மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதியில் சிறுத்தை புலி: பக்தர்கள் பீதியில் ஓட்டம்- மலைப்பாதை மூடப்பட்டது
- பாகிஸ்தான் தீவிரவாதி லக்வி விடுதலை விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
- கடன் ரத்து செய்யப்படாததால் ஆந்திராவில் ஒரே நாளில் 2 விவசாயி தற்கொலை
- நேபாளத்தில் மீட்பு பணி மந்தம்: பொது மக்கள் போராட்டம்
- வறுமையின் கொடுமையால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற வட மாநில வாலிபர்
- நேபாளத்தில் 1200 வீடுகளை கட்டித்தர முன் வந்த மனித நேயமுள்ள 2 என்.ஆர்.ஐ.க்கள்
- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு பிரதமர் மோடி மனைவி மீண்டும் மனு
- விவசாயி தற்கொலை - ஆதரவற்று நிற்கும் இரு குழந்தைகள்: உதவ முன்வந்த 60 அம்மாக்கள்
- பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
- காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் கொடி ஏந்தி சென்றதை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
- அம்மான்னா சும்மா இல்லடா: யூ டியூபில் வைரல் ஹிட்டாகி அசத்தும் க்யூட் விளம்பரம்
- தாவூத் இப்ராகிம் எப்போதும் சரண் அடைய விரும்பியது இல்லை: சிபிஐ முன்னாள் அதிகாரி விளக்கம்
- 16 வயதிலேயே எவரெஸ்ட் ஏறி சாதித்த அர்ஜூன் வாஜ்பாய்: மீட்கும் பணியை தொடரும் நேபாள இராணுவம்
- முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நினைவுச்சின்னம்: மத்திய அரசு பரிசீலனை
- காதல் கடிதத்தை வெளியிட்ட ட்ராய்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
- காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்
- மாற்றத்தை கொண்டு வருகிறார் பிரதமர் மோடி: முப்தி முஹமது பாராட்டு
- பாலியல் பலாத்காரத்தை தடுத்த சிறுமியை கீழே தள்ளிய பஸ் நிறுவனத்துக்கு தடை
- முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட மண், பாறை மாதிரிகளை சேகரித்த கேரள அரசு
- டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு உலகின் சிறந்த விமான நிலையத்துக்கான விருது
| திருப்பதியில் சிறுத்தை புலி: பக்தர்கள் பீதியில் ஓட்டம்- மலைப்பாதை மூடப்பட்டது Posted: 02 May 2015 10:54 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஸ்ரீவாரி மெட்டு மலை பாறையில் ஏராளமான பக்தர்கள் கால் நடையாக திருமலைக்கு சென்று கொண்டு இருந்தனர். மதியம் 12 மணி அளவில் 252–வது படி அருகே சிறுத்தை புலி நின்றதை பக்தர்கள் பார்த்தனர். இதனால் பீதி அடைந்த அவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். பலர் வந்த வழியே இறங்கி ஓடினார்கள். |
| பாகிஸ்தான் தீவிரவாதி லக்வி விடுதலை விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல் Posted: 02 May 2015 10:52 PM PDT கடந்த 2008–ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டவன் பாகிஸ்தானின் லஷ்கர்–இ– தொய்பா தீவிரவாத இயக்க தலைவன் ஷகி–யுர்–ரஹ்மான் லக்வி (55). |
| கடன் ரத்து செய்யப்படாததால் ஆந்திராவில் ஒரே நாளில் 2 விவசாயி தற்கொலை Posted: 02 May 2015 10:51 PM PDT குண்டூர் மாவட்டம் பண்டிரெட்டி திவாரி பாளையத்தைச் சேர்ந்தவர் புச்சிரெட்டி (வயது 65). இவர் பிடுகராலா ரெயில் நிலையம் அருகே ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணம் அருகே கிடந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ''விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்தது. அதனை நம்பி நான் வட்டி கட்டாமல் இருந்தேன். ஆனால் கடன் தள்ளுபடி |
| நேபாளத்தில் மீட்பு பணி மந்தம்: பொது மக்கள் போராட்டம் Posted: 02 May 2015 10:50 PM PDT பூகம்ப பலி 7 ஆயிரத்தை நெருங்கி நிலையில் மீட்பு பணி மந்தமாக நடைபெறுவதால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் நேபாளத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இடிந்து தரைமட்டமாக கிடக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. |
| வறுமையின் கொடுமையால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற வட மாநில வாலிபர் Posted: 02 May 2015 10:12 PM PDT ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கேரள மாநிலம் கண்ணூர் கண்ணாடிபறம்பு என்ற இடத்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவனும் மனைவியும் கல் உடைக்கும் தொழில் செய்வது மூலம் குறைந்த வருமானமே கிடைத்ததால் தங்கள் 3 குழந்தைகளை வளர்க்க மிகவும் |
| நேபாளத்தில் 1200 வீடுகளை கட்டித்தர முன் வந்த மனித நேயமுள்ள 2 என்.ஆர்.ஐ.க்கள் Posted: 02 May 2015 10:02 PM PDT நேபாளத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தால் 6200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், அம்மக்களுக்கு 1200 வீடுகளை கட்டித்தர இரண்டு என்.ஆர்.ஐ. தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர். |
| Posted: 02 May 2015 10:01 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென். இருவரும் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து விட்டனர். குஜராத் மாநிலத்தில் தனது சகோதரர் அசோக் மோடியுடன் ஜசோதாபென் வசித்து வருகிறார். மோடி பிரதமர் ஆனதைத் தொடர்ந்து ஜசோதா பென்னுக்கு பிரதமர் மனைவி என்ற முறையில் சிறப்பு பாதுகாப்பு அளிக்க குஜராத் மாநில அரசு |
| விவசாயி தற்கொலை - ஆதரவற்று நிற்கும் இரு குழந்தைகள்: உதவ முன்வந்த 60 அம்மாக்கள் Posted: 02 May 2015 09:57 PM PDT தெலுங்கானாவில் விவசாயி தற்கொலை செய்துகொண்டதால் ஆதரவற்று நிற்கும் அவரது 2 குழந்தைகளுக்கும் உதவ 60 தாய்கள் முன்வந்துள்ளனர். மேடக் மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான லட்சுமி நாராயணா, விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டு வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது 13 |
| பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி Posted: 02 May 2015 09:34 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்பத்தி அருகே உள்ளது குமாரசாமி நகர். இந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கிருஷ்ணன் குட்டி (வயது 35). இவர் நேற்று தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டு இரவில் தூங்கினார். |
| காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் கொடி ஏந்தி சென்றதை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் Posted: 02 May 2015 07:41 PM PDT ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் சையத் அலி சா கிலானி தலைமையில் நடந்த பேரணியின் போது பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தி சென்றதை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி சா கிலானி கடந்த மாதம் டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் திரும்பிய போது அவரை |
| அம்மான்னா சும்மா இல்லடா: யூ டியூபில் வைரல் ஹிட்டாகி அசத்தும் க்யூட் விளம்பரம் Posted: 02 May 2015 05:10 PM PDT "பெருநகரங்களில் வாழும் மகன்களுக்கு மட்டுமே தெரியும் அம்மா செய்யும் சாப்பாடு எவ்வளவு ருசியானது என்று." எதிர்காலத்தில் குடும்ப பாரத்தை சுமப்பதற்காக வேறு ஒரு ஊரில் தங்கி படிப்பது, தங்கச்சியை கல்யாணம் செய்து கொடுப்பதற்காக வேலை பார்ப்பது, என்று பல்வேறு காரணங்களுக்காக அம்மாவைப் பிரிந்து வாழும் |
| தாவூத் இப்ராகிம் எப்போதும் சரண் அடைய விரும்பியது இல்லை: சிபிஐ முன்னாள் அதிகாரி விளக்கம் Posted: 02 May 2015 05:00 PM PDT கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி, மும்பையில் 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. அதில், 257 பேர் பலியானார்கள். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய சதிகாரரான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து விட்டார். அவரை |
| 16 வயதிலேயே எவரெஸ்ட் ஏறி சாதித்த அர்ஜூன் வாஜ்பாய்: மீட்கும் பணியை தொடரும் நேபாள இராணுவம் Posted: 02 May 2015 03:03 PM PDT 2010-ம் ஆண்டில், தனது 16-வது வயதிலேயே 8848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்த அர்ஜீன் வாஜ்பாயை மீட்கும் பணியை நேபாள இராணுவம் மீண்டும் தொடங்கியுள்ளது. டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியை சேர்ந்த அர்ஜூன், மகாலு |
| முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நினைவுச்சின்னம்: மத்திய அரசு பரிசீலனை Posted: 02 May 2015 02:23 PM PDT இந்தியாவில் கடந்த 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்ம ராவ். ஐதராபாத் அருகே உள்ள கரிம்நகரை சேர்ந்த (தற்போதைய தெலுங்கானா) இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மரணமடைந்தார். இவருக்கு டெல்லியில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என |
| காதல் கடிதத்தை வெளியிட்ட ட்ராய்: கலாய்க்கும் நெட்டிசன்கள் Posted: 02 May 2015 01:44 PM PDT வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனிக் கட்டணம் வசூலிக்கும் விதமாக சில திட்டங்களை அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனவே இது குறித்து எதிர்ப்பினை |
| காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் Posted: 02 May 2015 11:05 AM PDT மும்பையில் இன்ஸ்பெக்டரை, சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள வகோலா காவல் நிலையத்தில் துணை சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் திலீப் ஷிர்கே, இவருக்கும் இவரது |
| மாற்றத்தை கொண்டு வருகிறார் பிரதமர் மோடி: முப்தி முஹமது பாராட்டு Posted: 02 May 2015 08:07 AM PDT பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான ஆட்சியை வழங்குவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாக காஷ்மீர் முதல்வர் முப்தி முஹமது சையது பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- குஜராத் மாடலில் இந்தியாவை மாற்றி காட்டுவதாக |
| பாலியல் பலாத்காரத்தை தடுத்த சிறுமியை கீழே தள்ளிய பஸ் நிறுவனத்துக்கு தடை Posted: 02 May 2015 07:44 AM PDT பஞ்சாபில் ஓடும் பஸ்சில் இருந்து சிறுமியை தாயுடன் தள்ளிவிட்ட பஸ் நிறுவனத்திற்கு தடை விதித்து துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் தாயுடன் சென்ற சிறுமியை கண்டக்டர் மற்றும் சில இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். இதை தடுக்க முயன்ற போது அந்த கும்பல் இருவரையும் பஸ்சில் இருந்து |
| முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட மண், பாறை மாதிரிகளை சேகரித்த கேரள அரசு Posted: 02 May 2015 06:39 AM PDT காவிரியில் இருந்து தண்ணீரை பெற, தமிழகம் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகா, காவிரியினி் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் கர்நாடகா அரசு அந்த முயற்சியில் உறுதியாக உள்ளது. |
| டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு உலகின் சிறந்த விமான நிலையத்துக்கான விருது Posted: 02 May 2015 05:35 AM PDT நான்கு கோடி பயணிகள் பயனடைந்த வகையில் கடந்த ஆண்டில் உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 300 பேர் கொண்ட தேர்வுக்குழுவினர் கடந்த (2014) ஆண்டில் சிறந்த விமான நிலையமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுத்துள்ளனர். 5 புள்ளிகளை இலக்காக வைத்து நடைபெற்ற தேர்வில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |