Tamil News | Online Tamil News |
- ஏமனில் மீட்பு பணிகள் நிறைவு: நாடு திரும்பும் மத்திய அமைச்சர்
- சத்யம் ராமலிங்கராஜு மற்றும் கூட்டாளிகளுக்கு 7 ஆண்டு: ரூ.7,000 கோடி மோசடி வழக்கில் சிறை தண்டனை
- நாடு முழுதும் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் அருகே துணை நிலையங்கள்: நெருக்கடியை போக்க அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
- பொருளாதாரத்தை மேம்படுத்துபவர்கள் சிறு தொழிலதிபர்கள்: பிரதமர் கடிதம் எழுதி பாராட்டு
- கடும் கலக்கத்தில் அரசு அதிகாரிகள்: மின் வாரியத்தில் புதிய விதிமுறை; பொ.ப., துறையில் பதவி உயர்வு
- ஆந்திர போலீசார் நடவடிக்கை சரியா: ஜெ., கேள்வி: 20 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
- ராணுவ தளவாடங்கள் தயாரிக்க வாய்ப்பு: ரூ.93,000 கோடி இழந்த நிறுவனங்கள்
- மொபைல் போன் 'ரோமிங்' கட்டணங்கள் குறைப்பு
- துப்பாக்கிச் சூட்டில் தப்பியவர்கள் கதி என்ன?
- துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர் குடும்பங்களுக்கு விஜயகாந்த் உதவி
| ஏமனில் மீட்பு பணிகள் நிறைவு: நாடு திரும்பும் மத்திய அமைச்சர் Posted: புதுடில்லி: ஏமனில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்கும் பணி நிறைவடைந்தாகவும், இதில் மும்முரமாக செயலப்பட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங் இன்று நாடு திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏமனில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு சிக்கிய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க ஆபரேசன் ராஹட் என்ற பெயரில் மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதையடுத்து கடற்படை , விமானப்படை மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் மும்முரமாக செயல்பட்டார்.இதையடுத்து அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் பத்திரமாக ... |
| சத்யம் ராமலிங்கராஜு மற்றும் கூட்டாளிகளுக்கு 7 ஆண்டு: ரூ.7,000 கோடி மோசடி வழக்கில் சிறை தண்டனை Posted: ஐதராபாத்: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான, 'சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ்' நிறுவனத்தில் 7,000 கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் அதன் நிறுவனர் ராமலிங்கராஜு மற்றும் கூட்டாளிகளுக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ஐந்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஐதராபாத் தனி நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று காலையில் ராமலிங்கராஜு உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி சக்ரவர்த்தி அறிவித்தார். மதியம் மீண்டும் கோர்ட் கூடியதும் குற்றவாளிகள் அனைவருக்கும் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ... |
| Posted: புதுடில்லி: முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், துணை ரயில் நிலையங்களை துவக்கி, அந்தப் பகுதிக்கு, பஸ் மற்றும் ரயில் சேவை வழங்கி, பயணிகளுக்கு உரிய நேரத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சராக இருப்பவர், பா.ஜ.,வைச் சேர்ந்த சுரேஷ் பிரபு. அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின் சமர்ப்பித்த முதல் ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில்கள், திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. முன்னுரிமை: நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவு செய்ய, முன்னுரிமை அளிப்பது என்ற ... |
| பொருளாதாரத்தை மேம்படுத்துபவர்கள் சிறு தொழிலதிபர்கள்: பிரதமர் கடிதம் எழுதி பாராட்டு Posted: புதுடில்லி: 'நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வது, மிகப்பெரிய நிறுவனங்கள் இல்லை; நாடு முழுவதும் உள்ள, 5.5 கோடி சிறு தொழில்களும், அந்த தொழில்களை நடத்தும் சிறு தொழிலதிபர்களும் தான்; இந்த துறை தான், 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். முதுகெலும்பு: சிறு தொழிலதிபர்களான காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், நெசவாளிகள், கைவினைக் கலைஞர்கள், பத்திரிகைகளை போடும் பேப்பர் பாய்ஸ் போன்றோருக்கு, பிரதமர் மோடி எழுதியுள்ள, மூன்று பக்க கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள ... |
| கடும் கலக்கத்தில் அரசு அதிகாரிகள்: மின் வாரியத்தில் புதிய விதிமுறை; பொ.ப., துறையில் பதவி உயர்வு Posted: அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை; திருச்சி டாக்டர் தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்களால், அரசு வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. இந்த சூழலில், மின் வாரியத்தில், இட மாறுதல் முறைகேட்டை தடுக்க, புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. பணி மாறுதல்: தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் அலுவலர்கள் பணிபுரிகின்றனர். மின் வாரிய அலுவலர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் வழங்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பணி செய்யும் இடத்தில், காலி ... |
| ஆந்திர போலீசார் நடவடிக்கை சரியா: ஜெ., கேள்வி: 20 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு Posted: சென்னை: 'ஆந்திராவில், துப்பாக்கிச் சூட்டில் இறந்த, 20 பேரின் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., சார்பில், தலா, இரண்டு லட்சம் ரூபாய், நிதியுதவி வழங்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஆந்திராவில், செம்மரம் கடத்தல் தடுப்பு படையினர், 7ம் தேதி நடத்திய, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த, 20 பேர் இறந்தனர். இச்செய்தி அறிந்து, மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்தேன். தற்போது, ஊடகங்கள், பொது நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள ... |
| ராணுவ தளவாடங்கள் தயாரிக்க வாய்ப்பு: ரூ.93,000 கோடி இழந்த நிறுவனங்கள் Posted: புதுடில்லி: இந்திய நிறுவனங்கள், 2013ம் ஆண்டு முதல், 93 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை, 'சப்ளை' செய்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின், ஆயுத கொள்முதலுக்கான ஒப்பந்தப் புள்ளிகளில், இந்திய நிறுவனங்கள் பங்கேற்காததால், அவை காலாவதியாகி விட்டன. இது, பிரதமர் மோடியின், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்திற்கும், 'ஆயுத இறக்குமதியை குறைக்க வேண்டும்' என்ற அரசின் கொள்கைக்கும் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்தப் புள்ளி களில் எட்ட முடியாத அளவிற்கு, ஆயுதங்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ... |
| மொபைல் போன் 'ரோமிங்' கட்டணங்கள் குறைப்பு Posted: புதுடில்லி: ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று, மொபைல் போன்களை பயன்படுத்தும் போது செலுத்த வேண்டிய, 'ரோமிங்' கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 1ம் தேதி முதல், மாற்றியமைக்கப்பட உள்ள கட்டண விவரம் வருமாறு: ரோமிங் மொபைல் போன் கட்டணம், 23 சதவீதம் குறைக்கப்படுகிறது. ரோமிங் எஸ்.எம்.எஸ்., கட்டணத்தில், 40 சதவீதம் குறைப்பு செய்யப்படும். ரோமிங் அதிகபட்ச கட்டணமும், குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரை, நிமிடத்திற்கு, 1.50 ரூபாயாக இருக்கும் அதிகபட்ச ரோமிங் கட்டணம், 1.15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய எஸ்.எம்.எஸ்., அதிகபட்ச கட்டணம், ஒரு ... |
| துப்பாக்கிச் சூட்டில் தப்பியவர்கள் கதி என்ன? Posted: வேலூர்: ஆந்திர மாநில காட்டில் துப்பாக்கிச் சூடு நடந்த போது, தப்பி யோடிய, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள், சேஷாசலம் காட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது. கடந்த 7ம் தேதி, ஆந்திர மாநில வனப்பகுதியில், செம்மரம் கடத்தியதாக, துப்பாக்கியால் சுட்டதில், தமிழகத்தை சேர்ந்த, 20 பேர் கொல்லப்பட்டனர். செம்மரம் கடத்தலில் சர்வதேச அளவில், 'பெரும்புள்ளி'களாக, கடப்பாவைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு, ஐதராபாத்தை சேர்ந்த ராமா நாயுடு, கர்னூலைச் சேர்ந்த வெங்கடேசம் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் மூலம் தான், செம்மரம் கடத்தி ... |
| துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர் குடும்பங்களுக்கு விஜயகாந்த் உதவி Posted: அரூர்: துப்பாக்கிச்சூட்டில் பலியான, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஏழு பேரின் குடும்பத்தினருக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நிதி உதவி வழங்கினார். நேற்று இரவு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அரூர் வந்தார். வனத்துறை பயணியர் விடுதிக்கு, ஆந்திர துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை அழைத்து வந்தனர். ஏழு பேர் குடும்பத்தினருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம் விஜயகாந்த் வழங்கி, ஆறுதல் கூறினார். பின், அவர் கூறியதாவது: காட்டில் ஆடு, மாடுகளை சுடக்கூட தடை உத்தரவு உள்ளது. ஆனால், ஆந்திர மாநிலத்தில், மனிதர்களை ஈவு இரக்கமின்றி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 10,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |