Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு: சுற்றுச்சூழல் அமைப்பு கடும் கவலை

Posted:

புதுடில்லி: 'பூச்சி மருந்து போன்றவற்றை கலப்பதால், உணவுப் பொருட்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்படுகிறது' என, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார தினத்தையொட்டி, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற அமைப்பின் உதவி இயக்குனர், சந்திர பூஷன் கூறியதாவது: 'உணவுப் பொருட்களில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும்; கலக்க வேண்டும்' என, விதிமுறை உள்ளது; உணவுப் பொருள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதும் இல்லை; ...

திருப்பதி அருகே ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி: தமிழகத்தை சேர்ந்த செம்மரக்கடத்தல் கூலித்தொழிலாளர்கள்

Posted:

திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்ற, தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது, ஆந்திர அதிரடிப்படை போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், 20 பேர் கொல்லப்பட்டனர். கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு, தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 'இது, கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு நடவடிக்கை அல்ல; திட்டமிட்ட கொலையாகவே தெரிகிறது' என, தமிழக போலீசாரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சேஷாசலம் காட்டில், ஏராளமான செம்மரங்கள் உள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல் புள்ளிகள், ...

அப்பட்டமான கொலை? தமிழக போலீசார் கருத்து

Posted:

'ஆந்திராவில், 20 கூலித்தொழிலாளிகள் மீது நடந்தது என்கவுன்டர் இல்லை; அப்பட்டமான கொலை' என, தமிழக போலீசார் கருத்து தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து, தமிழக போலீசார் கூறியதாவது: செம்மரம் கடத்தலின் பின்னால் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது. அவர்களின் பிடியில், திருவண்ணாமலை, வேலுார், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, கூலித்தொழிலாளிகள் சிக்கித் தவிக்கின்றனர்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட, கூலித்தொழிலாளிகள் தான், ஆந்திர மாநில போலீசாரின் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாகி உள்ளனர்.அந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.*தொழிலாளிகள் சுட்டு ...

தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு : தலைவர்கள் கடும் கண்டனம்

Posted:

'ஆந்திராவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில், உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி:
கடந்த பல மாதங்களாக, இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும், அதுபற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி, அதற்கோர் முடிவு காணாத காரணத்தால், இன்றைக்கு 20 பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.இனியாவது, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இரண்டு மாநில ...

ஜெ., சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தடை

Posted:

புதுடில்லி : 'அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், வரும் 15ம் தேதி வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.100 கோடி அபராதம்: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், நான்கு பேருக்கும், கர்நாடக சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது; அத்துடன், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா உட்பட, நான்கு பேரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு ...

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 499, 500 ரத்தாகுமா?

Posted:

புதுடில்லி : 'அவமதிப்பு' என்றால் என்ன என்பது குறித்து வரையறை செய்யவும், இப்போதைய அவமதிப்பு சட்டங்களின் சட்ட அந்தஸ்து குறித்து முடிவெடுக்கவும், சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்பிரமணியன் சாமி மீது, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்குக்கு, சட்ட அந்தஸ்து இருக்கிறதா என கேட்டு, சாமி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.'இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான, இந்திய தண்டனைச் சட்டத்தின் ...

மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைப்பாரா?

Posted:

சென்னை மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க உள்ள நிலையில், சேவையை துவக்கி வைக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னையில், கோயம்பேடு - ஆலந்துார் இடையே, 10 கி.மீ., துாரத்துக்கு, முதல் கட்டமாக, மெட்ரோ ரயில் சேவை துவங்க முடிவு செய்யப்பட்டது.இந்த வழித்தடத்தில், பணிகள் முடிக்கப்பட்டு, தெற்கு வட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையிலான குழு, கடந்த, 6ம் தேதி, முதல் கட்ட ஆய்வை முடித்தது.இரண்டாம் கட்ட ஆய்வு விரைவில் நடக்க உள்ளது. இம்மாதத்திற்குள் ரயில் இயக்கத்திற்கான அனைத்து அனுமதியும் பெற்று, உடனடியாக மெட்ரோ ரயில் சேவையை துவங்க உள்ளனர்.இந்த ...

சான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை: இதனால் வேலை தேடுவோர், வேலை தருவோர் பயனடைவர்

Posted:

புதுடில்லி: இணையவழி சான்றிதழ் சேமிப்பு மையத்தை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் துவக்கி உள்ளது; இதனால், அமைச்சகத்தால் நடத்தப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்களின் சான்றிதழ் விவரங்களை எல்லாம், அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்கள், எளிதாக பார்த்துக் கொள்ளலாம்; அத்துடன், போலி சான்றிதழ் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். கடந்த 2011ம் ஆண்டில், டில்லி பல்கலைக் கழகத் தில், போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதே போல், 2012ல், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இதேபோன்ற பிரச்னையைச் சந்தித்தன. ...

அரசு மருத்துவமனைகளில் பெரிய அளவில் முறைகேடு: ஐ.எஸ்.ஐ., இல்லாத ஜெனரேட்டர் கொள்முதல்: நோயாளிகளுக்கு சுவாச பாதிப்பு அபாயம்

Posted:

அரசு மருத்துவமனைகளுக்கு விதிகளை மீறி, ஐ.எஸ்.ஐ., தரமில்லாத, ஜெனரேட்டர்களை கொள்முதல் செய்து பயன்படுத்துவதால், மருத்துவமனையின் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, சிகிச்சை பெறுவோர், சுவாச கோளாறுகளால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.60 ஆயிரம்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மின்வெட்டு நேரத்தில், அவசர பயன்பாட்டுக்காக, 'ஜெனரேட்டர்' வாங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற, ஜெனரேட்டர்களை கொள்முதல் செய்ய வேண்டும். டெண்டர் விதிமுறைகளிலேயே, இவை குறிப்பிடப்பட்டு உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், ...

பணம் வாங்க வற்புறுத்தியது அமைச்சர்தான்: தலைமை பொறியாளர் செந்தில் வாக்குமூலம்

Posted:

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம் இருந்து பணம் வாங்கச் சொல்லி வற்புறுத்தியதாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், வேளாண் துறையின் தலைமை பொறியாளர் செந்தில் தெரிவித்து உள்ளார்.நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும், தலைமைப் பொறியாளர் செந்திலை யும் கைது செய்தனர்.தலைமைப் பொறியாளர் செந்தில், நடந்தவை குறித்து, போலீசாரிடம் வாக்குமூலம் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

Posted:

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியில் ஆறு சதவீதத்தை உயர்த்த, ஆறாவது சம்பள கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்குழு, இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நேற்று இதற்கான அறிவிப்பு வெளியானதுஅரசு ஊழியர்களுக்கு தற்போது, 107 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இனி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு இதற்கான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™