Tamil News | Online Tamil News |
- ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் இல்லை: அரசு கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி
- மோடி அரசு கொண்டு வந்துள்ள ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேறுமா? ஏமாற்றும் பில்டர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் விதிகள் அறிமுகம்
- மத்திய அரசு மீது ராகுல் மீண்டும் பாய்ச்சல்
- பஸ்சிலிருந்து குதித்த பெண் பலி: கண்டக்டரின் சில்மிஷத்தால் விபரீதம்
- ஆண் குழந்தை பிறக்க மாத்திரை: ராஜ்யசபாவில் அமளி
- மந்தகதியில் நிவாரண பணிகள்: நேபாள அரசு மீது மக்கள் கோபம்
- நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி: ஜெயலலிதா
- அரசு ஊழியர்கள் பயமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி யோசனை
- நகர்ப்புறங்களை மேம்படுத்த ரூ.2 லட்சம் கோடி: அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்ய திட்டம்
- மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ஐந்து மாதங்களாக வராத அமைச்சர்
| ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் இல்லை: அரசு கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி Posted: உணவுத் துறையின் அலட்சியத்தால், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், உணவு பொருட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை அரசும் கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். தமிழகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்கங்களின் கீழ், மொத்தம், 33,973 ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடையில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி இலவசம்; சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மாதந்தோறும் ரேஷனில் வினியோகம் செய்ய, அரிசி, 3.19 லட்சம் டன்; சர்க்கரை, 35,760 டன்; துவரம் பருப்பு, 13,460 டன்; உளுத்தம் ... |
| Posted: புதுடில்லி: பொய்யான வாக்குறுதிகள் தரும் மற்றும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறும், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பில்டர்களுக்கு, புதிய ரியல் எஸ்டேட் மசோதாவில், கிடுக்கிப்பிடி போடப்பட்டு உள்ளது; இந்த மசோதா, அடுத்த வாரம், பார்லிமென்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது; ஆனால், நிறைவேற்றப்படுமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நம் நாட்டில், தனியார் கட்டுமான நிறுவனங்களால் செயல்படுத்தப்படும், வீடு கட்டுமான திட்டங்களில், 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை தாண்டி, 12 மாதங்களுக்கு மேலாகியும், ... |
| மத்திய அரசு மீது ராகுல் மீண்டும் பாய்ச்சல் Posted: டோங்லாபாத்: ''விவசாயிகள் கடும் பிரச்னைகளைச் சந்தித்து வரும் நேரத்தில், அவர்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கைவிட்டு விட்டது. ஆனால், தங்களின் தோழர்களான முதலாளிகளை ஆதரிக்கிறது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறினார். பருவம் தவறி பெய்த மழையால், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள கிராமங்கள் வழியாக, நேற்று ஒருநாள் பாதயாத்திரை மேற்கொண்ட, ராகுல் கூறியதாவது: விதர்பா பகுதி விவசாயிகள் நிலை மோசமாக உள்ளது. மக்கள் துயரத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு அரசு ... |
| பஸ்சிலிருந்து குதித்த பெண் பலி: கண்டக்டரின் சில்மிஷத்தால் விபரீதம் Posted: மோகா (பஞ்சாப்): ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்தவர்களிடம் இருந்து தப்பிக்க, தாயும், மகளும் பேருந்தில் இருந்து கீழே குதித்தனர். இதில், மகள் உயிரிழந்தார்; தாய் படுகாயம் அடைந்தார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தில் உள்ள லேண்டக் கிராமத்தைச் சேர்ந்த, 38 வயது பெண்ணும், அவரின், 16 வயது மகளும், மோகா நகரில் இருந்து பாகாபுராணா என்ற இடத்திற்கு, நேற்று முன்தினம் மாலை, தனியார் பேருந்தில் சென்றனர். அப்போது, பேருந்தில் இவர்களைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லாததால், நடத்துனர், உதவியாளர் மற்றும் ... |
| ஆண் குழந்தை பிறக்க மாத்திரை: ராஜ்யசபாவில் அமளி Posted: புதுடில்லி: 'யோகா குரு' ராம்தேவின் ஆயுர்வேத மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, ஆண் குழந்தை பெறுவதற்கான மாத்திரை, ராஜ்யசபாவில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, கே.சி.தியாகி, ராஜ்யசபாவுக்கு நேற்று, சில மருந்து பொட்டலங்களுடன் வந்தார். ''அரியானா மாநில விளம்பர தூதர் ராம்தேவின், ஆயுர்வேத நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தை சாப்பிட்டால், ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும் என, விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார். அவற்றை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டாவிடம் கொடுத்தார். சமாஜ்வாதி பெண் எம்.பி., ஜெயா பச்சன், ''ஆண் ... |
| மந்தகதியில் நிவாரண பணிகள்: நேபாள அரசு மீது மக்கள் கோபம் Posted: காத்மாண்டு: நிலநடுக்க பாதிப்பிற்கு ஆளான நேபாளத்தில், மந்தகதியில் நடைபெறும் நிவாரணப் பணிகளால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர். கடந்த, சனியன்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 6,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உயிரிழப்பு, 10 ஆயிரத்தை தாண்டும் என, நேபாள அரசு கணித்துள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும், நிவாரணக் குழுவினரும், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் முகாமிட்டு, இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், நேபாளத் தின் பல கிராமங்களில், இன்னும் மீட்பு நடவடிக்கை துவங்காமல் உள்ளது. இதற்கு, ... |
| நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி: ஜெயலலிதா Posted: சென்னை: 'மே தினத்தையொட்டி, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த, 104 நலிந்த தொழிலாளர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய், குடும்ப நல நிதியுதவியாக வழங்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: 'மே' தினத்தை யொட்டி, ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கப் பேரவையில், உறுப்பினர்களாக உள்ள, நலிந்த தொழிலாளர்களுக்கு, குடும்ப நல நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட, 104 தொழிலாளர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 1.04 கோடி ரூபாய், ... |
| அரசு ஊழியர்கள் பயமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி யோசனை Posted: புதுடில்லி: ''முடிவுகள் எடுப்பதில், அரசு ஊழியர்கள் அச்சமின்றி செயல்பட வேண்டும்; அரசின் கொள்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்; அதேநேரத்தில், அரசியல் ரீதியான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, யோசனை தெரிவித்து உள்ளார். டில்லியில் உள்ள, இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன; எனவே, அரசு ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்ற ... |
| நகர்ப்புறங்களை மேம்படுத்த ரூ.2 லட்சம் கோடி: அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்ய திட்டம் Posted: புதுடில்லி: ''நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும். இவற்றில் பாதி முதலீடு, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிடைக்கும்,'' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: நாடு முழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்கவும், புதிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கும், மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் இந்த திட்டங்களுக்கு, ஒரு ... |
| மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ஐந்து மாதங்களாக வராத அமைச்சர் Posted: மின் வாரிய அலுவலகத்திற்கு, ஐந்து மாதங்களாக, துறை அமைச்சர் வராதது, ஊழியர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு,* திருவள்ளூர் மாவட்டம் - எண்ணூர் விரிவாக்கம், 660. * எண்ணூர் சிறப்பு, 1,320; வட சென்னை - மூன்றாம் நிலை, 800. * எண்ணூர் மாற்று, 660. * தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, 1,320. * ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர், 1,600 மெகாவாட்என, புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், தற்போது, எண்ணூர் விரிவாக்கம்; எண்ணூர் சிறப்பு மின் நிலைய கட்டுமான பணி மட்டும் நடந்து வருகிறது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 01,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |