Tamil News | Online Tamil News |
- உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளால் அதிகாரிகளுக்கு நெருக்கடி தொடர்கிறது: இன்ஜினியரை அடுத்து திருச்சி அரசு டாக்டர் தற்கொலை முயற்சி
- இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் பலம் அதிகரிப்பு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஸ்கார்பீன்' அறிமுகம்
- நில மசோதா குறித்து தவறான பிரசாரம்! பிரதமர் நரேந்திர மோடி வேதனை
- நேர்மையான அலுவலர்களை மிரட்டிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலக்கம்
- முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: வாக்குமூலம் அளிப்பாரா நெல்லை கலெக்டர்?
- ரயில் பயணத்தின் போது விரும்பிய உணவு பெறலாம்: விரைவில் அறிமுகமாகிறது புதிய வசதி
- கறுப்பு பண முதலைகள் மீது நியாயமான நடவடிக்கை: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி உறுதி
- தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி: கட்சியினருக்கு விஜயகாந்த் சிக்னல்
- ஐ.பி.எல்., போட்டியால் மின் தேவை உயரும்: மின்தடை நேரம் அதிகரிக்கும் அபாயம்
| Posted: திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் உறைவிட டாக்டர் - ஆர்.எம்.ஓ., அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பணிச்சுமை மற்றும் அரசியல்வாதிகள், அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலையைத் தொடர்ந்து இந்த தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேரு, 50; திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நிலைய உறைவிட மருத்துவ அதிகாரி - ஆர்.எம்.ஓ., ... |
| Posted: மும்பை : பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, முதல், 'ஸ்கார்பீன்' நீர்மூழ்கிக் கப்பல், மும்பை மஸ்கான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீன கடற்படை, அவ்வப்போது மூக்கை நுழைத்து வரும் நிலையில், நீர்மூழ்கிக் கப்பல் பலத்தை பெருக்கும் வகையில், ஒன்பது மாதங்களுக்கு, ஒரு ஸ்கார்பீன் தயாரிக்கப்படும் என்ற இனிய செய்தியும் வெளியாகி உள்ளது.மும்பை மஸ்கான் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டது; இதில், ... |
| நில மசோதா குறித்து தவறான பிரசாரம்! பிரதமர் நரேந்திர மோடி வேதனை Posted: புதுடில்லி : ''நிலம் கையகப்படுத்தும் மசோதா சட்டமானால், மலையில் வாழும் ஆதிவாசிகள் வசம் உள்ள நிலங்கள் மற்றும் வன நிலங்களும் கையகப்படுத்தப்படும் என, தவறாக சிலர் பிரசாரம் செய்து, நாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன;. அவர்கள் பிரசாரத்தில் உண்மையில்லை,'' என, பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற, மாநிலங்களின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது: நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற மத்திய அரசு உறுதியாக உள்ளது; அந்த மசோதாவுக்கு எதிரான ... |
| நேர்மையான அலுவலர்களை மிரட்டிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலக்கம் Posted: 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, கைதைத் தொடர்ந்து, நேர்மையான அலுவலர்களை மிரட்டிய அமைச்சர்கள் அவர்களின் பி.ஏ.,க்கள், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஏற்கனவே அமைச்சரின் பி.ஏ.,க்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருச்சியில் நேற்று அரசு டாக்டர் நேரு தற்கொலைக்கு முயற்சித்தது பதற்றத்தை அதிகரித்துள்ளது.வேளாண் ... |
| முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: வாக்குமூலம் அளிப்பாரா நெல்லை கலெக்டர்? Posted: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நெல்லை அ.தி.மு.க.,வினர் பலர், சென்னை நோக்கி படையெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி., போலீசார், அடுத்து தங்களையும் வளைக்கக்கூடும் என்பதால், அதை முன்கூட்டியே தடுப்பதற்கான முயற்சிகளில், அவர்கள் இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., வட்டாரங்கள் கூறியதாவது:விரைவில் கைது: முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறையின் தலைமைப் பொறியாளர் செந்தில் ... |
| ரயில் பயணத்தின் போது விரும்பிய உணவு பெறலாம்: விரைவில் அறிமுகமாகிறது புதிய வசதி Posted: ஹரித்துவார் : ''ரயில் பயணத்தின் போது, பயணிகள் தாங்கள் விரும்பும் உணவுகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது; விரைவில், இந்த வசதி அறிமுகமாகும்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ரயில் பயணிகளுக்கு தரமான உணவு கிடைப்பதற்காக, 'இ - பேன்ட்ரி' முறை அறிமுகம் செய்யப்படுகிறது; இதன் மூலம், ரயில் பயணத்தின் போது, பயணிகள் தாங்கள் விரும்பும் உணவுகளைப் பெறலாம். பயணிகள் ஆர்டர் செய்யும் உணவுகளை, ரயில் செல்லும் பாதையில் உள்ள நகரங்களின் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும், சமையல் ... |
| கறுப்பு பண முதலைகள் மீது நியாயமான நடவடிக்கை: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி உறுதி Posted: புதுடில்லி : ''வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள், தாங்களாக முன்வந்து அந்த விவரத்தை தெரிவித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாட்டோம்; நியாயமான முறையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த அருண் ஜெட்லி கூறினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய, அருண் ஜெட்லி பேசியதாவது:இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சில வெளிநாடுகளில் பதுக்கியுள்ளவர்கள், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தின் படி, 10 ... |
| தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி: கட்சியினருக்கு விஜயகாந்த் சிக்னல் Posted: சேலம் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க., குறித்து விமர்சிக்காமல், மறைமுகமாக கூட்டணிக்கு பாதை போட்டிருக்கிறார் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குறித்து, கட்சியினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, கட்சியினர் கூறியதாவது:சேலத்தில் நேற்று முன்தினம், தே.மு.தி.க., கட்சியின் மகளிர் அணி சார்பில், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளிப்படையாக அறிவிப்பார் என, எதிர்பார்த்தோம். ஆனால், அவர் நேரடியாக அதுகுறித்து எதுவும் ... |
| ஐ.பி.எல்., போட்டியால் மின் தேவை உயரும்: மின்தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் Posted: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளதால், மின்தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் மின் தேவை, நாள்தோறும் சராசரியாக, 13 ஆயிரம்; மின் உற்பத்தி, 12,500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது; இதனால் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின்தடை செய்யப்படுகிறது. |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 07,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |