Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சரக்குப் பெட்டக லாரி எரிந்து சேதம்: ஓட்டுநர் காயம்

Posted: 16 May 2015 01:22 PM PDT

ஆம்பூரில் சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து டீசல் டேங்க் வெடித்ததில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர் காயம் அடைந்தார்.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் வாரச் சந்தை தொடக்கம்

Posted: 16 May 2015 12:50 PM PDT

ஆற்காடு வட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் வாரச் சந்தை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மின் விளக்குகள்: பொதுமக்கள் பங்களிப்பு ரூ.5.25 லட்சம்

Posted: 16 May 2015 12:49 PM PDT

புதுப்பாளையம் பேரூராட்சியில் 150 எல்ஈடி மின் விளக்குகள் அமைக்க பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.5.25 லட்சத்துக்கான காசோலை, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் வழங்கப்பட்டது.

இளைஞரைக் கத்தியால் குத்தியவர் கைது

Posted: 16 May 2015 12:49 PM PDT

திருவண்ணாமலையில் இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

நீரில் மூழ்கிய சிறுவன் சாவு

Posted: 16 May 2015 12:48 PM PDT

கலசப்பாக்கம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.

கடன் சுமை கழிப்போம்

Posted: 16 May 2015 12:48 PM PDT

எழுதப்படுவது எழுத்து; எழுப்பப்படுவதும் எழுத்து; முன்னது மொழியின் வரி வடிவம்; பின்னது ஒலி வடிவம். இவ்விரண்டு வடிவங்களும் தமிழில் இயல்பாய் அமைந்திருப்பதால் அது இயல் தமிழ் என வழங்கப்படுகிறது.

அட்டைப் பெட்டியுடன் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

Posted: 16 May 2015 12:47 PM PDT

திருவண்ணாமலையில் அட்டைப் பெட்டியில் வைத்து வீசப்பட்ட பிறந்து 4 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அதிகாரிகள் மீட்டனர்.

சொல் தேடல் -8

Posted: 16 May 2015 12:45 PM PDT

இருதய நோய்க்கு அடுத்து எண்ணற்ற உயிர்களை வாங்கும் நோய் என்ன தெரியுமா? மன அழுத்தம். மன அழுத்தம் என்பது வருத்தத்தைத் தந்து மனத்தைப் புண்ணாக்கும் வலிமையான ஆற்றல்.

மாணவர் தற்கொலை

Posted: 16 May 2015 12:44 PM PDT

ஏலகிரி அருகே மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோயிலில் திருட்டு

Posted: 16 May 2015 12:42 PM PDT

வந்தவாசி அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மனுக்கும்,  மூலவருக்கும் அணிந்திருந்த 2 தாலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஆழ்வார் பாசுரங்களில் அறிவியல்!

Posted: 16 May 2015 12:41 PM PDT

அறிவியல் அறிஞர் ஜெகதீச சந்திரபோசும் மேல்நாட்டு அறிவியல் மேதைகளும் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு என்பதையும், அவை இனிமையான இசை கேட்டு உறங்கும்,

ரூ.10 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்

Posted: 16 May 2015 12:41 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் மேம்பாட்டுக்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள ரூ.10 கோடியைப் பயன்படுத்தி புதிய திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளை 30 நாளில் அமைக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயியின் உடல், கண்கள் தானம்

Posted: 16 May 2015 12:40 PM PDT

குடியாத்தத்தை அடுத்த வரதாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்  வேணுகோபால் (69). விவசாயியான இவர் சனிக்கிழமை இறந்ததையடுத்து, அவரது உடல், கண்களை தானம் செய்ய அவரது மகன்கள் சஞ்சீவ்குமார், தரணி ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.

கண்கள் ஏழு

Posted: 16 May 2015 12:40 PM PDT

மனிதர்கள் எல்லோருக்கும் இரண்டு கண்கள். ஆனால், சிலருக்கு மூன்று கண்கள் என்று சொன்னால் நம்புவார்களா?

"அனுமதியின்றி மண் எடுத்தால் வாகனங்கள் பறிமுதல்'

Posted: 16 May 2015 12:39 PM PDT

அனுமதியின்றி பட்டா, புறம்போக்கு நிலங்களில் மண் எடுக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியர் இரா.நந்தகோபால் எச்சரித்துள்ளார்.

வருவாய்த் துறை அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 16 May 2015 12:39 PM PDT

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி சேர்ப்பது குறித்த வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இந்த வார கலாரசிகன்

Posted: 16 May 2015 12:38 PM PDT

எங்கே போனாலும் என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, "எப்போது "இந்த வாரம்' புத்தகமாக வரப் போகிறது?' அடுத்து "உங்கள் தலையங்கங்களின் அடுத்த தொகுப்பு எப்போது வெளிவரும்?'

கோடைக்கால பயிற்சி நிறைவு

Posted: 16 May 2015 12:38 PM PDT

ஆற்காடு லட்சுமி லோகநாதன் பள்ளியில் நடைபெற்ற இலவச கோடைக் கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

பள்ளி வாகனங்களின் தரம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு

Posted: 16 May 2015 12:37 PM PDT

ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு ராணிப்பேட்டை வாரச் சந்தை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

காவல் ஆய்வாளரைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 16 May 2015 12:37 PM PDT

வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளரைக் கண்டித்து காங்கிரஸார் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நாகர்கோவில்

Posted: 16 May 2015 12:34 PM PDT

சாத்தான்குளத்தில் ஜமாபந்தி நிறைவு: 89 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 16 May 2015 12:34 PM PDT

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ. தியாகராஜன் 89 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடிக்கு கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

Posted: 16 May 2015 12:32 PM PDT

தூத்துக்குடிக்கு கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என இந்திய வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

Posted: 16 May 2015 12:32 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில், அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த தின நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடக்கம்

Posted: 16 May 2015 12:31 PM PDT

கோவில்பட்டியில் யங் ஸ்டார்ஸ் கால்பந்து கழகம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

மத்திய அமைச்சர் நக்விக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை ரத்து

Posted: 16 May 2015 12:31 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தடை உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை அந்த மாவட்ட அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது.

மத்திய கூட்டுறவு வங்கியில் சேவை கட்டணத்தை தடை செய்ய வலியுறுத்தல்

Posted: 16 May 2015 12:31 PM PDT

சாத்தான்குளம் மத்திய கூட்டுறவு வங்கியில் சேவை கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என பாரதிய நகைத் தொழிலாளர்கள் சங்க அமைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு தினம்:விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அரசுத் துறைகளுக்கு உள்துறை அறிவுரை

Posted: 16 May 2015 12:30 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளான மே 21-ஆம் தேதி, வழக்கமாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுடன் சேர்த்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய உள்துறை அறிவுரை வழங்கியுள்ளது

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கணினி பட்டா குளறுபடியை நீக்க கோரிக்கை

Posted: 16 May 2015 12:30 PM PDT

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலக கணினி பட்டா குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Posted: 16 May 2015 12:29 PM PDT

தூத்துக்குடியில் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 16 May 2015 12:29 PM PDT

திருச்செந்தூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது மோடி அரசு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாக்கு

Posted: 16 May 2015 12:28 PM PDT

கடந்த மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது.

உடன்குடியில் இன்று பண்பாட்டு வகுப்பு நிறைவு விழா

Posted: 16 May 2015 12:28 PM PDT

சேவாபாரதி அமைப்பு சார்பில் கடந்த 16 நாள்களாக நடத்தப்பட்டு வந்த கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்பு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை உடன்குடியில் நடைபெறுகிறது.

ஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

Posted: 16 May 2015 12:28 PM PDT

ஆழியாறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட:மலைப் பாதைகளில் மண் சரிவை அகற்ற சிறப்புக் குழுக்கள்

Posted: 16 May 2015 12:27 PM PDT

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் பாதைகளில் ஏற்படும் மண் சரிவு, பாறைகளை உடனடியாக அகற்ற சிறப்புக் குழுக்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர், ஆறுமுகனேரியில் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

Posted: 16 May 2015 12:27 PM PDT

காயல்பட்டினத்தில் மாணவர், மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் ரஹ்மானியா மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

ஐந்தாம் ஆண்டில் அதிமுக அரசு:தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றம்

Posted: 16 May 2015 12:27 PM PDT

ஐந்தாம் ஆண்டில் அதிமுக அரசு அடியெடுத்து வைத்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் வெளியான பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

வசவப்பபுரம் வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை

Posted: 16 May 2015 12:26 PM PDT

செய்துங்கநல்லூர், வசவப்பபுரம் பகுதியில் உள்ள முக்கவர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடன்குடி-பரமன்குறிச்சி சாலையில் உயரமான வேகத்தடைகள்: வாகன ஓட்டிகள் அவதி

Posted: 16 May 2015 12:26 PM PDT

உடன்குடி-பரமன்குறிச்சி சாலையில் அளவுக்கு அதிகமான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியாவும், சீனாவும் கூட்டாக வளர்ச்சியடைய வேண்டும்: மோடி

Posted: 16 May 2015 12:26 PM PDT

ஏழ்மையை ஒழிப்பதற்காக இந்தியாவும், சீனாவும் இணைந்து பொருளாதார முன்னேற்றத்தில் புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பேருந்து - பைக் மோதல்: கூலித் தொழிலாளி சாவு

Posted: 16 May 2015 12:25 PM PDT

காயல்பட்டினத்தில் அரசுப் பேருந்தும் பைக்கும் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி இறந்தார்.

அரசு தலைமைச் செயலர் நியமன விவகாரம்:தில்லி துணைநிலை ஆளுநர் - கேஜரிவால் மோதல் முற்றுகிறது

Posted: 16 May 2015 12:25 PM PDT

தில்லி அரசின் தலைமைச் செயலர் பொறுப்பைக் கூடுதலாக மாநில மின் துறைச் செயலாளர் சகுந்தலா காம்லின் கவனிப்பார் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பிறப்பித்த உத்தரவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஆட்டோ நகரம்: பணியைத் தொடங்க வலியுறுத்தல்

Posted: 16 May 2015 12:25 PM PDT

தூத்துக்குடி மாநகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் திட்டமிடப்பட்ட ஆட்டோ நகரம் (டிரக் டெர்மினல்) அமைக்கும் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஜோயல் வலியுறுத்தியுள்ளார்.

அரசு கேபிள் டிவி நிறுவன பொது இ-சேவை மையங்கள் இன்று வழக்கம்போல இயங்கும்

Posted: 16 May 2015 12:24 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்படும் 8 பொது இசேவை நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி: ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

Posted: 16 May 2015 12:24 PM PDT

கோவில்பட்டியையடுத்த திட்டங்குளம் பாரதி ஹாக்கி மைதானத்தில் 20 நாள்கள் நடைபெற்ற ஹாக்கி பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

நிறுவனங்கள் சட்டத்தில் விரைவில் கூடுதல் திருத்தங்கள்:அருண் ஜேட்லி

Posted: 16 May 2015 12:23 PM PDT

நிறுவனங்கள் சட்டத்தில் மேலும் பல திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய விரைவில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை தெரிவித்தார். புதிய வருமான வரிப் படிவங்களை எளிமையாக்க காலஅவகாசம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் அமைப்பு நிகழ்ச்சிக்குத் தடை

Posted: 16 May 2015 12:23 PM PDT

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நிறைவடைந்ததன் 6-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, தமிழர் அமைப்பு நடத்தவிருந்த நினைவு நிகழ்ச்சிக்கு முல்லைத்தீவு மாவட்ட போலீஸார் நீதிமன்றம் வாயிலாக தடை உத்தரவு பெற்றனர்.

தூத்துக்குடியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

Posted: 16 May 2015 12:23 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில், தூத்துக்குடி மாணவர் செல்வகுமார் முதல் பரிசு பெற்றார்.

போலீஸாரின் கோரிக்கையை நிராகரித்த உத்தரகண்ட் முதல்வர்

Posted: 16 May 2015 12:23 PM PDT

உத்தரகண்டின் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில், பயிற்சி அதிகாரி என்று கூறி பெண் ஒருவர் 6 மாதம் தங்கியிருந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போலீஸார் விடுத்த கோரிக்கையை மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் நிராகரித்தார்.

"50,000 கி.மீ. சாலைப் பணிக்கு விரைவில் திட்ட அறிக்கை'

Posted: 16 May 2015 12:22 PM PDT

நாடு முழுவதும் 50,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

கால்வாய் கிராமத்தில் சமூக நல்லிணக்க முகாம்

Posted: 16 May 2015 12:22 PM PDT

செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் சமூக நல்லிணக்க முகாம் நடைபெற்றது.

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

Posted: 16 May 2015 12:22 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையிலுள்ள எல்லைச் சாவடி மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மாநகரை தூய்மையாக்கும் பணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க மேயர் அழைப்பு

Posted: 16 May 2015 12:21 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தூய்மையாக்கும் பணியில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க முன்வர வேண்டும் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒடிஸாவில் அடுத்த மாதம் ராகுல் காந்தி நடைப் பயணம்

Posted: 16 May 2015 12:21 PM PDT

ஒடிஸாவுக்கு ஜூன் மாதம் வருகை தரவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இங்கு நடைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

செங்கல்லால் பெண்ணை தாக்கிய காவலருக்கு ஜாமீன்

Posted: 16 May 2015 12:21 PM PDT

தில்லியில் பெண் ஒருவரை செங்கல்லைக் கொண்டு தாக்கியதால் பணியிலிருந்து நீக்கப்பட்டு, காவலில் இருக்கும் போக்குவரத்துக் காவலருக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்

Posted: 16 May 2015 12:20 PM PDT

அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனுக்கான சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாகூர் அறிவுறுத்தினார்.

குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் தூர் அகற்றும் பணி தாமதம்

Posted: 16 May 2015 12:20 PM PDT

குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் தூர் அகற்றும் பணிகள் தொடர்ந்து தாமதாமாகி வருவதால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

குமரி மலையோரப் பகுதிகளில் மழை தீவிரம்

Posted: 16 May 2015 12:19 PM PDT

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை தீவிரமாக மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

சதுரங்கப் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 16 May 2015 12:19 PM PDT

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாகர்கோவில் மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை பாராட்டினார்.

பெண், காதலருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Posted: 16 May 2015 12:18 PM PDT

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், குடும்பத்தினர் 7 பேரையும் கொலை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், பெண் ஒருவருக்கும், அவருடைய காதலருக்கும் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

சித்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் எப்போது?

Posted: 16 May 2015 12:17 PM PDT

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்னும் 10 நாள்களில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி மீனவர்கள் உள்பட 23 பேர் டீகோ கார்சியா தீவில் சிறைப்பிடிப்பு

Posted: 16 May 2015 12:16 PM PDT

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 21 பேர் மற்றும் 2 கேரள மீனவர்கள், டீகோ கார்சியா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள:மாவோயிஸ்டை அழைத்துச் செல்ல கர்நாடக போலீஸ் நடவடிக்கை

Posted: 16 May 2015 12:16 PM PDT

கோவை அருகே கைது செய்யப்பட்ட 5 மாவோயிஸ்டுகளில், ரூபேஸ் என்பவரை விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்ல கர்நாடகப் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆபரணத் தங்கம் ரூ.32 உயர்வு

Posted: 16 May 2015 12:15 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 32 உயர்ந்து, சனிக்கிழமை ரூ.20,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை பெண் ஊழியர் தற்கொலை வழக்கு: சக ஊழியர் கைது

Posted: 16 May 2015 12:15 PM PDT

இந்து சமய அறநிலையத் துறையின் தாற்காலிக பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சக ஊழியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மத்திய சிறையில் கைதிகள் தொடர் உண்ணாவிரதம்

Posted: 16 May 2015 12:14 PM PDT

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் இருவர் அதிகாரிகளால் தாக்கப்பட்டதைக் கண்டித்துச் சக கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொது சேவை மையங்கள் இன்று இயங்கும்

Posted: 16 May 2015 12:14 PM PDT

அரசின் பல்வேறு சான்றுகளை அளிக்கும் பொது சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) செயல்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொது சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் உள்ள

என்.எல்.சி.க்கு சிறந்த நிறுவனத்துக்கான விருது

Posted: 16 May 2015 12:13 PM PDT

சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருவதற்காக, என்.எல்.சி.க்கு சிறந்த நிறுவனத்துக்கான விருதை, "பியூரோகிரசி டுடே' என்ற மாத இதழ் வழங்கியது.

கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் இன்று விவிலியக் கண்காட்சி

Posted: 16 May 2015 12:13 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) விவிலியக் கண்காட்சி நடைபெறுகிறது.

தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை:தமிழருவி மணியன்

Posted: 16 May 2015 12:12 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்தார்.

ராணுவப் பயிற்சி காலத்தில் தொகுப்பு நிதி மானியம்: ஆட்சியர் தகவல்

Posted: 16 May 2015 12:12 PM PDT

முன்னாள் படைவீரர்களின் சிறார்களை ராணுவத்தில் சேவையாற்ற ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிக் காலத்தின் போது தமிழ்நாடு தொகுப்பு நிதியிலிருந்து மானியம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வியாழக்கிழமை தெரிவித்தார்.

போடிமெட்டு, கொடைக்கானல் மலையில் மீண்டும் பாறைகள் சரிவு:போக்குவரத்து பாதிப்பு

Posted: 16 May 2015 12:12 PM PDT

போடிமெட்டு, பழனி-கொடைக்கானல் மலைச் சாலைகளில் மீண்டும் பாறைகள் சரிந்ததால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தக்கலை அருகே 10 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதம்

Posted: 16 May 2015 12:11 PM PDT

தக்கலை அருகே நள்ளிரவில் 10 மோட்டார்சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதமுற்றன.

குமரியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 6 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

Posted: 16 May 2015 12:10 PM PDT

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது. ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண்,  6 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்றை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார்.

ஏப்ரல் மாத ஏற்றுமதியில் சரிவு

Posted: 16 May 2015 12:10 PM PDT

ஏப்ரல் மாதத்துக்கான ஏற்றுமதி 14 சதவீதம் குறைந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புது தில்லியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கேரள அரசு ஓய்வூதியர் சங்க மாநாடு

Posted: 16 May 2015 12:10 PM PDT

கேரள அரசு ஓய்வூதியர் சங்க குமரி மாவட்டக் கிளையின் 23 ஆவது 4 நாள் மாநில மாநாடு பாலக்காட்டில் நடைபெற்றது.

டாரென்ட் ஃபார்மா லாபம் ரூ. 130 கோடி

Posted: 16 May 2015 12:09 PM PDT

டாரென்ட் ஃபார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் 4-ஆம் காலாண்டு நிகர லாபம் ரூ. 130 கோடி எனத் தெரிவித்தது.

வரதட்சிணைக் கொடுமை: 6 பேர் மீது வழக்கு

Posted: 16 May 2015 12:09 PM PDT

நாகர்கோவில் அருகே பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு  கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது மகளிர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நிஸ்ஸான் "டெரானோ குரூவ்' விற்பனை தொடங்கியது

Posted: 16 May 2015 12:09 PM PDT

நிஸ்ஸான் கார் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் ரக காரான "டெரானோ குரூவ்' விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

குமரி நிதிநிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

Posted: 16 May 2015 12:08 PM PDT

குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தை: லாபகரமாக முடிவுற்ற வாரம்

Posted: 16 May 2015 12:08 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வார வர்த்தகம் லாபகரமாக முடிவுற்றது. வார இறுதியில் சென்செக்ஸ் குறியீட்டில் 219 புள்ளிகள் உயர்வு பெற்று 27,324 என நிலைத்தது.

குமரி அரசு அருங்காட்சியகத்தில் நாளை சிறப்புக் கண்காட்சி

Posted: 16 May 2015 12:08 PM PDT

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் அண்மைக்கால சேகரிப்புகள் குறித்த சிறப்புக் கண்காட்சி திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.

"ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்'

Posted: 16 May 2015 12:08 PM PDT

பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயலும் "எதிரி உளவு அமைப்பு'களுக்கு எதிராக, அந்த நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தீவிரமாகச் செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்தில் 3 நீதிபதிகள் சுட்டுக் கொலை

Posted: 16 May 2015 12:07 PM PDT

எகிப்தின் பதற்றம் நிறைந்த சினாய் பகுதியில் 3 நீதிபதிகளை பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனர். இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்ஸார்

பாஸ்டன் மாரத்தான் குண்டு வெடிப்பு:குற்றவாளிக்கு மரண தண்டனை

Posted: 16 May 2015 12:07 PM PDT

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்த்தியவர்களில் ஒருவரான ஸோகர் சர்னேவுக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

ரயில் மோதி வழக்குரைஞர் குமாஸ்தா சாவு

Posted: 16 May 2015 12:03 PM PDT

களியக்காவிளை அருகே ரயில் மோதி வழக்குரைஞர் குமாஸ்தா இறந்தார்.

நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் 19இல் மின்தடை

Posted: 16 May 2015 12:02 PM PDT

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக வரும் 19ஆம் தேதி மின்தடை செய்யப்படுவதாக மின் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் 23 பேர் படுகொலை:புராதன நகரை நெருங்குகிறது ஐ.எஸ்.

Posted: 16 May 2015 12:02 PM PDT

சிரியாவிலுள்ள பால்மைரா புராதன நகரை நோக்கி இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் முன்னேறி வருவதாகவும், அந்த நகரையொட்டிய கிராமத்தில் 23 பொதுமக்கள் 23 பேரை அவர்கள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றதாகவும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மாநில கால்பந்துப் போட்டி: நாகர்கோவில் அணி சிறப்பிடம்

Posted: 16 May 2015 12:01 PM PDT

நாகர்கோவிலை அடுத்த மறவன்குடியிருப்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் நாகர்கோவில் அணி சிறப்பிடம் பெற்றது.

1,000 ஆண்டு பழைமை வாய்ந்த கோயில் :வங்கதேசத்தில் கண்டறியப்பட்டது

Posted: 16 May 2015 12:01 PM PDT

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹிந்துக் கோயில் வங்கதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குமரியில் வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 16 May 2015 12:01 PM PDT

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகள் பலி

Posted: 16 May 2015 12:00 PM PDT

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மக்களுக்கான இலக்கியங்களை மக்கள் மொழியிலேயே எழுதுங்கள்

Posted: 16 May 2015 12:00 PM PDT

மக்களுக்கான இலக்கியங்களை மக்களின் மொழியிலேயே எழுதுங்கள் என்று சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் பேசினார்.

தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வேலைநிறுத்தம்:மே 26-ல் தொழிற்சங்கங்கள் முடிவு

Posted: 16 May 2015 11:59 AM PDT

தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்வது குறித்து, வரும் 26ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்:காங்கிரஸாருக்கு ராகுல் வலியுறுத்தல்

Posted: 16 May 2015 11:58 AM PDT

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும்படி காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பச்சௌரி மனு மீது 21-இல் விசாரணை

Posted: 16 May 2015 11:58 AM PDT

பெண் ஒருவருக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் அளித்தபோது விதிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி, ஆர்.கே. பச்சௌரி தாக்கல் செய்த மனு மீது, வரும் 21ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்தது.

நேபாளத்துக்கு நிதியுதவி:உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

Posted: 16 May 2015 11:58 AM PDT

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு உதவுவதற்காகவும், அந்நாட்டை மறுநிர்மாணம் செய்வதற்கும் உடனடியாக நிதியுதவி அளிக்குமாறு உலக நாடுகளை ஐ.நா. பொதுச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பிகாரில் மீண்டும் நிலநடுக்கம்

Posted: 16 May 2015 11:57 AM PDT

பிகார் மாநிலத்தில் சனிக்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவானது.

உருவாவதற்கு முன்பே உடைந்த ஜனதா கூட்டணி: நக்வி விமர்சனம்

Posted: 16 May 2015 11:57 AM PDT

ஒன்றிணைந்த ஜனதா கட்சி என்பது, உருவாவதற்கு முன்பே உடைந்த கூட்டணி என, மத்திய இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்தார்.

கேஜரிவால்-நஜீப் ஜங் மோதல்: அரசு நிர்வாகம் பாதிக்கும்

Posted: 16 May 2015 11:57 AM PDT

தில்லி தலைமைச் செயலர் நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசு நிர்வாகத்தை பாதிக்கும் என்று தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™