ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 'நீங்க நிறுத்துங்க... நானும் நிறுத்துறேன்!' -லஷ்மி மேனன்
- 10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை!
- படித்ததில் பிடித்தது :) --நாசுக்காக கையாளுங்களேன்!
- எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க!
- சூடு !
- சங்கீதம்
- சி ரி... சி ரி... சி ரி... சி ரி...
- தெரிஞ்சுக்கோங்க!............ பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூசினால்
- கல்கருட சேவை
- அம்மாவுக்காக...
- குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி!
- கண்டதும் நாவில் சுவையூறும் சாக்லேட் பொக்கே!
- கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!
- நோஸ்ராடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது - சி.எஸ்.தேவ்நாத்
- திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள் !
- பொய் சொல்றதுக்கு அளவு வேண்டாமா?
- பறக்காதே !
- கம்ப்யூட்டர் உலகத் தாதா !
- மனசு லேசாக இருக்க… பர்ஸ் கனமாக இருப்பது அவசியம்..!
- ஆத்திகனாய் இருப்பதில் ஒரு லாபம் …
- ஒரு வரி திகில் கதை
- நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ?
- ஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள்
- எலியை பாரு… சுகரு காலி… வடிவேலு விளம்பரம்
- சினிமா
- படித்து பாருங்கள் - நகைச்சுவை
- கைரேகை காட்டிக் கொடுத்துடுமேன்னுதான்…!
- எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?
- அது திருட்டு டிவிடிகாரங்க ஒட்டினது…!
- வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!
- பாப்பாவுக்குப் பாடியது போதும் அரசாங்கத்துக்குப் பாடுவோம்..!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(362)
- குழிவிழும் கன்னத்தில் முத்தம்
- ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!
- கமல் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள சிம்ரன்
- உதிரா இலைகள்..!! -Mano Red
- தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?
- விளை நிலத்தில் ரேகை பார்க்கும் சூரியன் –
- திருவிழாக் காலைகள்
| 'நீங்க நிறுத்துங்க... நானும் நிறுத்துறேன்!' -லஷ்மி மேனன் Posted: 07 Apr 2015 12:17 PM PDT 'நீங்க நிறுத்துங்க... நானும் நிறுத்துறேன்!' - சிகரெட்டுக்கு எதிராக லஷ்மி மேனன் ! '+2 எக்ஸாம் எழுதப் போகிறார்; அஜீத்-விஜய்-விக்ரமுடன் நடிக்கப் போகிறார்; சினிமாவில் இருந்து விலகப் போகிறார்' என்று குழப்பக் கும்மியடிக்கும் நியூஸ்களுக்கு மத்தியில், சீரியஸாகச் சிந்தித்திருக்கிறார் லஷ்மி மேனன். தனது சோஷியல் நெட்வொர்க் பக்கத்தில் சமூக விழிப்புணர்வுக்காக, சீரியஸாகச் சிரித்தபடி லஷ்மி மேனன் கொடுத்த ஸ்டேட்மென்ட் ஒன்று, சினிமா உலகினரின் மத்தியில் சிந்தனைக் குதிரையை ஓட விட்டிருக்கிறது. ''எனக்கு ... |
| 10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Posted: 07 Apr 2015 12:08 PM PDT புதுடெல்லி: 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவில், ''டெல்லியில் காற்றின் தரம் பரிந்துரை அளவையிட சீர்கெட்டு வருவதாக கடந்த நவம்பர் 26, 28 மற்றும் டிசம்பர் 4ஆம் தேதிகளில் சுட்டிக்காட்டப்பட்டும், அதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது. டீசல் புகையால் நுரையீரல், மூளை போன்றவை பாதிக்கப்பட்டு புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லி மாநகரம் ... |
| படித்ததில் பிடித்தது :) --நாசுக்காக கையாளுங்களேன்! Posted: 07 Apr 2015 12:05 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க! Posted: 07 Apr 2015 12:04 PM PDT வாட்ஸ் அப்பில் வலம் வரும் லேட்டஸ்ட் பதிவு இது. வாடிக்கையாளரிடம் வங்கி மேனேஜர் என்று போனில் பேசி அவருடைய ஏ.டி.எம் நம்பரை கேட்கிறார் ஒரு மோசடி பேர்வழி. அந்த உரையாடல்தான் இது... வாடிக்கையாளர்: ஹலோ.... மேனேஜர்: ஹலோ.... வணக்கம் சார்.... குட்ஆப்ட்நூன். வாடிக்கையாளர்: வணக்கம் சார்..... சொல்லுங்க சார். மேனேஜர்: சார்...... நான் வந்து ஏடிஎம் ஹெல்ப் லைனிலிருந்து பேசுறேன். ராம்குமார்.. பேங்க் மேனேஜர். வாடிக்கையாளர்: சார்..... யாருங்க சார். மேனேஜர்: ஏடிஎம் ஹெல்ப் லைனிலிருந்து பேங்க் மேனேஜர் ... |
| Posted: 07 Apr 2015 11:50 AM PDT ""இன்னும் பத்து நிமிடம் இருக்கு சார்'' பரிமாறுபவர் சற்றே இளக்காரமாகச் சொன்னாரோ? எங்கள் கம்பெனியின் ஆண்டு விழா இந்தூரில் ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில் ஏற்பாடு செய்திருந்தனர். எனது பிரிவின் கூட்டம் முடிந்ததும் பந்திக்கு முந்தும் பறக்காவெட்டியாய் முதல் ஆளாய் டின்னருக்கு வந்து நிற்கிறேன். நமது பிரிவின் ஆள் எவனாவது வரமாட்டானா? ""ஹலோ சார்'' ""இது சோமசுந்தர் இல்லையோ... ஹைதராபாத் கிளை?'' ""யெஸ் சார். நல்லா நினைவு வச்சிருக்கீங்க சார். எப்படி இருக்கீங்க சார்?'' சோமசுந்தருக்கு வார்த்தைக்கு ஒரு ... |
| Posted: 07 Apr 2015 11:32 AM PDT பனிமழை பொழிய தென்றல் அசையும் சத்தம்!! தொலைதூரத்தில் கூவும் சோலைக்குயில் சத்தம்!! நீர்விழ்ச்சியில் வழிந்தோடும் நீரலலை சமுத்திரத்தில் பாயும் சத்தம்!! கன்னிப்பாவையின் கால் கொலுசு அசையும் சத்தம்!! மனம் பிடித்தவளின் புன்னைச் சத்தம்!! ஊர் தூ ங்கும் நேரம் நாமம் தெரியாத பூச்சிகளின் இரைச்சல் சத்தம்!! தாய்பாடும் தாலாட்டுச் சத்தம்!! இதயம் இயங்கும் 'லப் டப்' சத்தம்!! சங்கிதம்!!! |
| சி ரி... சி ரி... சி ரி... சி ரி... Posted: 07 Apr 2015 11:18 AM PDT ""இன்ஸ்பெக்டர் மேடம்... போன வருஷம் நம்ப போலீஸ் ஸ்டேஷன்லே ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செஞ்சி வெச்சோமில்லே...'' ""ஆமா அதுக்கென்ன இப்போ?..'' ""அந்தப் பொண்ணு பிரசவம்னு வந்திருக்கு... அதையும் நீங்கதான் பாக்கணுமாம்..'' -கி.ராஜகோபாலன், சென்னை. ""நிறைய கடன் வாங்கி இருக்கீங்களே பயமா இல்ல...!'' ""இருக்கு கடன் குடுத்தவங்களுக்கு...!'' -க.நாகமுத்து, திண்டுக்கல். டாக்டர்: கபாலி! உன் உடம்புக்கு என்ன பண்ணுது? ரவுடி: ராத்திரி ஆனா தூக்கம் தூக்கமா வருது டாக்டர்! தொழில் பாதிக்குது! டாக்டர்: ... |
| தெரிஞ்சுக்கோங்க!............ பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூசினால் Posted: 07 Apr 2015 11:17 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 07 Apr 2015 11:09 AM PDT கல்கருட சேவை நாச்சியார் கோவில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இக்கோவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோவில் ஆகும். இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும். நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள ... |
| Posted: 07 Apr 2015 10:56 AM PDT பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த வேளை. பள்ளியில் ""ஸ்டடி லீவு'' தொடங்கிவிட்டது. எவ்வித பதட்டமும் இல்லாமல் ஆகாஷ் கூலாக எப்போதும்போல சுற்றித் திரிந்தவண்ணம் இருந்தான். ஆகாஷ் நன்றாகப் படிப்பவன்தான். இருந்தாலும் பொதுத் தேர்வு எழுதும்போது ஒருவித கலவரம் எல்லா மாணவர்களுக்கும் இருப்பது சகஜம். மாணவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, பெற்றோர்க்கு அது ஒரு பெரிய இறுக்கம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆகாஷ் ஒரு அம்மா பையன். சதா அம்மாவைச் சுற்றிச் சுற்றி வருவான். ""பிளஸ் டூ படிக்கற பையன். ... |
| குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Posted: 07 Apr 2015 10:51 AM PDT குடிநோயாளியான தந்தை, வறுமையுடன் போராடும் தாய், பற்றாக்குறையுடன் குழந்தைகள்! எங்கு பார்த்தாலும் இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் குடி நோயாளிகளை மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைக்கு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும் அரும்பணியை செய்து வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த கலாதேவி சாமியப்பன். தனது பணியில் அவர் எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகளைப் பகிர்ந்து கொள்கிறார் கலாதேவி! ""எனக்கு இரண்டு பெண்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பேரன், பேத்திகள் என ஓய்வான வாழ்க்கை எங்களுடையது. வீட்டிற்கு ... |
| கண்டதும் நாவில் சுவையூறும் சாக்லேட் பொக்கே! Posted: 07 Apr 2015 10:47 AM PDT இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகள் பலவகையிலும், பல வண்ணங்களிலும் கண்ணைக் கவரும் விதத்தில் வந்துவிட்டது. இருந்தாலும் அதிலிருந்து சற்று வித்தியாசமாக யோசித்து ஹோம்மேட் சாக்லேட்டில் "பொக்கே' செய்து குழந்தைகளை அசத்தி வருகிறார் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி ஸ்ரீதர். ஓர் இனிய பொழுதில் அவரைச் சந்தித்தோம். ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக பலவித வடிவங்களிலான பெரிய அளவு சாக்லேட் பொக்கே தயாராகிக் கொண்டிருந்தது. அதை தயார் செய்து கொண்டே நம்முடன் ... |
| கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :( Posted: 07 Apr 2015 10:31 AM PDT கம்பம்: அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்து மாவு பாக்கெட்டுகளை, பணியாளர்கள் கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் 10க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 2 முதல் 5 வயது வரை அடிப்படை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீரை, பருப்பு, முட்டையுடன் தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மூலம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதங்கள் முதல் ... |
| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை! Posted: 07 Apr 2015 10:00 AM PDT புதுடெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. - - ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ... |
| நோஸ்ராடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது - சி.எஸ்.தேவ்நாத் Posted: 07 Apr 2015 09:54 AM PDT நோஸ்ராடாமஸ் (டிசம்பர் 14இ 1503 ஜூலை 2இ 1566)இ இலத்தீன் பெயரான மைகெல் டி நோஸ்ரடேம் மூலம் அழைக்கப்பட்ட நோஸ்ராடாமஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர். இவரது படைப்பான 'லெஸ் புரோபெடீஸ்' மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். நோஸ்ராடாமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் ... |
| திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள் ! Posted: 07 Apr 2015 09:37 AM PDT [justify]பொருளாதாரம் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சில தங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். ஐ.டி கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு அதிகமாகி வருகிறது. வேலை இழப்பு ஏற்படும்போது அடுத்த வேலையைத் தேடிக்கொள்ள சில மாதங்களாவது ஆகும். அந்தச்சமயத்தில் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாமல் இருந்தாலே எளிதாகவும், நிம்மதியாகவும் வேலை தேட முடியும். மாத சம்பளம் தடைபடும்போது ... |
| பொய் சொல்றதுக்கு அளவு வேண்டாமா? Posted: 07 Apr 2015 08:38 AM PDT சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை, 12 இயர்ஸ் எ ஸ்லேவ் என்ற ஆங்கில படத்தில் நடித்ததற்காக பெற்ற லூபிதா நியாங்கோவை பற்றித் தான், தற்போது, ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகின்றனர். இவர், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முத்துக்கள் பதிக்கப்பட்ட வித்தியாசமான கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் மதிப்பு, 93 லட்சம் ரூபாய் என்றும் பீற்றினார். இது நடந்த சில நாட்களுக்கு பின், அமெரிக்காவில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த லூபிதா, ஷாப்பிங் சென்று திரும்பியவர், தன்னுடைய முத்து கவுனை யாரோ ... |
| Posted: 07 Apr 2015 08:17 AM PDT புதிதாக வாங்கிய பைக்கில், அபரிமித வேகத்தில், கல்தூரிக்குள் நுழைந்த சுந்தர், நண்பர்களின் முன், 'சரக்'கென்று பிரேக் போட்டு நிறுத்தினான். ''டேய் சுந்தர்... பைக் புதுசாடா?'' என்று கேட்டான் ஒருவன். ''எவ்வளவுடா...'' என்றான் மற்றொருவன், ''மச்சான் சூப்பரா இருக்குடா... ம்ம்... கலக்குற சுந்தரு,'' என்றான் இன்னொருத்தன். நண்பர்களின் விசாரிப்பில், சுந்தருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். பைக் அருகில் வந்த முரளி, அதை ஆசையாய் தொட்டு பார்த்து, ''மச்சி... நான் ஒரு ரவுண்டு போயிட்டு வாறேன்டா,'' என்றதும், பட்டென்று, ... |
| Posted: 07 Apr 2015 08:04 AM PDT கம்ப்யூட்டர் உலகத் தாதா : டேய் ! அவரைத் தூக்கிட்டுப் போய் டவுன்லோட் செய்திட்டு வாங்கடா ! |
| மனசு லேசாக இருக்க… பர்ஸ் கனமாக இருப்பது அவசியம்..! Posted: 07 Apr 2015 08:02 AM PDT – வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன! – @ammuthalip – ————————————- – அறிமுகமில்லாத ஒரு குழந்தையை சிரிக்க வைக்க முடியுமானால் நாம் வாழ்வதில் அர்த்தமுண்டு! – @ansari-masthan – ————————————– – நம்மளுக்கு புடிச்ச மாதிரி ஒரு சீன் நடக்கும் போதுதான், கடவுள் யார் கையிலயோ ரிமோட்ட குடுத்து மாத்த சொல்லுவார்..! – @thunder_fb – ————————————- – கைக்குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை மையத்தின் வாயிலை நுழையும்போது அக்குழந்தையின் ... |
| ஆத்திகனாய் இருப்பதில் ஒரு லாபம் … Posted: 07 Apr 2015 08:01 AM PDT - ஆத்திகனாய் இருப்பதில் ஒரு லாபம். நாம் என்ன தவறு செய்தாலும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்ள ஒன்பது பேர் கொண்ட குழு (நவக்கிரகங்கள்) தயாராக இருக்கும். – @bharathi – ——————————— – கார் கண்ணாடிகளில் உள்ள கருப்புக் கண்ணாடிகள்தான் தீவிரவாதத்திற்கு காரணம் என்று உறுதியாக நம்புகிறது இந்த அரசு. – @givindarajan – ———————————- – மோடிக்கு உலக நாடுகள் அழைப்பு… ** பிரதமர் வேலையை எப்படா செய்யவிடுவீங்க. பேக்கரிய தொறந்துதல இருந்து பன்னை கொடு, வெண்ணைய குடுன்னு…! – @gajelan – ———————————- – ஒரு ... |
| Posted: 07 Apr 2015 06:56 AM PDT மூன்று நண்பர்கள் 100 மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி இருந்தனர்.ஒரு நாள் லிப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் கதை சொல்லிக் கொண்ட மாடி ஏறி விடலாம் என் பிளான் செய்து கொண்டு ஏறினார்கள். முதல் நபர் 50 ஆவது மாடி வரை ஒரு ACTION கதை சொல்லி கொண்டே வந்தார். இரண்டாவது நபர் 99 ஆவது மாடி வரை ஒரு COMEDY கதை சொல்லி கொண்டே வந்தார். மூன்றாவது நண்பர் மிகவும் திகிலான கதையை ஒரு வரியில் சொன்னார்.ரூம் சாவியை கார்லயே மறந்து விட்டு வந்துட்டேன். |
| நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ? Posted: 07 Apr 2015 06:52 AM PDT நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா என்று கேட்டால் ஏன் முடியாது நான் செய்திருக்கிறேன் என்று சொல்வார் கம்போடியாவின் சர்வாதிகாரியாக இருந்த போல்பாட். இவர் தனது ஆட்சியில் நடத்திய கொடூரங்கள் ஏராளம். 1975 முதல் 1979-ம் ஆண்டு வரை கம்போடியாவின் போல்பாட் ஆட்சி இருந்தது. ஏழை, பணக்காரன் வேறுபாடு இல்லாத நாட்டை உருவாக்கப் போகிறேன் என்று போல்பாட் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. கம்போடியா ஒரு விவசாய நாடு. இந்த நாட்டுக்கு தேவை நிலத்தில் இறங்கி கடுமையாக வேலை செய்யக் கூடிய உழைப்பாளிகளே தவிர, ... |
| ஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் Posted: 07 Apr 2015 06:43 AM PDT ஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள் - சிறப்பு பகிர்வு ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து, ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள்... துவக்கத்தால் துவளாதே : பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா ... |
| எலியை பாரு… சுகரு காலி… வடிவேலு விளம்பரம் Posted: 07 Apr 2015 06:40 AM PDT - தெனாலிராமன் தோல்விக்குப் பிறகு வடிவேலு நடித்துவரும் படம், எலி. யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு, சதா நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு என தனி வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. - அதனை தொடங்கி வைத்த வடிவேலு, வழக்கம் போல தனது பாணியில் பேசினார். - "ஹலோ டியூட்ஸ்… நான் நடிச்சிக்கிட்டு இருக்கிற படம் பேரு எலி. இந்தப் படத்துல காமெடி எலி டிராவல் பண்ணாத ரூட்டே கிடையாது. இதுவொரு காமெடி எலி, கலக்கல் எலி. உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிற உங்க வீட்டு எலி. - நான் ராகம் போட்டு பேசுறதுனால ... |
| Posted: 07 Apr 2015 06:34 AM PDT விஷால் ------------- விஷால் அம்மாவ பிரிஞ்சிருந்தா பூஜை, அப்பாவ பிரிஞ்சிருந்தா ஆம்பள, அண்ணன பிரிஞ்சிருந்தா தோரணை, தங்கச்சிய பிரிஞ்சிருந்தா வெடி! பொண்டாட்டிய பிரிஞ்சிருந்தா செல்லமே, அத்தைய பிரிஞ்சிருந்தா தாமிரபரணி, குடும்பத்தையே பிரிஞ்சிருந்தா திமிரு....., விக்ரம் ---------- வீட்டுக்காக உழைச்சி மெலிஞ்சு போன அப்பாவை கண்ணுக்குத் தெரியல, படத்துக்காக உழைச்சி மெலிஞ்சு போன விக்ரமை பார்த்து ஆச்சரியப்படுறாங்க. |
| Posted: 07 Apr 2015 06:30 AM PDT நகைச்சுவை:1 ஒருவர்:டாக்டர் நான் நூறுவயது வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்? டாக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்! ஒருவர்:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா? டாக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன் ஆசை பொய் விடும். *************************************** நகைச்சுவை:2 நண்பன்1:இந்தக் கணக்கை முட்டாள் கூட ஈஸியா செய்திடுவான். நண்பன்2:அதுதான் நீ ஈஸியா செய்திட்டே! *************************************** நகைச்சுவை:3 ஒருவர்:டாக்டர் ... |
| கைரேகை காட்டிக் கொடுத்துடுமேன்னுதான்…! Posted: 07 Apr 2015 06:21 AM PDT நான் ஆட்சிக்கு வந்தால்…. - நான் பேரை மாத்திக்கிறேன் தலைவரே…! - சி.சாமிநாதன் - ——————————– - தலைவர் ஏன் இன்னமும் ஆதார் அட்டை வாங்காம இருக்கார்..? - கைரேகை காட்டிக் கொடுத்துடுமேன்னுதான்…! - கி.ரவிக்குமார் - ————————————— - பேச்சாளர்: உத்தம வில்லனோடு எங்கள் தலைவரையும் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்…! - சிக்ஸ்முகம் - ———————————— - என்னய்யா, தலைவர் வீட்ல ஒரே கேடி, ரௌடிங்க கூட்டமா இருக்கு..? - எல்லோரும் தலைவருடன் 80-ல் ப்ரெண்டாம்…தலைவர் வீட்ல ரீயுனியனாம்..!! - மகா - ————————————– |
| எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா? Posted: 07 Apr 2015 06:21 AM PDT - உங்களுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு...! - எப்படி சொல்றீங்க ஜோசியரே...? - என் மக உன்னை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாளே...!! - ----------------------------------------- - எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா? - அப்புறம் எப்படி ஆபீஸ்ல வேலை செய்யறீங்க? - ஆபிசுல பேசுவேன்...! வீட்டில மட்டும்தான் மவுன விரதம்...!! - -------------------------------------------- - ஆண் பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன் ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்... ஆனால் எதற்காகவும், ஆண் தங்கை என அழைப்பதில்லை...! - நீதி ... |
| அது திருட்டு டிவிடிகாரங்க ஒட்டினது…! Posted: 07 Apr 2015 06:17 AM PDT நீங்க ஆபரேஷனுக்கு அப்புறம் நிறைய நடக்கணும்…! – நான் ஆபரேனுக்காக என் காரை வித்த விஷ#ம் உங்களுக்கு எப்படி டாக்டர் தெரியும்? – வி.சாரதி டேச்சு – ————————————– – படம் ரிலீஸ் ஆகி ரெண்டு நாள்தானே ஆச்சு! ஆனா வெற்றிகரமான பத்தாவது நாள்னு போஸ்டர் ஒட்டி இருக்காங்களே..? – அது திருட்டு டிவிடிகாரங்க ஒட்டினது…! – சிக்ஸ்முகம் – —————————————- – என்னை ஸ்பெஷல் வார்டுக்கு மாத்த சொல்றீங்களே… அங்கஅப்படி என்ன ஸ்பெஷல் டாக்டர்? – ஊசி போட ஒரு நர்ஸ், வலிக்காம தேய்ச்சு விட ஒரு நர்ஸ்னு ஜமாய்ப்பாங்க…! வி.சகிதா ... |
| வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…! Posted: 07 Apr 2015 06:08 AM PDT முன்னால் போகும் வாகன ஓட்டிகளின் உடல் மொழியை கவனித்து அவர் திருப்பங்களை அவதானிக்கும் திறன், உலகில் இந்தியாகளைத் தவிர வேறு யாருக்கேனும் உள்ளதா..? – விக்னேஸ்வரி சுரேஷ் – ————————————– – விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும்: மோடி – ஒருவரை ஏமாத்தணும்னா, முதல்ல அவரோட, ஆசையைத் தூண்டி விடணும் – சதுரங்க வேட்டை – முத்து ராஜ் – ————————————– – நிறைய மனிதர்களின் வாழ்க்கை சவுத் ஆப்ரிக்காகாரங்க போலவே இருக்கிறது எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாமலே! – ஷங்கர் கார்த்தி – —————————————- – சவுத் ... |
| பாப்பாவுக்குப் பாடியது போதும் அரசாங்கத்துக்குப் பாடுவோம்..! Posted: 07 Apr 2015 06:04 AM PDT - பொம்மையோடு குழந்தை பேசுகிறது அன்பு மொழியில் – —————————- – காதலனோடு வாழச் சென்றாள் சங்கஇலக்கியத்தில் உடன்போக்காம் சமுதாயத்தில் ஓடிப்போனவளாம் – —————————- – அய்க்கூ கவிதை விட சுருக்கமான கவிதை அவளின் பெயர் – ——————————— – ஆடு மேய்க்கப் போ என்கிறார் இயேசுவாக கிருஷ்ணராக மாறலாம் நானும் – —————————– – குளிர் சாதனப்பெட்டியைத் தொட்டேன் சுட்டது விலை – —————————— – சாதிகள் இல்லையடி பாப்பா பாப்பாவுக்குப் பாடியது போதும் அரசாங்கத்துக்குப் பாடுவோம் – —————————— தாமோதர ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(362) Posted: 07 Apr 2015 05:46 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 07 Apr 2015 04:27 AM PDT - – பெண்கள் இழக்கும் கடைசி சொத்து கற்பு – ———————- – கால் நடைகளை தண்டித்தது பட்டி குழந்தைகள் நலக் கூட்டம் – ——————— – குழி விழும் கன்னத்தில் முத்தம் சிதறும் – ——————– – வழக்கில் இருக்கும் காலி மனை பொதுக் கழிப்பிடம் – ——————— – எதிர் எதிராக கடந்து செல்லும் முகம் யாருக்கு சகுனம் – ——————— – டி.ராஜேந்திரன் சிவந்த ரேகை – ஹைகூ கவிதைகள் |
| ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! Posted: 07 Apr 2015 04:12 AM PDT திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பதி சேஷாசல வனப்பகுதி ஈசகுண்டாவில் சிலர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதில், 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் ... |
| கமல் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள சிம்ரன் Posted: 07 Apr 2015 02:51 AM PDT - - சிம்ரன் அண்ட் சன்ஸ். இதுதான் சிம்ரன் தனது கணவர் தீபக்குடன் இணைந்து தொடங்கியிருக்கும் புதிய பட நிறுவனத்தின் பெயர். - தொலைக்காட்சி தொடர்களை தயாரித்த அனுபவம் மற்றும் நடிகையாக இருந்த அனுபவம் ஆகியவற்றை வைத்து, இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாகவும். முதல்கட்டமாக இந்த வருடம் இரு படங்களை தயாரிக்கயிருப்பதாகவும் சிம்ரன் தெரிவித்தார். - படங்கள் தயாரிப்பதுடன் இயக்கவும் சிம்ரம் முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக கமல், விஜய், அஜீத் படங்களை அவரது நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக, ... |
| Posted: 07 Apr 2015 02:18 AM PDT எழுப்பு ஒலியின் தொடக்க ஒலியே நினைவு குத்தி செல்கிறது, விழிக்கும் நேரம் தாண்டியும் விடியல் வரவில்லை..!! ஒருவித மதம் பிடித்த மனிதனாய், தவறிய வாய்ப்பின் மறு அழைப்பிற்கு காத்திருக்கும் போது நிலநடுக்கமாய் சில சிதறல்கள்..!! தானே இயங்கும் இசைக்கோப்பிலிருந்து சற்று முன் காற்று பரப்பிய பாடலை, மயிரிழையில் தவற விட்டபின் புரிந்தது இது தான் இப்போது கடந்தது..!! சிற்பக் குறியீடுகளை குறுக்கே விசாரிக்குமளவு திறனில்லை என்றாலும், அற்பமில்லா சிற்பமாய் நிற்க பொறுமை பொதிந்திருக்கிறது..!! மனக்காட்சியின் அகநிலை ... |
| தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Posted: 07 Apr 2015 02:16 AM PDT தாலியும் தமிழரும்! - "செந்தமிழ் வேள்விச் சதுரர்" திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை 'மக்கள் மேடை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் ... |
| விளை நிலத்தில் ரேகை பார்க்கும் சூரியன் – Posted: 07 Apr 2015 02:01 AM PDT - வெள்ளிப் பனிமலை உருகுகிறது தாய் வீட்டில் பார்வதி – ———————- – மேகத்திற்கு கோபம் திட்டுத் திட்டாய் பூமிமேல் மழை – ———————– – தண்ணீர் விதவிதமாய் ஆற்றுக்குப் பெயர்கள் – ———————— – பாலங்கள் ஆற்றைக் கடக்க மணல் லோடு லாரிகள் – ———————— – வறட்சி விளை நிலத்தில் ரேகை பார்க்கும் சூரியன் – ———————— – டி.ராஜேந்திரன் சிவந்த ரேகை – ஹைகூ கவிதைகள் |
| Posted: 07 Apr 2015 01:52 AM PDT நெற்றி படர்ந்த நீள்கூந்தல் விலக்கி காதுக்குள் செருகுவதாய் கடைக்கண் உயரத்தூக்கி நானுணர்ந்த நொடிகளில் தாழ்த்தி மறைத்து கோலக் கோடுகளில் தப்பிழைத்ததற்காய் புறங்கை நெற்றி மோதும் வளைக்கைச் சிணுங்கல்களுமாய் .... ஊர்வலங்களினூடே இடம் மாறிய என் வீட்டுத் தேங்காய்ச் சில்லுகளோடு உன் வீட்டு முற்றத்து ஊஞ்சலுமான மெல்லிசை ரம்மியங்களுமாய்... முன்னிரவுக் கடைகளினூடே முழுக்கைச்சட்டை முழங்கையளவு மடிப்பு கண்டு உதட்டுச்சுழி கடிதல்களோடு வெடுக்கித் திரும்பிய லாவகங்களுமாய்... நெரிசல்களினூடே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |