Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விதவையை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

Posted: 30 Apr 2015 01:31 PM PDT

ராஜபாளையத்தில் விதவைப் பெண்னை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திட்டங்கள் மட்டும் போதாது...

Posted: 30 Apr 2015 01:31 PM PDT

அரசு மருத்துவமனைகளில், பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

சாத்தூரில் மதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 30 Apr 2015 01:31 PM PDT

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை சாத்தூரில் நிறைவேற்றக் கோரி மதிமுகவினர் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

கைவிடப்படும் தமிழக மீனவர்கள்!

Posted: 30 Apr 2015 01:30 PM PDT

தமிழக மீனவர்கள் தங்கம், போதைப் பொருள்கள் ஆகியவற்றைக் கடத்துகின்றனர்.

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

Posted: 30 Apr 2015 01:30 PM PDT

சிவகாசியில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் மே 2ஆம் தேதி நடைபெற      உள்ளதாக செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை அரசியல்!

Posted: 30 Apr 2015 01:30 PM PDT

நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புது தில்லியில் ஆம்ஆத்மி கட்சி நடத்திய பேரணிப் பொதுக்கூட்டத்தின்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருசக்கர வாகனத்தில் திருடிய மூவர் கைது

Posted: 30 Apr 2015 01:29 PM PDT

ராஜபாளையத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த தங்கநாணயம், செல்லிடப்பேசி, டேப்ரிக்கார்டர் ஆகியவற்றைத் திருடிய மூவரைப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சாலை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 3.50 லட்சம் லாரிகள் இயங்கவில்லை

Posted: 30 Apr 2015 01:29 PM PDT

போக்குவரத்து சாலைப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் 3.50 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. இதனால், ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 62 பேர் மீது வழக்கு

Posted: 30 Apr 2015 01:28 PM PDT

சிவகாசி காவல் கோட்டத்தில் புதன்கிழமை இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 3 பேர், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 7 பேர், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம்    ஓட்டிய 21  பேர் உள்ளிட்ட 62 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகாசியில் பெண் கொலை வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

Posted: 30 Apr 2015 01:28 PM PDT

சிவகாசியில் ஒரு மாதத்துக்கு முன்பு மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

மழைநீர் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை

Posted: 30 Apr 2015 01:27 PM PDT

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் மழைநீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டங்களை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆஞ்சநேயர் கோயில் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து திருட்டு

Posted: 30 Apr 2015 01:26 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் பின்புறச் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

டிபன் சாப்பிட கூட்டத்துக்கு வரவில்லை: போடி நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதங்கம்

Posted: 30 Apr 2015 01:26 PM PDT

நகர்மன்றக் கூட்டத்துக்கு டிபன் சாப்பிட வரவில்லை, பொதுமக்களின் குறைகளைக் கூறவே வருகிறோம் என, வியாழக்கிழமை நடைபெற்ற போடி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தம் ஏன்?

Posted: 30 Apr 2015 01:25 PM PDT

தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

கொடைக்கானலில் கோடை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Apr 2015 01:25 PM PDT

கொடைக்கானலில் கோடை விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆந்திர சம்பவம்: உள்துறை அமைச்சருக்கு கண்டனம்

Posted: 30 Apr 2015 01:24 PM PDT

ஆந்திர வனப் பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமல் அதைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதா? என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மதுபானக் கடைகளுக்கு இன்று விடுமுறை

Posted: 30 Apr 2015 01:23 PM PDT

மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் மதுபானக் கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிக்கு ரூ.1.50 கோடி

Posted: 30 Apr 2015 01:23 PM PDT

கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூர் செம்மறி ஆடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகளுக்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் அணை கட்டியே தீருவோம்

Posted: 30 Apr 2015 01:22 PM PDT

"காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபடத் தெரிவித்தார்.

உத்தமபாளையம் அருகே ரூ.2.90 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு

Posted: 30 Apr 2015 01:22 PM PDT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில், புதன்கிழமை பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ. 2.90 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

நிலக்கரிச் சுரங்க முறைகேடு: சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம்

Posted: 30 Apr 2015 01:21 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலின் கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) முடக்காத சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மது பாட்டில்கள் பதுக்கல்: பெண் உள்பட 6 பேர் கைது

Posted: 30 Apr 2015 01:21 PM PDT

தேனி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 6 பேரை, மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பூசாரி நியமனத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்

Posted: 30 Apr 2015 01:20 PM PDT

பூசாரி நியமனத்துக்கு எதிராக கிராம மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

825 பேருக்கு திருமண நிதி உதவி: ஆட்சியர் வழங்கினார்

Posted: 30 Apr 2015 01:18 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூகநலத் துறை சார்பில் 825 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

ஊராட்சித் தலைவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Posted: 30 Apr 2015 01:18 PM PDT

மணல் கடத்தல் வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 2 பேரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

வேலை நிறுத்தம்: திண்டுக்கல்லில் பாதிப்பில்லை

Posted: 30 Apr 2015 01:16 PM PDT

மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில், வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இந்தப் போராட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோ, லாரி உள்ளிட்டவற்றின் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

ஆண்டிபட்டியில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

Posted: 30 Apr 2015 01:15 PM PDT

ஆண்டிபட்டியில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஆயக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 30 Apr 2015 01:14 PM PDT

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் தரைநிலைத் தொட்டி அமைக்க பொதுப்பணித் துறை அனுமதி மறுப்பதைத் கண்டித்து, பேரூராட்சிக் கவுன்சிலர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கு மே 15-க்குள் அனுமதி

Posted: 30 Apr 2015 01:13 PM PDT

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மே 15-ஆம் தேதிக்குள் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என, இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் மருத்துவர் ஜெய்ஸ்ரீ மேத்தா கூறினார்.

சாலைகளை சீரமைக்க கோரிக்கை

Posted: 30 Apr 2015 01:12 PM PDT

நிலக்கோட்டையில் கடந்த வாரம்  நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.  ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, சேதப்படுத்தப்பட்ட சாலைகளையும்,, குழிகளையும் விரைந்து சீரமைத்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படா வண்ணம் சாலைகளை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளைக் கைவிட்ட மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு

Posted: 30 Apr 2015 01:12 PM PDT

நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கைவிட்டுவிட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

சோத்துப்பாறை அணைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

Posted: 30 Apr 2015 01:10 PM PDT

பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணைக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் வட்டாரத்தில் மண் மாதிரி பரிசோதனை

Posted: 30 Apr 2015 01:10 PM PDT

கொடைக்கானல் வட்டாரத்தில் மண் மாதிரி பரிசோதனை நடைபெற உள்ளதையொட்டி, விவசாயிகள் தயாராக இருக்க வேண்டுமென, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாண்டி அறிவுறுத்தியுள்ளார்.

கிராமத்தினர் பேருந்தை சிறைப்பிடிப்பு

Posted: 30 Apr 2015 01:09 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், எத்திலோடு ஊராட்சியைச் சேர்ந்த ஆவாரம்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்தனர்.

3 மாதமாக ஊதியம் இல்லை: வனத்துறை ஊழியர்கள் அவதி

Posted: 30 Apr 2015 01:08 PM PDT

கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாததால், திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உத்தமபாளையத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

Posted: 30 Apr 2015 01:07 PM PDT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஞானாம்பிகை திருக்கோயிலில்  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை

Posted: 30 Apr 2015 01:06 PM PDT

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 30 Apr 2015 01:05 PM PDT

ஆறுமுகனேரி நடுத்தெரு ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சிவன் கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்

Posted: 30 Apr 2015 01:05 PM PDT

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது.

திருச்செந்தூர் மாணவிக்கு புத்தாக்க அறிவியல் விருது

Posted: 30 Apr 2015 01:04 PM PDT

திருச்செந்தூர் செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவிக்கு அறிவியல் புத்தாக்க விருது கிடைத்துள்ளது.

தூத்துக்குடியில் லாரிகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின

Posted: 30 Apr 2015 01:03 PM PDT

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன பாதுகாப்பு மசோதாவைக்  கண்டித்து தூத்துக்குடியில் லாரிகள் மற்றும் ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வியாழக்கிழமை பெரும்பாலான லாரிகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

மடத்தூர் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

Posted: 30 Apr 2015 01:03 PM PDT

தூத்துக்குடி அருகேயுள்ள மடத்தூர் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் ரூ. 10.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

பொதுமக்களுக்கு தரத்துடன் கூடிய பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும்

Posted: 30 Apr 2015 01:02 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு தரத்துடன் கூடிய பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

முன்னாள் ஊராட்சித் தலைவி மீது தாக்குதல்: இளைஞர் கைது

Posted: 30 Apr 2015 01:01 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவியை கல்லால் தாக்கிக் கொல்ல முயன்றதாக, இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளம் அருகே கோயில் விழாவில் தேவராட்டம்

Posted: 30 Apr 2015 01:01 PM PDT

விளாத்திகுளம் அருகே எத்திலப்பநாயக்கர்பட்டியில் ஸ்ரீதுர்க்கை அம்மன், அறுபது ராஜாக்கள் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் தேவராட்டம் ஆடி வழிபட்டனர்.

கட்டடத் தொழிலாளி தற்கொலை

Posted: 30 Apr 2015 01:00 PM PDT

திருச்செந்தூரில் குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மே 3இல் செல்லப் பிராணிகள் கண்காட்சி

Posted: 30 Apr 2015 12:59 PM PDT

தூத்துக்குடியில் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியையொட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 3) செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெறுகிறது.

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Apr 2015 12:58 PM PDT

தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்து கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

கருப்புப் பணம்: 121 வழக்குகள் பதிவு

Posted: 30 Apr 2015 12:58 PM PDT

சுவிட்சர்லாந்து நாட்டின் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில், கணக்கில் வராத கோடிக்கணக்கான பணத்தை முறைகேடாக பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது 121 வழக்குகளை வருமான வரித் துறை பதிவு செய்துள்ளது.

சுமை ஆட்டோ மோதி மாணவி காயம்

Posted: 30 Apr 2015 12:57 PM PDT

சாத்தான்குளம் அருகே  புதன்கிழமை சுமை ஆட்டோ மோதி பள்ளி மாணவி காயமடைந்தார்.

நிதி மசோதாவில் கடைசி நேரத் திருத்தங்கள்: அரசுக்கு மக்களவைத் தலைவர் கண்டனம்

Posted: 30 Apr 2015 12:57 PM PDT

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் கடைசி நேரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்காக மத்திய அரசுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.

சாத்தான்குளம் அருகே பெண் தற்கொலை

Posted: 30 Apr 2015 12:57 PM PDT

சாத்தான்குளம் அருகே பெண் தீக்குளித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

ஹரியாணா அமைச்சருக்கு அமித் ஷா கண்டனம்

Posted: 30 Apr 2015 12:56 PM PDT

"தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், கோழைகள்' என்று கூறிய ஹரியாணா மாநில வேளாண்துறை அமைச்சர் ஓ.பி.தங்கருக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி புறநகர் பகுதியில் மே 02 மின்தடை

Posted: 30 Apr 2015 12:56 PM PDT

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (மே 2) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: தனியார் நிறுவன அதிகாரிக்கு ஜாமீன்

Posted: 30 Apr 2015 12:55 PM PDT

பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 நபர்களில், தனியார் நிறுவன அதிகாரியான சுபாஷ் சந்திராவுக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தூத்துக்குடி மோதல் சம்பவம்: 10 பேர் மீது வழக்கு

Posted: 30 Apr 2015 12:53 PM PDT

தூத்துக்குடியில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் எம்.எஸ்.முத்து உள்பட 10 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்

Posted: 30 Apr 2015 12:53 PM PDT

எட்டயபுரத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Apr 2015 12:51 PM PDT

தூத்துக்குடி, கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைப் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 30 Apr 2015 12:50 PM PDT

எட்டயபுரம், கோவில்பட்டியில்  சாலைப் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதித் துறை சுதந்திரத்தை மத்திய அரசு அபகரிக்காது

Posted: 30 Apr 2015 12:50 PM PDT

நீதித் துறையின் சுதந்திரத்தை மத்திய அரசு அபகரிக்காது என்று மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கெளடா வியாழக்கிழமை தெரிவித்தார்.

நேபாளத்துக்கு நிவாரண நிதி: ஒடிஸா, பிகார் முதல்வர்கள் அறிவிப்பு

Posted: 30 Apr 2015 12:49 PM PDT

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மழை: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்

Posted: 30 Apr 2015 12:48 PM PDT

பலத்த மழை, நிலச்சரிவு காரணமாக ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வியாழக்கிழமை மூடப்பட்டது.

உ.பி.யில் தொடரும் "விடுமுறை அரசியல்'

Posted: 30 Apr 2015 12:48 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் தாக்குர் சமூகத்தினரை கவருவதற்காக, பண்டைக் கால அரசர் ராணா பிரதாப் சிங்கின் பிறந்த நாளான மே மாதம் 9-ஆம் தேதியன்று, பொது விடுமுறை அளிக்க மாநில அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

புதிய காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள்: மே 9-இல் தொடக்கி வைக்கிறார் மோடி

Posted: 30 Apr 2015 12:47 PM PDT

மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களான பிரதமரின் விபத்துக் காப்பீடு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரிலான அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடக்கி வைக்கிறார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Posted: 30 Apr 2015 12:46 PM PDT

மத்திய அரசின், "சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக, அரசு மற்றும் தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள், வியாழக்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்ச்சைக்குரிய கருத்துகள்: மதத் தலைவர்களை இந்தியா கண்டிக்க வேண்டும்

Posted: 30 Apr 2015 12:41 PM PDT

சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் இந்திய மதத் தலைவர்களைக் கண்டிக்குமாறு இந்தியாவிடம் அமெரிக்க அரசு வலியுறுத்த வேண்டும் என்று மத சுதந்திரத்துக்கான சர்வதேச ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் பிரச்னை: சமரசத்துக்கு உதவத் தயார்

Posted: 30 Apr 2015 12:40 PM PDT

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளைத் தீர்க்க, இரு நாடுகளும் சம்மதிக்கும்பட்சத்தில், சமரசம் செய்து வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தயாராக இருப்பதாக, அவரது துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்தார்.

புகையிலைப் பயன்பாட்டுக்கு தடை தேவை: பாஜக

Posted: 30 Apr 2015 12:39 PM PDT

கர்நாடகத்தில் புகையிலைப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சுரேஷ்குமார் வலியுறுத்தினார்.

எந்த ரத்தப் பிரிவையும் அனைவரும் ஏற்கும்படி மாற்றும் திறன் கண்டுபிடிப்பு!

Posted: 30 Apr 2015 12:33 PM PDT

தானம் வழங்கப்படும் ரத்தம் எந்தப் பிரிவாக இருந்தாலும், அதை எந்த வகை ரத்தப் பிரிவினருக்கும் செலுத்துவதற்கேற்ப மாற்றும் முறையை கனடா நாட்டு ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

அணு ஆராய்ச்சியில் வெளிப்படைத் தன்மை: ஈரான் உறுதி

Posted: 30 Apr 2015 12:31 PM PDT

அணுசக்தி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளது.

பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக மலேசியாவில் 6 பேர் மீது குற்றப் பதிவு

Posted: 30 Apr 2015 12:31 PM PDT

மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்புடன் தொடர்புடைய 6 பேர் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

நடுவழியில் பாதையை மாற்றும் "புத்திசாலி' துப்பாக்கிக் குண்டு!

Posted: 30 Apr 2015 12:30 PM PDT

இலக்கை அடைவதற்காக நடுவழியில் தனது பாதையை மாற்றிக்கொள்ளும் "புத்திசாலி' துப்பாக்கிக் குண்டுகளை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்தனர்.

இஸ்ரேலில் அரசு அமைக்க 2 கட்சிகளுடன் நெதன்யாஹு ஒப்பந்தம்

Posted: 30 Apr 2015 12:29 PM PDT

இஸ்ரேலில் கூட்டணி அரசு அமைவதற்கான முதல் நடவடிக்கையாக இரண்டு கட்சிகளுடன் அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

மலாலாவை தாக்கியவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை

Posted: 30 Apr 2015 12:28 PM PDT

குழந்தைகள் உரிமை ஆர்வலர் மலாலா யூசுஃப்சாய் மீது தாக்குதல் நிகழ்த்திய பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகள் 10 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

"இனி முகமது நபி கேலிச் சித்திரம் வரைய மாட்டேன்'

Posted: 30 Apr 2015 12:28 PM PDT

முகமது நபியின் கேலிச் சித்திரத்தை இனி வரையப் போவதில்லை என கேலிச் சித்திர ஓவியர் லஸ் கூறினார்.

சாந்தி கியர்ஸ் வருவாய் ரூ. 152 கோடி

Posted: 30 Apr 2015 12:25 PM PDT

சென்னை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் கடந்த நிதி ஆண்டில் பெற்ற வருவாய் ரூ. 152 கோடி என அந்நிறுவனம் தெரிவித்தது.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஃபீனிக்ஸ் விற்பனை தொடக்கம்

Posted: 30 Apr 2015 12:24 PM PDT

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய ஃபீனிக்ஸ் மோட்டார் சைக்கிள் வியாழக்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது.

என்ன ஒரு தேசபக்தி..!

Posted: 30 Apr 2015 12:23 PM PDT

என்ன ஒரு தேசபக்தி..!

பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸார்

Posted: 30 Apr 2015 12:22 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறும் சித்திரை பௌர்ணமி விழா பாதுகாப்புப் பணியில் 5,000 போலீஸார் ஈடுபடுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார்.

தனி வட்டமாக அறிவிக்கக் கோரி காவேரிப்பாக்கத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம்

Posted: 30 Apr 2015 12:22 PM PDT

காவேரிப்பாக்கத்தைத் தனி வட்டமாக அறிவிக்கக் கோரி, வியாழக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

கோயிலில் தேர்த் திருவிழா

Posted: 30 Apr 2015 12:22 PM PDT

சித்திரைத் திருவிழாவையொட்டி, சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி வெகுவிமர்சையாக கோயிலில் தேர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பயோகான் லாபம் 78% உயர்வு

Posted: 30 Apr 2015 12:21 PM PDT

உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான பயோகானின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 78 சதவீதம் அதிகரித்து, ரூ 201.54 கோடியாக உள்ளது என்று தெரிவித்தது.

வேலூர் மாநகராட்சியில் ரூ.442 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்

Posted: 30 Apr 2015 12:21 PM PDT

வேலூர் மாநகராட்சியில் 2015-16-ஆம் ஆண்டுக்கு ரூ.442 கோடிக்கு நிதி நிலை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

பள்ளியில் அலுவலர்கள் ஆய்வு

Posted: 30 Apr 2015 12:21 PM PDT

மாதனூர் அருகே அகரம்சேரியில் உள்ள சிறப்பு உண்டு, உறைவிடப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூரில் மே 14-இல் பாமக ஆர்ப்பாட்டம்

Posted: 30 Apr 2015 12:20 PM PDT

பூரண மதுவிலக்கு கோரி, வேலூரில் மே 14-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

Posted: 30 Apr 2015 12:20 PM PDT

ஆம்பூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளராக சி.பாபு ரவிச்சந்திரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

"கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்'

Posted: 30 Apr 2015 12:20 PM PDT

கைதிகளின் மனநிலையை அறிந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என சிறைத் துறையினரை கிறிஸ்டியன் கவுன்சிலிங் சென்டர் இயக்குநர் பிரசாந்தம் கேட்டுகொண்டார்.

சுஸ்லானின் வெளிநாட்டுத் துணை நிறுவன விற்பனை நடவடிக்கை நிறைவு

Posted: 30 Apr 2015 12:20 PM PDT

காற்றாலை தயாரிப்பு நிறுவனமான சுஸ்லானுக்கு சொந்தமாக ஜெர்மனியில் இருந்த துணை நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக அறிவித்தது.

அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: ஆட்சியர் தகவல்

Posted: 30 Apr 2015 12:20 PM PDT

வேலூர் மாவட்டத்தில் முதல்கட்ட 140 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் படிப்படியாக அனைத்து ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார்.

இடி தாக்கி இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவி

Posted: 30 Apr 2015 12:19 PM PDT

இடி தாக்கி இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. அண்மையில் பெய்த பலத்த மழையில், அரக்கோணத்தை அடுத்த மூதூர் அருகே வயல் வெளியில் மாடு கட்டச் சென்ற

ராமயான்தோப்பில் மணல் கொள்ளை:நகர்மன்ற உறுப்பினர் புகார்

Posted: 30 Apr 2015 12:19 PM PDT

ராமயான்தோப்பில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் அப்துல்லா வலியுறுத்தினார்.

அனுமதியின்றி உண்ணாவிரதம்:நகர்மன்ற உறுப்பினர் கைது

Posted: 30 Apr 2015 12:19 PM PDT

குடியாத்தம் அருகே அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக நகர்மன்ற உறுப்பினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த 19 நாள்களில் 23 வாகனங்கள் திருட்டு: இளைஞர் கைது

Posted: 30 Apr 2015 12:18 PM PDT

சிறையில் இருந்து வெளியே வந்த 19 நாள்களில் 23 இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

2 சிறுமிகளின் சடலங்கள் தோண்டியெடுத்து பரிசோதனை

Posted: 30 Apr 2015 12:18 PM PDT

திருப்பத்தூர் அருகே விஷம் கொடுத்து மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 2 சிறுமிகளின் சடலங்கள் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு சோதனை செய்யப்பட்டது.

சாக்கடையை சுத்தம் செய்த துப்புரவுத் தொழிலாளி சாவு

Posted: 30 Apr 2015 12:18 PM PDT

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் சாக்கடையைச் சுத்தம் செய்த தொழிலாளி இறந்தார்.

வழிதவறிய மாணவி மீட்பு

Posted: 30 Apr 2015 12:18 PM PDT

திருமண ஏற்பாடு நடைபெற்றதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி ஜோலார்பேட்டையில் மீட்கப்பட்டார்.

21 பேருக்கு ஈமச்சடங்கு நடத்திய சாதுக்கள்

Posted: 30 Apr 2015 12:17 PM PDT

திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தாலி அகற்றிக் கொண்ட 21 பெண்களின் கணவர்களுக்கு திருவண்ணாமலையில் 21 சாதுக்கள் சேர்ந்து ஈமச் சடங்கு நடத்தினர்.

ராஜமாபுரத்தில் அக்னி வசந்த விழா

Posted: 30 Apr 2015 12:16 PM PDT

ராஜமாபுரம் திரெüபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

860 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

Posted: 30 Apr 2015 12:16 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை (மே 1) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

Posted: 30 Apr 2015 12:16 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™