Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நீதான்…!

Posted: 30 Apr 2015 03:32 PM PDT

- இந்திராணியும் நீதான் செந்தாமரையும் நீதான் பாற்கடலும் நீதான் சொற்சிலம்பும் நீதான் – பண்ணோசையும் நீதான் வெண்ணிலவும் நீதான் வசீகரமும் நீதான் ருசி உணர்வும் நீதான் – மந்தாரம் நீதான் மல்லிகையும் நீதான் முல்லை மருக்கொழுந்து எல்லாமே நீதான் – நீதான்…நீதான் – என்று சுணங்கிப் போய் உட்கார்ந்து தாடி மீசை வளர்ந்து மாறிப் போயிருப்பவனும் நான்தான் – மொத்தத்தில் என் வாழ்க்கை வாழ்க்கை அச்சாணி அந்த வானம் இந்த பூமி எல்லாமே நீதான் என் அன்பே! – அது சரி – – – நீ யார்? என் மோக உணர்வுக்கு மட்டுமே ...

புது மனிதன்

Posted: 30 Apr 2015 03:30 PM PDT

- மனிதன் இந்நாள் புதுத்தெய்வம் ஆதித் தெய்வம் அவனடிமை! – புனித வேதம் அவன் வாக்கு பொ ங்கும் சுவைகள் அவன் கருணை மனிதன் வளர்க்கும் நற்பண்பு மறைவாச்செல்வம்! ஆதலினால் – மனிதன் இந்நாள் புதுத்தெய்வம் ஆதித் தெய்வம் அவனடிமை! – பரப்புகின்ற பொது நோக்கு பாரின் தேவை நீராகும் இரக்கம் பொங்கி ஒளிகூட்டும் இதயம் தெய்வக் கோயிலடா! – மனிதன் இந்நாள் புதுத்தெய்வம் ஆதித் தெய்வம் அவனடிமை! – ————————- தெலுங்கு மூலம்: ஆருஉத்ர தமிழில்: இளம்பாரதி

சித்ரா பெளர்ணமி: இன்ப நிலவு மலரும் வேளை ஆனந்தம்

Posted: 30 Apr 2015 03:14 PM PDT

- சித்ரா பெளர்ணமி மே 3 மாதம்தோறும் முழு நிலவான பவுர்ணமி சத்திய நாராயணப் பெருமாள் பூஜையாகக் கொண்டாடப்படும். சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமி அன்று மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை பல மடங்கு நன்மை அளிக்கக்கூடியது என்பது நம்பிக்கை. சத்ய நாராயண பூஜை ஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் ...

நியூஸ் வே

Posted: 30 Apr 2015 03:07 PM PDT

- `காஞ்சனா2' மாஸ் ஹிட்டால் செம குஷியில் இருக்கிறார் டாப்ஸி. இனி தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ஐடியாவில் இருக்கிறது பொண்ணு! – வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில், தனுஷின் அம்மா நம்ம ராதிகா. ஹீரோயின்களாக சமந்தா, எமி நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்திருக்கிறது. `இந்த ஸ்கூல்லதான் நான் டென்த் படிச்சேன்' என ஃப்ளாஷ்பேக்கில் மூழ்கிய தனுஷ், அங்கே தனது வகுப்பறைக்குச் சென்று சிறிது நேரம் செலவழித்து நெகிழ்ந்திருக்கிறார். – அடுத்த மாதம் கமல், ...

சினிமா செய்திகள் …

Posted: 30 Apr 2015 03:06 PM PDT

- -சூர்யா, சமந்தா நடித்து வரும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லரான `24' படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் மும்பையில் நடந்து முடிந்திருக்கிறது. – சூர்யா தயாரித்து வரும் இப்படத்தில், கிராஃபிக்ஸ் காட்சிகள் தூக்கலாம். – ———————————— – 'புலி' படத்தின் ஸ்டில்கள் வெளியானதில் யூனிட்டே செம கடுப்ஸ்! விஜய்யே நேரடியாக விசாரணையில் இறங்கியும் யார் வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லையாம். இதனால் எக்கச்சக்க கட்டுப்பாடுகள் வந்து, விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாமல் செய்து விட்டார்கள். – ————————————- –

-அஜித் குமார்

Posted: 30 Apr 2015 03:04 PM PDT

- -அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் – அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. 2 மார்ச் 2015 அன்று இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. [2] காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் ...

ஜீவா, நயன்தாரா நடிக்கும் ‘திருநாள்’

Posted: 30 Apr 2015 03:02 PM PDT

- ஜீவா, நயன்தாரா நடிக்கவிருக்கும் 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் கும்பகோணத்தில் துவங்க இருக்கிறது. 'யான்' படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்காக நிறைய கதைகளைக் கேட்டு வந்தார் ஜீவா. இயக்குநர் ராம்நாத் கூறிய கதை ஜீவாவுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் ஜீவாவுக்கு நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். 'தெனாவெட்டு' படத்துக்குப் பிறகு இப்படத்தில் ஜீவா கிராமத்து இளைஞனாக நடிக்க இருக்கிறார். நகைச்சுவை, காதல், ஆக்‌ஷன் என ...

மே தினத்தை முன்னிட்டு 104 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 30 Apr 2015 02:51 PM PDT

மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 1 கோடியே 4 லட்சம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, அதிமுக ...

தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:

Posted: 30 Apr 2015 02:50 PM PDT

தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை: சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மர்ம நபர்கள் ஏமாற்றினர் தி.நகரில் சிபிஐ அதிகாரிகளைப் போல நடித்து ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். சென்னை தி.நகரில் 'ஓல்டு கேரளா ஜுவல்லர்ஸ்' என்ற தங்க நகைக்கடை உள்ளது. கேரளாவில் தங்க நகைகள் செய்யப்பட்டு அவற்றை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். கேரளாவை சேர்ந்த சிஜோ, ஜோபி ஆகியோர் சுமார் ஒரு கிலோ நகைகளை நேற்று காலையில் சென்னை தி.நகருக்கு கொண்டு வந்தனர். கடையின் அருகே வந்த நிலையில், ...

சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் !

Posted: 30 Apr 2015 02:41 PM PDT

சவூதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான், தனது அமைச்சரவையை பெருமளவில் மாற்றி அமைத்துள்ளார். பட்டத்திற்கான புதிய வாரிசுகளையும் அவர் அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் சல்மானின் சகோதரர் மகனான உள்துறை அமைச்சர் முகமது பின் நயீஃப் புதிய பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அரசரின் மகனான மொஹம்மது பின் சல்மான், பட்டத்து இளரசருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கிறார். சவூதியின் அரசராக இருந்த அப்துல்லா மரணமடைந்ததையடுத்து தற்போதைய ...

நான் தாமோதரன் :)

Posted: 30 Apr 2015 02:39 PM PDT

பெயர்:தாமோதரன்.k
சொந்த ஊர்:கோவிலம்பாக்கம்
ஆண்/பெண்:male
ஈகரையை அறிந்த விதம்:good
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...!

Posted: 30 Apr 2015 02:38 PM PDT

மனைவி: ஏங்க நேத்து பக்கத்து வீட்ல உமாவுக்கும், அவ ஹஸ்பண்டுக்கும் பயங்கர சண்டை...

கணவர்: அப்டியா.. அப்புறம் என்ன ஆச்சு ?

மனைவி: கடைசில உமா கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா...

கணவர்: ( பெரு மூச்சுடன் ) ம்ம்ம்.... அவன் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கான்... அதான் நல்லது நடந்திருக்கு ! ...

வரலாற்றில் இன்று - மே

Posted: 30 Apr 2015 02:35 PM PDT

மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Posted: 30 Apr 2015 02:16 PM PDT

சாக்கடை நாற்றத்தை அள்ளும் இரு கைகள் பூக்கடையில் பாதம் வைத்தால் காகிதப்பூக்களும் தலைகுனியும். டீக்கடையில் எண்ணெய் படிந்த பழைய வாரமஞ்சரி காக்கை கொத்தி ஓவியன் விரல்பட்டால் மோனாலிசா. கல்லுடைக்கும் ரேகை பளுத்தப்பட்ட உள்ளங்கையின் காயம் அல்லின் போது கண்கள் தூவும் கண்ணீரில் ஆறும். ஊசியோடு நூல் கோர்த்து புழுதி படிந்த பாதணியை பசித்திருந்து திருத்தும் உழைப்பாளிக்கு சமுதாயத்தில் சூத்திரன் பட்டம். நெல்மணிகள் அறுத்து அரிசியாக்கும் உழவன் இல்லத்தில் பண்டிகை நாட்களிலும் கூட ...

அந்தமானை பாருங்கள் அழகு.......

Posted: 30 Apr 2015 12:12 PM PDT

இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது    ஆகி விட்டால்....................) ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு ...

ஒரு ஆணின் புலம்பல்!

Posted: 30 Apr 2015 10:47 AM PDT

இந்த நூற்றாண்டில்
பிறந்து விட்டோம் என்ற எக்களிப்பில்,
சம உரிமை கேட்கும் மாணிக்கங்களே...
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...?

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !!

Posted: 30 Apr 2015 10:36 AM PDT

பெயர்: M.Jagadeesan
சொந்த ஊர்: துறையூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள் மூலமாக
பொழுதுபோக்கு: கணினியில் மேய்வது
தொழில்: பணி ஓய்வு
மேலும் என்னைப் பற்றி:
இனிய மனைவி ; இரண்டு பிள்ளைகள்
...இருப்பது போதும் என்கிற மனம்

ஈரிதழும் ஒட்டாமல் வரும் குறட்பாக்கள்...

Posted: 30 Apr 2015 10:22 AM PDT

திருக்குறளைக் கூறும்பொழுது ஈரிதழும் (உதடுகள்)
ஒட்டாமல் வரும் குறட்பாக்கள் 20
-
அறத்துப்பாலில் - 3
பொருட்பாலில்    8
இன்பத்துப்பாலில்- 9
-
----------------------------
அந்த 20 குறட்பாக்கள் என்னென்ன..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

வளமை தரும் கள்ளழகர் !

Posted: 30 Apr 2015 10:19 AM PDT

மன்னர் ஆட்சி முடிந்த பின்னும் மதுரையைத் தன் அருளாட்சியில் வைத்திருக்கும் மீனாட்சியம்மனின் சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. மதுரையின் அரசிக்குத் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும்? காலை முதல் மாலை வரை திருக்கல்யாண விருந்தால், மதுரையே விழாக்கோலம் பூண்டு ஆர்ப்பரிக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (1.5.15) திருத்தேரோட்டம் நடைபெறும். விழா தொடங்கிய நாள் முதல் ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 30 Apr 2015 10:06 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

Posted: 30 Apr 2015 09:49 AM PDT

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் ...

இந்திய வாகன சட்டம் 424 பிரிவு கூறுவது என்ன ?

Posted: 30 Apr 2015 08:54 AM PDT

நாம் பைக்.ல போகும்போது டிராபிக் போலீஸ் ஸ்டாப் பண்ணி எல்லா சான்றிதழ் கேக்குறாங்க ..நாம கரெக்ட்.அ கொடுத்தாலும் பைன் கேக்றாங்க...ஏதும் இல்லைனாலும் கேக்குறாங்க ..இத பற்றி  கொஞ்சம் detail  வேணும்

ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு

Posted: 30 Apr 2015 08:51 AM PDT

- – தேவையானவை: – வறுத்த வேர்க்கடலை – 100 கிராம். பொரிகடலை – 100 கிராம். கோதுமை மாவு – 100 கிராம். வெள்ளை எள் வறுத்தது – 100 கிராம். வெல்லம் – 200 கிராம். நெய் – 100 கிராம். ஏலக்காய் – 5 . – செய்முறை: – வேர்க்கடலை வறுத்தது, வறுத்த எள், பொரிகடலை முதலியவற்றைக் தனித்தனியாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். நெய்யைச் சூடாக்கி முதலில் கோதுமைமாவைப் போட்டு வறுக்க வேண்டும். வாசனை வரும் வரை வறுத்த பிறகு பொடி செய்தவற்றையும் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து வெல்லத்தைப் பொடி செய்து போட்டு ...

இல்லாளும் இல்லானும்!

Posted: 30 Apr 2015 08:50 AM PDT

'இல்' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இல்லம், வீடு, மனை, அகம் முதலிய பல பொருள்கள் உண்டு. "இல்லை' என்கிற எதிர்மறைப் பொருளும் உண்டு. அதே "இல்' அடியாகப் பிறந்துள்ள "இல்லாள்' அல்லது "இல்லவள்' என்கிற பெண்பால் சொல்லுக்கு வீட்டுக்காரி, மனைவி, மனையாள், அகத்துக்காரி, இல்லக்கிழத்தி என்கிற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், "இல்லான்' என்கிற ஆண்பால் சொல்லுக்கு, இல்லத்துக்குரியவன், மனைக்குரியவன் என்கிற பொருள் இலக்கிய வழக்கில் இல்லை. வீட்டுக்காரன், அகத்துக்காரன், அகமுடையான் என்கிற சொற்களும்கூட, பேச்சு வழக்கில் மட்டுமே ...

மொக்க ஜோக்ஸ்!

Posted: 30 Apr 2015 08:50 AM PDT

கிழவிமேல் காதல் கொள்ளடா

Posted: 30 Apr 2015 08:38 AM PDT

வானொலிப் பெட்டி திறந்தேன் வந்தது பாடலொன்று கிழவி மேல் காதல் கொள்ளடா அவ்வைக் கிழவி மேல் காதல் கொள்ளடா வென்று – கிழவி மேல் காதல் கொண்டால் உதவிடுமோ அவள் அனுபவம் வாழ்க்கைக் கென்று எழுதினேன் அரைப் பக்கக் கடிதமொன்று அடுத்த வீட்டு கிழவிக்கு – ஒரு கையில் கடிதமும் மறு கையில் அப்பளக் குழவியுமாய்த் தோன்றிய அண்டை வீட்டுக் கிழவி கேட்டாள் திருட்டு நாயே காதல் வேண்டுமா உனக் கென்று – ஓடினேன் ஓடினேன் ஊர் எல்லை தாண்டி ஓடினேன் உயிர் பிழைக்க தேவையில்லை யெனக்குக் கினி காதலும் கவிதையும் என் நாளுமே — நடராஜன் ...

தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள்

Posted: 30 Apr 2015 08:38 AM PDT

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 14–ந் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 21 பெண்கள், தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்து முறைப்படி கணவன் இறந்தால் மட்டுமே பெண்கள் தங்கள் கழுத்தில் உள்ள தாலியை அகற்றுவார்கள். ஆனால் சென்னையில் நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியில் 21 பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும்போதே தங்கள் தாலியை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ...

ஓவியர் கோபுலுவு--மறைவு

Posted: 30 Apr 2015 08:28 AM PDT

ஓவியர் கோபுலுவு மறைவு சென்னை: 91 வயதில் மரணமடைந்த பிரபல ஓவியர் கோபுலுவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார். பத்திரிகை உலகின் ஜாம்பவான் ஓவியர்களுள் ஒருவர் கோபுலு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 91 வயதான கோபுலு நேற்று மாலை சென்னையில் காலமானார். அந்த காலத்தில் விகடனில் வந்த தில்லானா மோகனாம்பாள் , வாஷிங்கடனில் திருமணம் போன்ற பெரும் தொடர்களுக்கு மனோரஞ்சகமான படங்கள் வரைந்த தங்க கைகள். ரமணியன்

கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா?

Posted: 30 Apr 2015 08:19 AM PDT

திருக்குறளில், சிக்கலுடையன எனக் கருதப்படும் குறள்களில் ஒன்று, ""தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' - என்பது. முழுமுதற் பரம்பொருள் "கடவுள்' எனப்படுவார். மற்றையன - ஐம்பெரும் பூதங்கள், முழுமதி, ஞாயிறு, மாந்தருள் தெய்வம் என எல்லாம் "தெய்வம்' எனப்படும். சங்க காலத்தில் "பிறை தொழுதல்' என்பது மகளிரிடையே பெருவழக்காக இருந்துளது. பிறையும் ஒரு தெய்வமே. ""ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம் புல்லென் மாலை (அகம்.239) புல்லென் மாலை - முன்னிரவு. இவ்வாறு வரும் சில பாடல்கள் ...

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection

Posted: 30 Apr 2015 07:42 AM PDT

கூகுள் நிறுவனம் அண்டிரொய்டு இயங்குதளத்தில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ஆன்-பாடி டிடெக்சன்' (On-body detection) என்ற சிறப்பான இந்த வசதி மூலம் பயனர்கள் திறன்பேசிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கும் போது தானாகவே 'அன்லாக்' (Unlock) செய்துகொள்ளும். அதே சமயத்தில் திறன்பேசிகள் கைகளில் இல்லாத தருணங்களில் தானாக லாக் செய்து கொள்ளும். இந்த புதிய வசதியின் முக்கிய நோக்கம், ஒருவரின் திறன்பேசிகள் தொலைந்துபோனால் தவறானவர்களின் கைகளில் கிடைத்து விடக் கூடாது என்பதாகும். இதற்காக அண்டிரொய்டில் பிரத்யேக ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (110)

Posted: 30 Apr 2015 07:39 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் மாயம்?

Posted: 30 Apr 2015 06:59 AM PDT

திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் ஏற்கெனவே 14.5 கிலோ தங்கம் மாயமானது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மேலும் 15 கிலோ தங்கம் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி திருச்சி சுங்கத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 14.5 கிலோ தங்கம் மாயமானது. இதுகுறித்தப் புகாரின் பேரில் சிபிஐ குழுவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களில் மேற்கொண்ட ஆய்வில் மேலும் 15 கிலோ தங்கம் மாயமாகியிருப்பதாக தகவல்கள் ...

சதுக்கபூதம்

Posted: 30 Apr 2015 04:51 AM PDT

காவிரிபூம்பட்டினம் அருகில் உள்ள சிதைந்த சதுக்கபூதம் சதுக்கபூதம் என்பது பூம்புகார் நகரச் சதுக்கத்தில் இருந்த காவல் தெய்வமென சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களைப் பாதுகாக்கும் இப்பூதமானது, பொய் சொல்பவர்களை பிடித்து தின்பது, அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளை வழங்கும். அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்ததாக சிலப்பதிகாரம் சதுக்கபூதம் பற்றி கூறுகிறது. சதுக்கம் என்பது நகரின் நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியாகும். ...

இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி

Posted: 30 Apr 2015 04:08 AM PDT

- ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில், பத்திரிகையாளர் ஏக்நாத் எழுதிய 'ஆத்தாடி அம்மாடி நான் அம்பையில் பூத்த பொண்ணு…' என்ற பாடலை இமான் இசையில் பாடி, பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் லட்சுமி மேனன். - இப்போது பிரஷாந்த் நடிக்கும் 'சாகசம்' படத்தில், தமன் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். நடிப்புக்கும், பின்னணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரைப் பற்றி தமன் கூறுகையில், "ஒலிப்பதிவுக் கூடத்தில் லட்சுமி ரொம்ப பதற்றத்துடன் காணப்படுகிறார். - தப்பாகப் பாடிவிடுவோமோ என்று பயப்படுகிறார். "உண்மையில் ...

குறையே நிறை!

Posted: 30 Apr 2015 04:03 AM PDT

சொல்வது உரைநடை; சொல்லாமல் விடுவது கவிதை. கவிஞர், தாம் சொல்லக் கருதியதைச் சொல்லாமல் படிப்போர் அவரவர் எண்ணப்படி புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டு, படிப்போரின் சிந்தனைத் திறத்தைத் தூண்டி மகிழச் செய்வதே தனிச்சிறப்பாகும். சொல்லாமல் விட்டுச் சுகம் காணச் செய்த கவிஞர்களின் மூன்று கவிதைகளைக் காண்போம். திருவள்ளுவர், "செருவந்த செய்யாமை' எனும் 57-ஆவது அதிகாரத்தில், அஞ்சத் தக்கவற்றைச் செய்தல் கூடாது என்பதைக் கூறும்பொழுது, "கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை'' (57-10) என்பார். ...

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Posted: 30 Apr 2015 03:05 AM PDT

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்
எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன். இந்த நூலை ஐந்து பகுதியாக பிரித்து வழங்கப் போகிறேன்.முதல் பகுதி உங்களுக்காக.
பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_26.html

டெல்லி டைரி

Posted: 30 Apr 2015 01:48 AM PDT

விவசாயிகளுக்காக ராகுல் பாதயாத்திரை - தினமலர் செய்தி  கடன் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்ட்டிரா மாநில விவசாயிகளின் பிரச்னைகளை நேரில் கேட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும், மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்துவதற்கும், காங்., துணை தலைவர் ராகுல் இன்று பாதயாத்திரை புறப்பட்டுள்ளார். 15 கி.மீட்டர் நடந்து செல்லும் அவர், பல கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் நேரிடையாக பேசுகிறார். -------------------------------------------------------------------------------------------------------------------------------------- ...

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Posted: 30 Apr 2015 12:06 AM PDT

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - மின்னஞ்சலில் வரும் இவரின் கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதால் தொடர் பதிவாக பதிய விரும்புகிறேன்... உங்களுக்கும் பிடிக்கும். புதுக்கவிதையில் இது புதுமாதிரி.... காதலர் தினம் =========================================ருத்ரா சுட்டெரிக்கும் சூரியன் கூட‌ கடலில் முகம் கழுவி காற்றில் பல் தேய்த்து பளிச்சென்று காத்திருக்கும்... எங்கோ ஒதுங்கி இருக்கும் அந்த மேக மங்கை தன் முகம் தழுவி கொடுக்கும் முத்தத்திற்கு காத்திருக்கும். பிப்ரவரி பதினாலு எனும் காலண்டர் ...

வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்…!!

Posted: 29 Apr 2015 09:48 PM PDT

- -வெயில் தாக்கத்தால் சமூக வலைதளங்களிலும் தகராறுகள் அதிகமாகி வருகின்றன. விவாதங்கள் காரசாரமாகின்றன. அத்தகைய சூடான மற்றும் சூட்டைத் தணிக்கும் 'வெயில்' குறித்த கருத்துப் பகிர்வுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில் இடம்பெறுகின்றன. – SivaJi Sankar ‏@sivajisiragukal – இரு சமக்குறியிட்ட சாரளத்தில் நீட்டிய கரங்கள் பரிகசிக்கின்றன. முச்சமகுறியிட்ட ஆண்டனாவில் அமர்ந்த காகங்கள் பேசி கொள்கின்றன – சென்னை சரியான சூடு. – கரிகாலன் ‏@DiNationS – தலையில ஒரு ஏசியை மாட்டிக்கிட்டு தான் வெளில போகணும் போல… என்னா வெயில்… தமிழ் ...

ஆண் பெண் ஊதிய முரண்பாடுகள் தவறு-போப் பிரான்சிஸ்

Posted: 29 Apr 2015 08:39 PM PDT

- ஒரே பணியை செய்யும் ஆடவர் மற்றும் மகளிர், ஒரே அளவு ஊதியம் பெற வேண்டும் என்பதை போப் பிரான்சிஸ் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். – அவ்வகையில் பணி ஒன்றாக இருக்கும்போது ஊதியங்கள் வித்தியாசமாக இருப்பது, ஒரு பெரிய ஊழல் என்றும் அதை கிறிஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும் என்றும், ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆற்றிய ஒரு உரையில் போப் கூறியுள்ளார். ஆடவருக்கு உரிய அனைத்து உரிமைகளும் மகளிருக்கும் உள்ளன என்று இருக்கும்போது, ஊதிய விஷயத்தில் அவர்களிடையே இடைவெளி இருக்க வேண்டிய காரணம் இல்லை எனவும் அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™