Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருவனந்தபுரம் அருகே வாடகைக்கு குடியிருந்த பெண்ணை கட்டிப்போட்டு கற்பழித்த போலீஸ்காரர்

Posted: 03 May 2015 09:55 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரைகுளம் பகுதியில் வசிப்பவர் கோல்டன் குமார் (வயது38). இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் ஆகும்.

சந்திரபாபுநாயுடுவுக்கு எதிராக ஆடுகளுடன் கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 03 May 2015 09:52 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சமீபத்தில் அளித்த பேட்டியின் போது தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவை கடுமையாக விமர்சித்து இருந்தார். தெலுங்கு தேசம் கட்சி மட்டும் அவரை அரவணைக்காவிட்டால் சந்திரசேகரராவ் இப்போது ஆடு மேய்த்துக்கொண்டு இருப்பார் என்று கூறினார்.

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் மூலம் விபசாரம்: 3 பேர் கைது

Posted: 03 May 2015 09:48 PM PDT

கொச்சி விமான நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடந்து வருவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு பி.பி.சம்சினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மெரின் ஜோசப், முரளி, சம்மத் பசீர் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கோடை விடுமுறை கூட்டம்: திருப்பதி கோவிலில் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

Posted: 03 May 2015 09:46 PM PDT

கோடை கால விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருப்பதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கூறினார்.

நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை

Posted: 03 May 2015 09:38 PM PDT

பூகம்பத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் புராதன சின்னங்கள் இடிந்து தரைமட்டமாயின. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.

கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பாதே- கெஜ்ரிவால், கண்டிப்பாக அனுப்பவேண்டும்- ஆளுனர் நஜீப் ஜங்: விழிபிதுங்கும் மந்திரிகள்

Posted: 03 May 2015 09:35 PM PDT

டெல்லி மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள கெஜ்ரிவாலின் சுயரூபம் நாளுக்கு நாள் வெட்ட வெளிச்சமாகி வரும் நிலையில், மந்திரிகளுக்கு அவர் போட்டுள்ள நிபந்தனை மந்திரிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. டெல்லி மாநில அரசின் கோப்புகளை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு அனுப்ப தேவையில்லை என்று கெஜ்ரிவால் மந்திரிகளுக்கு உத்தரவிட, மறுபுறம்

முதல்வர் பாதல் நேரடி தலையீடு- ஓடும் பஸ்சிலிருந்து கீழே தள்ளப்பட்டு பலியான சிறுமியின் உடல் 4 நாட்களுக்கு பிறகு அடக்கம்

Posted: 03 May 2015 09:33 PM PDT

பஞ்சாபில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததால் கீழே தள்ளப்பட்டு 4 நாட்களுக்கு முன்னர் இறந்த சிறுமியின் உடல் அம்மாநில முதல்வரின் தலையீட்டுக்கு பிறகு நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் தாயுடன் சென்ற சிறுமியை கண்டக்டர் மற்றும் சில இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். இதை தடுக்க முயன்ற

சாலக்குடி அருகே பிறந்த குட்டியானை இறந்ததால் சோகத்துடன் கண்ணீர் வடித்த யானைகள் கூட்டம்

Posted: 03 May 2015 08:45 PM PDT

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் சாலகுடி அருகே ஆனைமலை சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு காட்டு யானை குட்டியை ஈன்றது. நடுரோட்டில் யானை குட்டியை ஈன்றதால் அந்த பகுதியில் பல மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பல மணி நேரம் கழித்து அந்த குட்டி யானையை காட்டுப்பகுதிக்குள் தாய் யானை உள்பட பல்வேறு யானைகள் அழைத்துச் சென்றன.

குடகு அருகே சிறிய விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: விமானி பலி

Posted: 03 May 2015 08:41 PM PDT

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா கோணிகொப்பா அருகே பேகூருகொள்ளி கிராமத்தில் ஒரு விமானத்தளம் உள்ளது. இந்த விமானத்தளத்தில் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு சிறிய விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார்: சீதாராம் யெச்சூரி

Posted: 03 May 2015 08:36 PM PDT

பாராளுமன்றத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். அண்மையில் நில மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பேரணி ஜனாதிபதி

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை: சதானந்தகவுடா பேட்டி

Posted: 03 May 2015 08:30 PM PDT

மத்திய சட்டத்துறை மந்திரி சதானந்தகவுடா மங்களூருவில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சியினர் கீழ்மட்ட அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அணை தொடர்பாக கர்நாடக

அரசியலுக்குள் அடியெடுத்து வை என அறிவுரை வழங்கிய குரு ஆத்மஸ்தானந்தா: சந்திக்க கொல்கத்தா செல்கிறார் பிரதமர் மோடி

Posted: 03 May 2015 08:29 PM PDT

அரசியலுக்குள் அடியெடுத்து வை என தனக்கு அறிவுரை வழங்கிய குரு ஆத்மஸ்தானந்தாவை சந்திக்க கொல்கத்தா செல்கிறார் பிரதமர் மோடி. வரும் மே 9-ந் தேதி கொல்கத்தா செல்லும் மோடி, ராமகிருஷ்ண மடத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கும் குரு ஆத்மஸ்தானந்தா மகாராஜை சந்திக்க

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டம்?

Posted: 03 May 2015 08:22 PM PDT

பொருட்களை பொட்டலம் போட பயன்படுத்தும் பல அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, உத்தரகாண்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

2014-2015-ம் ஆண்டில் வரியாக ரூ.7 லட்சம் கோடி வசூலித்த வருமான வரித்துறை

Posted: 03 May 2015 08:12 PM PDT

வருமான வரித்துறை 2014-2015-ம் நிதி ஆண்டில் வரியாக ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 200 கோடி வசூலித்து உள்ளது. மத்திய அரசின் வருவாயில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்த 2014-2015-ம் நிதி ஆண்டில் வருமான வரித்துறை வருமான வரி, கம்பெனிகள் வரி உள்ளிட்ட

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடைநீக்கத்துக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 03 May 2015 08:05 PM PDT

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடை நீக்கத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், அகில இந்திய பணியின் கீழ் வந்தாலும், மாநிலங்களில் பணியாற்றுகிறபோது, அவர்களை அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக மாநில அரசுகள் பந்தாடுவதும், ஏதாவது

ஆந்திராவில் 420 கிலோ கஞ்சா பறிமுதல்: துப்பாக்கியுடன் இருவர் கைது

Posted: 03 May 2015 05:14 PM PDT

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 420 கிலோ எடை கொண்ட கஞ்சாவை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் துப்பாக்கி வைத்திருந்த 2 பேரையும் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில் போதை மருந்து கும்பல்களை ஒழிக்கும்

பிரதமர் மோடி 14-ந் தேதி சீனா செல்கிறார்

Posted: 03 May 2015 04:24 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 4 மாத காலத்தில் செசல்ஸ், மொரீசியஸ், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் வரும் 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சீனா, மங்கோலியா, தென் கொரியா ஆகிய 3 நாடுகளில் அரசு முறை

ரெயில்வே எந்த நிலையிலும் தனியார் மயம் ஆகாது: மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உறுதி

Posted: 03 May 2015 02:46 PM PDT

ரெயில்வே இலாகாவுக்கு 2011-2012-ம் ஆண்டு ரூ.23,643 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வேயை லாபத்தில் இயக்கும் நோக்குடன் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரபல பொருளாதார நிபுணர் விவேக் திப்ராய் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு ரெயில்வே இலாகாவை லாபத்தில் இயங்கச்

ராஜஸ்தானில் பசு மாட்டு சிறுநீர் சுத்திகரிப்பு நிலையம்: சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்

Posted: 03 May 2015 02:15 PM PDT

ராஜஸ்தான் மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் நேற்று ஜலூரில் பசு மாட்டு சிறுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். பத்மேதா கௌஷலா என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் முலமாக பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது. இந்த

நாகாலாந்தில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: 8 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் உடல் சிதறி பலி

Posted: 03 May 2015 01:07 PM PDT

நாகாலாந்தின் புறநகர் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், இந்திய துணை ராணுவ படையின் முகாமை தகர்த்தனர். இந்த தாக்குதலில் 8 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். மேலும் 4 பேரைக் காணவில்லை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™