Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தகுதியறிந்து மோத வேண்டும்

Posted: 31 May 2015 12:19 PM PDT

ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் "கீச்கீச்" என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது. ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. ...

தமிழகம் முழுவதும் 2500 பள்ளிகளை இடிக்க உத்தரவு

Posted: 31 May 2015 12:14 PM PDT

தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன. இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. * மதுரை ...

ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை

Posted: 31 May 2015 12:03 PM PDT

ஆயிரக்கணக்கான வங்கதேசிகளும் ரோஹின்ஜா அகதிகளும் மிகப் பெரிய சரக்குக் கப்பல்களில் அந்தமான் கடல் பகுதியில், ஆள்கடத்தும் இடைத் தரகர்களால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கப்பல்களில் பயணம் செய்து பிறகு தப்பி வந்தவர்களிடம் நேரடியாகப் பேசியதில் இந்தக் கொடூரம் தெரியவந்துள்ளது. இந்தத் தரகர்களுக்கு மிகப் பெரிய மாஃபியா கும்பல் பின்புலமாக இருந்து செயல்படுகிறது. தாய்லாந்து, மலேசிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆள்கடத்தும் தரகர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க முற்பட்டதை அடுத்து, அவர்களை ...

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள்

Posted: 31 May 2015 11:59 AM PDT

நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, அறிவிக்கப்பட்டுள்ள முக்கியத் திட்டங்களைப் பற்றிய ஒரு தொகுப்பு: மேக் இன் இந்தியா: தொழில்முனைவோர்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருள்களைத் தயாரித்து, அதை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யவேண்டும். இதன்மூலம் இந்தியாவிலேயே ...

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன?

Posted: 31 May 2015 11:56 AM PDT

இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் ராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறீசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள். மே 19 2009. இலங்கை மண்ணி​லிருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்​பட்டார்கள் என்று வெற்றியை இலங்கை ராணுவம் கொண்டாடிய தினம். மனித உரிமைகளைக் காற்றில் ...

புலவரே இல்லை!

Posted: 31 May 2015 11:51 AM PDT

முன்னொரு காலத்தில் வைரபுரி நாட்டை இளந்திரையன் என்ற அரசர் மிக சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஒருநாள்- ""அமைச்சரே! இன்னும் சில தினங்களில் எனது பிறந்த நாள் விழா வரப்போகிறது. அறிஞர்களுக்கு, என் பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்க வேண்டும். யார் யாருக்கு வழங்கலாம்?'' என்று கேட்டார் அரசர். ""அரசே! துருபத், கலாதர் இருவருமே பெரும் புலவர்கள். தங்கள் பாடல்களால் நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்கள். அறிவிலும், ஆற்றலிலும் ஒருவருக்கு ஒருவர் இணையானவர்கள். அவர்கள் இருவருக்கும் பரிசு வழங்கலாம் என்பது ...

பிச்சைக்காரனின் புலம்பல்!

Posted: 31 May 2015 11:47 AM PDT

சந்தனபுரி என்ற ஊரில் வணிகர் ஒருவர் இருந்தார். நேர்மையான வியாபாரி. கொள்முதல் செய்த விலையை விட சற்று கூடுதலான விலைக்கு பொருட்களை விற்று, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவியும், தான தர்மங்களும் செய்து வந்தார். இளம் வயதில் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று, அவர்களுக்கு தக்க வயது வந்ததும், திருமணம் நடத்தி வைத்தார். பெண் பிள்ளைகள் தங்கள் புகுந்த வீடு சென்று< பிறந்த வீட்டின் மதிப்பை உயர்த்தினர். ஆண் பிள்ளைகள் தங்கள் தந்தையின் வியாபாரத்தை நல்ல முறையில் கவனித்துக் ...

உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987

Posted: 31 May 2015 11:30 AM PDT



உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

முகநூல் தத்துவங்கள்!

Posted: 31 May 2015 10:56 AM PDT

சுழியம்

Posted: 31 May 2015 10:28 AM PDT

உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் "பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா" எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் குமரி நாட்டுத் தமிழரின் கொடை என்பதை உலகம் அறியவில்லை. பழந்தமிழர் ஞாலமுதல் சுற்றுக்கடலோடிகள் அந்நாள் முதல் வானநூலும் உயர்நிலை கணிதமும் ஒன்றுசேர வளர்ந்தன. "நிலக் கோட்டின் இருபாலும் 5 பாகை அளவுக்குள் புயல் உண்டாவதில்லை" உன்பதைப் பட்டறிவால் உணர்ந்தனர். ஆபிரிக்கக் கிழக்குக் கடற்கரை கெனியாவுக்கும் கீழ்க்கடலில் இந்தோனேசியா, சாலமன் தீவு, தென்னமெரிக்க பெரு ...

வேலன்:-4K வீடியோ டவுண்லோடர்.

Posted: 31 May 2015 10:19 AM PDT

யூடியூப் வீடியோக்களை தனிதனியாகவோ -மொத்தமாகவோ வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்திடஇந்த 4K VIDEO DOWNLOADER  பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.     இப்போது நமக்கு தேவையான யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்யவும். பின்னர் இந்த சாப்ட்வேரினை திறந்து பேஸ்ட் யூஆர்எல் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது வீடியோவானது ...

வெப்ப அலையும் பாதிப்புகளும்...

Posted: 31 May 2015 10:10 AM PDT

நடப்பு ஆண்டில், இந்தியா முழுவதும் வெப்ப அலைகளின் பாதிப்பால் சுமார் 1,800-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவு பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே சுமார் 1,700-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரம், தெலங்கானாவில் மே 21-ஆம் தேதியில் இருந்து நேற்றுவரை வெப்ப அலைகளுக்கு சுமார் 2,600 பேர் இறந்து போயுள்ளதாக "ஈநாடு' நாளிதழ் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அரசின் கணக்கெடுப்பிலும் ...

உங்க பிறந்த தேதி செசால்லுங்க

Posted: 31 May 2015 09:52 AM PDT

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க

சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி

Posted: 31 May 2015 09:30 AM PDT

இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும் வகையில் சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற 14வது தமிழ் இணைய மாநாட்டில் "அரும்பு" என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர் சார்பில் 150 பிரதிநிதிகளும், 10 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 200 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அரும்பு செயலியை அந்நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்டார். "அரும்பு" செயலியானது சிறு குழந்தைகளிடம் தமிழ் மீதான ஆர்வத்தை ...

தீபிகா படுகோனே நடிகையான பின்னணி!

Posted: 31 May 2015 09:26 AM PDT

- தான் நடிகையாக ஆகியிருக்கா விட்டால், பேட்மின்டன் வீராங்கனையாக ஆகியிருப்பேன்…' என்று கூறுகிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. - இது குறித்து அவர் பேசிய போது, 'பெங்களூரில், பிளஸ் 2 படித்த போது, தினமும் அப்பாவுடன் பேட்மின்டன் ஆடுவேன். அச்சமயத்தில், அப்பாவின் நண்பர் குருபிரசாத் போட்ப்பா என்னை போட்டோ எடுத்து, சில விளம்பரங்களில் நடிக்க வைத்தார். சினிமாவில் நடிக்க விரும்பிய போது, 'வேண்டாம்… பேட்மின்டன் வீராங்கனையானால் போதும்…' என்று மறுத்து விட்டார் அப்பா. - இந்நிலையில், ஒரு படத்தில் ...

வாழ்த்தலாம் வாங்க - நம்ம baalakarthik அவர்களுக்கு மகன் பிறந்துள்ளார்

Posted: 31 May 2015 09:22 AM PDT

அன்பு உறவுகளே , நமது ஈகரையின் பழைய தூண்களில் ஒருவரும் (பழைய என்றதும் துருபிடித்த உளுத்துப்போன தூண் என்று நினைத்துகாதீங்க , நீண்ட நாள் உறுப்பினர் என்பதற்காக சொன்னேன்)  நகைச்சுவை பதிவுகளின் முடிசூடா மன்னனனுமாகிய அன்பு சகோதரர் balakarthik அவர்களுக்கு கடந்த ஆறுமாதங்களுக்கு முன் இறைவன் அருளால் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெயர் "சாய் பிரணவ்"   , தந்தையை போல சிறப்புற்று விளங்க இறைவனை வேண்டுகிறோம். டேய் பெரியப்பன்களே இன்னும் ஆறு மாசத்தில் எனக்கு முதல் ...

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Posted: 31 May 2015 09:08 AM PDT

படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? படத் தலைப்பு மாதிரியே செம ஃபாஸ்ட் ஆகவும், வெறித்தனமாகவும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7' திரைப்படம். ரிலீஸான இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் அள்ளிக் குவித்திருக்கிறதாம். வின் டீசல், ட்வெய்ன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம், டோனி ஜா, மிட்செல் ராட்ரிக்ஸ் போன்ற ஸ்டார்களுக்காக மட்டுமில்லை; படத்தில் 'வ்ர்ர்ரூம்... வ்வ்ர்ர்ர்..ரூம்' எனக் கிளம்பும் கார்களுக்காகவும் தியேட்டரில் கூட்டம் அள்ளு கிளப்புகிறது. 'மச்சான்... ...

சின்ன சின்ன ஐடியா (4)

Posted: 31 May 2015 09:03 AM PDT

இதுவர நாம பயன்படுத்துன பொருட்கள் ,அதோட வேல முடிஞ்சதும் ஒதுக்கிடறோம் ,இல்லனா குப்பைல போட்டுறோம் ,இந்த பதிவுல அந்த வேணாம் னு ஒதுக்குறத வேற எப்படி பயன்படுத்திக்கலாம் ,சின்ன சின்ன ஐடியா மூலம் ஒரு விஷயத்த எவ்ளோ எளிமையா பண்ணமுடியும் னு பாக்கலாம் இன்னிக்கு ஆரஞ்சு விளக்கு பத்தி பாக்கலாம் (கோவில் ல எலுமிச்சம் பழத்துல விளக்கு வைக்கிறது பார்திருபீங்களே அதுமாதிரிதான்) தேவையானது ஆரஞ்சு பழ தோல் எதாவது ஒரு எண்ணெய் ,வெஜிடபிள் ஆயில் ,olive ஆயில் ,கூட பயன்படுத்தலாம் (மண்ணெண்ன பயன்படுத்தலாமா ...

மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு

Posted: 31 May 2015 08:22 AM PDT

லக்னோ: மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட்டை சேர்த்த நெஸ்ட்லே நிறுவனம் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. - நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பான மோனோசோடியம் க்ளூட்டமேட் உள்ளதை உத்தர பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு கண்டுபிடித்துள்ளது. - இதையடுத்து மேகி நூடுல்ஸுக்கு தடை விதிப்பது குறித்து உத்தர பிரதேச மாநில அரசு ஆலோசித்து வருகிறது. - இந்நிலையில் நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. -

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 31 May 2015 08:14 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

சிலேடை சிரிப்புகள்

Posted: 31 May 2015 08:11 AM PDT

எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் ...

தமிழ் வருடங்களும் பிறக்கும் குழந்தைகளின் பலன்களும்!

Posted: 31 May 2015 07:17 AM PDT

மன்மத வருடம் பிறந்துவிட்டது. இந்த வருடத்தில் பிறக்கும் குழந்தைகள் செல்வந்தராகவும், விலையுயர்ந்த பொருட்களை அடைபவராகவும், பெண்கள் மத்தியில் புகழ் பெறுபவராகவும் திகழ்வார்கள் என்கின்றன ஜோதிடம் சார்ந்த ஞானநூல்கள். மன்மத வருடத்துக்கு மட்டுமல்ல, தமிழ் வருடங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அதில் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்களை பட்டியலிட்டு விளக்குகின்றன அந்த ஞானநூல்கள். அதுபற்றி, நாமும் தெரிந்துகொள்வோமா? பிரபவ: விலையுயர்ந்த அரிய பொருட்களை சேகரித்து வைத்திருப்பார். நல்ல குழந்தைகள், மகிழ்ச்சி, ...

பூர்வ ஜன்மத்து பந்தம் : சிறுகதை !

Posted: 31 May 2015 07:00 AM PDT

மோகன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவன். நடுத்தர வர்க்கத்தினன். நாணயமானவன். ஒரு சராசரி குடும்பத்தின் அத்தியாவசிய வசதிகளைச் செய்துகொண்டவன். ஆனால், அவனுக்கு ஒரு குறை. அது ஒரு குழந்தை இல்லாததுதான். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. அவன் நாற்பதை எட்டிவிட்டான்; மனைவிக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டது. இனியும் குழந்தை பிறக்குமா என்பதில் இருவருக்குமே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மருத்துவப் பரிசோதனைகள் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்கள்தான் என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டன. ஆனாலும், கரு ...

குட்டி ராதிகாவின் ஆசை!

Posted: 31 May 2015 05:42 AM PDT

- இயற்கை, மற்றும் வர்ணஜாலம் ஆகிய படங்களில் நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. ஒரு கட்டத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து செட்டிலானார். ஆனாலும், நடிப்பு ஆசை அவரை விடாமல் இருந்ததால், தற்போது ஒரு படத்தை தயாரித்து, நடிக்க முடிவெடுத்துள்ளார். - நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள அப்படத்திற்கு, ஐ ஹேட் டான்ஸ் என்று பெயர் வைத்திருப்பவர், அதில் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபுதேவாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். - காரணம், பிரபுதேவாவுடன் ஒரு படத்திலேனும் இணைந்து ...

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்

Posted: 31 May 2015 05:08 AM PDT

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'. 'ரத்தம் ஒரே நிறம்' கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது 'கறுப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது ...

'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து!

Posted: 31 May 2015 03:59 AM PDT

நியூயார்க்: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன. ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் ...

தயாராகும் அடுத்த பேய்ப்படம்!

Posted: 31 May 2015 02:30 AM PDT

- இது பேய்ப்படங்களின் சீஸன். இதோ இன்னொரு பேய்ப்படம் பற்றிய தகவல். இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிப்படங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குப் படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, பீருவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதல்முறையாக தமிழில் படம் ஒன்றை இயக்குகிறார். பேய்கள் ஜாக்கிரதை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவ்வுலகில் ...

இந்த வார சினி துளிகள்

Posted: 30 May 2015 07:36 PM PDT


-
–
* விழித்திரு என்ற படத்தில் இடம் பெற்ற மஸ்கார
பாடலில் ஆடிய அஷ்மிதாவுடன் இணைந்து, ஒரு
குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார் டி.ராஜேந்தர்.
–
————————————–
தொடரும்....

இயக்குனர் ஷங்கரின் புதிய கூட்டணி!

Posted: 30 May 2015 07:31 PM PDT

- இயக்குனர் ஷங்கர், தான் இயக்கும் படங்களின் கதை உருவாக்கத்தின் போது, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடம் கலந்து தான் முடிவு செய்வார். - அதனால், அவரது படங்களும் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருந்தது. ஆனால், ஐ படம் சுஜாதா இல்லாமல் உருவாக்கப்பட்ட கதை என்பதால், போதுமான கமர்ஷியல் வேல்யூ இல்லாததால், அடுத்து தான் இயக்கும் படத்திற்கு, நல்ல எழுத்தாளர் வேண்டும் என்று ஆசைப்பட்ட ஷங்கர், தற்போது, எழுத்தாளர் ஜெயமோகனை, தன் கதை இலாகாவில் இணைத்திருக்கிறார். - அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™