Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 22 Apr 2015 07:52 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

ராஜேஷ்குமார் சிறுகதைகள் தொகுதி 01- ராஜேஷ்குமார்

Posted: 22 Apr 2015 06:56 AM PDT

http://www.mediafire.com/download/99xs9kkef4k69li/Rajeshkumar+Sirukathaikal+-+Part+01.pdf என்றும் அன்புடன் செல்லா

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Posted: 22 Apr 2015 06:53 AM PDT

நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு தேர்வில் மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்ற ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டிய கேள்வி வந்தது. அதன் விடையை பாடத்தில் படித்திருந்தாலும் உப்பிலிக்கு காந்தியைக் கொன்றவரின் பெயர் அச்சமயம் பார்த்து மறந்து தொலைத்தது. ஆனால் வேறு விஷயம் அரைகுறையாக நினைவுக்கு வரவே, மகாத்மா காந்தியைக் கொன்றது ஒரு வயதான நபர் என எழுதித் தொலைத்தான். மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் ...

மன்னவன் வந்தானடி

Posted: 22 Apr 2015 06:51 AM PDT

மன்னவன் வந்தானடி


ரமணியன்

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படியும் ஒரு கலெக்டர்!

Posted: 22 Apr 2015 06:45 AM PDT

சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.
-

-

ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம்

Posted: 22 Apr 2015 06:25 AM PDT

ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம்... உருக்கி நோய் நீக்கி நிலையம் என்றால் நிறைய பேருக்கு புரியாது காச நோய் ஆஸ்பத்திரி என்றால் சட்டென புரிந்துவிடும். தமிழகத்தின் முக முக்கியமான ஊர்களில் உள்ளது மதுரை உள்பட ஒன்பது தென் மாவட்டங்களுக்கான காச நோய் ஆஸ்பத்திரி மதுரை தோப்பூரில் உள்ளது காற்றில் பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள் இந்த ஆஸ்பத்திரி செயல்பட்டு வருவதால் காட்டாஸ்பத்திரி என்று அழைப்பவர்களும் உண்டு. மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காசநோய் பிரிவிற்கு ...

அடையாளம்

Posted: 22 Apr 2015 06:24 AM PDT

அடையாளக் கவிதை

அடையாளம் தேடித்தேடியே
அடையாளத்தை இழக்கிறோம்
அடையாளத்தை மறைத்துக் கொண்டவர்கள்
அடையாளமாய் வாழ்கிறார்கள்
உன் அடையாளம் தான்
என் அடையாளத்தை மறைத்தது
உன் அடையாளத்தை மறக்கச் செய்தபின்
என் அடையாளம் தெரிந்தது.
பெயருக்கும் முன்னும் பின்னும் அடையாளங்கள்
இடையில் அடையாளத்தைத் தாங்கும் சுமைதாங்கி
என்பதை உணராமலே அடையாளமாய்.

சிங்கத்தின் வாலில் ஈயாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை”

Posted: 22 Apr 2015 05:14 AM PDT

தமிழ்நாட்டில் நாற்பதுகளில் விகடனுக்கும் கல்கிக்கும் சொற்போர்கள் நடந்துள்ளன. ஒரு முறை விகடன் ராஜாஜிக்கு வார்ணிங் கொடுக்க, கல்கி அதை ஒரு கார்ட்டூனாக்கினார். சிங்கத்துக்கு (ராஜாஜி) எலி (விகடன்) வார்ணிங் கொடுப்பது போல இருந்தது அது. அதே கார்ட்டூனை விகடன் மேற்கொண்டு, சிங்கத்தின் வாலில் ஒரு ஈயை வரைந்து அதற்கு கல்கீஈஈஈ என பெயரிட்டது. கல்கி இவ்வாறு எழுதினார். "இதில் ஒன்று நிச்சயமாகி விட்டது. ராஜாஜி சிங்கம்தான், விகடன் எலிதான், மற்றப்படி அப்படிப்பட்ட சிங்கத்தின் வாலில் ஈயாக ...

'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!

Posted: 22 Apr 2015 04:39 AM PDT

கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எதை எடுத்தாலும், 'ஆசிரியை மாணவனோடு ஓட்டம்' என்ற செய்திதான் முன் வந்து நிற்கிறது. இந்த செய்தியை படித்தவர்கள், ஷேர் செய்கிறார்கள். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட அதிகம் விவாதித்தது, ஆசிரியை மாணவனோடு ஓட்டம் என்ற செய்தியைத்தான். இந்நிலையில், வெறும் மீடியா பசிக்காக சமூகத்தை சீரழிக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள் கல்வியாளர்கள். ''எல்லா காலக்கட்டத்திலும் இதுபோல நடந்திருக்கிறது. ஒரு மனிதன் தனிமையை ...

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Posted: 22 Apr 2015 03:55 AM PDT

படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? படத் தலைப்பு மாதிரியே செம ஃபாஸ்ட் ஆகவும், வெறித்தனமாகவும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7' திரைப்படம். ரிலீஸான இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் அள்ளிக் குவித்திருக்கிறதாம். வின் டீசல், ட்வெய்ன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம், டோனி ஜா, மிட்செல் ராட்ரிக்ஸ் போன்ற ஸ்டார்களுக்காக மட்டுமில்லை; படத்தில் 'வ்ர்ர்ரூம்... வ்வ்ர்ர்ர்..ரூம்' எனக் கிளம்பும் கார்களுக்காகவும் தியேட்டரில் கூட்டம் அள்ளு கிளப்புகிறது. 'மச்சான்... ...

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Posted: 22 Apr 2015 02:47 AM PDT

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்
எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன். இந்த நூலை ஐந்து பகுதியாக பிரித்து வழங்கப் போகிறேன்.முதல் பகுதி உங்களுக்காக.
பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_26.html

மனதைப் பண்படுத்துவது என்றால் என்ன?

Posted: 22 Apr 2015 02:44 AM PDT

ஜென் துறவியைச் சந்தித்த ஒருவர் அவரிடம், " எந்த வகையான மனிதர்கள் மனதைப் பண்படுத்துவதில் ஈடுபட வேண்டும் " என்று கேட்டார். " என்னைப் போன்றவர்கள் " என்று பதிலளித்தார் துறவி. " உங்களைப் போன்ற மாபெரும் குரு கூடவா. அதைச் செய்ய வேண்டும் " என வியப்படைந்தார் கேள்விக் கேட்டவர். " ஆம், மனதைப் பண்படுத்துவது என்பது வேறொன்றுமில்லை. ஆடைகள் உடுப்பது, சாப்பிடுவது மாதிரி தான் " என்றார் குரு. " இதெல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் காரியங்கள் தானே, மனப் பண்பாடு என்பதுதான் என்ன,? " நான் ஒவ்வொரு ...

புவி நாள் (Earth Day) - ஏப்ரல் 22

Posted: 22 Apr 2015 02:34 AM PDT

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் ...

ஒன்றுமே மாறவில்லை

Posted: 21 Apr 2015 11:43 PM PDT

தான் படித்து, தேர்வு பெற்று சென்ற அந்த மிலிட்டரி அகாடெமிக்கு அந்த படை தளபதி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விசிட்டுக்கு வந்திருந்தார். தனது பழைய அகாடெமியைப் பார்த்தது அவருக்குள் பல ஆட்டோகிராஃப் நினைப்புகளை தூண்டி விட்டது. "அதே அகாடெமி, மாறவேயில்லை" என்றார். பிறகு தான் படித்த வகுப்பறைக்கு சென்றார். அதே வகுப்பறை என இன்னொரு முறை ஃபீலிங்ஸ் ஆனார். அப்படியே தான் இருந்த ஹாஸ்டலுக்கு சென்றார். அதே ஹாஸ்டல் என்றார். காரிடாரில் நடந்தார் (அதே காரிடார்). அறை 208 அவர் அங்கு ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 21 Apr 2015 07:45 PM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 21 Apr 2015 07:44 PM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 21 Apr 2015 07:41 PM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

அப்பனைப் போல பிள்ளை...!!

Posted: 21 Apr 2015 07:26 PM PDT

- - வயசு வந்த பெண்ணை வேலைக்காரியா வச்சா இவரு ஒழுங்கா ஆபிஸ் போக மாட்டேங்கறாருன்னு, சின்ன வயசுப் பெண்ணை வேலைக்காரியா வச்சேன்...! - இப்ப என்ன ஆச்சு? - பையன் ஒழுங்கா ஸ்கூல் போக மாட்டேங்கிறான்..!! - ----------------------------------------- - உன் கணவர் ஆபிசுக்கு புறப்படப் போறார் போல இருக்கு..! - எப்படி கண்டு பிடிச்சே? - கொட்டாவி விட்டுக்கிட்டு இருக்காரே...! - -------------------------------------- - அந்தப் பொண்ணோட இடையை  பிடிச்சு இழுத்தியாமே...ஏன்? - கையைப் பிடிச்சு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™