Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


24 மணிநேரத்தில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று கின்னஸ் உலக சாதனை!

Posted: 09 Apr 2015 02:09 PM PDT

சீனாவின் ஆப்பிள் நிறுவனம் என்றழைக்கப்படும் ஜியோமி தற்போது இந்தியாவிலும் கால்பதிக்க துவங்கியுள்ளது. ஆப்பிளை வி்ட குறைந்த விலையில் ரிச்சான ஹேண்ட்செட்டுகளை வெளியிடுவதே இதன் ரகசியமாகும். இந்நிலையில், எம்.ஐ. பேன் கொண்டாட்டம் 2015 என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் ஆஃபரை ஆசியாவிலுள்ள 7 நாடுகளில் நேற்று நடத்தியது ஜியோமி. இதில், நேற்று ஒரே நாளில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று புதிய கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறது. இந்த மெகா விற்பனையின் மூலம் 335 மில்லியன் டாலர்கள் லாபத்தை அள்ளியிருக்கிறது ...

82,000.....வாவ் ! சிவா:)

Posted: 09 Apr 2015 01:22 PM PDT

82,000.....வாவ் ! சிவா  மனமார்ந்த வாழ்த்துகள் சிவா ! 

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Posted: 09 Apr 2015 12:02 PM PDT

படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? படத் தலைப்பு மாதிரியே செம ஃபாஸ்ட் ஆகவும், வெறித்தனமாகவும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7' திரைப்படம். ரிலீஸான இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் அள்ளிக் குவித்திருக்கிறதாம். வின் டீசல், ட்வெய்ன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம், டோனி ஜா, மிட்செல் ராட்ரிக்ஸ் போன்ற ஸ்டார்களுக்காக மட்டுமில்லை; படத்தில் 'வ்ர்ர்ரூம்... வ்வ்ர்ர்ர்..ரூம்' எனக் கிளம்பும் கார்களுக்காகவும் தியேட்டரில் கூட்டம் அள்ளு கிளப்புகிறது. 'மச்சான்... ...

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

Posted: 09 Apr 2015 11:58 AM PDT

- சென்னை: முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். - கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, ...

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

Posted: 09 Apr 2015 11:48 AM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை 8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:– தேதி மோதும் அணிகள் இடம் நேரம் ஏப்.8: கொல்கத்தா–மும்பை கொல்கத்தா இரவு 8 மணி ஏப்.9: சென்னை–டெல்லி சென்னை இரவு 8 மணி ஏப்.10: பஞ்சாப்–ராஜஸ்தான் புனே இரவு 8 மணி ஏப்.11: சென்னை–ஐதராபாத் சென்னை மாலை 4 மணி கொல்கத்தா–பெங்களூரு கொல்கத்தா இரவு 8 மணி ஏப்.12: டெல்லி–ராஜஸ்தான் டெல்லி மாலை 4 மணி மும்பை–பஞ்சாப் மும்பை இரவு 8 மணி ஏப்.13: பெங்களூரு–ஐதராபாத் பெங்களூர் இரவு 8 மணி ஏப்.14: ...

ஆந்திர அரச பயங்கரவாதம்

Posted: 09 Apr 2015 11:34 AM PDT

ஏழைகள் மீது அரசுக்குள்ள இவ்வளவு கோபம், எஜமானர்கள் மீது ஏன் வருவதில்லை? ஆந்திரத்தின் சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளிகள் ஆந்திரக் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் படுகொலை மூலம் கட்டமைக்கப்படும் உளவியல் செய்தியானது, 'அச்சப்படு' என்பது மட்டும்தான். சட்டத்தின் ஆட்சி, தண்டனை வழங்கும் நீதிமன்ற அதிகாரம் என எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு நிகழ்த்தப் பட்டுள்ளது இந்தப் படுகொலை. மனித உயிரின் மதிப்பு ...

திராவிட இயக்கத் தலைவர்களின் 'இசை முரசு' நாகூர் ஹனிபா

Posted: 09 Apr 2015 11:29 AM PDT

வாணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அறிவாலயத்தில் குழுமியிருந்தனர் செய்தியாளர்கள். வேட்பாளரை அறிவிக்க கலைஞர் வந்தார்; பேராசிரியர் அன்பழகன் வந்தார்; கூடவே நாகூர் ஹனிபாவும் வந்தார். தான் கையோடு கொண்டு வந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தவாறு, மைக் பிடித்தார். கலைஞர். தன் டிரேடு மார்க் கரகர குரலில், 'இசை முரசு' நாகூர் ஹனிபாதான் வாணியம்பாடி தொகுதி வேட்பாளர்' என்று அறிவித்தார். அப்போது அங்கே ஓர் அதிசய காட்சி நிகழ்ந்தது. ...

ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை

Posted: 09 Apr 2015 11:04 AM PDT

ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும்  பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் . ரமணியன்  இந்த செய்தி படியுங்கள் . தற்போதைய தலைமை தேர்தல் ஆணையரான ஹரிசங்கர் பிரம்மாவின் பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைமை தேர்தல் ஆணையராக சையது நசீம் அகமது ஜைதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார். இவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது ...

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லை

Posted: 09 Apr 2015 10:43 AM PDT

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. ...

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்

Posted: 09 Apr 2015 10:27 AM PDT


-
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா(90)
உடல் நலக் குறைவால் சென்னை கோட்டூர் புரத்தில்
உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
=
தினமணி

உலகச் செய்திகள்!

Posted: 09 Apr 2015 10:09 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

'' வார்த்தைகளின் வானம் ''

Posted: 09 Apr 2015 09:11 AM PDT

'' வார்த்தைகளின் வானம் ''                          ஒவ்வொரு  மனிதரும்                          ஒவ்வொரு விதம்!                          வார்த்தைகளின் பிறப்பு                          ஒரே விதம்!                           பதிவியிலும் பணிவு                           பிறர் மனம் நோகாத் துணிவு!                           குறைகளை உரைப்பதில் கனிவு!                           என்றும் இருக்கட்டும் மனதில்!                                                       நாம் பேசும் வார்த்தைகள்                            ...

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Posted: 09 Apr 2015 06:56 AM PDT

ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ ...

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Posted: 09 Apr 2015 06:08 AM PDT

அன்புடையீர் : என் பேர் ரங்கராஜன் , வயது 66, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில்  வசிக்கிறேன்  ! ஒய்வு பெற்றபின், மூலிகை தோட்டம் என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு ! சுமார் 150 மூலிகை மற்றும் பூ பழ வகைகள் என்னுடைய மொட்டை மாடி தோட்டத்திலும், வீட்டை சுற்றியும் வளர்த்து வருகிறேன்.  அழு கன்னி @ ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி கேள்விப்பட்டு கிட்டத்தட்ட 1 வருட காலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் ! கடல் ஓர உப்பு நிலத்தில் நிறைய காணலாம் என கேள்விப்பட்டேன்  ஆனால் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சீ. ஆர் சாலை ஒட்டிய பகுதிகளில் ...

மதர் தெரசா: ஒரு பார்வை

Posted: 09 Apr 2015 06:06 AM PDT

மதர் தெரசா: ஒரு பார்வை - வேதம் கோபால் 1997ம் ஆண்டு அன்னை தெரேசாவின் இறுதி ஊர்வல சடங்குகள் இதுவரை யாரும் கண்டிராத ஆர்பாட்டத்துடன் நடத்தப்பட்டது. இதில் நமது செக்யூலர் தலைவர்கள் பொறுமையாக வாடிகனினால் நடத்தப்பட்ட 2 மணிநேர சடங்கை பார்வையிட்டு பிறகுதான் அவர்களை இறுதி மரியாதை செய்ய அனுமதித்தார்கள். நேதாஜி மூடிய விளையாட்டு அரங்கம் அன்று இந்தியர்க்ளின் வரிப்பணத்தை கொண்டு இரங்கல் மரியாதை செய்தது ஒரு வாடிகனின் தலைநகரை போல் காட்சியளித்தது. இது அரசர்களுக்கு நடத்தம் இறுதி மரியாதை போல்தான் இருந்தது. இதில் ...

தமிழ் அர்ச்சகர் படிப்பு - சேர விருப்பமா?

Posted: 09 Apr 2015 05:22 AM PDT

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம், தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பின் ஐந்தாம் குழாம் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படிப்பு அனைவருக்கும் தேவையான ஒன்று. இதில் பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள், இனம், மொழி, சாதி, நிறம் என எந்தவேறுபாடும் பார்ப்பது கிடையாது. ஒரே தகுதி தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவே! பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!

Posted: 09 Apr 2015 03:44 AM PDT

தும்பிகளாய்…!!
*
உனக்குமொரு
எல்லையிருக்கிறது
எனக்குமொரு
எல்லையிருக்கிறது
நாம் எப்பொழுது
எல்லைக் கடந்து
அன்பில் இணைந்து
காதல் தும்பிகளாய்
வாழப் போகிறோம்…!!
*

மல்லிகை-என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ?

Posted: 09 Apr 2015 03:39 AM PDT

படம்:தீர்க்க சுமங்கலி இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: வாணி ஜெயராம் மல்லிகை-என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ? எந்நேரமும் உன்னாசைபோல் பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ? மல்லிகை-என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ? வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது! குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி! கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நானள்ளவோ என் தேவனே உன் தேவி நான் இவ்வேளையில் ...

கவிதைக்காரனின் காதல் குறிப்பு

Posted: 09 Apr 2015 02:43 AM PDT

காதலுக்கென ஒரு கவிதையாவது எழுதிவிடவேண்டும்.. நாட்பட்டிருந்த இயலாமையை தாசித் தோழியிடம் சொல்லியிருந்த கவிதைக்காரனுக்கு... காதலிக்கச் சொல்லிப் போயிருந்தாள் அவள்... இவனும் எழுதித் தொலைத்த எல்லாவற்றிலும் தவறாமல் கோர்த்துக்கொண்டன இதழ்நீரும்.. பின்கழுத்து வியர்வையும் எதிரமர்கையில் எதேச்சையாய் வழிந்து பெருகிய அவளது மார்புகளும்... இது காதலா என உமிழ்ந்திருந்தவர்களின் எச்சில் துடைத்துவிட்டு எது காதல்.....? எனக் கேட்பதற்குள் நெடுந்தூரம் போய்விட்டிருந்தார்கள் அவர்கள்.... படித்து ...

ஊர்கூடித் தெருவில் விட்ட

Posted: 09 Apr 2015 02:36 AM PDT

அன்றைய வாரயிறுதி இரவும் அப்படித்தான் கழிந்திருந்தது.... பெண்ணுரிமையென நாற்கரச் சாலைகளில் மட்டும் கத்திக் கொண்டிருந்த சராசரிகளைத் தவிர்த்துவிட்டு கண்ணாடிக் குடுவைகளில் மதுவூற்றி நேரம் பகிரக் கேட்டுக்கொண்டிருந்த நானும்.... ஆளுமைத்தனம் பயின்று குதிகால் செருப்பினடியில் சிகரெட்டுச்சாம்பல் தட்டிகொண்டே குடிப்பதற்கான சூழலில்லை என மறுத்துச் சிரித்திருந்த  நீயும்.... என்ன காரணமென்று தெரியாமலேயே.. பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருந்தோம் நம் காதலை.... நம்மைச் சுற்றியிருந்த ...

நத்தை சிப்பி - paadal

Posted: 09 Apr 2015 02:23 AM PDT

நத்தை சிப்பி

என்று தொடங்கும் பாடலை முழுமையாக கூறுங்கள்...

விவேக சிந்தாமணி அல்லது, ஞான வெட்டியான் பாடலாக இருக்கும் என்பது என் கருது.

விவேக சிந்தாமணி, ஞான வெட்டியான் புத்தகம் இருந்தாலும் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Posted: 09 Apr 2015 01:54 AM PDT

வணக்கம் நண்பர்களே ....
எனக்கு இலவச ஈமெயில் ஐடி வேண்டும் அதாவது (சந்தோஷ்@கம்பெனிநேம்.காம்)


நன்றி .

அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது.

Posted: 09 Apr 2015 01:53 AM PDT

ஒரு சவரன் தங்கம் விலை, கடந்த ஆண்டை விட, தற்போது, 2,000 ரூபாய் வரை குறைந்துள்ளதால், அக் ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது.  தமிழகத்தில், 1,200 பெரிய கடைகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறிய தங்க நகை கடைகள் உள்ளன. இவற்றில், நாள்தோறும், சராசரியாக, 1,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அக் ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, 20 - 30 சதவீதம் கூடுதலாக இருக்கும்.  மொத்த இறக்குமதியில்...: மத்தியில், காங்., ...

அனுதாபம் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Posted: 09 Apr 2015 12:52 AM PDT

பாலைவனத்தில் பூத்த ரோஜா ஒன்று மாலைநேர நிலவின் தாகத்தால் வாடியது. கலையின் கிளையான கதையொன்று முறிந்தது, தொலை தூரத்தில் எழுதிய விதிப்படி...., ஆன்மாவின் மனதில் வேரூன்றிய ஆன்மிக பாடல் குரல் ஊமையானதே! உலகம் கண்டும் காணாத நிகழ்வை கதையாக்கும் கைவிரல்கள் ஊனமானதே! இஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது. பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம் காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது. இறைவனை புகழும் பாடலை உன் குரலில் கேட்க நினைத்தான் நாயகம். உலகின் கதை எழுதும் ...

மல்லிகைப் பூ

Posted: 09 Apr 2015 12:28 AM PDT

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்… வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு ...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 1ம் தேதி கும்பாபிஷேகம்!

Posted: 08 Apr 2015 10:27 PM PDT

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வரும் மே 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி, யாகசாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் வரும் மே 1ம் தேதி நடைபெற உள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, கடந்த சில மாதங்களுக்கு திருப்பணிகள் துவங்கியது. அதில், நடராஜர் மூலவர் சன்னதி சீரமைக்கும் பணியை முன்னிட்டு நடராஜர், அம்பிகை தேவ சபைக்கு பிரவேசம் செய்யப்பட்டது. இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான ...

கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா?

Posted: 08 Apr 2015 09:50 PM PDT

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை' கல்விச் செல்வத்தைக் காட்டிலும் பெரியதொரு செல்வம் இந்த உலகத்தில் இல்லை என்று வள்ளுவர் வியந்துரைக்கிறார். ஒருவரை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளில் கல்விக்கே முதன்மைப் பங்கு. இதன் பொருட்டே அவ்வையும் 'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்கிறார். கிழக்கிந்தியக் கும்பலிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா, கல்வியின் அருமையை உணர்ந்ததால்தான் கல்வி என்பது அடிப்படை உரிமை எனும் சிந்தனைக்கு அடித்தளமிட்டது. இதன் பொருட்டே, முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ...

'' இழப்பு ''

Posted: 08 Apr 2015 09:44 PM PDT

''  இழப்பு ''                      1.நாகூர் ஹனிபா                       2.ஜெயகாந்தான்                                                                                                                                விண்ணவரும் மண்ணவரும்                  கலங்கி நிற்க இறையோடு                  கலந்த பெருமக்களே!                  உங்களது ஆத்மா ....                  சாந்தியடையட்டும்!                  உங்களது குடும்பம்                  ஆறுதல் பெறட்டும்!                  உங்களது  இழப்பு ...

அடுத்த 'தல' ஸ்டாலின் தான் : அடித்துச் சொல்கிறார் கனிமொழி

Posted: 08 Apr 2015 08:02 PM PDT

சென்னை : திமுக.,வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்; அதற்கான அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என திமுக எம்.பி., கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கனிமொழி இதனை தெரிவித்துள்ளார். கனிமொழி அளித்த பேட்டியின் விபரம் : * திமுக.,வின் அடுத்த தலைவர் யார்? கட்சிக்குள் அது பற்றி பலவாறு கூறப்படுகிறதே.... கட்சிக்குள் என்ன பேசுகிறார்கள் என எனக்கு தெரியாது. ஆனால், ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அதற்கான தகுதியும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™