Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர இழுத்தடிப்பு: காலக்கெடுவை தாண்டியும் மத்திய அரசு மவுனம்

Posted:

புதுடில்லி: லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட, மத்திய அரசு அதிகாரிகள், 92 பேர் மீது வழக்கு தொடர அனுமதி அளிப்பதில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இவர்களில், 34 பேருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரிய கடிதங்கள், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் லஞ்ச ஊழல் தொடர்பாக புகார்கள் வந்தால், மத்திய லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் உத்தரவுப்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொள்வர். இந்தச் ...

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு

Posted:

பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையின் கீழ், தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி, மெட்ரிக், மாநில சர்வ சிக் ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான், தேர்வுத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இயக்குனரங்கள் உள்ளன.
பணிகள் முடக்கம்:
இவற்றில், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பணி ...

காஸ் மானியம் பெற முடியாமல் 16 லட்சம் பேர் தவிப்பு

Posted:

வங்கிக் கணக்கு மூலம், காஸ் மானியம் பெற முடியாமல், 16 லட்சம் நுகர்வோர் தவிக்கின்றனர். இதற்கு, சமையல் காஸ் நுகர்வோர் கணக்கில் உள்ள குளறுபடி தான் காரணம் என, கூறப்படுகிறது.

இதுநாள் வரை மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்த சமையல் காஸ் சிலிண்டர், சந்தை விலைக்கு விற்கப்படும்; மானியத் தொகை, நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தும் முறையை, எண்ணெய் நிறுவனங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளன.
'ஆதார்' எண்:
'வங்கிக் கணக்கில், காஸ் மானியம் பெற, 'ஆதார்' எண் அல்லது வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்' என, பெட்ரோலிய அமைச்சகம் அறிவுறுத்தியது. ...

கர்நாடக அரசை திசை திருப்ப முயற்சி: கருணாநிதி

Posted:

சென்னை: 'ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீடு செய்வதைத் தடுக்க, கர்நாடக அரசை திசை திருப்பும் முயற்சிகள் நடக்கின்றன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தவர், சுப்பிரமணியன் சாமி. இவர் இப்போது, பா.ஜ.,வில் உள்ளார். ஆனால், அக்கட்சித் தலைவர்கள், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால், 'பீம் சிங், இது என்ன புதுக் குழப்பம்' என, கேட்க வேண்டியுள்ளது. இதற்கிடையே, நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், தவறு இருப்பதைப் புரிந்து, அதை மாற்றம் செய்யக் ...

கூட்டல், கழித்தல் கூட தெரியவில்லை: கோர்ட்டில் நீதிபதி முன் ஆசிரியருக்கு பரீட்சை

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஒருவரின் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த ஆசிரியரின் திறமையை சோதித்த நீதிபதி, சாதாரண ஆங்கில வார்த்தைகளை கூட மொழி பெயர்க்கத் தெரியாமல், அந்த ஆசிரியர் தடுமாறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகுதியே இல்லை:
முகமது இம்ரான் கான் என்ற அந்த துவக்கப்பள்ளி ஆசிரியருக்கு, அந்தப் பொறுப்பை வகிக்க தகுதியே இல்லை என, ஒருவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி முசாபர் உசேன் அட்டார் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இம்ரான் கானின் கல்விச் சான்றிதழ்களை வாங்கிப் பார்த்த நீதிபதி, ...

இடைத் தேர்தலா; பொதுத் தேர்தலா? அ.தி.மு.க.,வில் சூடான விவாதம்

Posted:

தமிழகத்தில் இடைத்தேர்தல் வாய்ப்பு, எந்த தொகுதிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெறாமலிருக்கவும் வாய்ப்பு கள் உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக, முடிவு செய்துள்ளார். தற்போது, சட்டசபை தொகுதி எதுவும் காலியாக இல்லை. எனவே, ஜெயலலிதாவிற்காக, ஏதேனும் ஒரு எம்.எல்.ஏ., தன் பதவியை, ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த 2011 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம், அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனதால், ...

முதல்வர் கெஜ்ரிவால் - ஆளுனர் நஜீப் ஜங் இடையே மோதல்: எதிர்ப்பை மீறி தற்காலிக தலைமை செயலர் பொறுப்பேற்பு

Posted:

புதுடில்லி: டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. ஆளுனர் நஜீப் ஜங்கால், தற்காலிக தலைமை செயலராக நியமிக்கப்பட்ட, சகுந்தலா கேம்லினை, பொறுப்பை ஏற்கக் கூடாது என, கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை மீறி, அவர் பொறுப்பேற்றுள்ளார். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு உள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், டில்லியின் துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங்கிற்கும் இடையே கடந்த சில நாட்களாக, மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், டில்லி அரசின் தலைமை செயலரான கே.கே.சர்மா, ...

ஓய்வின்றி உழைக்கிறேன்; உழைப்பது தவறா? எதிர்க்கட்சிகளுக்கு சீனாவில் பிரதமர் மோடி கேள்வி

Posted:

ஷாங்காய்: ''ஓராண்டாக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறேன். இதை, 'நான் உலக நாடுகளை சுற்றிக் கொண்டிருக்கிறேன்' என, எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்கின்றன,'' என, பிரதமர் மோடி கூறினார்.அண்டை நாடான சீனாவுக்கு, கடந்த, 14ல், மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி நேற்று, சீன பயணத்தை நிறைவு செய்தார். சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான, மங்கோலியா செல்லும் முன், ஷாங்காய் நகரில், சீன தொழிலதிபர்களை சந்தித்தார். அதன்பின், 5,000த்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், ஷாங்காய் நகரில், பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ...

மீண்டும் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அமைச்சர்கள் திக் திக்...: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் டிரான்ஸ்பர் பயத்தில் தவிப்பு

Posted:

ஐந்தாவது முறையாக, வரும், 22ம் தேதி, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உள்ளார். தற்போது அமைச்சரவையில் உள்ள பலரை கழற்றி விடவும், புகாருக்கு உள்ளான அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதால், அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 'திக்... திக்...' மனதுடன் கலக்கத்தில் உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கால், முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, தற்போது வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.எனவே அவர், ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்க உள்ளார். அவரை, அ.தி.மு.க., சட்ட சபை தலைவராக தேர்வு செய்ய, வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, ...

பீகார், மே.வங்கத்தில் மீண்டும் நிலநடுக்கம்

Posted:

பாட்னா: இந்தியாவில், பீகார், மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மாலை, 5:04 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில், 5.07 என, பதிவானதாக, பீகார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏ.கே.சென் தெரிவித்தார்.

10 கி.மீ., ஆழத்தில்...:
அவர் மேலும் கூறியதாவது: நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவுக்கு கிழக்கே, தோலக்கா என்ற இடத்தில், 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது. இது, ரிக்டர் அளவில், 7.3 என, பதிவானது. இதன் தாக்கம், இந்தியாவில், பீகாரின் முசாபர்பூர், மதுபானி, ...

ஜெ., வழக்கில் மேல்முறையீடு: 21ல் கர்நாடகா அமைச்சரவை முடிவு

Posted:

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல் முறையீடு தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்து, வரும், 21ம் தேதி கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேரையும், கர்நாடகா ஐகோர்ட்டின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அரசுக்கு கடிதம்:
நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், சில பிரச்னைகள் உள்ளதாக, கர்நாடகா அரசின் சிறப்பு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™