Tamil News | Online Tamil News |
- மத்திய சுகாதார துறைக்கு பிரதமர் மோடி அனுமதி: புகைக்கு எதிராக வருகிறது தீவிர பிரசாரம்
- தமிழக இலவச மிக்சி, கிரைண்டர் விற்பனை அமோகம் : பக்கத்து மாநிலங்களில் கூவி கூவி வியாபாரம்
- மேகதாதுவில் அணை கட்ட வனத்துறை அனுமதி பெறவில்லை
- பீகார், மேற்குவங்க தேர்தலில் வெற்றிக்கனி பறிக்க வேண்டும்: பா.ஜ.,வினர் தீவிரமாக பணியாற்ற மோடி வலியுறுத்தல்
- ஸ்மிருதி இரானி சீற்றம் தாங்காமல் ஓட்டம் பிடிக்கும் மூத்த அதிகாரிகள்
- பிரதமரின் விருந்தை புறக்கணித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி: புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை நாட்களில் மாநாடா என கொதிப்பு
- மீனவர் பிரச்னைக்கு தீர்வு: மோடிக்கு கருணாநிதி கோரிக்கை
- தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல்: தம்பிதுரை அறிவிப்பால் அ.தி.மு.க.,வினர் உற்சாகம்
- 19 ஆண்டாக தமிழகம் ஏமாறுவது அம்பலம்: கர்நாடகா போல் 'தண்ணி' காட்டும் ஆந்திரா
- ஆறு ஜனதா பரிவார் கட்சிகள் இன்று இணைப்பு: பெயர், சின்னம் விரைவில் அறிவிப்பு
- தொடக்க பள்ளிகளில் யோகா பயிற்சி: அமெரிக்க கோர்ட் அனுமதி
| மத்திய சுகாதார துறைக்கு பிரதமர் மோடி அனுமதி: புகைக்கு எதிராக வருகிறது தீவிர பிரசாரம் Posted: புதுடில்லி : சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில், புகை பிடிப்பதன் தீங்கை விவரிக்கும் வகையில், 65 சதவீத அளவுக்கு எச்சரிக்கை விளம்பரத்தை வெளியிட, மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளார்.'சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அதன் பாக்கெட்டுகளின் மீது, எச்சரிக்கை வாசகங்கள், மற்றும் படங்களை பெரிய அளவில் வெளியிட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.இதன்படி, 'இந்தாண்டு ஏப்ரல், 1ம் தேதி முதல், ... |
| தமிழக இலவச மிக்சி, கிரைண்டர் விற்பனை அமோகம் : பக்கத்து மாநிலங்களில் கூவி கூவி வியாபாரம் Posted: தமிழக அரசு அளிக்கும், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை, உள்ளூர் மட்டுமல்ல, அண்டை மாநில தெருக்களிலும், ஆன் - லைன் இணையதளங்களிலும், கூவி கூவி விற்கப்படுகின்றன.கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், 'ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் ஆடு, மாடுகள் வழங்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இலவச பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட, அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்ற, சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றும் துறை தனியாக ... |
| மேகதாதுவில் அணை கட்ட வனத்துறை அனுமதி பெறவில்லை Posted: பெங்களூரு : கர்நாடகா அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டப் போவதாக கூறி வந்தாலும், இதுவரை அதற்கான ஆய்வு பணிகளையோ, வனத்துறை அனுமதியையோ பெறவில்லை என, தெரியவந்துள்ளது.மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டப்போவதாக அறிவித்த கர்நாடக அரசு, இதற்காக நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. இதுகுறித்து, காவிரி நதிநீர் பங்கீடு நடுவர் மன்றத்துக்கு அறிவித்ததுடன், சர்வதேச அளவில் இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கோரும் பணியிலும் ஆர்வம் காட்டி வருகிறது.வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:இத்திட்டத்தை ... |
| Posted: பெங்களூரு : "அடுத்து நடக்கவுள்ள பீகார், மேற்குவங்க சட்டசபைத் தேர்தல், கர்நாடகாவில் நடக்க உள்ள மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், வெற்றி பெறுவதற்கான வழிவகை களில், பா.ஜ.,வினர் இறங்க வேண்டும்; தீவிரமாக பணியாற்ற வேண்டும்," என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, பெங்களூரு தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது; இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில், அடுத்து சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், கர்நாடகாவில் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித் ... |
| ஸ்மிருதி இரானி சீற்றம் தாங்காமல் ஓட்டம் பிடிக்கும் மூத்த அதிகாரிகள் Posted: புதுடில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி பதவி வகிக்கிறார். இவர், இந்த பதவியில் அமர்ந்து, 10 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள், அந்த துறையில் பணியாற்றிய, இணைச் செயலர் அந்தஸ்திலான ஐந்து மூத்த அதிகாரிகள், வேறு துறைகளுக்கு பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டனர். உ.பி., மாநில ஐ.ஏ.எஸ்., கேடரில் தேர்வான அதிகாரியான ராதா சவுகான், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணைச் செயலராக பணியாற்றி வந்தார். இந்த துறையில், ஐந்தாண்டுகள் அவர் பணியாற்ற வேண்டும். ஆனால், இந்த பணி காலம் முடிவடைவதற்குள்ளேயே, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ... |
| Posted: புதுடில்லி: புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை நாட்களில், நீதிபதிகள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, சுப்ரீம் கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப், டில்லியில், நீதிபதிகளுக்கு பிரதமர் மோடி அளித்த இரவு விருந்திலும் பங்கேற்க மறுத்து விட்டார். கடிதம்: இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து மற்றும் பிரதமர் மோடிக்கு, குரியன் ஜோசப் காட்டமாக கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு, நீதிபதி குரியன் ஜோசப் எழுதியுள்ள கடித விவரம்: நாட்டில் அனைத்து மதத்தினரும், சமமாக நடத்தப்பட வேண்டும். ... |
| மீனவர் பிரச்னைக்கு தீர்வு: மோடிக்கு கருணாநிதி கோரிக்கை Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது; படகுகளுடன் சிறை பிடிக்கப்படுவது; மீனவர்களின் விலை உயர்ந்த மீன்பிடி கருவிகளையும், வலைகளையும் பறிமுதல் செய்வது போன்ற, மனிதாபிமானமற்ற செயல்கள் நின்றபாடில்லை.நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து, 37 மீனவர்கள், ஐந்து விசைப் படகுகளில் மீன் பிடிக்க சென்றிருந்தபோது, இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, 37 பேரையும் சிறை பிடித்து, அவர்களுடைய விசைப் படகுகளுடன் ... |
| தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல்: தம்பிதுரை அறிவிப்பால் அ.தி.மு.க.,வினர் உற்சாகம் Posted: 'சட்டசபைத் தேர்தல், எந்த நேரத்திலும் வரலாம்; அதனால், தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி, கட்சியினரை தேர்தலுக்கு உசுப்பி உள்ளார். |
| 19 ஆண்டாக தமிழகம் ஏமாறுவது அம்பலம்: கர்நாடகா போல் 'தண்ணி' காட்டும் ஆந்திரா Posted: கர்நாடகாவை போலவே, தமிழகத்திற்கு வழங்கவேண்டிய கிருஷ்ணா நீரை, முறைப்படி வழங்காமல், ஆந்திராவும் ஏமாற்றி வரும் தகவல் அம்பலமாகியுள்ளது. |
| ஆறு ஜனதா பரிவார் கட்சிகள் இன்று இணைப்பு: பெயர், சின்னம் விரைவில் அறிவிப்பு Posted: புதுடில்லி: சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட, ஆறு ஜனதா பரிவார் கட்சிகள், இன்று ஒன்றிணைகின்றன; புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.,வை எதிர்க்க பலமான கூட்டணி தேவை என்பதால், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் சமாஜ்வாதி ஜனதா தளம், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் ஆகிய ஆறு கட்சிகள், ஒன்றிணைய முடிவு செய்துள்ளன. ... |
| தொடக்க பள்ளிகளில் யோகா பயிற்சி: அமெரிக்க கோர்ட் அனுமதி Posted: லாஸ்ஏஞ்சலஸ் :'தொடக்கப் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தலாம்; அதற்கு தடை விதிக்க முடியாது; யோகா வகுப்புகள் நடத்துவது, மாணவர்களின் மத உரிமையை மீறும் செயலாகாது' என, அமெரிக்க கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர், உள்ளூர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'கலிபோர்னியா மாகாணத்தின் சட்ட விதிகளை மீறி, இந்து மற்றும் புத்த மதத்தை புகுத்தும், என்சினிடாஸ் மாவட்ட பள்ளியின், யோகா வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரிஇருந்தார். இவ்வழக்கில், 'யோகா கற்றுத் தருவது, குழந்தைகளின் மத சுதந்திரத்தை பறிப்பதாகாது' ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 05,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |