Tamil News | Online Tamil News |
- ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது நடக்குமா? வெளிநாட்டு பயணங்களை சாதகமாக பயன்படுத்திய மோடி
- மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு
- கிராமப்புற மேம்பாட்டிற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் யோசனை: மத்திய அரசு வேண்டுகோளை ஏற்று அறிக்கை
- ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு
- கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல்
- மெட்ரோ ரயிலை இயக்க மனமில்லை: கருணாநிதி
- நில நடுக்கத்தால் டில்லி உட்பட பல வட மாநிலங்கள் குலுங்கியது: நேபாள நாட்டில் கட்டடங்கள் சரிந்து 1,500 பேர் பலி
- 110 ஜே.எப்.17 ரக போர் விமானங்கள்: பாகிஸ்தானுக்கு வழங்குகிறது சீனா
- குவைத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை 8 லட்சம்: வீட்டு வேலை செய்வோர் அதிகம்
- நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்கள் கதி என்ன? சென்னையிலும் நில அதிர்வு
- இந்தியாவில் 51 பேர்; 247 பேர் காயம்
- 50 ரயில் நிலையங்களில் சொகுசு ஓய்வறைகள்
| Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர அணுகுமுறையால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினராவது என்ற, இந்தியாவின் நீண்ட கால கனவு, விரைவில் நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, மே மாதம் பதவியேற்றார். அதன்பின், 11 மாதங்களில், 16 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா என, மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் செய்தார். அன்னிய முதலீடு: மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணங்களில், அந்த நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது, அன்னிய ... |
| மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு Posted: புதுடில்லி: டில்லியில் துவாரகா பகுதியில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தார். தவுலாகான் ரயில் நிலையத்தில் இருந்து துவாரகா வரை சென்றார். டில்லியில் துவாரகா பகுதியில், தேசிய புலனாய்வு நிறுவனத்தின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, நேற்று பிரதமர், காரில் செல்லாமல், மெட்ரோ ரயிலில் பயணித்தார். மகிழ்ச்சிகரமான பயணம்: பிரதமர் காரில் சென்றால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ... |
| கிராமப்புற மேம்பாட்டிற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் யோசனை: மத்திய அரசு வேண்டுகோளை ஏற்று அறிக்கை Posted: புதுடில்லி: 'கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பை மேம்படுத்த, புதிதாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விவர அறிக்கை தாக்கல் செய்யுங்கள்' என, புதிதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக தேர்வான, 42 பேரிடம், மத்திய அரசு கேட்டது. அதன் படி, அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதையும், அவற்றை களைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது முதல், கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ... |
| ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு Posted: வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் - மாணவர் நட்புறவில், பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால், ஆசிரியர் - மாணவர் உறவு முறை, கேலிக்குரியதாக மாறி வருகிறது. எனவே, பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர் சங்கங்களும், இது குறித்து, தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளன. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், ... |
| கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல் Posted: 'கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க.,வினர், கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ... |
| மெட்ரோ ரயிலை இயக்க மனமில்லை: கருணாநிதி Posted: சென்னை: 'சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிந்தும், அதை துவங்க, தமிழக அரசுக்கு மனமிலை; அவர்கள் அறிவித்த மோனோ ரயில் திட்டத்தையும் துவங்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., 2011ல் ஆட்சிக்கு வந்ததும், மெட்ரோ ரயில் திட்டத்தை, முடக்கிவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், பாதி நிலைக்கு வந்ததால், அத்திட்டத்தை கைவிட முடியவில்லை. ஆனால், சென்னை மட்டும் அல்லாமல் கோவை, மதுரை, திருச்சி நகரங்களிலும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ... |
| Posted: காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், தலைநகர் காத்மாண்டு உட்பட, பெரும்பாலான இடங்களை உருக்குலைத்தது. இடிபாடுகளில் சிக்கி, 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதன் தாக்கத்தால், நம் நாட்டின் தலைநகர் டில்லி உட்பட, வட மாநிலங்களும் குலுங்கின. அண்டை நாடான நேபாளத்தில், நேற்று காலை, 11:56 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள பொகாரா என்ற இடத்தில், பூமிக்கு அடியில், 15 கி.மீ., ஆழத்தை, மையமாகக் கொண்டு, இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ... |
| 110 ஜே.எப்.17 ரக போர் விமானங்கள்: பாகிஸ்தானுக்கு வழங்குகிறது சீனா Posted: இஸ்லாமாபாத்: சீனா, 110 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், சமீபத்தில், பாகிஸ்தான் சென்ற போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனா - பாக்., இடையே, பல்வேறு துறைகளில் மொத்தம், 51 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. முதற்கட்டமாக, அடுத்த மூன்று ஆண்டுகளில், சீனா, 110 ஜே.எப்.17 ரகத்தை சேர்ந்த, 50 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு சப்ளை செய்யும். மீதமுள்ள, 60 விமானங்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தகவல் இல்லை. சீனா, ஏற்கனவே, இவ்வகை விமானங்களின் தயாரிப்பிற்கான தொழில்நுட்ப உதவியை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. ஆனால், தலிபான் ... |
| குவைத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை 8 லட்சம்: வீட்டு வேலை செய்வோர் அதிகம் Posted: துபாய்: குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விவரம்: குவைத்தில் அதிகம் வாழும் வெளிநாட்டினர் என்ற சிறப்பை இந்திய சமூகம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் எகிப்து நாட்டவர் உள்ளனர். குவைத்தில், விசா காலாவதியான பிறகும், சட்டப்புறம்பாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 25 ஆயிரமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் எவ்வளவு? செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவில் குவைத் வாழ் இந்தியர் எண்ணிக்கை, 10 ... |
| நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்கள் கதி என்ன? சென்னையிலும் நில அதிர்வு Posted: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து, நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற, 80 பேர், மலையேற்ற பயிற்சிக்காக சென்ற, 20 பேர், நில நடுக்க பாதிப்பால் சிக்கி தவிக்கின்றனர். இதுபோல், ஐதராபாத்தில் இருந்து, நேபாளத்தின் பசுபதிநாத் கோவிலுக்கு சென்ற, 20 பேர் அடங்கிய குழுவும், நில நடுக்க பாதிப்பால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறது. அவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. |
| இந்தியாவில் 51 பேர்; 247 பேர் காயம் Posted: புதுடில்லி: நேபாளத்தில், நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை, 1500 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 247 பேர் காயமடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவின் பல மாநிலங்களில் உணரப்பட்டது. நிலநடுக்க பாதிப்பால், பீகாரில், அதிகப்படியாக, 38 பேர் பலியாயினர்; 133 பேர் காயமடைந்துள்ளனர். உ.பி.,யில், 11 பேர் பலியாயினர்; 69 பேர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் இருவர் பலியாயினர்; 35 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த, காயமடைந்தவர்களின் ... |
| 50 ரயில் நிலையங்களில் சொகுசு ஓய்வறைகள் Posted: புதுடில்லி: ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு, சொகுசான அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள், விரைவில், நாடு தழுவிய அளவில், 50 ரயில் நிலையங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இதுகுறித்து, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான - ஐ.ஆர்.சி.டி.சி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் நிலையங்களில், சர்வதேச தரத்தில், நவீன வசதிகளுடன் கூடிய, ஓய்வறைகள் அமைக்கும் பணி விறுவிறுப்புடன் துவங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன. முழுவதும் குளிரூட்டப்பட்ட, இந்த நவீன சொகுசு ஓய்வறையில், பயணிகள் அமர சோபா, படிக்க ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 26,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |