Tamil News | Online Tamil News |
- சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானார்: முடிவுக்கு வந்தது 19 ஆண்டு நீடித்த சட்ட போராட்டம்: முதல்வராக பதவி ஏற்பது குறித்து நாளை முடிவு
- தீர்ப்பு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது: ஜெ.,
- முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு விட்டனவா? ஜெ., வழக்கு தீர்ப்பால் கருணாநிதி கோபம்
- தீர்ப்பு அதிர்ச்சியை அளித்தது: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா
- ஜெ., விடுதலை: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
- பெண்ணை கல்லால் தாக்கிய போக்குவரத்து போலீஸ்
- முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அவகாசம் இரண்டே நாள்: எதிர்க்கட்சிகள் நெருக்கடியால் மத்திய அரசு தவிப்பு
- தாவூத் பாக்.,கில் தான் உள்ளான்: ராஜ்நாத் சிங்
- முடங்கி கிடந்த அரசு நிர்வாகம் புத்துயிர் பெறுமா? ஜெ., விடுதலையால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- சி.ஏ.ஜி., அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது
- கூட்டுக்குழு பரிசீலனையில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா
- மேல்முறையீடுக்கு வாய்ப்பு: சட்ட வல்லுனர்கள் கருத்து
- அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து
| Posted: பத்தொன்பது ஆண்டுகளாக சென்னை மற்றும் பெங்களூருவில் நடந்து வந்த, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவை, விடுதலை செய்து, நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். இதனால், அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. நாளை முடிவு அறிவிக்கப்படும் என, தெரிகிறது.நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் தொடர்ந்து, 19 ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்துக்கு முடிவு ஏற்பட்டு, ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்துள்ளார். இதனால், ஆட்சியில் அடுத்தது என்ன என்ற பரபரப்பும், ஆட்சி பொறுப்பை அவர் எப்போது ஏற்கப் ... |
| தீர்ப்பு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது: ஜெ., Posted: சென்னை: 'கர்நாடக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு, எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. என் மீது மாறா பற்றும், அன்பும் கொண்ட, தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது' என, ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: கர்நாடக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு, எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட, அவதூறை நீக்கிய தீர்ப்பு இது; என் மீது, என் அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியை துடைத்திட்ட தீர்ப்பு; நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை, உறுதி செய்த தீர்ப்பு இது. கீழமை ... |
| முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு விட்டனவா? ஜெ., வழக்கு தீர்ப்பால் கருணாநிதி கோபம் Posted: சென்னை: 'நீதிமன்றங்களுக்கெல்லாம், உயர்ந்த நீதிமன்றம் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது, அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது' என, ஜெ., மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்குப் பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரையும், மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார்.ஜன., 29ல் விசாரணை: சில நாட்களுக்கு முன், இதே குமாரசாமி, என்னென்ன சொன்னார் ... |
| தீர்ப்பு அதிர்ச்சியை அளித்தது: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா Posted: பெங்களூரு: "தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து, தீர்ப்பளித்துள்ள தீர்ப்பின் பிரதி கிடைக்கும் வரை, இது தொடர்பாக, எதையும் கூற முடியாது," என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார். கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர், ஜெயமஹால் எக்ஸ்டென்ஷனில் உள்ள தன் அலுவலக இல்லத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தீர்ப்பின் பிரதியை முற்றிலுமாக படிக்காமல், எதையும் கூறுவது சாத்தியமில்லை. எதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம், இந்த தீர்ப்பை அளித்தது என்பது தெரியவில்லை. வழக்கு தொடர்பான, அனைத்து சாட்சிகளையும் ... |
| ஜெ., விடுதலை: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்! Posted: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த, 919 பக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள்: சொத்துக்களின் மொத்த மதிப்பு, 37.59 கோடி ரூபாய். மொத்த வருமானம், 34.76 கோடி ரூபாய். சொத்துக்களின் மொத்த மதிப்பில் இருந்து, வருமானத்தை கழிக்கும்போது, 2.82 கோடி ரூபாய் அதிகமாக வருகிறது. இதை சதவீத கணக்கில் பார்த்தால், 8.12 சதவீதம். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீத அளவில் சொத்துக்கள் இருந்தால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற உரிமை உள்ளது' என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு பிறப்பித்த ... |
| பெண்ணை கல்லால் தாக்கிய போக்குவரத்து போலீஸ் Posted: புதுடில்லி: டில்லி கோல்ப் லிங்க் பகுதியில், நேற்று, பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். இரு குழந்தைகளுடன், வாகனத்தில் சென்ற பெண்ணை தடுத்து நிறுத்தி, அவரிடம் விசாரணை நடத்திய போக்குவரத்து காவலர், சாலை விதியை மீறி வாகனம் ஓட்டியதாகக் கூறி, அந்த பெண்ணிடம், 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அப்பெண் லஞ்சம் தர மறுத்ததால், சாலையில் கிடந்த செங்கல்லை எடுத்து அவரை தாக்கினார். இதில், அப்பெண் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு, ஊடகங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறை உயரதிகாரிகள், பெண்ணை தாக்கிய ... |
| முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அவகாசம் இரண்டே நாள்: எதிர்க்கட்சிகள் நெருக்கடியால் மத்திய அரசு தவிப்பு Posted: புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட, 13 முக்கிய மசோதாக்களை, இன்னும் இரண்டே நாட்களில் பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேறாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த பிப்ரவரி, 23ல் துவங்கி, இம்மாதம், 8ல் முடிவடைவதாக இருந்தது. நிலம் கையகப்படுத்தும் மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு வசதியாக நாளை வரை பட்ஜெட் ... |
| தாவூத் பாக்.,கில் தான் உள்ளான்: ராஜ்நாத் சிங் Posted: புதுடில்லி: ''மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய சதிகாரன், தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தான் உள்ளான். அவனை, இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வந்து, நீதியின் முன் நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 'தாவூத் இப்ராகிம் இருப்பிடம் பற்றி தெரியாது என்றும், அவன் பாகிஸ்தானில் தான் இருக்கிறான்' என்றும், சமீபத்தில், பார்லிமென்டில் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.இதையடுத்து, இந்த விவகாரம் ... |
| முடங்கி கிடந்த அரசு நிர்வாகம் புத்துயிர் பெறுமா? ஜெ., விடுதலையால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு Posted: தமிழகத்தில், முடங்கிக் கிடந்த அரசு நிர்வாகம், ஜெயலலிதா விடுதலையானதால், புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்களிடையே எழுந்துள்ளது.ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தவுடன், பன்னீர்செல்வம், முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மாற்று முதல்வர் வந்ததால், அமைச்சர்களும், அதிகாரிகளும், தங்களுடைய பணியை சரிவர கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.பெரும்பாலான அரசு துறைகளில், பணிகள் முடங்கிப் போயின; நிதி ஒதுக்கீடு இல்லாததால், திட்டங்கள் தேக்கமடைந்தன. அமைச்சர்கள், அலுவலக பணியை மேற்கொள்ளாமல், ஜெயலலிதா விடுதலையாகி வர வேண்டும் என, கோவில் கோவிலாகச் ... |
| சி.ஏ.ஜி., அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது Posted: புதுடில்லி: ''என் குடும்பத்தினருக்கு சொந்தமான புர்தி நிறுவனத்திற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் கடன் வழங்கியதில், எந்த விதமான முறைகேடுகளும் நடக்கவில்லை. மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான - சி.ஏ.ஜி.,யின் அறிக்கை, அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், சில தினங்களுக்கு முன், மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு சொந்தமான புர்தி சாகர் கர்கானா நிறுவனம், இந்திய ... |
| கூட்டுக்குழு பரிசீலனையில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா Posted: புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தி யில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நேற்று லோக்சபாவில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. 'மசோதாவை, விவசாயிகளுக்கு எதிரானது' என, விமர்சித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, அவசர சட்டம் ஒன்றை, மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த அவசர சட்டமானது, மசோதாவாக, மார்ச் மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவில்லை. பார்லிமென்டின் இரு சபைகளிலும், மசோதா ... |
| மேல்முறையீடுக்கு வாய்ப்பு: சட்ட வல்லுனர்கள் கருத்து Posted: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது குறித்து, சட்ட வல்லுனர்கள் கருத்து: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு: சொத்து குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பே இறுதித் தீர்ப்பு அல்ல. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு முறையிடலாம். ஒருவேளை, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனில், வழக்கைத் தொடுத்த, சுப்பிரமணியன் சாமியோ, வழக்கின், ஒரு மனுதாரராக உள்ள தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனோ, ... |
| அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து Posted: சென்னை: 'அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடர்வதை ஏற்கக்கூடாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில், நீதிபதி குமாரசாமி கூறியிருப்பதாவது: சட்டரீதியான போராட்டம் என்ற போர்வையில், அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் பழியை தீர்த்துக் கொள்ள வழக்கு தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. சட்ட நடைமுறையை அல்லாமல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் சுதந்திரத்தை பறிக்க முடியாது. நியாயமான விசாரணை என்பது, குற்றம் சாட்டப்பட்டவரை இருட்டில் வைப்பதல்ல. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, விசாரணை அதிகாரி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 12,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |