Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீன உறவில் தந்திரங்களை கையாளும் மோடி: கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் தகவல்

Posted:

பீஜிங்:'பிரதமர் மோடி, சீனாவுடனான உறவில் சில தந்திரங்களை கையாளுகிறார். தெற்காசியாவில் குட்டி நாடுகளை வளைத்து, பெரிய நாடாக மாற முயற்சிக்கிறார்' என, சீன பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.

அண்டை நாடான சீனாவுக்கு, பிரதமர் மோடி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 16ம் தேதி வரை அவர், அந்நாட்டில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதை முன்னிட்டு, சீன பத்திரிகை கள், பிரதமர் மோடி குறித்த செய்திகளை வெளியிட்ட வண்ணமாக உள்ளன.ஆளும், சீன கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை ஒன்றில், அந்நாட்டின் பேராசிரியர் ஒருவர் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது: சீனாவுடனான எல்லை ...

மத்திய அரசின் கோரிக்கை: கோர்ட் மறுப்பு

Posted:

புதுடில்லி: தேசிய நீதித் துறை நியமனக் கமிஷனுக்கு எதிரான கோரிக்கை மனுக்களை, கூடுதல் நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

'கொலீஜியம்' எனப்படும், நீதிபதிகள் குழு மூலம், மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் நடைபெற்று வந்தது. அதை மாற்ற விரும்பிய மத்திய அரசு, கடந்த ஆண்டு, தேசிய நீதித் துறை நியமனக் கமிஷனை கொண்டு வந்தது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்து ...

ஜெ., வழக்கில் அப்பீல் தாக்கல் செய்ய தமிழக கட்சிகள் கோரிக்கை: ஆச்சார்யா கருத்தை சுட்டிக்காட்டி கர்நாடகாவுக்கு வலியுறுத்தல்

Posted:

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக எதிர்க்கட்சிகள் கூட்டாக எழுப்பியுள்ளன. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, தீர்ப்பு குறித்து தெரிவித்த கருத்தை, இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டி உள்ளன.இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தகுதி, வழக்கை நடத்திய அரசு என்ற முறையில், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும், மனுதாரர்கள் என்ற அடிப்படையில், பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி, ...

பாரபட்சமாக நடக்கிறீங்க: சபாநாயகர் மீது காங்., புகார்

Posted:

புதுடில்லி: 'சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாரபட்சமாக நடந்து கொள்கிறார்' என, காங்., - எம்.பி.,க்கள் குற்றஞ்சாட்டியதற்கு, ஆளும் தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

காங்., துணைத் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான, உ.பி.,யின் அமேதியில், அமைய இருந்த, உணவு பூங்கா திட்டம் கைவிடப்பட்டதாக கூறி, காங்., - எம்.பி.,க்கள் சிலர், நேற்று காலை, லோக்சபாவில் பிரச்னை எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய உணவுத் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல் அறிக்கை வாசித்தார். அதை செய்ய விடாமல், காங்., - எம்.பி., தீபிந்தர் சிங் ஹூடா, ரகளையில் ...

நேபாள நாட்டில் மீண்டும் பயங்கர பூகம்பம் : நாட்டின் வட மாநிலங்களும் குலுங்கின

Posted:

காத்மாண்டு:மூன்று வாரங்களுக்கு முன், 7.9 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பத்தை சந்தித்த நேபாள நாட்டில், நேற்று, மீண்டும் பயங்கர பூகம்பம் நிகழ்ந்தது. 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாள பூகம்பத்தின் தாக்கம், அண்டை நாடான இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. டில்லி உட்பட பல நகரங்கள் அதிர்ந்தன. கட்டடங்கள் இடிந்ததில், 17 பேர் பலியாயினர்.இயற்கைச் சீற்றங்களில் மிகக் கொடியது, முன்கூட்டியே கணிக்க முடியாதது பூகம்பம். இமயமலை நாடான நேபாளத்தை, கடந்த மாதம், 25ல் உலுக்கி எடுத்ததன் சோகம், ...

ரயிலில் இடமில்லா விட்டால் விமானத்தில் பறக்கலாம்: ஐ.ஆர்.சி.டி.சி., புதிய திட்டம்

Posted:

புதுடில்லி: காத்திருப்பு பட்டியலில் இருந்து, கடைசி நிமிடம் வரை, உறுதியாகாத ரயில் டிக்கெட்டுகளுக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்புதிய திட்டத்தின்படி, பயணிகள், குறைந்த கட்டணத்தில், விமானத்தில் செல்லும் வாய்ப்பை பெறலாம். ஆனால், பயணம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதுவும், காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும். கடைசி நேர பயணிகள் பட்டியல் தயாரிக்கப்படும் வரை டிக்கெட் உறுதியாகாத பயணிகள், இத்திட்டத்தினால் பலனடையலாம். இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் இருந்து ...

மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்க!

Posted:

புதுடில்லி: 'தே.ஜ., கூட்டணி அரசின் ஓர் ஆண்டு நிறைவை, ஒரு வாரம் விழாவாக கொண்டாட வேண்டும். அரசின் சாதனைகளை, எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்களின் தொகுதி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்று, வரும், 26ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், பா.ஜ., - எம்.பி.,க்களின் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த கூட்டாட்சி மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சிக்காக, பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள முயற்சிகளுக்குப் ...

'நிலம் எடுப்பு மசோதாவை பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்போம்': ராகுல்

Posted:

புதுடில்லி:''நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக எதிர்ப்போம்,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறினார். மத்திய அரசின், புதிய நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் தே.ஜ., கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் அகாலிதளம் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால், மசோதாவை, பார்லிமென்ட் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நேற்று லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட போது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசியதாவது: ...

மே23க்குள் ராஜினாமா செய்யப்போவது யார்? இடைத்தேர்தலை சந்திப்பாரா ஜெ.,

Posted:

சென்னை: ஜெயலலிதா மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படுவதற்காக, எம்.எல்.ஏ., யாரேனும் ஒருவர் தன் பதவியை, வரும், 23ம் தேதிக்குள், ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.தற்போது, வழக்கில் இருந்து விடுதலையாகி உள்ளதால், மீண்டும் முதல்வராக உள்ளார்.அவ்வாறு முதல்வரானால், ஆறு மாதத்திற்குள், அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட வேண்டும்.ஆட்சி முடிவதற்கு, ஓர் ஆண்டு மட்டும் உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடத்த ...

ஒரே வீட்டில் தங்கியதால் சதி செய்ய வாய்ப்பு இல்லை: ஜெ., வழக்கில் நீதிபதி குமாரசாமி உத்தரவு

Posted:

சென்னை: 'ஜெயலலிதாவுடன், சசிகலா உட்பட மற்ற, இருவரும் ஒரே வீட்டில் தங்கியதால், அவர்கள் கூட்டாக சதி செய்து சொத்துக்களை வாங்கியதாக முடிவுக்கு வர முடியாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

காரணம் வேண்டும்:
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:* வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயலலிதாவுடன், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கியதால், அவர்கள் சதி ...

நான் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யவில்லை: கட்காரி

Posted:

புதுடில்லி: ''நான் ஒரு ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, எந்த கோர்ட் நிரூபித்தாலும், எம்.பி., மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனம் புர்தி சாகர் கர்கானா லிமிடெட். இந்த நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து, 84 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதில், 72 கோடி ரூபாயை மட்டுமே, திருப்பிச் செலுத்தி உள்ளது. மீதி, 12 கோடி ரூபாயை செலுத்தவில்லை. இதில், முறைகேடு நிகழ்ந்துள்ளது. மேலும், பயோ காஸ் மூலம், மின் ...

'கிரிக்கெட் சூதாட்டங்கள் தான் கறுப்பு பணத்தின் மையப்புள்ளி'

Posted:

புதுடில்லி: 'கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக நடக்கும் சூதாட்டங்கள் தான், கறுப்பு பண புழக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது' என, சிறப்பு புலனாய்வு குழு, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு, தன் இடைக்கால அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது.அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வெளிநாட்டில் செயல்படும், எச்.எஸ்.பி.சி., வங்கியில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™