித்தனமாகக் கருதும் மருமகள்களால் தொடரப்படும் வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகரிப்பதால், அந்த சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நம் நாட்டில், வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். 'வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்' என, மணமகன் வீட்டார் மீது மணமகள், போலீசில் புகார் கொடுத்தால் போதும். |
| அ.தி.மு.க., அடக்கி வாசிப்பு?ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவு: அ.தி.மு.க., அடக்கி வாசிப்பது ஏன்? Posted: சென்னை: அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுவதை, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் கொண்டாட, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. மூன்றாவது முறை முதல்வராக, 2011 மே 16ம் தேதி, ஜெயலலிதா பொறுப்பேற்றார்.இதன்படி, நேற்று முன்தினம், நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றது. எனினும், கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஜெயலலிதா முதல்வராக இல்லாததால், நான்காண்டு நிறைவு விழாவை, அ.தி.மு.க.,வினர் கொண்டாடவில்லை. வரும், 22ம் தேதி, ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அப்போது, நான்கு ஆண்டு நிறைவு விழாவையும், ... |
| தலைமை செயலர் கோப்புகளை பார்ப்பேன்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த 'அடம்' Posted: புதுடில்லி: ''தனியார் மின் நிறுவனங்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருக்கும் சகுந்தலா கேம்லின், டில்லி அரசின் தலைமை செயலராக தொடரும் வரை, அவரிடம் இருந்து வரும் கோப்புகளை நான் பார்த்த பிறகே அனுப்புவேன்,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.டில்லி மாநில தற்காலிக தலைமைச் செயலராக, மூத்த அதிகாரி சகுந்தலாவை, மாநில துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் சமீபத்தில் நியமித்தார். அவரை, 'அந்த பொறுப்பில் நியமிக்கக் கூடாது' என, முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.அதுபோல, சகுந்தலாவுக்கும் அவர், தலைமை செயலராக பொறுப்பேற்கக் கூடாது என, உத்தரவிட்டார். அந்த உத்தரவை ... |
| கைகளை இழந்த ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை Posted: கொச்சி: ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில், மூன்றாண்டுகளுக்கு முன், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்போது, இரு கைகளையும் இழந்த, அந்நாட்டின் ராணுவ அதிகாரிக்கு, கேரளாவின் கொச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, புதிதாக இரண்டு கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆப்கன் ராணுவ அதிகாரி அப்துல் ரஹீமுக்கு, 30, இந்தியக் கைகள் பொருத்தும் சிக்கலான அறுவை சிகிச்சை, கொச்சியில் உள்ள, அமிர்தா மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், கடந்த மாதம் நடத்தப்பட்டது. அமிர்தா மருத்துவமனை யில், இதற்கான அறுவை சிகிச்சை, 15 மணி நேரம் ... |
| துணை ராணுவ படை பிரிவுகளில் 11 ஆயிரம் பெண்களுக்கு வேலை Posted: புதுடில்லி: மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் துணை ராணுவப் படையில், கூடுதலாக, 11 ஆயிரம் பெண்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த படைகளில், குறைந்தபட்சம், 5 சதவீதம் பேராவது, பெண்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கு எட்டப்படும். ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை போல, துணை ராணுவப் படை என்ற பெயரில், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பிற முக்கிய பொறுப்புகளைக் கொண்ட படைப்பிரிவும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த படை பிரிவில், பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருந்த நிலையில், இப்போது அதிகளவில் பெண்கள் சேர்க்கப்பட்டு, துணை ... |
| அன்னா ஹசாரே கார் ரூ.9 லட்சத்துக்கு ஏலம் Posted: மும்பை: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பயன்படுத்திய, மகிந்திரா, 'ஸ்கார்பியோ' கார், 9.11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த எட்டு ஆண்டுகளாக, அன்னா ஹசாரே அந்த காரை பயன்படுத்தி வந்தார். 'ஜன் லோக்பால்' உள்ளிட்ட, பல்வேறு போராட்டங்களுக்கு, ஹசாரேவை சுமந்து சென்ற அந்த கார், அவருக்கு முதுகு வலியையும் பரிசாக தந்து விட்டது. இதனால், அந்த காரை, தன் சொந்த கிராமமான, மகாராஷ்டிராவின் ராலே கான் சித்தியில், அவர் பகிரங்கமாக ஏலம் விட்டார். அதை, அகமது நகரை சேர்ந்த பிரவீன் என்பவர், அதிகபட்சமாக, 9.11 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார். அந்த பணத்தில், டொயோட்டாவின் சொகுசான, ... |
| கர்நாடகா முடிவுக்கு காத்திருக்கும் தி.மு.க.,: ஜெ., விடுதலையை எதிர்த்து 'அப்பீல்' எப்போது? Posted: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு, 'அப்பீல்' செய்யும் என, தி.மு.க., எதிர்பார்க்கிறது. |
| உலக முதலீட்டாளர் மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா?ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்தால் மீண்டும் சிக்கல் Posted: 'சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யும் பட்சத்தில், சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளது' என, தொழில் துறையினர் கருதுகின்றனர். |
| கடத்தல் கும்பலால் ஆண்டவன் சிலைகள் அம்போ: அக்கறை காட்டுமா அறநிலைய துறை Posted: தமிழகத்தில், பழங்கால கோவில் சிலைகளை பாதுகாப்பதில், அறநிலைய துறை மெத்தனமாக செயல்படுவதால், சர்வதேச சிலை கடத்தல் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது' என, போலீசார் தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல் சம்பவங்கள் குறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 4.5 லட்சம் பஞ்சலோக சிலைகள் உள்ளன. வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் இந்த சிலைகள், போதிய பாதுகாப்பு இன்றி உள்ளன. கடந்த, இரு வாரத்தில் மட்டும், மாநில சிலை கடத்தல் தடுப்பு ... |
| சரிந்தது கோடைக்கால மின் தேவை : அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு Posted: மேட்டூர்: மின் தேவை, 3,000 மெகாவாட் வரை, சரிந்ததால், பல ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 18,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |