Tamil News | Online Tamil News |
- தமிழகம் முழுவதும் 2,500 பள்ளிகளை இடிக்க உத்தரவு: கட்டடங்கள் சேதமடைந்ததால் கல்வித் துறை அதிரடி
- நிலம் எடுப்பு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் ஒப்புதல்
- வெளிநாட்டு பயணங்களின் போது மோடிக்கு எவ்வளவு பரிசு கிடைத்தது?
- திருமண விழாவில் வரிசையில் நின்ற ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்
- எளிதாக வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம்: கெடு தேதியையும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு
- 'கலாமை பாருங்கள்; வாழ்வில் முன்னேறுங்கள்!': பிரதமர் மோடி அறிவுரை
- தமிழகத்தில் 7 ஆண்டுக்கு பின் தடையில்லா மின் சாதனை!
- காலிப் பணியிடங்களால் தமிழக நிதித்துறையில் கோப்புகள் தேக்கம்
- சிறுநீர் குடித்து தாகத்தை தீர்த்தோம்: மீட்கப்பட்ட மீனவர்கள் உருக்கம்
- ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேரள சிறுமி ஜெர்மானியர் உதவியால் உயிர் பிழைப்பு
- பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை எப்போது? சுஷ்மா தகவல்
| தமிழகம் முழுவதும் 2,500 பள்ளிகளை இடிக்க உத்தரவு: கட்டடங்கள் சேதமடைந்ததால் கல்வித் துறை அதிரடி Posted: தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன. இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. * மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில், எம்.புதுப்பட்டியில் ... |
| நிலம் எடுப்பு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் ஒப்புதல் Posted: புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக, மூன்றாவது முறையாக அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று ஒப்புதல் அளித்தார். நிலம் கையகப்படுத்தும் மசோதா, காங்., தலைமையிலான முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 2013ல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் குறைகள் உள்ள தாக புகார் எழுந்ததால், மசோதா கிடப்பில் போடப்பட்டது. |
| வெளிநாட்டு பயணங்களின் போது மோடிக்கு எவ்வளவு பரிசு கிடைத்தது? Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, தன் வெளிநாட்டுப் பயணங்களின் போது, 3.11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை பெற்றுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தகவல்கள்: |
| திருமண விழாவில் வரிசையில் நின்ற ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் Posted: புனே:சாதாரண கிராம வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட, பொது இடங்களில் வரிசையில் நிற்காமல், 'பந்தா' செய்து வரும் நிலையில், கோவா முன்னாள் முதல்வரும், ராணுவ அமைச்சருமான மனோகர் பாரிக்கர், 59, திருமண விழா ஒன்றில், நீண்ட நேரம் வரிசையில் நின்றது, இணையதளங்களில் பரபரப்பாக பகிரப்படுகிறது.பா.ஜ.,வைச் சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர்; கோவா முதல்வராக இருந்த அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், ராணுவ அமைச்சராக உள்ளார். எளிமையான தோற்றம், சகஜமான பேச்சு, அமைச்சர் என்ற பந்தா அறவே இல்லாதது, பாரிக்கரின் சிறப்புகளாக கருதப்படுகின்றன.மகாராஷ்டிர மாநிலம், புனே ... |
| எளிதாக வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம்: கெடு தேதியையும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு Posted: புதுடில்லி: வருமான வரி செலுத்துபவர்களின் வசதிக்காக, வருமான வரி தாக்கல் படிவம் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றே பக்கங்களில், மிகக் குறைவான நிரப்புதல் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. வழக்கமாக, ஜூலை 31க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரி தாக்கல் படிவங்களுக்கான காலக்கெடு, இந்த ஆண்டு, ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31க்குள் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், நேரடி வரி முறையிலும், மறைமுக வரி விதிப்பிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, வருமான வரி விலக்கு ... |
| 'கலாமை பாருங்கள்; வாழ்வில் முன்னேறுங்கள்!': பிரதமர் மோடி அறிவுரை Posted: புதுடில்லி: ''தேர்வில் தோல்வி யடைந்த மாணவர்களைதேற்றுங்கள்; அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். தோல்விக்கு பின்னாலும் வெற்றிக்கான ஒளி உள்ளது என்பதை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்,'' என, பிரதமர் மோடி கூறினார். உறுதியாக...: 'மன் கீ பாத்' என்ற பெயரில், மாதம் ஒருமுறை, நாட்டு மக்களிடம், 'ரேடியோ' மூலம் உரையாற்றுவதை, பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று, அவர், 25 நிமிடங்கள் ஆற்றிய உரை பற்றிய விவரம்:ராணுவ வீரர்களின் நீண்ட கால கோரிக்கையான, 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை செயல்படுத்த, என் தலைமையிலான அரசு உறுதியாக ... |
| தமிழகத்தில் 7 ஆண்டுக்கு பின் தடையில்லா மின் சாதனை! Posted: மேட்டூர்: தமிழகத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, கோடையில் மின் தடை நீடித்த நிலையில், நடப்பாண்டு மின் உற்பத்தி நிறுவுத்திறன் அதிகரித்ததாலும், கோடைமழை கை கொடுத்ததாலும், தடையில்லா மின் வினியோகம் செய்து, வாரியம் சாதனை படைத்துள்ளது. கடந்த, 2008ல், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறன், 10,122 மெகாவாட் ஆக இருந்தது. அந்த ஆண்டில், தமிழகத்தின் மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்தது. |
| காலிப் பணியிடங்களால் தமிழக நிதித்துறையில் கோப்புகள் தேக்கம் Posted: தமிழக நிதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாததால், கோப்புகள் தேக்கமடைவதோடு, பணிச்சுமையால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். 25 ஆண்டுகளாக...: |
| சிறுநீர் குடித்து தாகத்தை தீர்த்தோம்: மீட்கப்பட்ட மீனவர்கள் உருக்கம் Posted: காசிமேடு : 'நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த நாங்கள், சிறுநீரை குடித்து உயிர் பிழைத்தோம்' என, உயிர் பிழைத்த மீனவர்கள் கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்தனர். |
| ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேரள சிறுமி ஜெர்மானியர் உதவியால் உயிர் பிழைப்பு Posted: கொச்சி: <லுகேமியா என்னும் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சிறுமி, ஜெர்மானியர் ஒருவர் வழங்கிய ஸ்டெம் செல்களால் காப்பாற்றப்பட்டார்.சர்வதேச புகையிலை ஒழிப்பு தினமான நேற்று (31.05.2015) உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய லுகேமியா என்னும் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 55 வயது நிரம்பிய ஜெர்மானியர் வழங்கிய ஸ்டெம் செல்களால் மரணத்தை வென்று புதுப் பிறவி எடுத்துள்ளார். சிறுமியின் அதிர்ஷ்டம்:லுகேமியா என்னும் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்த, ஆரோக்கியமான இன்னொருவர் எலும்பு ... |
| பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை எப்போது? சுஷ்மா தகவல் Posted: புதுடில்லி: அமைதியான சூழ்நிலையில் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது சாத்தியம் என கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இதற்கு, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியா 3 நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து கொள்வது. பேச்சுவார்த்தை, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 01,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |