Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி, அமித் ஷா பெங்களூருவில் மூன்று நாட்கள் முகாம்: தேசிய செயற்குழுவில் இன்று முக்கிய ஆலோசனை

Posted:

பெங்களூரு: பெங்களூரில் நேற்று துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ள, பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள, பிரதமர் மோடி, மூன்று நாட்களும் அங்கேயே தங்கியிருந்து, கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் பிற முன்னணி தலைவர்களுடன், கட்சி வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் முறையாக நடக்க உள்ள, அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், கர்நாடகா தலைநகர், பெங்களூரில் இன்று துவங்குகிறது. காங்கிரசை சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி, கர்நாடகாவில் ...

அத்தியாவசிய பட்டியலில் மேலும் சில மருந்துகளை சேர்க்க திட்டம்: அடுத்த சில நாட்களில் வெளியாகிறது முறையான அறிவிப்பு

Posted:

மும்பை: அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில், எய்ட்ஸ் மற்றும் காசநோயைத் தடுக்கும், மேலும் சில மருந்துகளைச் சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், பல மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு உருவாகி உள்ளது.

உயிர் காக்கும் மருந்துகளின் விலை அதிகமாக இருக்கக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு, விலை கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. அத்துடன், அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில், 400 மருந்துகளையும் சேர்த்துள்ளது. இதன் மூலம், இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு குறைவான விலையில் கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், எய்ட்ஸ் மற்றும் காசநோயைத் தடுக்கும் சில ...

ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டி: மோடி ஏற்பாடு

Posted:

ஆமதாபாத்: வரும் 2024ல், குஜராத்தின் ஆமதாபாத் நகரில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வேண்டிய ஏற்பாடுகளை, பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக், கடந்த முறை, 2012ல், லண்டனில் நடைபெற்றது. வரும் 2016ல், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ளது. இந்தியாவில் இந்தப் போட்டிகள், இதுவரை நடந்ததில்லை. முதல் போட்டி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடத்த, மோடி விரும்புகிறார். இப்போதைய நிலையில், 2020ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி, ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற ...

'மனநல மருத்துவ செலவை ஏற்க தயார்': காங்கிரஸ் கிண்டல்

Posted:

''மனநல மருத்துவமனைக்கு, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை, அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால், மருத்துவச் சிகிச்சைக்கான செலவை, ஏற்க தயார்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ் பப்பர், தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், ''சோனியா வெள்ளைத் தோலுடையவராக இல்லாவிட்டால், காங்கிரஸ், தன் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்குமா,'' என்று, கூறியிருந்தார். இந்த பேட்டி, கடும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, கிரிராஜ் சிங், தன் வருத்தத்தை தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தை மையமாக வைத்து, காங்கிரஸ், போராட்டங்களில் இறங்கியுள்ளது. ...

அதிகாரி கெம்கா 45வது முறையாக இடமாற்றம்: இந்த முறை பழி வாங்குவது பா.ஜ., அரசு

Posted:

புதுடில்லி: அரியானாவில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா, 45வது முறையாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியானா பா.ஜ., அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வெளிச்சத்திற்கு வர...:
அரியானாவில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, காங்., தலைவர் சோனியாவின் மருமகனான ராபர்ட் வாத்ராவின் நிலபேர ஊழலை வெளிச்சத்திற்கு வர வைத்தவர், அம்மாநில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா, 49. கடந்த, 24 ஆண்டுகளாக, அரியானாவில் பணியாற்றி வரும் இவர், தற்போது, 45வது முறையாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். போக்குவரத்து துறை ஆணையராக இருந்த அவர், ...

'தண்டனையை குறையுங்கள்...': கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை: 'தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தண்டனையைக் குறைக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளான, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரை, அடுத்து நடைபெறவுள்ள மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நீண்ட தொடர், அதன் பின் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடர் என, 10 நாட்களுக்கு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சபாநாயகர் தடை விதித்துள்ளார். இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டும், சபாநாயகர் பிடிவாதமாக ஏற்கவில்லை. உரிமைக் குழுவில், தண்டனையைக் குறைக்கும் ...

தமிழகம் வரும் காவிரியில் 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலப்பு: கர்நாடக அமைச்சர் கருத்தால் புதிய சர்ச்சை

Posted:

'தமிழகத்துக்கான காவிரி நீரில், தினமும், 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீரும் அனுப்பப்படுகிறது' என, கர்நாடகா மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மொத்த தண்ணீரில் பயன்படுத்துவது, நீராவியாவது தவிர, மீதமுள்ள தண்ணீர், கழிவு நீராக, பல வகைகளில், தினமும், தமிழகத்துக்கு செல்வதாகவும், இந்த கழிவு நீரில், ரசாயன பொருட்கள் கலந்திருப்பதால், அதை பயன்படுத்தும் மக்களுக்கு, உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை, கர்நாடகா மேலவையில், சிறிய நீர்ப்பாசன துறை ...

கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்: பாஸ்போர்ட் பறிப்பால் சிக்கல்

Posted:

மலேசியாவில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக, அழைத்துச் சென்ற ஏஜன்ட், பந்து பொறுக்கி போடும் வேலையை தான் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், சிவகாசி இளைஞர் தவித்து வருகிறார்.

பி.பி.ஏ., பட்டதாரி:
சிவகாசி, சசி நகரைச் சேர்ந்தவர் ராஜா கனி; பெயின்டர். இவரது மனைவி அஞ்சாதேவி. இவர்களின் மகன் அருண்பிரசாத், 24; பி.பி.ஏ., பட்டதாரி. இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கீதா மற்றும் ரத்தினசாமி ஆகியோர், அருண்பிரசாத்திடம், மலேசியாவில், கணினி ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகக் ...

அனல் பறக்கும் அம்மா குடிநீர் விற்பனை

Posted:

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அம்மா குடிநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப, 2,000 பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு, 12 பாட்டில்கள்) கூடுதலாக, அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில், 2013 செப்., 15ம் தேதி முதல், அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம், 10 ரூபாய் விலை கொண்ட, 'அம்மா' குடிநீர் பாட்டில் விற்பனை துவங்கப்பட்டது. இதற்காக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில், மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 304 ஸ்டால்களில் குடிநீர் விற்பனை நடக்கிறது. நாள்தோறும், மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி இலக்கு ...

இலங்கையில் மீன் பிடிக்க இந்தியர்களுக்கு அனுமதி இல்லை: சிறிசேன அறிவிப்பு

Posted:

யாழ்ப்பாணம்: 'இலங்கைக் கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க, இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது' என, அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம், இலங்கை தலைநகர் கொழும்புவில் வியாழக்கிழமை நடைபெற்றது. எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவராகிய, மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.அண்மையில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™