Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்!

Posted: 20 Apr 2015 12:33 PM PDT

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். கூகுள் நிறுவனம் மிகத் திறம் வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில் நுட்ப உலகில் களம் இறங்கியது. அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட்போன்கள் தொலைந்துபோனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கென பிரத்தியேகமாக ஒரு அப்ளிகேசன் உருவாக்கப்பட்டு ...

பரீட்சையில் தோல்வியா? கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

Posted: 20 Apr 2015 12:11 PM PDT

பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது! விதைத்து பயிர் வளர்த்த விவசாயிகள் அறுவடைக்கு காத்திருப்பது போன்று, பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்கு காத்திருக்கிறார்கள். 'நிறைய மதிப்பெண் கிடைக்கும். டாக்டர், என்ஜினீயரிங் படிப்பில் வெற்றிகரமாக சேர்ந்து அதிக செலவில்லாமல் படித்து முடித்து விடலாம்' என்று எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் ஒருவகை. இந்த வகை மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள் என்று பெயரெடுத்திருப்பார்கள். அதனால் அவர்களது பெற்றோரும், நண்பர்களும், ...

தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!

Posted: 20 Apr 2015 12:04 PM PDT

முருங்கை... நுனி முதல் வேர் வரை மருத்துவப்பயன் மிக்கது என்பதால் இதை பிரம்ம விருட்சம் என்பார்கள். முருங்கையில் இரண்டு வகை உண்டு. முருங்கை மற்றும் காட்டு முருங்கை. முதல் வகை முருங்கையில் சோற்று முருங்கை, பனி முருங்கை, கோடை முருங்கை, நீர் முருங்கை போன்றவற்றை உண்பதன் மூலம் நோய்கள் நீங்கும். சோற்று முருங்கையின் காயை உண்டால் அது எலும்பினுள் உள்ள பசைக்கு பலம் சேர்க்கும். மஜ்ஜையை அதிகப்படுத்தும். மேலும், கல்லீரலில் பித்தத்தை சுரக்க வைக்கும் இந்த சோற்று முருங்கையின் கீரை எக்காலத்திலும் கிடைக்கக்கூடியது. ...

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Posted: 20 Apr 2015 11:47 AM PDT

மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் வழக்குகளில் பெரும் பாலானவைகள் குடும்ப பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. நீதி கேட்டு மகளிர் காவல் நிலைய வாசலை தட்டுபவர்களுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது சமீபகாலமாக மகளிர் காவல்நிலையங்களுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு! சம்பவம் 1: சென்னை நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகன் ஆனந்துக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் 2013 நவம்பரில் திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ...

ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!!

Posted: 20 Apr 2015 11:34 AM PDT

நீதிபதி: ஏம்மா போன மாசம்தானே உனக்கும் உன் கணவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தேன். மறுபடியும் சேர்த்து வைக்கச் சொல்லி வந்திருக்கிறியே...? பெண்: அந்த ஆள் என் கண்ணு முன்னாடியே சிங்கிளா சந்தோஷமா திரியறான் சார்.. சகிச்சுக்கு முடியலை! என்னா ஒரு வில்லத்தனம்... கணவர்: டாக்டர் பல்லு பிடுங்கணும். எவ்ளோ செலவாகும்? டாக்டர்: பல்லு பிடுங்க ரூ. 200 தான். ஆனா, பல்லு பிடுங்கும் போது வலிக்காம இருக்க ஒரு ஊசி போடுவேன். அதுக்கு ரூ. 500 ஆகும். கணவர்: வேணாம் டாக்டர். ...

டிவிட்டரின் மருத்துவ சேவை

Posted: 20 Apr 2015 11:26 AM PDT

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர், வாடிக்கையாளர்களுக்கு மருத்துவம் சார்ந்த புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. நோய் மற்றும் மருத்துவம் சார்ந்த கருத்துகளை டிவிட்டரில் வெளியிடும்போது அது சார்ந்த மருத்துவ சிகிச்சை எங்கு கிடைக்கும், எந்த மருத்துவமனையில் நோயாளிக்கு இடம் உள்ளது என்பது போன்ற விவரங்களையும் பக்கவாட்டில் இடம் பெறச் செய்கிறது டிவிட்டர். இதனால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஆரோக்கியம் காக்கலாம். முதல்கட்டமாக அமெரிக்காவில் இந்த வசதி அறிமுகம் ...

சவுதி அரேபியாவில் , "மகளிர் மட்டும்"கிளை!!

Posted: 20 Apr 2015 11:16 AM PDT

சவுதி அரேபியாவில் டிசிஎஸ் பிபிஓ நிறுவனத்தின் புதிய கிளை!!: "மகளிர் மட்டும்" சென்னை: டிசிஎஸ் நிறுவனம் சவுதி அரேபியாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் வணிக செயலாக்க அயலாக்க (பிபிஓ) மையத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தை அமைக்கும் பணியில் சவுதி ஆரம்கோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் டிசிஎஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் 3,000 பெண்களுக்கு வேலை அளிக்க முடியும் என டிசிஎஸ் நிறுவனம் மகிழ்ச்சியாக தெரிவித்தது. இப்புதிய நிறுவனத்தில் பங்கிட்டில், டிசிஎஸ் நிறுவனம் ...

உலக மசாலா: பிரம்மாண்டமான செல்ஃபி மோகம்!

Posted: 20 Apr 2015 11:11 AM PDT

- – பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் மிகப் பிரம்மாண்டமான சிலை கிறிஸ்ட் தி ரிடீமர். 124 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை மீது ஏறியிருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தியாகோ கொரியா. 27 வயது தியாகோவுக்கு 2012-ம் ஆண்டில் இருந்து செல்ஃபி எடுக்கும் பழக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. சிறப்பு அனுமதி பெற்று, சிலை மீது ஏறி, செல்ஃபிகளை எடுத்துத் தள்ளியிருக்கிறார் தியாகோ. இவ்வளவு உயரமான சிலை மீது நின்று செல்ஃபி எடுத்தது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார் தியாகோ. பார்க்கிறப்பவே ...

தேசிய மனித உரிமை கமிஷன்

Posted: 20 Apr 2015 11:08 AM PDT

1993 மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய மனித உரிமை கமிஷன் உருவாக்கப்பட்டது. 1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் நாள் இந்த அமைப்பு உருவானது. ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் கொண்டது. லோக்சபை சபாநாயகர், மத்திய உள்துறை அமைச்சர், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர், ராஜிய சபை துணைத் தலைவர், ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய ஒரு கமிட்டியின் பரிந்துரைக்கு ஏற்ப குடியரசுத் தலைவரே மனித உரிமை கமிஷன் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை நியமிக்கிறார். தேசிய சிறுபான்மை கமிஷன் மற்றும் ...

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!

Posted: 20 Apr 2015 11:07 AM PDT

சென்னை: தமிழகத்தில் தற்போது சந்து, பொந்தெல்லாம் சாமனியர்கள் கூட பேசி வருகின்ற வார்த்தை "நெட் நியூட்ராலிட்டி". அதைப்பற்றி ஆளாளுக்கு வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கினாலும், முக்கால்வாசி பேருக்கு "நெட் நியூட்ராலிட்டி" என்றால் என்ன என்பதே இன்னும் விளங்கவில்லை என்பதுதான் உண்மை. அதனை விளக்கும் வகையிலும், இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு காமெடியான குறும்படத்தை வெளியிட்டுள்ளனர் சென்னை சூப்பர் டிசைன்ஸ் என்ற குழுவினர்.

நிலை -கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Posted: 20 Apr 2015 11:02 AM PDT

உண்மை மலிந்து பொய்கள் வியாபாரம் செய்யப்படும் இலாபச்சந்தை அகிலம். வறுமைப்பட்ட கற்புக்கரசி தன் உடலை விலை பேசுகிறாள். மானம் காத்த பருத்தித்துணி நாகரிகம் பறிக்கும் ஆயுதம். கல்லூரி வாசல்கள் விபாச்சாரத்திற்கு ஒத்திகை பார்க்கும் அரங்கேற்றம். திறமை சாளிக்கும் சமுதாயம் கொடுக்கும் பட்டம் தூக்கு கயிறு தாய்க்கும் சேய்க்குமிடையில் தாய்ப்பாலெனும் பந்தமில்லை. பிச்சைக்காரனுக்கு சில்லறை போடாமல் அவன் பிச்சையை துடிதுடிக்க அபகரிக்கும் காலம்.கால எல்லை நிர்ணயிக்கப்பட்ட கல்யாண அநாகரிகம் ...

ரியல் ஹீரோஸ்!

Posted: 20 Apr 2015 11:00 AM PDT

சீனாவில் வசிக்கும் சுற்றுச் சூழலின் நண்பர்கள் இருவர் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். ஜியா ஹாய்ஸாவும் ஜியா வென்கியும் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரங்களை நட்டிருக்கிறார்கள். 53 வயது ஜியா ஹாய்ஸா பார்வை இழந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் பார்வை இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இன்னொரு கண்ணின் பார்வையும் பறிபோனது. ஜியா வென்கி 3 வயதில் ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்தவர். இருவரும் வேலை தேடிக்கொண்டிருந்தபோது நண்பர்களானார்கள். `ஹாய்ஸாவுக்கு நான் கண்ணாக இருக்கிறேன். ...

நுரையீரல் பாதிப்பைத் தடுக்கும் 'பீன்ஸ்'!

Posted: 20 Apr 2015 10:37 AM PDT

சுவாச மையமான நுரையீரலைக் காக்க விரும்புபவர்கள் 'பீன்ஸ்' சாப்பிட வேண்டும். பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல், காற்று மாசுபடுதலாலும் தற்போது அதிகம் பாதிக்கப்படுகிறது. பெருகிய வாகனங்களால் காற்றும், சுற்றுச்சூழலும் மாசுபட்டிருப்பதால், சுமார் 60 சதவிகிதம் பேர் அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாக ஓர் ஆய்வு ...

காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

Posted: 20 Apr 2015 10:35 AM PDT

தேங்காய் - கையில் எடுத்து குலுக்கிப்பாருங் கள். உள்ளே தண்ணீர் இருக்கவேண்டும். தேங்காயின் கண்கள் இருக்கும் பகுதியை லேசாக அழுத்திப்பாருங்கள். அமுங்காமல் இருந்தால் நல்ல தேங்காய். முட்டைக்கோஸ் - கெட்டியாக, பளிச்சென்று புதிதாக இருக்கவேண்டும். உருளைக்கிழங்கு - பழையது என்றால் அமுங்கும். புதியது கெட்டியாக இருக்கும். பார்த்து வாங்குங்கள். கீரைத்தண்டு - ஒடித்துப்பாருங்கள். வளையாமல் ஒடிந்துவிடவேண்டும். முள்ளங்கி - வேர்கள் தோன்றாமல் இருப்பது நல்லது. நிறமும் நம்மை கவரும்படி அமைந்திருக்கவேண்டும். பச்சை ...

சீன கிராமிய கதை: எண்ணம் மாறியது!

Posted: 20 Apr 2015 10:33 AM PDT

சீனாவில் சொல்லப்படும் கிராமிய கதைகளில் ஒன்று இது. பார்வையால் ஒருவரை சரியாக எடைபோட முடியாது என்பதை விளக்குகிறது கதை. ஷாங், தனது கோடரி காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டு பையன் லீ மீது சந்தேகம் வந்தது. ஷாங் அடிக்கடி அவனை கவனித்திருக்கிறான். லீ ஜன்னலின் வழியாக தன் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் நெற்றியில் பயங்கரமான தழும்பு ஒன்று இருப்பது தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும். நெற்றித் தழும்பும், குறுகுறு பார்வையும் அவனை திருடன் போல காட்டும். எனவே ...

ஒரு கை ஓசை

Posted: 20 Apr 2015 10:30 AM PDT

கதிர்வேல் மூன்று வருட சிறைவாசம் முடித்து விட்டு வெளியே வந்தான். பஸ் ஏறி ஊரை நோக்கி புறப்பட்டவனின் மனம் அஞ்சலையை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் பஸ்சை விட வேகமாக பயணித்தது. அஞ்சலை கதிர்வேலின் முறைப்பெண். அவள் பட்டம் படித்தவள். தனது முறைமாமன் படிக்கவில்லை என்றாலும் அவனையே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தாள். 'அப்போதே மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவளது அழகில் செழுமை கூடியிருக்கும்' என்று மனத்திரையில் அவளை நினைக்கும்போதே கதிர்வேல் மனம் தேனாக இனித்தது. அதேவேளையில் ...

இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி

Posted: 20 Apr 2015 10:27 AM PDT

கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சுரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும், ...

கருமித்தனம்!

Posted: 20 Apr 2015 10:25 AM PDT

முன்னொரு காலத்தில், கொடுங்கையூர் என்ற கிராமத்தில் சண்முகம் என்ற தங்க நகை வியாபாரியும், உதயகுமார் என்ற வைர நகை வியாபாரியும் இருந்தனர். இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்தனர். இருவருக்கும் நல்ல முறையில் வியாபாரம் நடந்தன. அதனால், இருவர் கைகளிலும் ஏராளமான பணம் புரண்டன. ஒருமுறை இருவரும் வெகுதூரத்திலுள்ள நகரத்திற்கு, வியாபாரத்திற்காக சென்றனர். அந்த நகரில் இருக்கும் பல பணக்காரர்கள் வீட்டு விருந்தினராக ஒருசில நாட்கள் தங்கினர். அந்தப் பணக்காரர்கள் எல்லாரும் வெளியூரில் இருந்து ...

மாணவர்களுக்கு பயனுள்ள அப்ளிகேசன்கள்

Posted: 20 Apr 2015 10:21 AM PDT

எப்போதும் ஸ்மார்ட்போனும், கையுமாக இருந்தும் உங்களுக்கு அவசியமான பல்வேறு அப்ளிகேசன்கள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லையா? இதோ ஆண்ட்ராய்டு போனில் செயல்படும் சில பயனுள்ள அப்ளிகேசனை தெரிந்து கொள்ளுங்கள்... டாஸ்கர் : அன்றாட பணிகளை பட்டியலிட்டு செய்ய உதவுகிறது இந்த அப்ளிகேசன். இதன் மூலம் எல்லா பணிகளையும் வரிசைப்படியும், மறக்காமலும் செய்யலாம். மேலும் அந்த பணிகளுக்கு இடையூறாக இருக்கும் சில தடங்கல்களையும் தடுக்கிறது டாஸ்கர். அதாவது நீங்கள் நூலகத்தில் இருக்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தால் ...

அழகை அள்ளிக் கொள்ள ஆசை!

Posted: 20 Apr 2015 10:17 AM PDT

பெண்கள் அவசரமாக எங்கே கிளம்பிப்போனாலும், அதற்குள் ஒருமுறை கண்ணாடி முன்பு நின்று 'முகத்தில் பவுடர் சரியாக பூசப்பட்டிருக்கிறதா? துல்லியமாக கண்மை இட்டு, பொட்டு பொருத்தமாக அமைந்திருக்கிறதா?' என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான், வெளியே கிளம்புகிறார்கள். எல்லாம் சரியாக இருந்தால்தான் முகத்தில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தவழும். சின்ன குறைபாடு தெரிந்தாலே எல்லாமே 'பொசுக்'கென்று போனதுபோல் இருக்கும். முன்பெல்லாம் 'ஐபுரோ' செய்யவும், பேஷியல் செய்யவும் குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருந்தார்கள். ...

கத்திரிக்காய் அசடு

Posted: 20 Apr 2015 10:14 AM PDT

கத்திரிக்காய் அசடு --கூட்டு பிஞ்சு கத்திரிக்காய் 10 பலம் பச்சை மிளகாய் 5/6 புளி--பெரிய பாக்குக் கோட்டை அளவு உப்பு 1 1/4 டீஸ்பூன் துவரம் பருப்பு -1/2 ஆழாக்கு கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 11/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் 2 பெருங்காயம் ,கறிவேப்பிலை, மஞ்சள் பொடி ரெண்டு சிமிட்டா எண்ணெய் 2--3 கரண்டி முட்டை அளவு செய்முறை கத்திரிக்கா யை நீளவாட்டத்தில் மெல்லியதாக நறுக்கவும் பச்சை மிளகாயை ரெண்டாக நறுக்கிக் கொள்ளவும் . துவரம்பருப்பை வேகவிட்டுக் கொள்ளவும் கற்சட்டியில் ரெண்டு ...

உலகச் செய்திகள்!

Posted: 20 Apr 2015 10:05 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ரத்னம் டா...மணிரத்னம் டா...

Posted: 20 Apr 2015 09:41 AM PDT

ரத்னம் டா...மணிரத்னம் டா... சென்னை: தாலியை வைத்து இயக்குனர் மணிரத்னம் எப்படி எல்லாம் படம் எடுத்துள்ளார் என்பதை விளக்கும் தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் தாலி சென்ட்டிமென்டும் என்றும் பிரிக்க முடியாதது ஆகும். ஒரு படத்தில் கூட விவேக் கூறுவார் இந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து எத்தனை டிவி சீரியல் எடுத்தாலும் ஓடும் என்று. அத்தகைய தாலி சென்டிமென்ட்டை வைத்து பல காலம் படம் இயக்கி வருபவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தில் தாலி கட்டாமல் கணவன் மனைவி ...

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 20 Apr 2015 09:22 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 20 Apr 2015 09:20 AM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 20 Apr 2015 09:12 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்... ஆனா, .

Posted: 20 Apr 2015 09:06 AM PDT

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்... ஆனா, . நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . --- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்... ரயில் ஏறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும்... இதுதான் வாழ்க்கை பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்... ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா.. ஃபுல்லு வருமா..?? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!! ...

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Posted: 20 Apr 2015 09:00 AM PDT

-- 1) மியான்மரில் எந்த முறை ஆட்சி நடைபெறுகிறது? - 2) அக்மார்க் ஆய்வகங்களின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது? - 3) சைபர் நகரம் cyber city எங்குள்ளது? - 4) எந்த நாட்டின் கொடி இந்திய தேசியக் கொடி போல இருக்கும்? - 5) சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது? - 6) முதன் முதலில் டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்ட கோபி பாலைவனம் எங்குள்ளது? - 7) உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது? - 8) எந்த நாடு இந்தியாவிற்கு முதல் முதலாக யுரேனியம் தருவதாக அறிவித்துள்ளது? - 9) எந்த நாடு ...

நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Posted: 20 Apr 2015 08:55 AM PDT

நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அட்சய திரிதியை நாளில் அன்னதானம் செய்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். அட்சய திரிதியை நாளில் தானம் செய்வது ...

மது அருந்துங்கள் ....பரிசுகளை அள்ளுங்கள்

Posted: 20 Apr 2015 08:52 AM PDT


-

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Posted: 20 Apr 2015 08:02 AM PDT

புதுடெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மயக்கவியல் பிரிவு மருத்துவராக இருந்தவர் ப்ரியா வேதி. 31 வயதான இவருக்கும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கமல் வேதி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரிடையே தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் ...

கல்யாண சத்திரத்துக்கு எப்படிங்க போகணும்?

Posted: 20 Apr 2015 07:50 AM PDT

- கல்யாண சத்திரத்துக்கு எப்படிங்க போகணும்? – மொய்யோட போகணும்..! – ———————————— – ஷாஷகான் மும்தாஜூக்காக தாஜ்மகால் கட்டினான். நான் உனக்காக… – அதெல்லாம் வேண்டாம். மரியாதையா தாலியைக் கட்டிடுங்க…! – ————————————— – நம்ம ஊரிலே ட்ரூ பிஸ்கட் எங்கே கிடைக்கும்…? – அரிச்சந்திரா அன்ட் கோ-விலே கிடைக்கும்..! – ————————————– – சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் கிரேடிலே என்ன வித்தியாசம்? – மரியாதையிலே கேட்கிறியா? மாமூல்ல கேட்கிறியா..? – ————————————- kungumam- ...

தை‌-மா‌த சீ‌சன்‌..!

Posted: 20 Apr 2015 06:35 AM PDT

- மனி‌தன்‌ – பி‌றக்‌கும்‌ போ‌ழுது தான்‌ அழுது இறக்‌கும்‌ போ‌ழுது மற்‌றவர்‌களை‌ அழவை‌ப்‌பவன்‌. – ————————- கண்‌ணதா‌சன்‌ – கற்‌பனை‌க்‌கு எட்‌டா‌த கா‌லத்‌தா‌ல்‌ அழி‌க்‌கமுடி‌யா‌த தெ‌ய்‌வ கவி‌ஞன்‌. – ————————– – தை‌-மா‌த சீ‌சன்‌ – மலர்‌களுக்‌கும்‌ கனி‌களுக்‌கும்‌ மட்‌டுமல்‌ல பெ‌ண்‌களுக்‌கும்‌ தா‌ன்‌. – ————————– வா‌னவி‌ல்‌ – பல வண்‌ணங்‌களி‌ல்‌ வரும்‌ இவர்‌ தா‌ன்‌ வர்‌ணங்‌களி‌ன்‌ தலை‌வன்‌ – ————————— ஸ்ரீதேவிகுமரேசன்

நடிப்பு என்று வந்து விட்ட பிறகு எல்லைக்கோடு போட முடியுமா..?

Posted: 20 Apr 2015 06:28 AM PDT

- இனியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பும் நஹி. குத்துப்பாட்டுக்கு ஆடும் வாய்ப்பு கிடைப்பது என்பதும் குதிரைக்கொம்பு என்ற நிலையில், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகவும், வில்லி வேடத்தில் நடிக்க வும் ஆர்வம் காட்டுகிறாராம். 'வாகை சூட வா' படத்தில் அவ்வளவு சிறப்பாக நடித்து என்ன பயன்? அதற்குப் பிறகு ஒரு படம் கூட முத்தாய்ப்பாக அமையவில்லையே? என்று வருத்தப்படும் அவர், தன் மார்க்கெட் சரிவுக்கு என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். - ------------------------------------- -அப்பாவின் ...

கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே!

Posted: 20 Apr 2015 06:24 AM PDT

ரமேஷ் எப்படியோ 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுவிட்டான். 9-ம் வகுப்பிற்கு புதிய பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் அவனுக்கு சரியாக படிக்க வரவில்லை. ஓரிரு மாதங்களிலேயே பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான். பெற்றோர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ரமேஷ் ஒரேயடியாக, 'முடியாது' என்று மறுத்துவிட்டான். 'சரி என்ன செய்ய கொஞ்ச நாள் வீட்டில் இருக்கட்டும். அப்படியாவது படிப்பில் அக்கறை வருகிறதா என்று பார்ப்போம். இல்லாவிட்டால் எங்களைப்போல கூலி வேலைக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய ...

எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன்

Posted: 20 Apr 2015 06:07 AM PDT

மத்திய–மாநில அரசுகள், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. பிளஸ்–2 வரை அரசே அனைத்து உதவிகளையும் வழங்கும் நிலையில், இன்றைய இளைஞர் சமுதாயம் அதற்குமேல் உயர் தொழில்கல்வி படிப்பதைத்தான் தங்களின் வாழ்க்கை லட்சியமாக கொண்டுள்ளனர். அத்தகைய உயர்கல்வியை நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களால் தங்கள் குடும்பத்தின் வருமானத்தை கொண்டு நிச்சயமாக படிக்கமுடியாது. மாணவர்களுக்கு ஒளிமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதற்காக வழிகாட்டும் ஒரு ஆபத்பாந்தவனாகத்தான் வங்கிகளில் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை ...

கிஸா பிரமிடுகள்!

Posted: 20 Apr 2015 06:01 AM PDT

உலக அதிசயங்களில் ஒன்று எகிப்தின் பிரமிடுகள். இது எல்லாரும் அறிந்த உண்மைதான். அரச குடும்பத்தினரின் இறந்த உடல்கள் மீண்டும் உயிர் பெரும் என்ற நம்பிக்கை காரணமாக, அவர்களது உடல்களை பாதுகாக்கும் இடமாக இத்தகைய பிரமிடுகள் அமைக்கப்பட்டன. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை ஒட்டிய புறநகர் பகுதியில் அமைந் துள்ளது கிஸா. இங்குள்ள நைல் நதி கரையோரம் சுமார் 4ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய "கிஸா பிரமிடு' உள்ளது. 146 மீட்டர் உயரத்திலான இந்தப் பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. ...

யாருக்குப் பலம் - சிறுவர்கதை

Posted: 20 Apr 2015 05:44 AM PDT

யானைக்கும், சிங்கத்திற்கும் தானே வல்லமையானவன் என்ற ஆணவம் இருந்தது. எனவே அவை ஒன்றுக்கொன்று பகையாய் இருந்தன. இவற்றின் பகையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்தது சுண்டெலி. ஒருமுறை யானை படுத்திருந்த சமயம், சுண்டெலி அதன் வயிற்றில் ஏறி விளையாடி அதற்கு கோபத்தை உண்டாக்கியது. 'டே சுண்டக்கா சுண்டெலி என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா? உன்னை சட்னி ஆக்குகிறேன் பார்' என்று வேகமாக எழுந்தது யானை. சுண்டெலி ஓடிப்போய் சிறிது தொலைவில் நின்று கொண்டு சிரித்தது. 'விலங்கு இனத்திலேயே பெரியவன் நான். பலத்திலும் ...

'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'.

Posted: 20 Apr 2015 05:38 AM PDT

'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'...இத பாடலை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடுவார் என்று நினைக்கிறேன்......அது எந்த படம் என்று யாராவது சொல்ல முடியுமா?............. சிவன் தன் கை இல் உள்ள ஓடு என்ன செய்தாலும் விட்டு அகலாது கஷ்டப்படும்போது, தாய் அன்னபூரணி பிக்ஷை போட்டதும் அந்த ஓடு மறைந்து விடும்.............அதை காட்டும் படம் வேண்டும் நண்பர்களே.........அது எந்த படம் என்று சொல்ல முடியுமா? அன்புடன், கிருஷ்ணாம்மா

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Posted: 20 Apr 2015 03:19 AM PDT

வேளச்சேரி : நடைபயிற்சிக்கு வந்த, 60க்கும் மேற்பட்ட முதியவர்களை திடீரென அழைத்த போலீசார், பாதுகாப்பு குறித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். வேளச்சேரி, 100 அடி சாலை மற்றும் பூங்கா, பெரிய தெருக்களில், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். அதிகாலையில், மூதாட்டிகளை வழிமறித்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் வேளச்சேரி பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த முதியவர்கள், 60க்கும் மேற்பட்டோரை அழைத்த வேளச்சேரி போலீசார், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், போலீசார் விடுத்த ...

M.R. ராதாயணம் - முகில்

Posted: 20 Apr 2015 03:11 AM PDT

கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை. அவர் நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் எந்தத் கதாநாயகரைக் காட்டிலும் பெரும் புகழ் பெற்றவராக் இருந்தார். 'ராமாயணம்' புகழ் கொடுத்தது வாழ்மீகிக்கும் கம்பனுக்கும் மட்டுமல்ல.ராதாவுக்கும் கூட. அந்த ...

‘ஓர் இரவு': கமல் – த்ரிஷாவை இயக்கும் அறிமுக இயக்குநர்

Posted: 20 Apr 2015 03:05 AM PDT

-- கமல்ஹாசன் – த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளதாக தெரிகிறது. – 'மன்மதன் அம்பு', 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் ராஜேஷ்" என்று படக்குழு தெரிவித்தது. – 'ஓர் இரவு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க மொரீஷியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. – இப்படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும். உலகளவில் ...

ஓ காதல் கண்மணியின் ஒரு டயலாக் ..!

Posted: 20 Apr 2015 02:57 AM PDT


-

ஓ காதல் கண்மணியின் ஒரு டயலாக் இதோ:

"அப்பா, என் ரூம்ல இவ தங்கறா"

"அப்போ நீ?"

"நானும் அங்கயேதான் தங்குவேன்"

"ஓ…மேரேஜே பண்ணியாச்சா?"

"இல்ல..அதுல நம்பிக்கை இல்ல"
=

வேடிக்கையான போட்டோக்கள் ...பார்த்துமகிழ :)

Posted: 20 Apr 2015 01:53 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™