ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள்
- திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்
- அந்தமானை பாருங்கள் அழகு.......
- ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
- கணித மேதை ராமானுஜன் நினைவு தினம்: ஏப்ரல் 26, 1920
- நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது
- ஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்
- டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
- தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
- ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி
- மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை
- வெயில் காலத்தில் நம் உடலைக் காத்துக்கொள்வது எப்படி
- கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- ஏழாம் உலகம் - ஜெயமோகன்
- கணினி -கேள்வி.....
- என்னைப் பற்றிய அறிமுகம்
- என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
- மீசை முட்கள்..!! -Mano Red
- அர்த்தம் புரியாத கனவா வருது…, என்ன செய்யலாம்?”
- வீட்ல விசேஷங்க... எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
- நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
- திருநங்கைகள் உரிமை மசோதா: திருச்சி சிவா முயற்சிக்கு திமுக பாராட்டு
- நான் சோம்பேறி இல்லை
- 27,000 - பானு - வாழ்த்துகள்...
- சுருங்கச் சொல்வது எப்படி?
- பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
- திருப்பம் தரும் திருப்பதி !
- ஆன்மீகம் - சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் - தொடர் பதிவு
- திருப்பதி பெருமாளின் தரிசனம்
- பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு
- 'இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க'
- பயனற்ற 758 சட்டங்களை நீக்குவதற்கான மசோதா அறிமுகம்
| பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Posted: 25 Apr 2015 03:19 PM PDT பூக்கள் வானவில்லை போன்று பலவேறுப்பட்ட வண்ணங்களிலும் வடிவங்களிலும் பூத்து குலுங்குகின்றன. அவ்வாறு உலகில் பூக்கும் வித்தியாசமான பூக்களை இங்கு பார்ப்போம். லாப்பிங் பபீள் பீ பூக்கள் மீது அமர்ந்திருக்கும் வண்டு போன்றே தோன்றும் இந்த பூவின் பெயர் 'லாப்பிங் பபீள் பீ'. இந்த வகை பூக்களை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, கனாரி தீவு, துருக்குமேனிஸ்தான் போன்ற பகுதிகளில் காணலாம். லாப்பிங் பபீள் பீ பூக்களை ஆராய்ந்து செயற்கை முறையில் உருவாக்கி உள்ளனர். இந்த வகை வண்டு பூக்களை அறிவியலாளர்கள் இனப்பெருக்க பூக்கள் ... |
| திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் Posted: 25 Apr 2015 03:14 PM PDT திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 06017: மே 2 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06018: மே 3-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். = தினமணி |
| அந்தமானை பாருங்கள் அழகு....... Posted: 25 Apr 2015 01:11 PM PDT இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................) ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு ... |
| ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! Posted: 25 Apr 2015 12:45 PM PDT தற்போது 'ஆன்லைன்' எனப்படும் இணைய வழி மூலம் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து அவற்றைத் தருவித்துக்கொள்ள விரும்புவோர் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான் மின்னணுச் சாதனங்கள் முதல் இறைச்சி, மீன், மளிகைப் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனிலேயே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழி விற்பனையும் எகிறி வருகிறது. நேரம், போக்குவரத்துச் செலவு, அலைச்சலை மிச்சப்படுத்தலாம் என்பதுடன், சில பொருட்களுக்குக் கிடைக்கும் விலை தள்ளுபடியும் பலரையும் ஆன்லைனில் ஆர்டர் போடச் சொல்லி ஈர்க்கிறது. ஆனால் ஆன்லைனில் சில விஷயங்களில் ... |
| கணித மேதை ராமானுஜன் நினைவு தினம்: ஏப்ரல் 26, 1920 Posted: 25 Apr 2015 12:00 PM PDT கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என ... |
| நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது Posted: 25 Apr 2015 11:44 AM PDT புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. - - |
| Posted: 25 Apr 2015 11:38 AM PDT அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின 'அப்பா!' என்று சொல்லி வலியைத் தணித்துக் கொள்வதுபோல. gn' உடல் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தது. ... |
| டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன் Posted: 25 Apr 2015 11:03 AM PDT போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று. ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் ... |
| தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி Posted: 25 Apr 2015 10:57 AM PDT மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது. நான்காம் தடவையாக, "எலே ராமு" என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, "இப்பத்தான்வெளியே போனான்" என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள். ராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை. ஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ... |
| ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி Posted: 25 Apr 2015 10:10 AM PDT ஐபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் வாட்ச்சை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த வாட்ச் நேற்று முதல் பல நாடுகளில் அதிகார பூர்வமாக விற்பனைக்கு வந்து உள்ளது.முன்னதாக கடந்த மார்ச் 9-ந்தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த வாட்ச்சின் அறிமுக விழா நடைபெற்றது. முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று வாங்கினர். ஸ்போர்ட்ஸ், எடிசன் என மாடலுக்கு ஏற்ப வாட்ச் விலை மாடலுக்கு ஏற்ப இந்திய மதிப்பில் ரூ.37 ஆயிரம் முதல்ரூ.18 லட்சம் ... |
| மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை Posted: 25 Apr 2015 10:02 AM PDT உலகிலேயே மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை தென்னாப்பிரிக்காவில் 'டிரான்ஸ்வா' என்ற இடத்தில் இருக்கிறது. இதன் பெயர் க்ருகர் நேஷனல் பார்க் என்பதாகும். இது 12,442 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது. இதில் சுமார் ஆயிரம் யானைகளும், 250 ஒட்டகங்களும், 600 காட்டெருமைகளும் 500 சிங்கங்களும் இருக்கின்றன. மேலும் பலவகையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கின்றன. இந்த மிருகக்காட்சி சாலையைச் சுற்றி 448 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் போகக்கூடிய அளவிற்கு அகலமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மிருகக்காட்சி ... |
| வெயில் காலத்தில் நம் உடலைக் காத்துக்கொள்வது எப்படி Posted: 25 Apr 2015 09:58 AM PDT ஒவ்வொரு பருவகால மாற்றமும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கோடை காலம். சூரியன் தகிக்கும் இந்தக் காலத்தில் நம் உடலைக் காத்துக்கொள்வது எப்படி? இதோ சில குறிப்புகள்... நம் உடம்பை உஷ்ணத்தின் தாக்கம் பாதிக்காமல் இருக்க உரிய அக்கறை செலுத்த வேண்டும். அவ்வப்போது மோர், எலுமிச்சை ஜூஸ், இளநீர் என்று பருகலாம். குறிப்பாக வெளியில் அலையும் வேலை செய்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் இதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் எண்ணைப் பதார்த்தங்கள், ... |
| கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன் Posted: 25 Apr 2015 09:45 AM PDT பெங்களூரு, கடித்த பாம்பை பிடித்து பையில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சிறுவன் சிகிச்சைக்கு வந்ததால் அங்கோலாவில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவனின் துணிச்சல் 'பாம்பை கண்டால் படையும் நடுங்கும்' என்று சொல்வது உண்டு. பாம்பை பார்த்தாலே அப்படி என்றால், கடித்தால் சொல்லவா வேண்டும்? எப்பேர்பட்டவர்களும் ஆடிப்போய் விடுவார்கள் தானே. ஆனால், சிறுவன் ஒருவன் தன்னை பாம்பு கடித்த போதிலும், அதற்காக அதிர்ந்து போகாமல் துணிச்சலுடன் அதை பிடித்து ஒரு பையில் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 25 Apr 2015 09:02 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| Posted: 25 Apr 2015 08:43 AM PDT நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! "ஏழாம் உலகம்" அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் ... |
| Posted: 25 Apr 2015 06:22 AM PDT சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்..... |
| Posted: 25 Apr 2015 06:16 AM PDT பெயர்: கட்டாரி (சரவணன் ஜெகநாதன் ) சொந்த ஊர்: பட்டுக்கோட்டை (தமிழ்நாடு ) இருப்பு : கோலாலம்பூர் (மலேசியா) ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் கவிதைகளுக்கான தளம் தேடி உலவியபோது கண்டுகொண்டேன் பொழுதுபோக்கு: இசை ரசிப்பது. (இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாத பொழுதுகள் போவதில்லை.) தொழில்: முதுநிலை மருந்தாக்கவியல் படித்திருக்கிறேன். கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன். மேலும் என்னைப் பற்றி: 1.தமிழை இலக்கண விதிகளின் படி கற்றுத் தேர்ந்தவன் ... |
| Posted: 25 Apr 2015 06:12 AM PDT பெயர்: அ. ஜான்சிராணி[மோனிகா ஸ்ரீ ] சொந்த ஊர்: பிறப்பு;-மயிலாடுதுறை பிழைப்பு;-திருச்சி ஆண்/பெண்: பெண், ஈகரையை அறிந்த விதம்:முதன்முதலில் கணினியை தொட்டு முதலில்' ஈ 'அழுத்தி ஈகரையைப் படித்தேன்! பொழுதுபோக்கு :படிப்பது,ரசிப்பது,ருசிப்பது, தொழில் தனியார்கல்லூரி பேராசிரியை, மேலும் என்னைப் பற்றி: 1.படித்தது ;எம்.ஏ., எம்.;.பில்.,[நெட்], 2.பிடித்தது ; சில்லென்ற ... |
| Posted: 25 Apr 2015 06:03 AM PDT ஏன் என்று தெரியாத உள்ளக் கிளர்ச்சியொன்று, மனதின் மேடுபள்ளங்களை அரைகுறையாய் அலசி கிளறிவிட்டு சென்றது பருவத்தின் மீசை முட்களை..!! இச்சையின் இளமை அனிச்சைக்கு இசைந்த எல்லாம் இன்னும் ஏனோ அவமானத்தின் எச்சங்களாய் ஏளனத்தின் விளிம்பில் ஒருங்கே தலை குவிகின்றன..!! திரும்பிய இடமெல்லாம் சோகம் உறிஞ்சிய நிமிட சந்தோசங்கள் எல்லாம், அந்த நிமிடங்களுக்காக இன்னும் விரல் சூப்பிக் கொண்டிருக்கின்றன..!! உள்ளுணர்வொன்று நாக்கை பிடுங்கி இழுத்து கேள்வி கேட்டாலும், இன்று சரியெனப் பட்டதை நாளையே தவறாக்கி ... |
| அர்த்தம் புரியாத கனவா வருது…, என்ன செய்யலாம்?” Posted: 25 Apr 2015 06:02 AM PDT * *"பொம்மை நின்னு போச்சுப்பா!" – "சாவி கொடுடா" – "கொடுக்கறேன்பா…, அது வாங்கவே மாட்டேங்குதுப்பா" – ஜோ.ஜெயக்குமார், – ——————————————- – * ""ஹலோ….8765120156 தானே" ""திருப்பிச்சொல்லுங்க" ""6510215678" – பி.யுகபாரதி, சென்னை. – —————————————– – "கேக்கற கேள்விக்கு பதில் தெரியலைன்னாக்கூட இந்தப்பையன் மரியாதையா முழிப்பான்" – "மரியாதையாவா?… எப்படி?" – "திரு…திருன்னு முழிப்பான்" – வி.ரேவதி, தாம்பரம் – ———————————————. – "எங்க வீடு கோயில் மாதிரி" – "அதுக்காக வீட்டு வாசல்ல ... |
| வீட்ல விசேஷங்க... எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ் Posted: 25 Apr 2015 05:59 AM PDT - - திரைப்பட இயக்குநரும், சிறந்த நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனுவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனை பாக்யராஜ் முறைப்படி அறிவித்துள்ளார். தனது மகன் சாந்தனு , பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தியை வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கோவிலில் மணமுடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 22ம் தேதி மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். - ----------------------------------- |
| நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Posted: 25 Apr 2015 05:58 AM PDT நாற்பதடி வெண்பா நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் என் இனிய உறவுகளே, நீண்ட நாட்களாக ''கவிதைக் களஞ்சியம்'' பக்கமே வரமுடியவில்லை. கடந்த 18 ம் திகதி இனப்படுகொலை குறித்து அவசரஅவசரமாக ஒரு கவிதை எழுதினேன். அதிகமான வேலைப்பளுவின் காரணமாகவும் எனது உடல்நலக்குறைவினாலும் "பொழுதைக் கழிக்க ஒர்திரி" யும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை மீண்டும் துவக்க வேண்டும் என்று உறவுகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். விரைவில் அத்திரியை தட்டிஎழுப்ப உள்ளேன். இடையில், இயற்கை உணவின் நன்மைகள்/பெருமைகள் குறித்து ஒரு கவிதை ... |
| திருநங்கைகள் உரிமை மசோதா: திருச்சி சிவா முயற்சிக்கு திமுக பாராட்டு Posted: 25 Apr 2015 04:34 AM PDT திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகள் உரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வகை செய்யும் இந்தத் தனிநபர் மசோதா நிறைவேறியது, மிக அரிதான ஒன்று என்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறிப்பிட்டார். திருச்சி சிவாவின் இந்த முயற்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில் கூறியிருப்பதாவது: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தனி நபர் தீர்மானம் ... |
| Posted: 25 Apr 2015 03:23 AM PDT - -முல்லா நசுருதீன் ஒரு அரிசி மண்டியில் வேலை செய்து வந்தார். ஒவ்வொரு மூட்டையாக முதுகில் தூக்கிச் சுமந்துகொண்டு போய் வண்டியில் ஏற்றினார். – மேற்பார்வையாளர் முல்லாவிடம், ""ஏன் முல்லா! மற்றவங்க எல்லாம் முதுகில் ரெண்டு மூட்டைகளைத் தூக்கிட்டுப் போறாங்க. நீ மட்டும் ஏன் ஒரே ஒரு மூட்டையைத் தூக்குற?" என்று கேட்டார். – அதற்கு முல்லா, ""அவங்க எல்லாம் ரெண்டு தடவை நடக்கிறதுக்கு சோம்பல்பட்டு எப்படி ரெண்டு மூட்டைகளை தூக்கிட்டுப் போறாங்க! நான் அவர்களைப்போல சோம்பேறி இல்லையே!" என்று பதில் கூறினார். – அ.ராஜா ... |
| 27,000 - பானு - வாழ்த்துகள்... Posted: 25 Apr 2015 03:21 AM PDT 27,000 - பானு - வாழ்த்துகள்... அசராமல் பதிவிடும் பானுவின் 27,000 மாவது மைல் கல்லை, நாம் அசந்ததில் கவனிக்க மறந்துவிட்டோம் வாழ்த்துகள் பானு - தொடருங்கள் நல் பதிவுகளை... |
| Posted: 25 Apr 2015 03:10 AM PDT - தனது வகுப்பாசிரியரிடம் 9ஆம் வகுப்பு மாணவன் பாலாஜி வந்தான். "சார்…, ஒரு சந்தேகம்!" "என்னாது?" "என்னால சுருக்கமா பேச முடியல சார்!" ""அப்படியா? உன் சொந்தக்காரங்க யாராவது வெளிநாட்டுல இருக்காங்களா?" "இருக்காங்க சார்…, எங்க மாமா ஆஸ்திரேலியாவுல இருக்கார்" "சரி…, அவருகிட்ட நீ என்னென்ன நினைக்கறியோ அத்தனையும் ஒண்ணு விடாம டெலிஃபோன்ல பேசுவியா?" ""அய்… யய்…. யோ… டெலிஃபோன் பில் எகிறுமே ஸôர்!" ""அப்ப எப்படி பேசுவே?" ""சுருக்கமா சொல்லுவேன் ஸôர்!" ""அதே மாதிரி நினைச்சி ... |
| பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! Posted: 25 Apr 2015 01:55 AM PDT பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ... |
| Posted: 24 Apr 2015 11:30 PM PDT புரட்டாசியில் புண்ணிய தரிசனம்! சுகுணா கதிரேசன்-நன்றி: சக்தி விகடன் =' வேங்கடேத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்திகிஞ்சன வேங்கடேஸ சமோதேவோ நபூதோந பவிஷ்யதி' திருமலை திருப்பதி இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை. உண்மைதான்! ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்… வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ... |
| ஆன்மீகம் - சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் - தொடர் பதிவு Posted: 24 Apr 2015 11:20 PM PDT திருமணத்திற்காக லட்சுமி குபேரரிடம் கடன் வாங்கியவர் - திருப்பதி ஏழுமலையான் - ===== |
| Posted: 24 Apr 2015 11:12 PM PDT திருப்பதி பெருமாளின் தரிசனம், தீர்த்தங்கள், பூஜை வழிபாட்டு நியதிகள், நம்மை சுவாரஸ்யப் படுத்தும் சில நிகழ்வுகளைப் பார்க்கலாம். - ![]() |
| பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Posted: 24 Apr 2015 11:08 PM PDT நிலக்கரி, பெட்ரோல் போன்ற பூமிக்கடியில் உள்ள எரிபொருட்களை எரிய விடுதல், காடுகளை அழித்தல், மரங்களை எரித்தல் போன்றவற்றின் மூலம் 600 கோடி மெட்ரிக் டன் அளவு கொண்ட கார்பன், கார்பன்-டை- ஆக்சைடு வடிவில் காற்று மண்டலத்தில் கலந்துவிடுகிறது என விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். ஆனால் இதில் சுமார் பாதியளவு கார்பன் மட்டுமே நமது வாயு மண்டலத்தில் தங்கியுள்ளது. பூமியில் இருந்து வெப்பம் வாயு மண்டலத்தை மீறி வெளியேறிச் செல்ல முடியாமல் தடுத்து மேலும் வெப்பமடையக் காரணமாக இருப்பதும் இந்தக் கார்பனே. ஆனால் மீதி 300 ... |
| 'இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க' Posted: 24 Apr 2015 06:30 PM PDT - தினமணி முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பாலக்காட்டு மாதவன்'. இப்படத்தை எம். சந்திரமோகன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் இதனை தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் விவேக் பேசும் போது: - நான் இதில் பாடல் எழுதியிருக்கிறேன். நான் பரம்பரை ஆண்டி அல்ல. பஞ்சத்து ஆண்டி. படப்பிடிப்புக்கு அவசரமாக செல்ல வேண்டி ... |
| பயனற்ற 758 சட்டங்களை நீக்குவதற்கான மசோதா அறிமுகம் Posted: 24 Apr 2015 06:24 PM PDT வழக்கொழிந்த 758 சட்டங்களை நீக்குவதற்கான மசோதா, மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு நிதியாண்டின் செலவுகளை அங்கீகரிப்பதற்காக, நிதி ஒதுக்கீட்டு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்தச் சட்டங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே செயல்பாட்டில் இருக்கும். ஆனால் கடந்த பல ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு, வழக்கொழிந்த நிலையிலும் ஏராளமான ஒதுக்கீட்டு சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோன்று பயன்பாட்டில் இல்லாமல் சட்டப் புத்தகத்தில் மட்டும் இடம்பெற்றிருக்கும் 758 சட்டங்களை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
