Tamil News | Online Tamil News |
- ஜெயலலிதா வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு: பவானி சிங் விவகாரத்தில் 27ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வியூகம்: குட்டி நாடுகளுக்கு கடனுதவி வழங்க பிரதமர் மோடி முடிவு
- அடுத்த அஸ்திரத்தை தொடுத்தார் ராகுல்: தொழிலதிபர்களுக்கு இணையத்தை விற்க முயற்சி என்கிறார்
- கெஜ்ரிவால் கண் முன்பு விவசாயி தற்கொலை
- எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 கோடியாக அதிகரிக்கப்படுமா?
- குப்பையை அகற்றாவிட்டால் 'டிபாசிட்' காலி
- 'தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அரசுக்கு அக்கறை இல்லை': கருணாநிதி
- தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு
- லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயாரா: ராஜபக் ஷே சவால்; ஊழல் புகாரில் பசில் ராஜபக்சே கைது
- 'சில தினங்களில் பார்லி.,யில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா'
- கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்
| Posted: புதுடில்லி: அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக போடப்பட்டுள்ள வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடரலாமா என்பது குறித்த தீர்ப்பை, 27ம் தேதி வழங்குவதாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். இதனால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள நான்காண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ... |
| Posted: புதுடில்லி: தெற்காசியாவில் உள்ள குட்டி நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, அந்த நாடுகளின் உள்விவகாரங்களில், சீனாவின் தலையீட்டை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். தெற்காசிய நாடுகளுக்கு தாராளமாக கடனுதவி அளித்து, அந்த பிராந்தியத்தில், இந்தியாவின் ஆளுமையை மேம்படுத்தவும், அந்த நாடுகளுடன் உறவை மேம்படுத்திக் கொள்ளவும், தனி நிதியத்தை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு மே மாதம், பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அண்டை நாடு, சண்டை நாடு என, வித்தியாசம் பாராமல், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் ... |
| அடுத்த அஸ்திரத்தை தொடுத்தார் ராகுல்: தொழிலதிபர்களுக்கு இணையத்தை விற்க முயற்சி என்கிறார் Posted: புதுடில்லி: ''நிலங்களை அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பறித்து, தொழிலதிபர்களிடம் கொடுக்க விரும்புவது போல, பிரதமர் மோடி அரசு, இலவசமாக இருக்கும் இணையத்தையும், தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க நினைக்கிறது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறினார்.இரண்டு நாட்களுக்கு முன், நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து, லோக்சபாவில் காரசாரமாக பேசிய ராகுல், நேற்று, 'நெட் நியூட்ராலிட்டி' எனப்படும், இணைய சமநிலை குறித்து விலாவாரியாக பேசினார்.எந்த காரணத்தை கொண்டும், இணைய சமநிலை பறிபோகக் கூடாது என, அவர் குரல் கொடுத்தார்.பின், பார்லிமென்டுக்கு வெளியே, ... |
| கெஜ்ரிவால் கண் முன்பு விவசாயி தற்கொலை Posted: புதுடில்லி : டில்லி மற்றும் பல மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முழக்கமிட்டுக் கொண்டிருந்த போது, மேடைக்கு அருகே இருந்த மரத்தில், விவசாயி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.டில்லியில், பார்லிமென்ட் வளாகத்திற்கு மிக அருகில் உள்ள, ஜந்தர்மந்தர் என்ற இடத்தில், ஆம் ஆத்மி சார்பில், விவசாயிகள் பேரணி நேற்று நடந்தது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, விவசாயிகளை திரட்டியிருந்தது, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி.அதில், டில்லி, ... |
| எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 கோடியாக அதிகரிக்கப்படுமா? Posted: புதுடில்லி: எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, ஐந்து கோடியில் இருந்து, 25 கோடி ரூபாயாக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, வி.கே.சிங், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: எம்.பி.,க்கள் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் என்ற முறையில், அவர்கள் பதவியில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும், ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை, சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கள், தங்கள் தொகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ... |
| குப்பையை அகற்றாவிட்டால் 'டிபாசிட்' காலி Posted: புதுடில்லி: 'மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நிகழ்ச்சி நடத்துவோர், நிகழ்ச்சி முடிவடைந்த, ஆறு மணி நேரத்திற்குள் அங்குள்ள குப்பையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், டிபாசிட் தொகையை இழக்க நேரிடும்' என, மத்திய அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்ததும், அரசு அலுவலகங்கள், பொது இடங்களை துாய்மையாக வைத்து கொள்வதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 'துாய்மை இந்தியா' என்ற திட்டத்தையும் பிரதமர் அறிவித்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து ... |
| 'தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அரசுக்கு அக்கறை இல்லை': கருணாநிதி Posted: சென்னை: 'தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில், அ.தி.மு.க., அரசுக்கு அக்கறை இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா விடுதலையாகி, அவர் முதல்வராக வந்ததும், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான், அம்மாநாடு மீண்டும், மீண்டும் ஒத்திப் போடப்பட்டு வருகிறது. இந்த மாநாடு மாத்திரமல்ல. தமிழக அரசின் வேறு சில திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு முடிந்த போதிலும், ஜெயலலிதா முதல்வராக இல்லாததால், அந்தத் திட்டங்களை துவக்கி வைத்து விடக் கூடாது என்பதற்காகவே, திறப்பு விழாக்கள் ... |
| தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு Posted: சென்னை: தமிழகத்தை சேர்ந்த, அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அகவிலைப்படியை, 6 சதவீதம் உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு அலுவலர்களுக்கு, கடந்த, ஜனவரி ௧ம் தேதி முதல், அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது.அதையொட்டி, தமிழக அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அகவிலைப்படியை, கடந்த ஜனவரி, ௧ம் தேதி முதல், 6 சதவீதம் உயர்த்தி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில், பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி ... |
| லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயாரா: ராஜபக் ஷே சவால்; ஊழல் புகாரில் பசில் ராஜபக்சே கைது Posted: கொழும்பு: ''நானும், என் குடும்பத்தினரும் லஞ்சம் வாங்கியதை நிரூபிக்கத் தயாரா?'' என, இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு, முன்னாள் அதிபர் ராஜபக் ஷே சவால் விடுத்துள்ளார்சீனாவின் நிதியுதவியில், 8,400 கோடி ரூபாய் செலவில் கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்தில், ராஜபக் ஷேவும் அவரது குடும்பத்தாரும், பல கோடி ரூபாய் சுருட்டியதாக புகார் எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக, ராஜபக் ஷே மற்றும் அவரது சகோதரர் கோத்தபய ஆகியோரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.ராஜபக் ஷே கூறியதாவது:நானோ, என் குடும்பத்தாரோ முறைகேடாக பணம் குவிக்கவில்லை. அப்படி ... |
| 'சில தினங்களில் பார்லி.,யில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா' Posted: புதுடில்லி: ''பெரும்பான்மையான மாநிலங்களுடன் கருத்தொற்றுமை ஏற்பட்டதையடுத்து, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் இன்னும் சில தினங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பாக, டில்லியில், அருண் ஜெட்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 18 மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள், இதர மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து ... |
| கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார் Posted: புதுடில்லி: ''நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி, லோக்சபாவில் கூறியதாவது: கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி, மூன்றாவது பாடமாக இருந்தது. இது தொடர்பாக, ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனத்துக்கும், நம் நாட்டில் உள்ள நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தம், அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக இருந்ததால், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 23,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |