ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950
- ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா?
- 'பேஸ்புக்' மூலம் அதிகரிக்கும் பொறாமை
- ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
- ஏமன் உள்நாட்டுப் போர்
- மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்
- பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்
- கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.
- ஸ்போர்ட்ஸ்கார் DC Avanti ஏப்ரல் 15-ம் தேதி விற்பனைக்கு வருகிறது!
- சிசேரியன் அதிகமாவது ஏன்?
- ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?
- 240வல்ட் 60 hz
- "சீரியல் கில்லர்---பிரேமா"
- சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை
- சிறப்புக் குழந்தைகள் என்போர் யார்
- புதிய சீருடையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- புதிய சீருடையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- ----------''காதலின் வருத்தம்'' ---
- 40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி
- போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !
- ரமணியின் சிறுகதைகள்: பூவே சுமையாகும் போது...
- குருக்ஷேத்திரம் - கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன்
- கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.
- ஆய்வு பற்றிய ஐயம்
- பட்டை தீட்டப்படாததால் மின்னாத வைரங்கள்...! -
- காதலிகளுக்கு சில விஷயங்கள்
- சிம்ரனின் அடுத்த டார்கெட்!
- ஒற்றையடிப் பிரபஞ்சங்களில்
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- சகுனத் தடை
- ‘யோக்கியன் வாரான் செம்ப தூக்கி உள்ள வை’.
- சிங்கத்துடன் உலா வரத் தயாரா?
- ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை
- ஜிப்மரில் 116 பணி வாய்ப்புகள்
- கல்யாணராமன்: கமல் வேடத்தில் திரிஷா
- முகவரி
| உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950 Posted: 06 Apr 2015 03:23 PM PDT உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய வேலை திட்டம் தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். ... |
| ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? Posted: 06 Apr 2015 02:53 PM PDT நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், பலவகையிலும் வசதியானதுதான். ஆனால் அதன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடுவதுதான் பிரச்சினை. சரி, ஏன் ஸ்மார்ட்போன் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது? இலவச அப்ளிக்கேஷன்கள் மற்றும் சில விளையாட்டுகளை டவுன்லோடு செய்யும்போது அவற்றில் இடம்பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றன. எனவே, அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்யாதீர்கள். சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து அப்ளிக்கேஷன்களையும் 'ஆன்' செய்து வைத்திருப்பார்கள். ... |
| 'பேஸ்புக்' மூலம் அதிகரிக்கும் பொறாமை Posted: 06 Apr 2015 02:50 PM PDT இன்று அனைவர் மத்தியிலும் நிலவும் 'பேஸ்புக்' பித்து பற்றி தனியாகக் கூற வேண்டியதில்லை. முன்பின் முகம் தெரியாதவர்களையும் நண்பர்களாக்குவதற்கு சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' சிறந்த அமைப்பாக உள்ளது. இப்படி, 'பேஸ்புக்' நட்பு வட்டாரத்தை வளர்க்க உதவுவதாகக் கருதப்பட்டாலும், ஒருவர் மீது மற்றொருவர் பொறாமைப்படுவதற்குக் காரணமாக பேஸ்புக் அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது, முன்னர் ஒவ்வொரு பயனாளரும் ஏதாவது ஒரு தகவலை ... |
| Posted: 06 Apr 2015 02:48 PM PDT ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ... |
| Posted: 06 Apr 2015 02:45 PM PDT உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ... |
| மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் Posted: 06 Apr 2015 02:43 PM PDT 40 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 4, 1975-ம் ஆண்டு சியேட்டிலில் உள்ள லேக்ஸைடு பள்ளியில் படித்து வந்த நண்பர்களான பில்கேட்ஸ், பால் ஆலன் ஆகியோர் கூட்டணியில் உருவானதே மைக்ரோசாப்ட். அப்போது பில்கேட்ஸூக்கு வயது 19, ஆலனுக்கு வயது 22. 40 ஆண்டுகால பயணத்தில் உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக மைக்ரோசாப்ட் பல சாதனைகளை பதிவு செய்துள்ளது. அவை காலக்கோட்டின் அடிப்படையில் பின்வருமாறு:- 1975 - மைக்ரோசாப்ட் நிறுவப்பட்டது. ஜனவரி 1, 1979 - மைக்ரோசாப்ட் அல்பெர்க்குவிலிருந்து நியூ மெக்ஸிகோ, பெலிவியூ, வாஷிங்டனுக்கு ... |
| பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Posted: 06 Apr 2015 02:40 PM PDT இந்த இணைய தளம் சரியில்லை. நம்மால் அணுக முடியாது" என்று முடிவு செய்து விலகிவிடுகிறோம். ஆனால், அந்தப் பிழைச் செய்திகளை விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டால், நாம் இலக்கு வைத்திடும் இணைய தளங்களில் பெரும்பாலான தளங்களைப் பிற வழிகளில் அணுகிப் பார்த்து விடலாம் என்பதே உண்மை. நாம் சந்திக்கும் பிழைச் செய்திகளில் முக்கியமான சில குறித்து இங்கு காணலாம்.நம் இணைய அணுகலில், தவறாகச் செல்கையில், நம் பிரவுசர் என்ன நிகழ்கிறது என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுவதே இந்த பிழைச் செய்திகளாகும். இவற்றில் எப்போதும் ஓர் ... |
| கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0. Posted: 06 Apr 2015 02:37 PM PDT கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0. மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்திய போது, அது மொபைல் பயன்பாட்டில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அப்படிச் சொல்லித்தான் அது அறிமுகமானது. புதிய தோற்றத்தினை தரும் எனக் காத்திருந்த நிலையில், அது சற்று ஏமாற்றத்தினையே தந்தது. மிக மெதுவாக இயங்கியது. நிறைய பிழைக் குறியீடுகள் காணப்பட்டு பல்வேறு சிக்கல்கள் தோன்றின. இவை அனைத்தையும் கவனத்தில் இருத்திக் கொண்ட கூகுள், தற்போது ஆண்ட்ராய்ட் 5.1 பதிப்பினை மிக நேர்த்தியானதாக ... |
| ஸ்போர்ட்ஸ்கார் DC Avanti ஏப்ரல் 15-ம் தேதி விற்பனைக்கு வருகிறது! Posted: 06 Apr 2015 02:25 PM PDT நீண்ட நாட்களாக இந்திய கார் ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்ட DC டிஸைன்ஸ் நிறுவனத்தின் 'Avanti' ஸ்போர்ட்ஸ்கார் வரும் ஏப்ரல் 15-ம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. 2012 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான Avanti ஸ்போர்ட்ஸ்கார் வருடக்கணக்காக இந்தியா முழுவதும் டெஸ்ட் செய்யப்பட்டது. DC அவந்தி ஸ்போர்ட்ஸ்காரின் நீளம் 4,550 மிமீ, 1,965 மிமீ அகலம், 120மிமீ உயரம் கொண்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் விற்பனைக்கு இருக்கும் ஸ்போர்ட்ஸ்கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், அவந்தி காரின் ... |
| Posted: 06 Apr 2015 02:23 PM PDT 'என் மகளுக்குச் சுகப்பிரசவம்' என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே 'சிசேரியன்' என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது? "சிசேரியன் ஏன் அதிகரித்துள்ளது?" "தாமதமான ... |
| ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Posted: 06 Apr 2015 02:19 PM PDT ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு அல்லல் கார்டாகவே தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற விரும்பவில்லை. ஏற்கனவே வாக்காளர் ... |
| Posted: 06 Apr 2015 01:32 PM PDT 240வல்ட் 50 hz 60 hz வித்தியாசம் என்ன 240வல்ட் 60 hz நம் நாட்டில் வொர்க் செய்யாத தெரிந்தவர்கள் கூறினால் அனைவருக்கும் பயனாக இருக்கும் |
| Posted: 06 Apr 2015 10:44 AM PDT சீரியல் கில்லர்---"பிரேமா" சென்னை: "சீரியல் கில்லர்"களில் ஒருவரான "பிரேமா" கட்டக் கடைசியாக செத்துப் போய் விட்டார்.. அதுவும் தீயில் குதித்து! தினசரி சாயந்திரம் 6 மணிக்கு வீடுகளில் விளக்கு வச்சதும், வந்து விழும் முதல் வார்த்தையே உன்னை அழிக்காம விட மாட்டேன். உன் குடும்பத்தையே கருவறுப்பேன்.. கொல்லாம விட மாட்டேன் என்ற 'நல்ல' வார்த்தைகள்தான்.. அதுவும் அழகான பெண்ணின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளும் கூட. அப்படிப்பட்ட பிரேமா இப்போது செத்துப் போய் விட்டார். கூடவே அந்த சீரியலும் முடிந்து போய் விட்டது.. ... |
| சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Posted: 06 Apr 2015 08:48 AM PDT - சென்னை ஆக்ஸிமெட் மருத்துவமனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி' அறிமுக நிகழ்ச்சியில் ஹியுமா மருத்துவமனையின் தலைவர் ஹிசாமுதின் பாபா பயனாளி ஒருவருக்கு சிகிச்சைக்கான அடையாள அட்டையை வழங்குகிறார். உடன் அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் ரபீக் அகமது, தேசிய மருந்து வழங்கல் துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ், ஆக்ஸிமெட் மருத்துவமனை தலைவர் அயாஸ் அக்பர். ---------------------------------------------------------------------------- - சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களைக் ... |
| சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Posted: 06 Apr 2015 08:38 AM PDT சிறப்பு பள்ளிகள் என்றால், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்றே பலரும் நினைக்கிறோம். ஆனால், நல்ல மனநிலையும், அதீத சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட பல குழந்தைகள்கூட, படிப்பை வேப்பங்காயாக பார்க்கும். அந்த குழந்தைகளும் சிறப்பு குழந்தைகள்தான். காரணம் என்ன? அவர்களுக்காக, முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ.நகரில், ஸ்ருஷ்டி சிறப்பு பள்ளி நடத்திவரும், மனநல ஆலோசகர் எஸ்.தேன்மொழி கூறியதாவது: ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள், தரமான பள்ளியில் படித்த போதிலும், மற்ற குழந்தைகளைவிட, எழுத்துகளையோ, ... |
| புதிய சீருடையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Posted: 06 Apr 2015 08:38 AM PDT - ஐபில்-8-ல் கவுதம் கம்பீர் தலைமையிலான ஷாரூக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் புதிய சீருடையில் களமிறங்கவுள்ளனர். கொல்கத்தா அணியின் புதிய ஸ்பான்சர்கள் சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனம் கியோனீ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜெர்சி யுனைடெட் ஸ்டேட்ஸ் போலோ அசோசியேஷனால் தயாரிக்கப்பட்டது. கியோனீ தவிர டிஷ் டிவி, ராயல் ஸ்டாக் என்று அதிகாரபூர்வ ஸ்பான்சர்களைக் கொண்டுள்ளது. கவுதம் கம்பீர் தலைமையில் 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா அணி. கடந்த முறை கிங்ஸ் ... |
| புதிய சீருடையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Posted: 06 Apr 2015 08:36 AM PDT - ஐபில்-8-ல் கவுதம் கம்பீர் தலைமையிலான ஷாரூக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் புதிய சீருடையில் களமிறங்கவுள்ளனர். கொல்கத்தா அணியின் புதிய ஸ்பான்சர்கள் சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனம் கியோனீ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜெர்சி யுனைடெட் ஸ்டேட்ஸ் போலோ அசோசியேஷனால் தயாரிக்கப்பட்டது. கியோனீ தவிர டிஷ் டிவி, ராயல் ஸ்டாக் என்று அதிகாரபூர்வ ஸ்பான்சர்களைக் கொண்டுள்ளது. கவுதம் கம்பீர் தலைமையில் 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா அணி. கடந்த முறை கிங்ஸ் ... |
| ----------''காதலின் வருத்தம்'' --- Posted: 06 Apr 2015 08:22 AM PDT ----------''காதலின் வருத்தம்'' --- உன் முகம் பார்த்து பயந்துப் போனது நிலா! உன் கூந்தல் பார்த்து வியந்துப் போனது பூக்கள்! உன் புன்னகை பார்த்து மிரண்டுப் போனது விண்மீன்! உன் கண்கள் பார்த்து கலங்கிப் போனது மான்! உன் அழகைப் பார்த்து அசந்துப் போனேன் நான்! உன் கன்னம் தொட்டு சிவந்துப் போனது ----- ... |
| 40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Posted: 06 Apr 2015 08:11 AM PDT சென்னை விமான நிலையத்தில் 40-ஆவது முறையாக கண்ணாடி விழுந்து நொறுங்கியது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்கள் புதுப்பிக்கப்பட்டு ரூ. 2000 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டன. ஆனால் புதிய முனையங்களில் அவ்வப்போது கூரை, கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுகின்றன. உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதையடுத்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கடந்த அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து பார்வையிட்டு சென்றார். இருப்பினும், ... |
| போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Posted: 06 Apr 2015 07:43 AM PDT ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும் போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் . இந்தப் பாடலைப் பார்க்க :- http://www.pattukkottaiyar.com/site/?p=452 தற்போது தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் ... |
| ரமணியின் சிறுகதைகள்: பூவே சுமையாகும் போது... Posted: 06 Apr 2015 07:16 AM PDT 'இலக்கிய வேல்' ஏப்ரல் 2015 இதழில் வெளிவந்துள்ள என் சிறுகதை கீழே: பூவே சுமையாகும் போது... சிறுகதை: ரமணி "பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?" என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை அமைந்த திறந்தவெளியில் மாலையில் காலார நடந்துகொண்டே புத்தகம் படிப்பவர் சுற்றிலும் நடப்பதை முற்றிலும் மறந்துவிடுவார்! நுழைவாயில் இரும்புக் கதவின் ஈட்டிக் கம்பியில் மாட்டியுள்ள மஞ்சள் பையினுள் பார்த்தேன். இரண்டு முழம் மல்லிகையும் ஒரு முழம் ஜாதி மல்லிகையும் இருந்தது. ... |
| குருக்ஷேத்திரம் - கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் Posted: 06 Apr 2015 06:32 AM PDT போர்க்களங்கள் அழிவை மட்டுமே உணர்த்த வில்லை. பிணக்குவியல்களுக்கிடையே ஞானம் பூக்கிறது. வாள் சப்தங்களுக்கிடையே வாய்மையும் சத்தமிடுகிறது. குருக்ஷேத்திரம் இடைவிடா 18 நாள் போர். சங்கொலிப்பது கேட்கிறதா. புரவி தெறிந்து ஒடுவது தெரிகிறது. கஜப் பிளிறல் காதை முட்டுகிறதா.வாருங்கள், போரைப் பார்வையிடுவோம்.நடந்தது அந்த நாள், முடிந்ததா பாரதம் ஒரு சினிமா பார்ப்பது போல குருக்ஷேத்திரம் நம் கண்முன் விரிகிறது. வெற்றிதான் முக்கியம் எனத் தூர்மானித்துவிட்ட மனிதன், எப்படியெல்லாம் மாறிவிடுகிறான். போர்க்களம். வெற்றி ... |
| Posted: 06 Apr 2015 06:23 AM PDT கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள். இரவிலே உந்தேன் சேலையுடன் தூங்குகிறேன். கண்களை மூடினாலும், திறந்தாலும் கண்ணீர் சிந்தல், உன் பெயரை சொல்லத்துடிக்கும் என்றேன் இதழ்கள், உன்னிடம் வரத்துடிக்கும் எந்தன் பாதங்கள் உயிரிருந்தும் ஜடமானேன். தூக்கமில்லாத பித்தனாய் நம் காதல் நாவலை தேடுகிறேன். இன்பம் நிறைந்த பக்கங்களை காணவில்லை. அழுகை மனதை கொல்கிறது. கடைசியாக உன் முகத்தை கோளமிட்ட அரைத்த சந்தனமும், நெற்றியில் பட்ட மணக்கும் குங்குமமும் உன் பிரிவுக்கு என் மருந்தாய். உன் கூந்தில் ... |
| Posted: 06 Apr 2015 05:57 AM PDT நான் தொல்காப்பியத்தில் உளவியல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்,இத்தலைப்பை எப்படி அணுகலாம்? |
| பட்டை தீட்டப்படாததால் மின்னாத வைரங்கள்...! - Posted: 06 Apr 2015 05:14 AM PDT - - எங்கள் வீதிகளிலும் வைரங்கள் பிறக்கின்றன மின்னுவதில்லை பட்டை தீட்டப்படாததால்..! - ------------------------ - புறத்தில் அமைதியாகப் பூமி அகத்தே கொதித்துக் கொண்டு எரிமலை..! - -------------------------- - எத்தனை காலந்தான் கானல் நீரில் தூண்டில் பெண் உரிமை! - ------------------------ - முடிசூட்டு விழா பூக்களின் மாநாடு மலர்க் கண்காட்சி ======================== - பொன்.திலகவதி |
| Posted: 06 Apr 2015 04:29 AM PDT - பொதுவாகவே காதலில் பல வகை உண்டு. இரு மனங்கள் ஒத்து, ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது என்ற நிலையில் ஏற்படும் உன்னதமான காதல்கள் ஏராளம். அதே சமயம், நாம் காதலிக்கும் நபர், நம்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருத வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, காதலிகள் பெரும்பாலும், தனது காதலர்கள் மிகவும் விரும்பும் (உதாரணமாக, கிரிக்கெட் ஆடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது..) என சில விஷயங்களை செய்யவேக் கூடாது என்று தடை விதிப்பார்கள். அவ்வாறு இல்லாமல், ... |
| Posted: 06 Apr 2015 03:35 AM PDT - தமிழ் சினிமா நாயகிகளில் இடையழகி என்றாலே நினைவுக்கு வருபவர் நடிகை சிம்ரன். - இரண்டு குழந்தைகளுக்கு அம்மவான சிம்ரன், சிறிய இடைவெளிக்குப் பிறகு 'சேவல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்ரன் விரைவில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். 'சிம்ரன் அண்ட் சன்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு ... |
| Posted: 06 Apr 2015 02:52 AM PDT ஒற்றையடிப் பிரபஞ்சங்களில் – சரவணா வெளிச்ச மினுக்குகள் எதிர்பார்த்து நின்றிருக்கவில்லை… அதற்கான அவகாசங்களும் இல்லாது போயிருக்கலாம் ….. அன்றைய நாளின் முடிவில் அவர்களின் தேடல் திரட்சியாய் எதிர் நீண்டிருப்பது ஒருகொத்துப் புல்லும்… ஒரு மங்குப் பாலுமாகியிருக்கலாம்…. அவளின் கன்றுக்குட்டியைப் போலவே காத்துக் கொண்டிருக்கக்கூடும் அப்பசுவின் தொட்டில் குழந்தையும்… செயற்கையாய் வலியச் சிரித்த பின்னணிகளில் நயாகரா அழுது கொண்டிருக்கலாம் .. இரட்டைக் கோபுரம் தனக்குள் மீண்டுமொருமுறை ... |
| Posted: 06 Apr 2015 01:02 AM PDT தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| Posted: 05 Apr 2015 09:56 PM PDT சங்கரன்பிள்ளை நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக் கொண்டு இருந்தார். ஒரு திருப்பத்தில் எதிரில் வந்த காருடன் அவருடைய கார் மிகமோசமாக மோதியது. இரண்டு கார்களும் கவிழ்ந்தன. சங்கரன்பிள்ளை தவழ்ந்து வெளியே வந்தார். மோதிய காரில் இருந்து ஓர் அழகான பெண் வெளியே தவழ்ந்து வந்தாள். அவள் சண்டையிடப் போகிறாள் என்று சங்கரன் பிள்ளை நினைத்திருக்க, அவள் புன்னகைத்தாள். 'நாம் சந்தித்து இனிய நண்பர்களாக வேண்டும் என்பதற்காகக் கடவுள் ஏற்பாடு செய்த விபத்து இது. இல்லை என்றால், கார்கள் தகரமாக நசுங்கிய பின்னும் நாம் ... |
| ‘யோக்கியன் வாரான் செம்ப தூக்கி உள்ள வை’. Posted: 05 Apr 2015 09:03 PM PDT - அறிமுக இயக்குநர் சுவாமிராஜ் இயக்கும் படம் 'யோக்கியன் வாரான் செம்ப தூக்கி உள்ள வை'. இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ஆதிஷ் உத்ரியன். இந்தப் படத்தில் இடம் பெறவிருக்கும் ஒரு பாடல், வடபழனியில் உள்ள ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் நேற்று பதிவு செய்யப்பட்டது. "அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா.. அவசரமா எதையும் செய்யும் பொண்ண தூர ஒதுக்குடா.. இதயம் இல்லா பொண்ண நெனச்சி ஏங்குறத நிறுத்துடா.. பாதை மாறி போகும் மனச பக்குவமா திருத்துடா.." என்று துவங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் ... |
| Posted: 05 Apr 2015 08:59 PM PDT - மொரீஷியஸ் நாட்டின் மேற்கு முனையருகே, 1,000 ஏக்கர் பரப்பளவில், கேசெல்லா என்ற இயற்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு, வெள்ளை சிங்கம், சிறுத்தை, புலி, காட்டுப்பூனை, ஒட்டகச் சிவிங்கி, ராட்சச ஆமை மற்றும் நீண்ட வால் குரங்கு போன்ற விலங்குகளும், 1,500 வகையான பறவைகளும் உள்ளன. இந்த இயற்கை பூங்காவின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், சிங்கங் களுடன் கை கோர்த்தபடி நடக்கலாம்; அவற்றின் மீது ஏறி, சவாரியும் போகலாம். அத்துடன், நன்கு பழக்கப்படுத்தப்பட்ட இரு சிங்கங்களுடன் இரு பயிற்சியாளர்கள் ... |
| ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை Posted: 05 Apr 2015 08:20 PM PDT மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயிற்சி கேபின் பணியாளர் பணியில் (Trainee Cabin Crew) 435 காலியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 முடித்த ஆண்களும், பெண்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் ... |
| Posted: 05 Apr 2015 08:19 PM PDT புதுச்சேரி ஜிப்மரில், ரெகுலர் அடிப்படையில், மொத்தம் 116 சீனியர் ரெசிடென்ட் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில், இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அனஸ்தீசியாலஜி, அனாடமி, பயோகெமிஸ்ட்ரி, டென்டிஸ்ட்ரி, டெர்மடாலஜி, ஜெனரல் சர்ஜரி, பாரன்சிக் மெடிசின், மைக்ரோபயாலஜி, ஆப்தமாலஜி, ஆர்தோபீடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பிசியாலஜி, சைக்யாட்ரி, ரேடியோதெரபி மற்றும் நியூக்ளியர் மெடிசின் உள்ளிட்ட மொத்தம் 26 துறைகளில், 116 இடங்களுக்கு SR எனப்படும் சீனியர் ... |
| கல்யாணராமன்: கமல் வேடத்தில் திரிஷா Posted: 05 Apr 2015 08:15 PM PDT - கமல் நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் 'கல்யாணராமன்'. இதில் அண்ணன், தம்பி என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார் கமல். நாயகியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். முன்பற்கள் தெறிக்க, 'காதல் வந்துருச்சி.. ஆசையில் ஓடிவந்தேன்..' என ஸ்ரீதேவி பின்னால் கமல் ஆடிப்பாடும் பாடல் சூப்பர் ஹிட். ஜி.என். ரங்கராஜன் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில், இப்படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் கமல் நடித்த வேடத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ... |
| Posted: 05 Apr 2015 07:42 PM PDT பெயர்: செந்தில் சிவ குமார் சொந்த ஊர்: பாபநாசம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: புதிய தேடல் பொழுதுபோக்கு: விவசாயம் தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: கரடு முரடான வாழ்கையில் இப்போது தான் கொஞ்சம் வசந்தம் வீசுகிறது. தமிழ் தொண்டு புரிய இந்த உலகம் நம்மை படைத்துள்ளது அதை நோக்கிய பயணம் இப்போது தான் தொடங்கியுள்ளது |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |