Tamil News | Online Tamil News |
- 22ம் தேதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு அழைப்பு: முதல்வராக ஜெ., அதே நாளில் பதவி ஏற்க வாய்ப்பு
- பீஜிங்கில் பிரதமர் மோடி - சீன பிரதமர் இடையே 24 ஒப்பந்தம்: சென்னையில் தூதரகம், சகோதரி நகரம் அமைக்க முடிவு
- தெலுங்கானாவில் ராகுல் பாதயாத்திரை: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல்
- லாலு - நிதிஷ் இடையே 'கும்மாங்குத்து'
- பெட்ரோல் விலை ரூ.3.13 , டீசல் விலை ரூ.2.71 உயர்வு
- குமார் விஸ்வாஸ் மீது நடவடிக்கை : கமிஷன் தலைவிக்கு 'குடைச்சல்'
- உயர்ந்த விருதுகளை எல்லாம் தர வேண்டும்: 'தினமலர்' ஆசிரியருக்கு டில்லியில் புகழாரம்
- 'கூலிங் கிளாஸ்' கலெக்டருக்கு சத்தீஸ்கர் அரசு கண்டனம்
- குழந்தை தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி கோரிக்கை
- ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு திருமண அழைப்போடு கூட்டணி பேச்சு
- கொடூர கொலைக்கான தண்டனையில் ஆண், பெண் பேதம் பார்க்க கூடாது
- மோடி கிளிக் செய்த ''செல்பி' : ''உலகின் சிறந்த செல்பி'' படமாக போர்பஸ் பத்திரிகை அறிவிப்பு
| Posted: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில், கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதாவை, சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கான கடிதத்தை, கவர்னரிடம் அன்றே அளிக்கின்றனர். எனவே, அன்றைய தினம் அல்லது மறுநாள், தமிழக முதல்வராக, ஐந்தாவது முறையாக, ஜெயலலிதா பதவியேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர், 27ம் தேதி, அவரது முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவி பறிபோனது.புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ... |
| Posted: பீஜிங் : மூன்று நாள் பயணமாக, அண்டை நாடான சீனாவுக்கு, நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, பீஜிங் நகரில் நேற்று, பிரதமர் லி கெகியாங்கை சந்தித்து பேசியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே, 24 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில், சென்னையில் துணை தூதரகம், சகோதரி நகரம் அமைப்பது உட்பட, பல அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.ஆசிய பிராந்தியத்தின், ஒரே வல்லரசு நாடான, சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், கடந்த ஆண்டு இந்தியா வந்ததை அடுத்து, அவர் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி, நேற்று முன்தினம் சீனா சென்றார். சிறப்பான வரவேற்பு : அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த ... |
| தெலுங்கானாவில் ராகுல் பாதயாத்திரை: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் Posted: நிர்மல் (தெலுங்கானா): தெலுங்கானாவில், வறட்சியாலும், பருவம் தவறி பெய்த மழையாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடுவதற்காக, காங்., துணை தலைவர் ராகுல், நேற்று, 15 கி.மீ., தூர பாதயாத்திரையை துவக்கினார். அடிலாபாத் மாவட்டம், கோராடிக்கல் கிராமத்தில், அவரின் பாதயாத்திரை துவங்கியது. பாதயாத்திரையை துவக்கிய அவர், முதலில், 12 லட்சம் ரூபாய் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட, வேல்மா ராஜேஷ்வர் என்பவரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அத்துடன், அவரது மனைவியிடம், 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதன்பின், ரச்சாபூர் உட்பட, மூன்று ... |
| லாலு - நிதிஷ் இடையே 'கும்மாங்குத்து' Posted: பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் இடையே மோதல் உருவாகி உள்ளது. பீகார் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒன்றிணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக, தொகுதிப் பங்கீடு பேச்சுக்களும் துவங்கி உள்ளன. இதில், மாநிலத்தில் மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 145 இடங்களை, ... |
| பெட்ரோல் விலை ரூ.3.13 , டீசல் விலை ரூ.2.71 உயர்வு Posted: புதுடில்லி: எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 66.08 ரூபாயாக இருந்தது. இது, தற்போது 3.37 ரூபாய் உயர்த்தப்பட்டு, 69.45 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், 52.76 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 2.98 ரூபாய் உயர்ந்து, 55.74 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ... |
| குமார் விஸ்வாஸ் மீது நடவடிக்கை : கமிஷன் தலைவிக்கு 'குடைச்சல்' Posted: புதுடில்லி: 'ஆம் ஆத்மி' கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் மீது, பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார புகாரை விசாரணைக்கு ஏற்ற, டில்லி மாநில மகளிர் கமிஷன் தலைவி ஜூஹி கானுக்கு, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, 'நோட்டீஸ்' அனுப்பி யுள்ளது.'உங்களை ஏன் பதவியிலிருந்து நீக்கக் கூடாது' என, அதில் கேட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பெண் எம்.எல்.ஏ.,வான ஜூஹி கான், குமார் விஸ்வாசின் முறைகேட்டை, பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தியதால், கடும் கோபம் அடைந்துள்ள கெஜ்ரிவால் அரசு, ஜூஹியை ... |
| உயர்ந்த விருதுகளை எல்லாம் தர வேண்டும்: 'தினமலர்' ஆசிரியருக்கு டில்லியில் புகழாரம் Posted: "தொல்காப்பியர் விருது பெற்ற, 'தினமலர்' ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு, இந்த நாட்டின் உயரிய விருதுகள் அனைத்தையும் வழங்க வேண்டும். அத்தகைய, முழுமையான பெருமைக்குரியவர் அவர்," என, மேகாலயாவில் கவர்னராக பொறுப்பேற்கவுள்ள, சண்முகநாதன் கூறினார்.செம்மொழி தமிழுக்கான விருதுகளை பெற்றவர்களுக்கு, டில்லியில் தமிழ் சங்கம் சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேகாலயா மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ளவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, சண்முகநாதன் பேசியதாவது: |
| 'கூலிங் கிளாஸ்' கலெக்டருக்கு சத்தீஸ்கர் அரசு கண்டனம் Posted: பஸ்தார்: பிரதமர் மோடி, சத்தீஸ்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவரை வரவேற்ற, பஸ்தார் மாவட்ட கலெக்டர், 'கூலிங் கிளாஸ்' அணிந்திருந்ததால், அரசின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் போன்ற தலைவர்களுடன் உரையாடும் போது அல்லது சந்திக்கும் போது, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், கூலிங் கிளாஸ் எனப்படும், கண்களில் அணியும் குளிர் கண்ணாடிகளை அணியக் கூடாது என, அரசு பணியாளர் சட்டங்கள் தெரிவிக்கின்றன. இதை அறிந்திருந்த போதிலும், பஸ்தார் கலெக்டர் அமித் கட்டாரியா, கடந்த சில நாட்களுக்கு முன், சத்தீஸ்கர் வந்திருந்த பிரதமர் மோடியை சந்தித்த போது, ... |
| குழந்தை தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி கோரிக்கை Posted: சென்னை: 'குழந்தை தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை, திரும்பப் பெற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:குழந்தை தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரவுள்ள, பல திருத்தங்களுக்கு, மத்திய பா.ஜ., அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.தங்களது குடும்ப பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த பணிகள், 'சர்க்கஸ்' தவிர்த்து, பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும், 14 வயதுக்கு உட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், மற்ற பணிகளில் ... |
| ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு திருமண அழைப்போடு கூட்டணி பேச்சு Posted: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, நேற்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். தன் தம்பி மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற ஸ்டாலின், விஜயகாந்துடன், தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.தலைவர் கருணாநிதியின் கடைசி மகன், தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதி திருமண அழைப்பிதழை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கொடுத்து வருகிறார்.இதற்காக, தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார். ஏற்கனவே, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், த.மா.கா., தலைவர் வாசன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ... |
| கொடூர கொலைக்கான தண்டனையில் ஆண், பெண் பேதம் பார்க்க கூடாது Posted: புதுடில்லி : 'கொடூரமான குற்றங்களை புரிந்தால், அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தண்டனை ஒன்று தான். பச்சிளம் குழந்தை உட்பட, ஏழு பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது சரி தான்' என கூறிய, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், குஜராத் பெண்ணுக்கும், அவளின் கள்ளக்காதலனுக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.குஜராத் பள்ளி ஆசிரியை ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன், தன் குடும்பத்தை சேர்ந்த, 10 மாத குழந்தை உட்பட, ஏழு பேரை கொடூரமாக கொன்றார். இந்த கொடூரங்களுக்கு, அவளின் கள்ளக்காதலனும் உதவி செய்துள்ளான்.தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ... |
| மோடி கிளிக் செய்த ''செல்பி' : ''உலகின் சிறந்த செல்பி'' படமாக போர்பஸ் பத்திரிகை அறிவிப்பு Posted: பீய்ஜிங்: சீனா சென்றிருந்த பிரதமர் மோடியும், அந்நாட்டு பிரதமர் லீ -கெஹியாங்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி படம், உலகில் தலை சிறந்த செல்பி படமாக போர்பஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது.சமூக வலைதளங்களில் வெளியான 6 மணி நேரத்தில் லட்சகணக்கானோர் பார்த்து பாராட்டியுள்ளனர்.மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் 24 ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 16,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |