ஈகரை தமிழ் களஞ்சியம் |
- address
- IDM - டவுன்லோடு செய்ய முடியவில்லை உதவுங்கள் உறவுகளே
- மிஸ்டர் வேதாந்தம் - தேவன்
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- பாமரர் தேவாரம்
- சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்!
- தலைவர் பீச்சிலேயே பொதுக்கூட்டத்தை வெச்சிக்கணும்னு சொல்றாரே, என்ன விஷ’யம்..?
- தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943
- இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திருமணம்
- நாளை ஆவின் அடர் கொழுப்புப் பால் அறிமுகம்
- கல்கருட சேவை
- கரிய மேகமாகும் கூந்தல்
- போதாமையில் இசைத்தல்
- உதிர்ந்த இலையொன்று
- நாக்கு கூசுகிறது...!!- Mano Red
- இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்
- தமிழ் இலக்கிய விமர்சகர், – க. கைலாசபதி
- அறிவுறுத்தும் பாதைகள்!
| Posted: 05 Apr 2015 08:13 AM PDT பெயர்: செந்தில் சிவ குமார் சொந்த ஊர்: பாபநாசம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: புதிய தேடல் பொழுதுபோக்கு: விவசாயம் தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: கரடு முரடான வாழ்கையில் இப்போது தான் கொஞ்சம் வசந்தம் வீசுகிறது. தமிழ் தொண்டு புரிய இந்த உலகம் நம்மை படைத்துள்ளது அதை நோக்கிய பயணம் இப்போது தான் தொடங்கியுள்ளது |
| IDM - டவுன்லோடு செய்ய முடியவில்லை உதவுங்கள் உறவுகளே Posted: 05 Apr 2015 08:01 AM PDT குரோமில் தறவிறக்கம் செய்ய IDM பயன்படுத்துகிறேன். இப்போது கீழ்க்கண்டவாறு எர்ரர் வருகிறது, என்ன காரணம் அதை எப்படி சரி செய்வது என தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே. ![]() |
| Posted: 05 Apr 2015 06:41 AM PDT செல்வச் செழிப்பில் வளர்ந்த வேதாந்தம், திடீரென்று வரும் சரிவுகளால் உருவாகும் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் காதலுக்கும் இடையே சந்திக்கும் சவால்கள்தான் எத்தனை! வேண்டாத மனிதர்கள் உருவாக்கும் பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து, காதலி செல்லத்தைக் கைப்-பிடிக்கிறான் வேதாந்தம். இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் 'மிஸ்டர் வேதாந்தம்' தொலைக்காட்சித் தொடராகவும் வந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. மிஸ்டர் வேதாந்தம் - பாகம் 01 http://www.mediafire.com/download/x06u9r1m3murj5p/Mr.Vedhantham+-+Part+01.படப் மிஸ்டர் ... |
| Posted: 05 Apr 2015 06:22 AM PDT தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
| Posted: 05 Apr 2015 06:13 AM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்! Posted: 04 Apr 2015 11:48 PM PDT - சென்னை: உறவுகள், அரசி உள்ளிட்ட பல்வேறு தொடர்களை இயக்கிய பிரபல தமிழ் சின்னத்திரை இயக்குனர் பாலாஜி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு, பிறமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் அதிகரிப்பே காரணம் என்று தெரியவந்துள்ளது. சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனரான பாலாஜி யாதவ் (45). லட்சுமி, துளசி, பயணம், பந்தம், உறவுகள், அரசி, காயத்ரி, புகுந்த வீடு, செல்வி, ரோஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ... |
| தலைவர் பீச்சிலேயே பொதுக்கூட்டத்தை வெச்சிக்கணும்னு சொல்றாரே, என்ன விஷ’யம்..? Posted: 04 Apr 2015 11:28 PM PDT ![]() |
| தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Posted: 04 Apr 2015 11:16 PM PDT சத்தியமூர்த்தி ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது. 1939-ம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் ... |
| இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திருமணம் Posted: 04 Apr 2015 09:12 PM PDT - இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா - பிரியங்கா சவுத்ரியை மணம்முடித்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தினர். - - |
| நாளை ஆவின் அடர் கொழுப்புப் பால் அறிமுகம் Posted: 04 Apr 2015 09:02 PM PDT வேலூர் ஆவின பால் நிறுவனம் லிட்டர் ரூ.45 விலையில் அடர்கொழுப்புப் பால் அறிமுகம் செய்கிறது என்று அதன் பொது மேலாளர் அருள்ஜோதி அரசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது: வேலூர் ஆவின் ஒன்றியத்தில் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. உள்ளுர் விற்பனைக்கு சுமார் 80,000 லிட்டர் பால் அனுப்பப்பட்டுகிறது. 500 மில்லி லிட்டர், 250 மில்லி லிட்டர், 200 மில்லி லிட்டர் அளவுகளில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 19 வழித்தடங்களில் அனுப்பப்படுகிறது. உள்ளுர் பால் விற்பனையை ... |
| Posted: 04 Apr 2015 08:48 PM PDT கல்கருட சேவை நாச்சியார் கோவில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இக்கோவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோவில் ஆகும். இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும். நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள ... |
| Posted: 04 Apr 2015 08:45 PM PDT - எனக்கு மெல்லிய கூந்தல் எனச் சொல்லுவான் நான் கூந்தலினால் ஆனவள் அல்ல அது எனக்குச் சுமை கரும் மேகங்கள் போல அடர்ந்த என் கூந்தலை நீரால் அலம்பி காற்றால் கோதி பின் அதை பின்னிப் பின்னி ஒழுங்கு செய்கிறேன் ஒவ்வொருநாளும் வாசனைத் திரவியம் கொண்டு நிரப்புகிறேன் கூந்தலிலிருந்து வாசம் பரவுகிறது அவன் விரும்புகிறான் என்பதாலேயே சுமக்க முடியாத இந்தக் கூந்தலை சுமந்து கொண்டிருக்கிறேன் கூடவே சுமை கூடியதால் நோயுற்றது என் மனதும் காற்றில் படர்த்தி மேகங்களுடன் மேகமாய் அலைந்திடும் வாசனையும் ... |
| Posted: 04 Apr 2015 08:42 PM PDT - வழக்கம்போல அவன் என்னிடம் கேட்கிறான் மல்லிகைப்பூ வாங்கி வரவா என்று வேண்டாம் என்று சொல்கிறேன் எனக்கே கேட்காமல் இன்று என்ன இருபத்து நாலு தானே ஆகிறது அதற்குள்ளாகவா என்கிறான் தெரியவில்லையே என்கிறேன் பின்பு ஏதாவது வாங்கி வாருங்கள் என்று சொல்லும்போதே அலைபேசி துண்டிக்கப்பட்டது அவன் வருகிறான் நான் இருக்கிறேன் அவன் இருக்கிறான் அவன் அப்படியிருக்க வேண்டியதில்லை கண்கள் மூடிக் கிடக்கிறேன் அமைதியாக இருக்கப் பழக்கித் தந்தது போலவே போதாமையையும் பழக்கப் படுத்தியிருக்கும் அவனுக்கு நான் ... |
| Posted: 04 Apr 2015 08:41 PM PDT - வறண்டதும் தண்ணீரற்றதுமான நிலத்தில் தரையிறங்கி அலைந்து திரியும் பறவையென தவிப்புற்றுக் கிடக்கிறது மனம் அவனுக்கென உடலின் வாசனையை முகர்ந்து கடக்கிறது உதிந்த இலையொன்று தரை விழுந்து நொறுங்கும் அதன் சப்தம் மிக அருகில் கேட்கிறது அவன் நடந்து வருகிறானா அல்லது பறவையின் மிருகத்தின் கால்களில் மிதிபட்டதா தெரியவில்லை நீரற்றுக் கிடக்கும் நிலத்தின் தகிப்பின் நடுவே கிடக்கிறேன் காய்த்துப் பழம் தரும் விதைகளை ஏந்தியபடி. – சக்தி ஜோதி |
| நாக்கு கூசுகிறது...!!- Mano Red Posted: 04 Apr 2015 07:47 PM PDT பரந்துவிரிந்த பரம்பரையின் விலை மதிப்பில்லா வித்துக்கள் சுமக்கும் வாரிசுகள் அவர்கள்..!! தீர்ந்துபோன பின்னே தெருவில் வீசலாம், ஆனால் இளமை தீரும் முன்னே வெட்டி வீசப்பட்ட அஹிம்சாவாதிகள் அவர்கள்..!! மிருகமென எவர் வந்தாலும் போனாலும் நிறைகுறை ஏதுமின்றி இன்னும் மென்மை உமிழும் அழகியல் அவர்கள்..!! ஆயிரமாயிரங்காலமாய் அனுபவித்து விட்டு, நன்றி மறந்த அழுக்கேறிய மனிதனுக்கும் பச்சை மனம் திறக்கும் பாசக்காரர்கள் அவர்கள்..!! அது இது என ஒருமையில் சொல்ல ஒன்றுமில்லாதவர்கள் அல்ல ... |
| இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Posted: 04 Apr 2015 07:07 PM PDT இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள், 50 கூறுகிறேன்…' என, ஆரம்பித்தார் குப்பண்ணா. அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால், தவிர்த்து விட்டேன். – இதோ… குப்பண்ணா கூறியவற்றில் சில: – * இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்; எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்; சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். – * ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக ... |
| தமிழ் இலக்கிய விமர்சகர், – க. கைலாசபதி Posted: 04 Apr 2015 06:16 PM PDT பெயர் : க. கைலாசபதி , -ஏப்ரல் 5, 1933 – டிசம்பர் 6, 1982 – - இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. – இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் ... |
| Posted: 04 Apr 2015 05:24 PM PDT - – பயணத்தை முன்னிறுத்தும் பாதைக்கும் பாதையை முன்னிறுத்தும் பயணத்திற்கும் இடைவெளி சற்று அதிகம்தான்! அலட்சியமாய் ஒரு பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை இன்பப் பயணத்திற்கு மட்டுமே உண்டு! ஏனைய பயணங்கள் அனைத்தையும் வழி நடத்தும் ஆளுமை பாதைகளுக்கே உரியது! ஆரம்பத்திலிருந்தே துவங்கிவிடுகின்றன பாதைகள் பயணத்திற்கான அறிவுறுத்தலை! முள்ளடர்ந்த பாதை முன் ஜாக்கிரதையாய் செல்வதற்கும் வளைந்த பாதை நிதானமாய் நகர்வதற்கும்… இருளடர்ந்த பாதை துணிவாய் செல்வதற்கும் குறுகிய பாதை முன்னும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

