Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பாரிஹாசனம்

Posted: 15 May 2015 03:29 PM PDT

செய்முறை: விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும். இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல் வைக்கவும். இடது கை இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதி நிலையில் ...

புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்

Posted: 15 May 2015 03:24 PM PDT

ஹாலிவுட், பாலிவுட் ஸ்டைலில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் தான், புறம்போக்கு என்கிற பொதுவுடமை. நட்சத்திர சேர்க்கை மட்டுமல்ல, படத்திலும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிரட்டலாகவும், பிரமாண்டமாகவும், புரட்சி பேசி வெளிவந்திருக்கிறது. கதைப்படி, புரட்சிகர படையை சேர்ந்த பாலு என்கிற ஆர்யா தூக்குதண்டனை கைதி. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய இளம் சிறை அதிகாரி மெக்கலே ...

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Posted: 15 May 2015 03:08 PM PDT



பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945

ஓணான் வேட்டை!

Posted: 15 May 2015 02:54 PM PDT

சோ முவும் முருகனும் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்தார்கள். முருகன் ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகளைப் பார்த்தபடி வந்தான். ஒரு ஓணான் முட்செடியின் கிளையில் மண்டையை ஆட்டிக்கொண்டு நின்றது. ''முருகா, ஓணான் பிடிப்போமாடா?'' என்று ஆவலுடன் கேட்டான். ''சரிடா, போய் கடையில பத்து பைசாவுக்கு நரம்பு வாங்கிட்டு வா, நான் ஓணானைப் பார்த்துக்கிறேன்'' என்று முருகனை அனுப்பினான். ஒரு நீளமான குச்சியை எடுத்து வைத்துக்கொண்டான். ஓணான் சற்று நகர்ந்தது. ஓடி விடுமோ என்று பயந்தான். அது கண்களை உருட்டி உருட்டி அடுத்து ...

சீச்சீ திராட்சை!

Posted: 15 May 2015 02:52 PM PDT

ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ''சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!'' என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நரியை உங்களுக்கு நினைவிருக்கும். திராட்சைப் பழத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலைந்த அந்த நரி, அது கிடைக்காத ஏக்கத்தால் நோயில் விழுந்தது. நோய் முற்றி இறக்கும் நிலைக்குப் போன அந்த நரி தன் மகனை அருகே அழைத்தது. ''அன்பு மகனே! திராட்சைக் கனிகளை வயிறார உண்ண வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமலேயே நான் இறக்கப் போகிறேன். என் நிறைவேறாத ஆசையை ஈடுசெய்யும் விதமாக ...

ரீதி - பூமணி

Posted: 15 May 2015 02:45 PM PDT

அப்படியே முடிவாயிற்று. மூன்று பேரும் ஓடமரத்து நிழலில் போய் உருண்டார்கள். தொரட்டிக் கம்பு மரக்கொம்பைக் கவ்வி ஏலவட்டம் போட்டது. உதிர்ந்து கிடந்த பூக்கருகல்களைப் பொறுக்கி நெறித்துக்கொண்டே பெரியவன் கேட்டான். "அப்ப இண்ணக்கி கஞ்சியில்லையாக்கும். எங்க வீட்டில ஆருருந்தா?" சின்னவன் தொண்டையை நனைத்தான். "ஒங்கம்மா புள்ளையாட்டீட்டிருந்தா 'புளிச்ச தண்ணிக்குள்ள" கூட இல்லனு கையை விரிச்சுட்டா... அவன் வீட்ல ஆளவே காணும்..." "நீ குடிச்சிட்டு வந்தயா?" "அதெல்லாம் கேலி மயிருல்ல. கொஞ்சம் நஞ்சம் ...

மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி

Posted: 15 May 2015 02:42 PM PDT

மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது. சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால் வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான். மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் ...

தங்க ஒரு… கிருஷ்ணன் நம்பி

Posted: 15 May 2015 02:38 PM PDT

அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் கூடாது. அதுவே நம் சக்திக்கு ...

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!

Posted: 15 May 2015 01:39 PM PDT

நீளமாக கூந்தலுக்காக ஒவ்வொருவரும் அதிகம் மெனக்கெடுவது உண்டு. கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களையும், வீட்டிலேயே தயாரிக்கும் எண்ணெய்களையும் பயன்படுத்துகிறோம். இது அனைவருக்கும் பலனை தந்துவிடுவதில்லை. ஆனால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால், ஆரோக்கியமான உடலும், அழகான கூந்தலையும் பெற்றுவிடலாம். வைட்டமின்களும், புரதமும் கூந்தல் வளர்வதற்கு உதவுகின்றன. எந்தெந்த சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவை? என்பது பற்றி விளக்குகிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம். புரதமே ஆதாரம் அமினோ ...

தேசியச் செய்திகள்

Posted: 15 May 2015 01:38 PM PDT

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ...

அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!

Posted: 15 May 2015 01:35 PM PDT

தமிழக அரசியலில் 'நன்றி' என்ற வார்த்தையை பயன்படுத்த இதுதான் இடம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நன்றி உணர்வு அரசியல்வாதிகளுக்கு அதிகரித்துவிட்டது. உலகிலேயே முதன்முறையாக தமது வழக்குகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு பேனர் வைத்து நன்றி சொல்லும் அளவுக்கு தமிழர்கள் நன்றி உணர்ச்சி மிகுந்தவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு பாதகமாகிவிட்டால் இதே தமிழர்களைப்போல் 'நன்றி' காட்டுபவர்கள் யாரும் இருக்க முடியாது. நீதிபதி தம் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போய் விடுகிறது அந்த நன்றியுணர்வு. எத்தனை ...

ருத்ராட்சம் – சில அறியப்படா தகவல்கள்…

Posted: 15 May 2015 01:32 PM PDT

ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயருள்ள மரத்தின் விதை. இவ்விதை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இங்கு வெவ்வேறு வகையான ருத்ராக்ஷ மணிகளும் அவைகளின் பயன்களையும், பஞ்சமுகி ஏகமுகி போன்றவற்றை பற்றியும் சத்குருவின் பகிர்வு… சத்குரு: இமாலய பகுதியை சேர்ந்த ஒருசில உயர்ந்த மலைப் பகுதிகளில் வளரும் குறிப்பிட்ட மரங்களின் விதைதான் ருத்ராட்சம். துரதிர்ஷ்டவசமாக இந்த மரங்களை இரயில்வே தண்டவாளங்களில் முன்பு பயன்படுத்தி வந்தார்கள். இதனாலேயே இந்தியாவில் ...

என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

Posted: 15 May 2015 12:54 PM PDT

இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த ...

மானம்

Posted: 15 May 2015 12:50 PM PDT

''மாமா!'' என்ற உஷாவின் குரல் கேட்டு, திரும்பிப் பார்த்தார் சபேசன். ராகவனின் தந்தை. ''வேலைக்காரப் பையன் இன்றைக்கு வரவில்லை. அவருக்குச் சாப்பாடு அனுப்பவேண்டும்...'' ''அதற்கென்னம்மா! நீ போய் 'கேரியரை' ரெடி பண்ணு. நான் போய்க் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்!'' என்றார் அவர். மாலை மணி ஆறு. ஆபீசிலிருந்து வந்ததும் வராததுமாக உஷாவிடம் பாய்ந்தான் ராகவன். ''உன்னை யார் அப்பாவிடம் சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பச் சொன்னது?'' ''வேலைக்காரப் பையன் வரவில்லை...'' ''சே... உன்னாலும் அப்பாவாலும் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 15 May 2015 11:51 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

நடிகை!

Posted: 15 May 2015 10:25 AM PDT

காயத்தின் மீது சாயம் பூசி வருபவள்! சாயமில்லாமல் பார்த்தல், பயம் என்னும் பரிசளிப்பவள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Posted: 15 May 2015 09:13 AM PDT

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் – பார்வைகள் பலவிதம். ஒரு சமயம் துறவி ஒருவர் சாலை ஓரம் மரத்தடியில் சமாதி நிலையில் படித்திருந்தார். அந்த வழியாக வந்த திருடன் ஒருவன் அவரை பார்த்து இவனும் நம்மை போல் ஒரு திருடன் போலிருக்கிறது, இரவு திருடிய களைப்பில் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறான் போல. காவல்கள் கையில் அகப்பட்டால் மாட்டிக்கொள்வான் பாவம் என்று எண்ணியபடியே அங்கிருந்து புறப்பட்டான். அதே வழியாக குடிகாரன் ஒருவன் வந்தான், அவனும் அந்த துறவியை பார்த்தான். அவன் இங்கு கிடப்பது என்னை போல ஒரு குடிகாரன் போலிருக்கிறது. ...

பிறந்த தேதியும், வாழ்க்கை ரகசியமும்

Posted: 15 May 2015 03:44 AM PDT

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற  எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய  தேதிகளில் பிறந்தவர்கள்  ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ...

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 15 May 2015 03:01 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

தவறவிட்ட எம்ப்ளாய்ண்ட்மெண்ட் நம்பர் மீண்டும் பெறுவது எப்படி

Posted: 15 May 2015 02:45 AM PDT

என்னுடைய எம்ளாய்மெண்ட் ஸ்லிப் தவறிவிட்டது . என் ரெஜிஸ்டர் எண் மீண்டும் பெற வழி இருக்கிறதா...என்று கூறுங்கள்..நன்றி

என்றும் நட்புடன்
தமிழ்நேசன்

ஆணின் காதல்

Posted: 15 May 2015 01:25 AM PDT

தினம் தினம் நீ தேடி
செல்வது எதையோ
தெரியவில்லை
ஆனால் என் இதயத்தின்
தேடல் எப்போதும்
நீயாக தான்
இருக்கிறாய் .....!

பாமரர் தேவாரம்

Posted: 14 May 2015 08:05 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™