Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திரா-தெலுங்கானாவில் வெயில், அனல் காற்று: 429 பேர் பலி

Posted: 22 May 2015 10:33 PM PDT

ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசுகிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் பலர் சுருண்டு விழுந்து பலியாகிறார்கள். வெயிலின் தாக்கம் நேற்று 5–வது நாளாக நீடித்தது. அதாவது காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. மாலை 4 மணி வரை

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது

Posted: 22 May 2015 10:31 PM PDT

திருப்பதி மலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் ஆந்திரா, தமிழ்நாட்டில் 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாலும், வார விடுமுறை என்பதாலும் பக்தர்கள் வருகை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அசாமில் ரெயில் தடம்புரண்டு விபத்து: ரெயில் டிரைவர் உள்பட பயணிகள் பலர் படுகாயம்

Posted: 22 May 2015 09:24 PM PDT

அசாமில் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதன் டிரைவர் உள்பட பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார் நகரில் இருந்து அசாமின் கவுகாத்தி நகருக்கு வந்துகொண்டிருந்த கவுகாத்தி சிபுங் எக்ஸ்பிரஸ் இன்று

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா?: அயர்லாந்தில் நடந்தது வாக்கெடுப்பு

Posted: 22 May 2015 08:52 PM PDT

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா என அயர்லாந்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையான ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் சென்னை சுற்றுலா பயணி ஆற்றில் தவறி விழுந்து பலி

Posted: 22 May 2015 08:51 PM PDT

சென்னையைச் சேர்ந்தவர் லலித்குமார்(வயது 40). இவர் காஷ்மீர் மாநிலத்தைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் அருகே உள்ள பேதாப் பள்ளத்தாக்கு பகுதியில் ஓடும் லிட்டெர் என்ற ஆற்றில் அவர் தவறி விழுந்தார்.

நாடு முன்னேற்றம் அடைய அறிவியல் வளர்ச்சி அவசியம்: துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேச்சு

Posted: 22 May 2015 08:06 PM PDT

15-வது அகில இந்திய மக்கள் அறிவியல் மாநாடு பெங்களூரு சென்டிரல் கல்லூரியில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் அரசின் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த மோடி அரசு முயற்சிக்கவில்லை: உம்மன்சாண்டி பேச்சு

Posted: 22 May 2015 07:48 PM PDT

முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் 125-வது பிறந்த நாள், ஓராண்டு நிறைவு விழா நேற்று திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கேரள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வி.எம். சுதீரன் தலைமை தாங்கினார்.

காஷ்மீரில் ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Posted: 22 May 2015 07:42 PM PDT

காஷ்மீர் மாநிலம் கோர் பகுதியில் கடந்த 8-ந் தேதி 5 கிலோ போதைப்பொருளையும், சுமார் ரூ.9 லட்சம் ரொக்கபணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து பிரித்தோ தேவி என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் இறந்து போன சர்வூராம் என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி ஆவார்.

மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Posted: 22 May 2015 07:42 PM PDT

கேரளாவில் சியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நீதிபதி முகமது முஸ்டாக் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

டெல்லி மாநிலத்தில் மறைமுக அரசை நடத்த பா.ஜனதா முயற்சி: மோடி மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Posted: 22 May 2015 07:36 PM PDT

டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமனம் செய்வது மற்றும் இடமாறுதல் செய்வதற்கான அதிகாரம் மாநில துணை நிலை கவர்னருக்கு மட்டுமே உள்ளது என்று நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால்

ராணுவ துறைக்கு புதிய செயலாளர் ஜி.மோகன் குமார் நியமனம்

Posted: 22 May 2015 07:14 PM PDT

ராணுவ துறையின் செயலாளராக உள்ள ஆர்.கே. மாத்தூரின் பதவிக்காலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு அடைகிறது. இதையடுத்து அந்த துறையின் புதிய செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. மோகன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை நியமனங்களுக்கான மத்திய

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி பிரிவினைவாதிகள் ஊர்வலம்: போலீசார் மீது கல்வீச்சு

Posted: 22 May 2015 05:10 PM PDT

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்கட்டா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு வெளியே வந்த ஹூரியத் அமைப்பை சேர்ந்த காஷ்மீர் பிரிவினைவாத இளைஞர்கள் ஏராளமானோர் பாகிஸ்தான் கொடிகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது லஷ்கர்-இ-தொய்பா கொடிகளையும் சிலர் ஏந்தி வந்தனர். ஊர்வலத்தின் போது ஹூரியத் அமைப்பின் தலைவர் மிர்வாஜ் உமர் பாரூக்கின் வீட்டுக்காவலை கண்டித்தும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும்,

விதவைக்கு வாழ்க்கை கொடுத்த மகனை இறந்த அம்மாவின் உடலை தொட அனுமதிக்காத சாதிவெறியர்கள்

Posted: 22 May 2015 03:52 PM PDT

காவல் துறை உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் இருப்பினும், இன்றளவும் பல வடமாநில கிராமங்களில், சாதி அமைப்புகளே கிராமத்தில் யார் இருக்கலாம், யார் இருக்கக் கூடாது, என்பதைத் தீர்மானிக்கும் அதிகார மையங்களாக இருந்து வருகின்றன. உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் மிதுன் வால்மிகி, இவர் கடந்த ஆண்டு தன் கணவரை இழந்து 6 குழந்தைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்ட,

சபரிமலை கோவில் 18 படிகளில் ஐம்பொன் தகடுகள் பதிக்க முடிவு: தேவசம்போர்டு அனுமதி

Posted: 22 May 2015 02:52 PM PDT

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புனிதம் வாய்ந்ததாக கருதப்படும் 18 படிகள் வழியாக இருமுடி சுமந்து வரும் பக்தர்கள் ஏறிச்சென்று சாமி அய்யப்பனை தரிசித்து வருகிறார்கள். இந்த 18 படிகள் தற்போது பித்தளை தகடுகளால் வேயப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த படிகளில் ஏறிச் செல்வதால் தேய்ந்தும் சேதம் அடைந்தும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழை காலங்களில் வேகமாக ஏறிச்செல்லும் பக்தர்களுக்கு லேசான சறுக்கல் ஏற்பட்டது.

அம்பேத்கர் ரிங்டோன் வைத்திருந்த தலித் இளைஞரை அடித்துக் கொன்ற சாதி வெறியர்கள்

Posted: 22 May 2015 12:48 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் அம்பேத்கர் பாடலை செல்போனில் ரிங்டோனாக வைத்திருந்த தலித் வாலிபரை ஆதிக்க சாதியினர் 8 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸிங் மாணவர் சாகர் ஷெஜ்வால் கடந்த 16 ஆம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஷீரடிக்கு சென்றார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் தனது உறவினர்கள் 2 பேருடன் உள்ளூரில் உள்ள மதுபானக் கடைக்கு சென்று பீர் குடித்துள்ளார். அப்போது சாகரின் செல்போன் ஒலித்துள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தெய்வத்திருமகள்: தடைகளைத் தகர்த்தெறிந்து 10-ம் வகுப்புத் தேர்வில் சிகரம் தொட்டார்

Posted: 22 May 2015 12:23 PM PDT

நேகல் திவாரி முதன் முதலாக பள்ளிக்குச் சென்ற போது செல்லோ டேப் போட்டு ஒட்டியே அவளது ஆசிரியர்களால் அவளை ஒரு இடத்தில் உட்கார வைக்க முடிந்தது. காரணம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட நேகல் ஓடிக் கொண்டே இருப்பார். ஆட்டிசம் எக்காரணம் கொண்டும் தங்கள் குழந்தையை முடக்கி விடக் கூடாது என்பதில் உருதியாக இருந்த நேகலின் பெற்றோர் அவளுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். தற்போது ICSE பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பில் 74 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரது பெற்றோரை மகிழ்ச்சிக் கடலில்

பெண் ஜிம் பயிற்சியாளர் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு

Posted: 22 May 2015 08:49 AM PDT

மத்திய பிரதேசம் மாநிலத்தில், பெண் 'ஜிம்' பயிற்சியாளர் மீது ஆசிட் வீசப்பட்டு உள்ளது, ஆசிட் வீசிய நபர் கொலை செய்யப்பட்டு உள்ளார். போபாலில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ரேனு சாஹு(வயது 21). இன்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்றார், அப்போது அவரது மீது

டெல்லி- பாட்னா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் கொள்ளையடித்த பெண் சிக்கினார்

Posted: 22 May 2015 04:26 AM PDT

நியூடெல்லியில் இருந்து பீகார் மாநில பாட்னாவிற்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவர் சக பயணியிடம் திருடியபோது மாட்டிக்கொண்டார். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ-2 என்ற முன்பதிவு பெட்டியில் கட்டி ராய் என்ற பெண்மணி பயணம் செய்தார். இந்த பயணியுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிமா குமாரி என்ற பெண்மணியும் பயணம் செய்தார்.

பிரதமர் மோடியின் ஓராண்டு ஆட்சியில் ஊழல் இல்லை: அருண் ஜெட்லி

Posted: 22 May 2015 12:44 AM PDT

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– பிரதமர் மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு அரசு நிர்வாகத்தில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்க பா.ஜனதா அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான முக்கியமான அறிவிக்கை விரைவில்

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: தாசரி நாராயணராவ், மதுகோடாவுக்கு ஜாமீன்

Posted: 21 May 2015 11:59 PM PDT

மத்தியில் இருந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் தொழில் அதிபருமான நவீன் ஜிண்டாலுக்கு ஜார்க்கண்ட் மற்றும் ஓடிசா மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போதைய


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™