Tamil News | Online Tamil News |
- வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படுமா? பிடிவாதம் பிடிக்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்
- பாளை சிறையில் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி
- 'நீங்கள் கடவுள்': நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்: நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
- மொபைல்போன் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துமா?'அடடா தெரியாதே...!' என்கிறது மத்திய அரசு
- கறுப்பு பணமா? அலறும் சுவிஸ் அரசு!
- 'பொய் சொல்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்': கருணாநிதி
- 'கோர்ட் தீர்ப்பு வரும் வரை வழிபாடுகளை தொடருங்கள்': தலைமை உத்தரவால் ஆளுங்கட்சியினர் போட்டா போட்டி
- 'சோனியா வீட்டின் முன் உட்கார வேண்டும்': மேகதாது பிரச்னை குறித்து விஜயகாந்த் பேச்சு
- வீராங்கனை சாந்திக்கு வேலை வழங்க அரசு மறுப்பு: ஒடிசாவுக்கு ஒரு நீதி; தமிழகத்திற்கு ஒரு நீதி என வேதனை
- ஆந்திர தலைநகர் அமராவதி அருமையான தேர்வு!
- கிருஷ்ணா நீர் ஒரு சொட்டு கூட தர முடியாது: தமிழகத்திற்கு ஆந்திரா மறுப்பு
- 'பட்டு சாலை' உடன் 'பருவ பாதை' : சீனா விருப்பம் ; இந்தியா வெற்றி
| Posted: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், 'மாஜி' அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியையும், வேளாண் துறை தலைமை பொறியாளர் செந்திலையும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்த பின்னரும், தமிழக அரசியல் கட்சிகள் திருப்தி அடையவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, அடம் பிடிக்கின்றன.இது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ள கருத்துக்கள்: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது கண்துடைப்பு மற்றும் உண்மையை மறைக்க நடக்கும் முயற்சி.இந்த ... |
| பாளை சிறையில் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி Posted: திருநெல்வேலி : வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி உள்ள, முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியும், அவருடன் கைதான, வேளாண் துறை தலைமை பொறியாளர் செந்திலும், பாளையங்கோட்டை சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். திருநெல்வேலி, வேளாண் பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி, 57. பிப்ரவரி, 20ம் தேதி, நெல்லை தச்சநல்லுாரில், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: புதுடில்லி : ''நீதிபதிகள், கடவுளுக்கு இணையாக கருதப்படுகின்றனர். வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் போது, கருத்து உருவாக்கத்தின் அடிப்படையில் இல்லாமல், சுய பகுப்பாய்வின் மூலம் நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.டில்லியில் நேற்று, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பேசியதாவது:நீதித்துறை மிகவும் சக்தி வாய்ந்தது. ஏழை மக்களுக் கும் நியாயம் கிடைக்கும் வகையில், அதன் செயல்பாடுகள் நேர்மையானதாக இருப்பது மிகவும் அவசியம். |
| மொபைல்போன் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துமா?'அடடா தெரியாதே...!' என்கிறது மத்திய அரசு Posted: புதுடில்லி : 'மொபைல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது' என, உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற ஆய்வுகள் கூறும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை, அவ்வாறு எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை என, தெரிவித்துள்ளது. இதையடுத்து, மொபைல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என, மத்திய தகவல் கமிஷன், மத்திய அரசின் பல துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.மொபைல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் குறித்த வழக்கை, மத்திய தகவல் கமிஷன் விசாரித்து வருகிறது. ... |
| கறுப்பு பணமா? அலறும் சுவிஸ் அரசு! Posted: புதுடில்லி: சுவிஸ் வங்கிகளில், கறுப்பு பணம் பதுக்கல் தொடர்பாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்அறிவித்து உள்ளன. இதனால் சுவிஸ் அரசு, அதன் வங்கித் துறையில், கறுப்பு பண முதலீடுகளை தடுக்கவும், சந்தேகத்திற்குரிய கணக்குகளை கண்காணிக்கவும், தீவிர நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. இது தொடர்பாக, சட்டப் புறம்பான பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை தடுக்கும் அதிகாரம் கொண்ட, சுவிட்சர்லாந்து நிதி சந்தை மேற்பார்வை ஆணையம் (பின்மா), அறிக்கை வெளியிட்டு உள்ளது. |
| 'பொய் சொல்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்': கருணாநிதி Posted: சென்னை : 'உடன்குடி மின் திட்டத்தில் ஒரு பொய்யை மறைக்க, ஒன்பது பொய்கள் என்பதற்கு, மின் துறை அமைச்சரின் பொய்களே எடுத்துக்காட்டாகும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:'தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உடன்குடி மின் திட்டப் பணிகள், 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை நிறைவேற, எந்த பணியையும் செய்யவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை; நிதி ஆதாரத்தைத் திரட்டவில்லை' என, நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார். டெண்டர் கோரிய நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், அதன் தகுதிகளை பரிசீலிக்க, காலதாமதமானதாக சட்டசபையில் ... |
| 'கோர்ட் தீர்ப்பு வரும் வரை வழிபாடுகளை தொடருங்கள்': தலைமை உத்தரவால் ஆளுங்கட்சியினர் போட்டா போட்டி Posted: 'கோர்ட் தீர்ப்பு வரும் வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை தொடர வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, கட்சி மேலிடம் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த செப்டம்பரில், கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. உடன், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆத்திரமடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், மறியல், உண்ணாவிரதம் என, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே, போராட்டங்களை கைவிட்டு, கோவில்களில் ... |
| 'சோனியா வீட்டின் முன் உட்கார வேண்டும்': மேகதாது பிரச்னை குறித்து விஜயகாந்த் பேச்சு Posted: சேலம்: 'மேகதாது அணை விவகாரத்தில், விவசாயிகள் அனைவரும் சோனியா காந்தியின் வீட்டுக்கு முன்பாக உட்காருவோம்' என்று விஜயகாந்த் சேலத்தில், பேசினார். சேலம், போஸ் மைதானத்தில், நேற்று தே.மு.தி.க., வின் மகளிர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று விஜயகாந்த் பேசியதாவது:பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அப்போது, மேகதாது அணை கட்டும் முயற்சி நடந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டுராவை, எம்.ஜி.ஆர்., பார்க்கவில்லை. நேராக டில்லிக்கு சென்று, இந்திரா காந்தியை சந்தித்தார். அந்த ... |
| வீராங்கனை சாந்திக்கு வேலை வழங்க அரசு மறுப்பு: ஒடிசாவுக்கு ஒரு நீதி; தமிழகத்திற்கு ஒரு நீதி என வேதனை Posted: சென்னை : கடந்த 2006ம் ஆண்டு, ஆசிய விளையாட்டு போட்டியில், 800 மீ., ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர், புதுக்கோட்டை சாந்தி சவுந்தரராஜன். அவர், தனக்கு நிரந்தர வேலை வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: நான், தேசிய அளவில் போட்டியிட்டு, தமிழகத்திற்காக 50க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சர்வதேச அளவில் போட்டியிட்டு, இந்தியாவிற்காக, 11 பதக்கங்களையும் பெற்றிருக்கிறேன். 2006ம் ஆண்டு, ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் பெற்ற, முதல் தமிழ் பெண் நான்.அதன் பின், ஹார்மோன் பிரச்னையால், எனக்கு ... |
| ஆந்திர தலைநகர் அமராவதி அருமையான தேர்வு! Posted: ஐதராபாத்: 'ஆந்திராவின் புதிய தலைநகருக்கு, 'அமராவதி' என பெயரிடப்பட்டுள்ளதால், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நகரின் புகழ் வேகமாக பரவும்; இந்து, புத்த, சமண மதத்தினரின் விருப்பமான பெயர் இது; வரலாற்று சிறப்பு மிக்க இடமாக இருப்பது கூடுதல் பெருமை' என, ஆந்திர அரசும், அம்மாநில மக்களும் நம்புகின்றனர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், 2013ல், ஆந்திரா என்றும், தெலுங்கானா என்றும் பிரிக்கப்பட்ட பின், இப்போதைய தலைநகரம் ஐதராபாத், இரு மாநிலங்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு தலைநகராக விளங்கும். அதன் பின், ஐதராபாத், தெலுங்கானாவின் தலைநகராக மாறும் என்பதால், புதிய தலைநகரை தேடும் ... |
| கிருஷ்ணா நீர் ஒரு சொட்டு கூட தர முடியாது: தமிழகத்திற்கு ஆந்திரா மறுப்பு Posted: தமிழக முதல்வர் கடிதம் எழுதிய நிலையில், 'ஒரு சொட்டு கிருஷ்ணா நீரை கூட இப்போது வழங்க முடியாது' என, ஆந்திர அரசு கைவிரித்துள்ளது.சாய் கங்கை திட்டப்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திரா முறையாக வழங்குவது இல்லை. 2014-15ல் இதுவரை, 4.70 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம், 20ம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டது. சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அதனால், கிருஷ்ணா நீரை மீண்டும் திறக்கும்படி ... |
| 'பட்டு சாலை' உடன் 'பருவ பாதை' : சீனா விருப்பம் ; இந்தியா வெற்றி Posted: பீஜிங் : இந்தியாவின் 'பருவப் பாதை' திட்டத்துடன்,எம்.எஸ்.ஆர் எனப்படும், 'கடல்சார் பட்டு சாலை' திட்டத்தை இணைக்க, சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.பீஜிங்கில், வரும் 8ம் தேதி, இந்தியா - சீனா இடையேயான பாதுகாப்பு துறை செயலர்களின் பேச்சுவார்த்தை துவங்க உள்ளது.இந்நிலையில்,எம்.எஸ்.ஆர் திட்டத்தில், பருவப் பாதை திட்டத்தை இணைக்க சீனா முன்வந்திருப்பது, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய கண்டங்களை இணைக்கும், எம்.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ், சீனாவில் துவங்கி, இந்தியா, இலங்கை, ஆப்ரிக்கா வழியாக கிரீஸ் வரை, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 06,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |