Tamil News | Online Tamil News |
- பழைய வாகனங்களுக்கு தடை விதித்தது சரியே
- 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்' வெள்ளோட்டம்
- ஒரே ஆண்டில் நாடு முழுவதும் பிடிபட்ட கடத்தல் தங்கம் .ரூ.1,000 கோடி: ஆண்டுக்கு ஆண்டு கடத்தல் அதிகரிப்பதால் அரசு கவலை
- நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தால் பார்லி.,யில் கூச்சல், குழப்பம்: எம்.பி.,க்களின் ஆவேச பேச்சால் முதல் நாளிலே பரபரப்பு
- விவசாயிகள் பக்கம், பிரதமர் மோடி மாற வேண்டும்: ராகுல் ஆலோசனை
- ராஜ்யசபா எம்.பி.,க்கள் 87 பேருக்கு வர்த்தக ரீதியில் பல கோடி வருவாய்
- '2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில் புது ஆடியோ ஆதாரம்: சி.பி.ஐ.,
- தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம்
- 'இந்தியா தான் முதல் எதிரி': ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு!
- அமைச்சரை நியமிக்க லஞ்சம்: ராஜபக் ஷேவுக்கு சிக்கல்
- 'ஹால்மார்க்' முத்திரை தங்கம் வாங்குங்க: தர நிர்ணய ஆணையம் அறிவுரை
- யோகேந்திர யாதவ், பூஷன் ஆகியோர் கல்தா : ஆம் ஆத்மி ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி
| பழைய வாகனங்களுக்கு தடை விதித்தது சரியே Posted: புதுடில்லி: பத்து ஆண்டு பழமை வாய்ந்த அனைத்து வகை டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டு பழமை வாய்ந்த பெட்ரோல் வாகனங்கள், டில்லி சாலைகளில் ஓட தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியே என்றும் தெரிவித்துள்ளது. உலகில், காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில், தலைநகர் டில்லி, 20வது இடத்தில் உள்ளது. அதனால், டில்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும், காற்று மாசுவை குறைக்க, 15 ஆண்டு பழைய பெட்ரோல் வாகனங்கள், டில்லி சாலைகளில் இயங்க தடை விதிக்க வேண்டும் என, ... |
| 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்' வெள்ளோட்டம் Posted: மும்பை: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்' ஆயுதம் தாங்கி போர்க்கப்பலின் வெள்ளோட்டம், நேற்று மும்பையில் துவக்கி வைக்கப்பட்டது. நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட, ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் என்ற ஆயுதம் தாங்கி போர்க்கப்பலின் வெள்ளோட்டம், மும்பையில் உள்ள மஜோகான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்திய கடற்படை தளபதி ஆர்.கே.தவானின் மனைவி மினு தவான், இந்த வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். 'முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், வரும், 2018ல், முறைப்படி கடற்படையில் இணைக்கப்படும் ... |
| Posted: புதுடில்லி: சமீபகாலமாக, நாடு முழுவதும் தங்கம் கடத்தல் அதிகரிப்பதால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் தான் தங்கத்துக்கான நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால், பிற நாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் சந்தைகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் தங்கத்தின் விலை அதிகம். இந்த நாடுகளில் இருந்து சட்டப்பூர்வமாக தங்கத்தை கொண்டு ... |
| Posted: புதுடில்லி: பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டத்தின் நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சபையில் அமளி நிலவியதோடு, அடிக்கடி சபை ஒத்தியும் வைக்கப்பட்டது. அத்துடன், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள், சபையிலிருந்து வெளிநடப்பும் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டம் ஒன்றை, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. கடந்த பிப்ரவரி ... |
| விவசாயிகள் பக்கம், பிரதமர் மோடி மாற வேண்டும்: ராகுல் ஆலோசனை Posted: புதுடில்லி: நாட்டின் மக்கள்தொகையில், 67 சதவீதத்தை கொண்டுள்ள விவசாயிகள் பக்கம், பிரதமர் மோடி மாற வேண்டும் என ராகுல் லோக்சபாவில் பேசினார்.லோக்சபாவில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாக, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விவசாயிகளுக்கு எதிராகவும், கம்பெனிகள் மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. 'சூட்டும், பூட்சும் அணிந்துள்ள அரசு இது. 'நல்ல நாள்' வரும் எனக்கூறிய அரசு, எதையும் செய்யத் தவறி விட்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் துயரங்களைத் தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. தேசிய ... |
| ராஜ்யசபா எம்.பி.,க்கள் 87 பேருக்கு வர்த்தக ரீதியில் பல கோடி வருவாய் Posted: புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்களில், தெண்டுல்கர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயா பச்சன் உள்ளிட்ட, 87 பேரின், வர்த்தக ரீதியான வருவாய் பட்டியலை, ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏ.டி.ஆர்.,) வெளியிட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்கள், 211 பேரில், 124 பேர், தங்களுக்கு வர்த்தக ரீதியிலோ அல்லது இதர வருவாயோ இல்லை என்று தெரிவித்துள்ளனர். தொழில்சார்ந்த வருவாய் பிரிவில், தெண்டுல்கர் (72.79 கோடி ரூபாய்), கே.டி.எஸ். துளசி (19.13 கோடி ரூபாய்), மிதுன் சக்ரவர்த்தி (16.93 கோடி ரூபாய்) ஆகியோர் உள்ளனர். பணி சார்ந்த வருவாய் பிரிவில், காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் சிங்வி (82.33 கோடி ரூபாய்), நிறுவனத்தின் முழுநேர ... |
| '2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில் புது ஆடியோ ஆதாரம்: சி.பி.ஐ., Posted: புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,க்கு, தற்போது ஆடியோ ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது என சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு மோசடி வழக்கை, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான, புதிய நிலை அறிக்கையை, நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன், தாக்கல் செய்த, சி.பி.ஐ., வழக்கறிஞர் வேணுகோபால் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,க்கு, தற்போது ஆடியோ ஆதாரம் ஒன்று ... |
| தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Posted: மின் சிக்கனத்தை கடைபிடிக்க, அரசு அலுவலகங்களில், சாதாரண டியூப் லைட்டிற்கு பதில், எல்.இ.டி., பல்ப் பொருத்துமாறு, மின் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியை விட அதிகம் உள்ளதால், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, மின் வாரியம் சார்பில், மின் தடை, மின் கட்டுப்பாடு உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, 'லைட் எமிடிட்டிங் டியோட்ஸ் - எல்.இ.டி.,' என்ற, நவீன பல்ப், குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தை தருகிறது. அதன்படி, 40 வாட்ஸ் திறன் கொண்ட, சாதாரண டியூப் லைட்டில் கிடைக்கும் வெளிச்சம், 20 வாட்ஸ் ... |
| 'இந்தியா தான் முதல் எதிரி': ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு! Posted: பெஷாவர்: ''இந்தியா தான் நமக்கு முதல் எதிரி,'' என, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத், பெஷாவர் பேரணியில் பேசினான்.காஷ்மீரில் பிரிவினைவாதிகளை கைது செய்தது மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹபீஸ் சயீத் பெஷாவரில் பேரணி நடத்தினான்.பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி எம்.பி.,க்கள் கலந்து கொண்ட இந்த பேரணியில், ஹபீஸ் பேசும்போது, ''காஷ்மீர் விடுதலைக்காக போராடும் பிரிவினைவாதிகள், பாக்., அரசு, ராணுவம் ஆகியவற்றுக்கு துணை நிற்போம்,'' என்றான்.இதை தொடர்ந்து, பாக்., தொலைக்காட்சிக்கு அவன் ... |
| அமைச்சரை நியமிக்க லஞ்சம்: ராஜபக் ஷேவுக்கு சிக்கல் Posted: கொழும்பு: எதிர்க்கட்சி எம்.பி.,யிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அமைச்சர் பதவி வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவுக்கு, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு புலனாய்வு ஆணையம் (சி.ஐ.ஏ.பி.ஓ.சி.,) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த ஜனவரியில், இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சி எம்.பி.,யான, திசா அட்டநாயகே, திடீரென்று ஆளுங்கட்சிக்கு தாவி, அமைச்சரானார். அவரை, லஞ்சம் கொடுத்து இழுத்துக் கொண்டதாக, ராஜபக் ஷே மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரிக்க, வரும், 24ம் தேதி ஆஜராகுமாறு, ராஜபக் ஷேவுக்கு, சி.ஐ.ஏ.பி.ஓ.சி., நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ... |
| 'ஹால்மார்க்' முத்திரை தங்கம் வாங்குங்க: தர நிர்ணய ஆணையம் அறிவுரை Posted: சென்னை: 'தங்கம் வாங்கும்போது கவனமாக இருங்கள்; ஹால்மார்க் முத்திரையுள்ள தரமான நகைகளை மட்டுமே வாங்குங்கள்; போலி நகைகளைக் கண்டு ஏமாற வேண்டாம்' என, இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது, பெரும்பாலான மக்களின் நம்பிக்கை. அட்சய திருதியை, இன்று கொண்டாடும் நிலையில், இரண்டு நாட்களாக, நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. முன்கூட்டியே முன்பதிவு செய்து, அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க காத்திருப்போரும் உண்டு. இந்த நிலையில், இந்திய தர நிர்ணய ஆணையத்தின், 'ஹால்மார்க்' மைய ஒருங்கிணைப்பாளர் ... |
| யோகேந்திர யாதவ், பூஷன் ஆகியோர் கல்தா : ஆம் ஆத்மி ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி Posted: புதுடில்லி: கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட நான்குபேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இந்தப் பிரச்னையால், கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்து, இருவரும் நீக்கப்பட்டனர். அத்துடன், 'கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறித்து விளக்கம் தர வேண்டும்' என, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 21,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |