Tamil News | Online Tamil News |
- பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
- பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் பயணம்
- அக்ஷய திருதியைக்கு 2,000 கிலோ தங்கம் விற்க இலக்கு: தமிழக நகை கடைகளில் முன்பதிவு ஆரம்பம்
- மின் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் அதிரடி: எம்.பி., தலைமையில் குழு அமைக்க உத்தரவு
- பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு: 'முத்ரா' வங்கி துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
- காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனி நகரமா? பிரிவினைவாத அமைப்புகள் கொந்தளிப்பு
- காரைக் கொடு... சின்னத்தைக் கொடு... கிடுக்கிப்பிடியில் சிக்கும் கெஜ்ரிவால்
- ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அருணாச்சல பிரதேசத்திலும் அமல்
- வங்கியிலும் பணத்திற்கு பாதுகாப்பில்லை: 27 ஆயிரம் கோடி ரூபாய் 'அம்பேல்'
- சோனியா சந்திப்புக்கு விஜயகாந்த் திடீர் வியூகம்: குழப்பம் வரும் என நிர்வாகிகள் சந்தேகம்
- என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி அளித்த நன்கொடையாளர்களுக்கு சிக்கல்
| பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Posted: சென்னை: முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் ... |
| பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் பயணம் Posted: புதுடில்லி: பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவில், ஒன்பது நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டில்லியிலிருந்து புறப்படுகிறார். முக்கியத்துவம்: அவரின் இந்தப் பயணத்தின் போது, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பது, வர்த்தகம், அணுசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஒன்பது நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். ... |
| அக்ஷய திருதியைக்கு 2,000 கிலோ தங்கம் விற்க இலக்கு: தமிழக நகை கடைகளில் முன்பதிவு ஆரம்பம் Posted: ஒரு சவரன் தங்கம் விலை, கடந்த ஆண்டை விட, தற்போது, 2,000 ரூபாய் வரை குறைந்துள்ளதால், அக் ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. தமிழகத்தில், 1,200 பெரிய கடைகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறிய தங்க நகை கடைகள் உள்ளன. இவற்றில், நாள்தோறும், சராசரியாக, 1,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அக் ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, 20 - 30 சதவீதம் கூடுதலாக இருக்கும். |
| மின் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் அதிரடி: எம்.பி., தலைமையில் குழு அமைக்க உத்தரவு Posted: மின் வினியோக பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்டங்களில், மூத்த எம்.பி., தலைமையில், ஏழு பேர் கொண்ட குழுவை அமைக்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அறிமுகம்: மத்திய அரசு, 'தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா' மற்றும் 'இன்டகிரேட்டடு பவர் டெவலப்மென்ட் ஸ்கீம் - ஐ.பி.டி.எஸ்.,' என்ற, இரண்டு மின் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. 'தீன்தயாள் உபாத்யாயா' திட்டத்தின் கீழ், கிராமங்களில், விவசாய மின் இணைப்பிற்கு தனி மின் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ஐ.பி.டி.எஸ்., திட்டத்தில், நகரங்களில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல்; தகவல் ... |
| Posted: புதுடில்லி: ''சமீபத்தில் பெய்த, பருவம் தவறிய மழையால், பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கான கடன்களை வங்கிகளும் மாற்றி அமைக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நம் நாட்டில், 5.77 கோடி முறைசாரா தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், குறைவான அளவு நிறுவனங்களே, வங்கிகள் மூலம் கடன் பெறுகின்றன. இந்த நிலையை மாற்ற, 'மைக்ரோ யூனிட் டெவலப்மென்ட் ரீபைனான்ஸ் ஏஜன்சி' என, அழைக்கப்படும், 'முத்ரா' வங்கி துவக்கப்படும் என, 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறு தொழில் ... |
| காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனி நகரமா? பிரிவினைவாத அமைப்புகள் கொந்தளிப்பு Posted: ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனி நகரியம் அமைக்கும் மாநில அரசின் திட்டத்துக்கு, அங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காஷ்மீரை பூர்வீகமாக உடையவர்கள், பிராமண சமுதாயத்தை சேர்ந்த பண்டிட்டுகள். பயங்கரவாத அமைப்புகளின் தொடர் தாக்குதல் காரணமாகவும், வன்முறை காரணமாகவும், அங்கிருந்து வெளியேறி, சொந்த நாட்டிலேயே, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் அகதிகளாக வசிக்கின்றனர். இவர்களை மீண்டும் ... |
| காரைக் கொடு... சின்னத்தைக் கொடு... கிடுக்கிப்பிடியில் சிக்கும் கெஜ்ரிவால் Posted: ஏற்கனவே, கட்சிக்காக, தான் வழங்கியிருந்த, வேகன் ஆர் காரை, திரும்ப தரும்படி, அரவிந்த் கெஜ்ரிவாலிடம், ஒருவர் கேட்டிருக்கும் நிலையில், கட்சிக்காக, தன்னால் வடிவமைக்கப்பட்ட அடையாள சின்னத்தை, திருப்பித் தரும்படியும், யாரும் அதை பயன்படுத்தக்கூடாது என்றும், இன்னொருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, டில்லியில் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே, ஆம்ஆத்மி கட்சி, கடும் உட்கட்சி நெருக்கடிகளை சந்தித்தவண்ணம் உள்ளது. முக்கிய பொறுப்புகள்: மூத்த தலைவர்கள் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும், ... |
| ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அருணாச்சல பிரதேசத்திலும் அமல் Posted: புதுடில்லி: வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை ராணுவத்தினர் சுட்டுத்தள்ள அதிகாரம் தரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்திலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் அடிக்கடி நடப்பதால் அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. இதன்மூலம் வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுத்தள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாவோயிஸ்ட்கள், பிரிவினைவாதிகள் மற்றும் பழங்குடியின போராளி களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ... |
| வங்கியிலும் பணத்திற்கு பாதுகாப்பில்லை: 27 ஆயிரம் கோடி ரூபாய் 'அம்பேல்' Posted: புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்து 27 ஆயிரம் கோடி ரூபாய் மாயமான அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வங்கிகளில் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்ததால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: அனைத்து வங்கிகளுக்கும் மோசடி மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுப்பது குறித்த வழி முறைகள் ... |
| சோனியா சந்திப்புக்கு விஜயகாந்த் திடீர் வியூகம்: குழப்பம் வரும் என நிர்வாகிகள் சந்தேகம் Posted: காங்., தலைவர் சோனியாவை சந்திக்க, விஜயகாந்த் ஏற்பாடுகளை துவங்கியுள்ள நிலையில், இதனால், குழப்பம் ஏற்படும் என்ற கருத்து, தே.மு.தி.க.,வில் எழுந்துள்ளது. காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சியில், கர்நாடகா அரசு இறங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பின் பேரில், அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், 'பந்த்' நடத்தப்பட்டது. கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்திலும், விவசாயிகள் ஈடுபட்டனர். மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல், கர்நாடகா அரசால் அணை ... |
| என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி அளித்த நன்கொடையாளர்களுக்கு சிக்கல் Posted: புதுடில்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளித்த, 188 வெளிநாட்டு நன்கொடையாளர்கள் சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த நன்கொடையாளர்கள் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சில அரசு சாரா அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று, நாட்டின் வளர்ச்சிக்கான அணு மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முடக்கும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 09,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |