Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தமிழில் வருமா குறுந்தகவல்கள்?

Posted: 02 Apr 2015 01:23 PM PDT

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் புழக்கத்தில் கணினியில் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.

தாமதங்களைத் தவிர்க்க முடியும்

Posted: 02 Apr 2015 01:22 PM PDT

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை புரிந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நாடு திரும்பியவுடன், செய்தியாளர்களின் வினாக்களுக்கு விடையளித்தபோது, இந்திய நிர்வாக முறை நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்று சொல்லிச் சிரித்தார்.

சட்டம் போட்டால் ஆயிற்றா?

Posted: 02 Apr 2015 01:20 PM PDT

இரண்டு பேரின் மரணத்துக்கு காரணமான ஒரு சாலை விபத்தில் வாகனத்தை ஓட்டிய நபருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறைத் தண்டனையை, பஞ்சாப் நீதிமன்றம் 24 நாள்களாக குறைத்ததை உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது.

கூட்டத் தொடர் - விவாதத்திற்கு வெளியே...

Posted: 02 Apr 2015 01:08 PM PDT

நடந்து முடிந்த கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுகவும், அதைத் தடுக்கும் முயற்சியில் அதிமுகவும் ஈடுபட்டன.

சோனியா குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: மத்திய அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய பிகார் நீதிமன்றம் உத்தரவு

Posted: 02 Apr 2015 01:06 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, போலீஸாருக்கு பிகார் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வங்கிக் கடன்: பெருநிறுவனங்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும்

Posted: 02 Apr 2015 01:03 PM PDT

"வங்கிகளுக்கு பெரு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2.60 லட்சம் கோடி நிலுவையில் இருப்பதால், அந்த நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தினார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்எல்ஏக்களின் விடுதி அறைகள் மூடல்

Posted: 02 Apr 2015 01:02 PM PDT

சட்டப் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆறு தேமுதிக எம்எல்ஏக்களின் விடுதி அறைகள் பூட்டப்பட்டன. எம்எல்ஏக்களுக்கு உரிய சலுகைகளை அவர்கள் ஆறு பேரும் பெற முடியாது என்ற பேரவைத் தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து விடுதி அறைகள் மூடப்பட்டன.

போலி அகவிலைப் படி உயர்வு அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

Posted: 02 Apr 2015 01:01 PM PDT

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனிலிருந்து மேலும் 300 இந்தியரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை

Posted: 02 Apr 2015 01:00 PM PDT

யேமன் நாட்டின் ஏடன் நகரில் சிக்கித் தவிக்கும் மேலும் 300 இந்தியர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

Posted: 02 Apr 2015 12:55 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.

"மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் மக்களுக்கு துன்பம்'

Posted: 02 Apr 2015 12:48 PM PDT

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் உத்தரப் பிரதேச மக்கள் இரட்டைத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.

அமைதியைச் சீர்குலைக்க முயன்றால் நடவடிக்கை: கர்நாடக முதல்வர் சித்தராமையா

Posted: 02 Apr 2015 12:46 PM PDT

கர்நாடகத்தில் அமைதியைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

ஒரே நாளில் 13.45 லட்சம் ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு

Posted: 02 Apr 2015 12:45 PM PDT

ரயில் பயணிகளின் வசதிக்காக பயணச்சீட்டுகளின் முன்பதிவை 60 நாள்களிலிருந்து 120 நாள்களாக ரயில்வே அமைச்சகம் நீட்டித்தது. அந்த வசதியைப் பயன்படுத்தி ஒரே நாளில் 13.45 லட்சம் பயணச்சீட்டுகள் இணையதளம் மூலமாக புதன்கிழமை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்புக்கு உதவியவர்களை கெளரவிக்கிறது மத்திய அரசு: ஆஸம் கான் தாக்கு

Posted: 02 Apr 2015 12:42 PM PDT

பாபர் மசூதி இடிப்புக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை கெளரவிக்கவே, மத்திய பாஜக அரசு அவருக்கு நினைவிடம் அமைக்கவிருப்பதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஆஸம் கான் குறை கூறினார்.

விளையாட்டுத் துறையில் இந்தியா முன்னேற்றம் காணும்: ராஜ்நாத் சிங்

Posted: 02 Apr 2015 12:41 PM PDT

வரும் காலங்களில் விளையாட்டுத் துறையில் இந்தியா முன்னேற்றம் காணும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தெலங்கானா: மர்ம நபர்கள் சுட்டு 2 போலீஸார் பலி

Posted: 02 Apr 2015 12:40 PM PDT

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீஸார் நள்ளிரவில் வாகனச் சோதனை மேற்கொண்டபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 காவலர்கள் பலத்த காயமடைந்தனர்.

"புகையிலை தீங்கல்ல': பாஜக எம்.பி பேச்சு

Posted: 02 Apr 2015 12:40 PM PDT

"தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கமுடைய பலர் எவ்வித நோயுமின்றி வாழ்ந்து வருகின்றனர்' என்று பாஜக எம்.பி. ஷியாம் சரண் குப்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தாக்கிய கணவர்

Posted: 02 Apr 2015 12:39 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே தொடர்ந்து மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் தனது மனைவியை தொடர்ந்து 3 நாள்களாக அடித்து, துன்புறுத்திய கணவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஏப்ரல் 8-இல் திரிணமூல் பேரணி

Posted: 02 Apr 2015 12:38 PM PDT

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏப்ரல் 8-இல் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பேரணி நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது.

கோவில்பட்டி

Posted: 02 Apr 2015 12:38 PM PDT

நிலம் கையக மசோதா குறித்து தேசிய செயற்குழுவில் ஆலோசிக்கப்படும்

Posted: 02 Apr 2015 12:38 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் சட்டம், கங்கையைத் தூய்மையாக்கும் திட்டம் உள்பட நாட்டின் முக்கியப் பிரச்னைகள் குறித்து பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன் தெரிவித்தார்.

நாகர்கோவில்

Posted: 02 Apr 2015 12:37 PM PDT

முதல்வர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாடு

Posted: 02 Apr 2015 12:37 PM PDT

மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாடு தில்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறவுள்ளது.

6இல் திருக்கோளூர் அக்கரை மகாதேவர் சிவாலய ராஜகோபுர குடமுழுக்கு

Posted: 02 Apr 2015 12:36 PM PDT

திருக்கோளூர் அக்கரைமகாதேவர் சிவாலய ராஜகோபுர குடமுழுக்கு விழா திங்கிள்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது.

மகாவீரர் ஜெயந்தி விழா

Posted: 02 Apr 2015 12:33 PM PDT

கோவில்பட்டியில் மகாவீரர் ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விளாத்திகுளம்: 1841 பேருக்கு மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர்

Posted: 02 Apr 2015 12:32 PM PDT

விளாத்திகுளம் வட்டத்திற்கு உள்பட்ட மந்திகுளம், ஆற்றங்கரை, கவுண்டன்பட்டி  ஆகிய மூன்று ஊராட்சிகளில் 1841 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

9 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள்: மத்திய அரசு திட்டம்

Posted: 02 Apr 2015 12:31 PM PDT

காங்கிரஸ் ஆளும் 5 மாநிலங்கள் உள்பட 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணியிட மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி கெம்கா வேதனை

Posted: 02 Apr 2015 12:30 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அம்பலப்படுத்திய ஹரியாணா மாநில ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா, தாம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு வேதனை தெரிவித்தார்.

ஜாட் இடஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

Posted: 02 Apr 2015 12:29 PM PDT

ஜாட் சமூகத்தினருக்கு "இதர பிற்படுத்தப்பட்டோர்' பிரிவில் இடஒதுக்கீடு வழங்கும் அறிவிக்கையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி, மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மோடிக்கு எதிராகப் போராட்டம்: காங்கிரஸ் தொண்டர்கள் கைது

Posted: 02 Apr 2015 12:29 PM PDT

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய மும்பை மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் மற்றும் அக்கட்சித் தொண்டர்கள், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விமான நிலைய வளாகத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Posted: 02 Apr 2015 12:28 PM PDT

திருச்சி விமான நிலைய வளாகத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருச்சி விமான நிலையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் அ. சந்தானசாமி (46). தொழிலாளியான இவருக்கு

மகாவீர் ஜெயந்தி தின நாளில் மதுவிற்ற 3 பேர் கைது: 116 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Posted: 02 Apr 2015 12:28 PM PDT

மகாவீர் ஜெயந்தி தின நாளில் திருச்சி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்ற 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பொதிகை விரைவு ரயிலில் மின்கசிவு தீ விபத்து, குளிர்சாதனமும் பழுது 3 இடங்களில் ரயில் நிறுத்தப்பட்டது

Posted: 02 Apr 2015 12:28 PM PDT

திருச்சியருகே பொதிகை விரைவு ரயிலில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. மேலும் குளிர்சாதனமும் பழுதானதால் 2 இடங்களில் ரயில் நிறுத்தப்பட்டது பின்னர் புறப்பட்டது. இதன் காரணமாக சுமார் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

குறுகிய மனப்பான்மையினரின் விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாது

Posted: 02 Apr 2015 12:28 PM PDT

குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தன் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.

கழுகுமலை, ஆத்தூரில் பங்குனித் தேரோட்டம்

Posted: 02 Apr 2015 12:28 PM PDT

கழுகுமலை, ஆத்தூர் கோயில்களில் வியாழக்கிழமை பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெற்றது.

சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை இளைஞர்கள் தட்டி கேட்க முன்வரவேண்டும :டிராபிக் ராமசாமி

Posted: 02 Apr 2015 12:28 PM PDT

சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை இளைஞர் தட்டி கேட்க வேண்டும் என்றார் டிராபிக் ராமசாமி. திருச்சி பெல் தேசிய தொழிலாளர் சங்கம் சார்பில் பெல் பிரதான நுழைவு வாயில் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: சமுதாயத்தில் நடக்கும்

ஆதரவற்ற குழந்தைகளை அன்னை ஆசிரமத்தில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Apr 2015 12:27 PM PDT

 தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கம் சார்பில் திருச்சி, வினோபா நகரில் இயங்கும் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளைச் சேர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என சங்கத்தின் பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

துவாக்குடி அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

Posted: 02 Apr 2015 12:27 PM PDT

திருச்சி துவாக்குடி அருகே வியாழக்கிழமை இரவு அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஏப்.5இல் செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

Posted: 02 Apr 2015 12:26 PM PDT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மகாவீரர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 02 Apr 2015 12:26 PM PDT

மகாவீரர் பிறந்த நாள் விழா அரக்கோணத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீஜெயின் சங்கம் சார்பில், அரக்கோணம் பஜார் தெருவில் நடைபெற்ற விழாவுக்கு பி.ஜவுரிலால்

முதுநிலை மருத்துவம் படித்தால் உடனடி வேலைவாய்ப்பு

Posted: 02 Apr 2015 12:26 PM PDT

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு இணையதளம் வாயிலாக உடனடியாக அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்கும்

மகாவீரர் பிறந்த நாளில் இறைச்சி விற்பனை

Posted: 02 Apr 2015 12:25 PM PDT

மகாவீரர் ஜெயந்தி நாளில், ஆம்பூர், மாதனூரில் இறைச்சிகள் விற்பனை வழக்கம்போல நடைபெற்றது. அனைத்து உயிர்களுக்கும் துன்பம் நேரக் கூடாது என்பதை வலியுறுத்திய மகாவீரரின் ஜெயந்தி நாளில்

ஏப்ரல் 04 மின் தடை

Posted: 02 Apr 2015 12:25 PM PDT

சேது கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

Posted: 02 Apr 2015 12:25 PM PDT

சேது கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் தூத்துக்குடி வளர்ச்சி அடையும் என சென்னை தமிழ் வர்த்தக தொழில் சங்கத் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் கூறினார்.

திமுக சார்பில் ரத்த தான முகாம்

Posted: 02 Apr 2015 12:24 PM PDT

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெமிலி ஒன்றிய திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் 75 பேர் ரத்த தானம் செய்தனர்.

வேலூரில் 6-இல் திமுக ஆர்ப்பாட்டம்:மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Posted: 02 Apr 2015 12:24 PM PDT

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஏப்ரல் 6-இல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

புனித வியாழன்:ஏழைகளின் பாதங்களை கழுவிய மறைமாவட்ட ஆயர்

Posted: 02 Apr 2015 12:24 PM PDT

புனித வியாழனையொட்டி, தூத்துக்குடியில் மிகவும் பழமை வாய்ந்த திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆராதனையில் மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் ஏழைகள் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்

திறமைகளை வெளிப்படுத்த மாணவர்களுக்கு அறிவுரை

Posted: 02 Apr 2015 12:24 PM PDT

திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என ஏடிஜிபி ஷகில் அக்தர் அறிவுறுத்தினார்.

கணினிப் பயிற்றுநருக்கான காலிப் பணியிடம்:தேர்வர்களுக்கு நாளை கலந்தாய்வு

Posted: 02 Apr 2015 12:23 PM PDT

பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட 652 கணினிப் பயிற்றுநர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கான நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

வங்கியில் ரூ.94 லட்சம் மோசடி: மும்பை இளைஞர் கைது

Posted: 02 Apr 2015 12:23 PM PDT

வங்கியில் போலி ஆவணங்களை அளித்து ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக, மும்பையைச் சேர்ந்த ரூபேஷ்சந்திர ஓராவை (35) போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

குதிரை மீதிருந்து விழுந்து 7 வயதுச் சிறுமி பலி

Posted: 02 Apr 2015 12:23 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், அலிபாக் நகரில் குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி அதிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

"செல்வ மகள்' சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்

Posted: 02 Apr 2015 12:23 PM PDT

அஞ்சல் துறை சார்பில் "செல்வமகள்' சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் எதிரே அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேர்ணாம்பட்டு அஞ்சல் அதிகாரி வனிதா தலைமை

கைக் குழந்தையுடன் பெண் தீயில் கருகி சாவு

Posted: 02 Apr 2015 12:23 PM PDT

காட்பாடியில் கைக் குழந்தையுடன் இளம்பெண் தீயில் கருகி இறந்தார்.

கொம்மடிக்கோட்டை கோயிலில் உழவாரப் பணி

Posted: 02 Apr 2015 12:23 PM PDT

கொம்மடிக்கோட்டை கோயில்களில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.

சாலை விபத்தில் இளைஞர் பலி

Posted: 02 Apr 2015 12:22 PM PDT

குடியாத்தம் பிச்சனூர் நரி முருகப்ப தெருவைச் சேர்ந்த தேவராஜ் மகன் சிவகுமார் (42), சாலை விபத்தில்இறந்தார்.

பூச்சி மருந்து குடித்த தொழிலாளி சாவு

Posted: 02 Apr 2015 12:22 PM PDT

ஆம்பூர் அருகேயுள்ள தேவலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட ராமசந்திராபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தொழிலாளி வெங்கடேசன் (24), பூச்சி மருந்து குடித்து இறந்தார்.

யேமன்: இலங்கை நாட்டினரை மீட்க இந்தியா உதவி

Posted: 02 Apr 2015 12:22 PM PDT

யேமனில் உள்ள இலங்கை நாட்டினரை மீட்க உதவி செய்யுமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக இலங்கை வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இனி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Apr 2015 12:21 PM PDT

சமூக நலத் துறையில் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

"வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

Posted: 02 Apr 2015 12:21 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

905 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 02 Apr 2015 12:21 PM PDT

வேலூரில் 905 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும்படை வட்டாட்சியர் தமீம், தனி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பள்ளிக்குப்பம்

பசுவதைத் தடுப்புச் சட்டம்: மாடுகளின் புகைப்படங்களை கேட்கும் மகாராஷ்டிர போலீஸார்

Posted: 02 Apr 2015 12:21 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் பசுவதைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்துக்காக, மாடுகளின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களை அதன் உரிமையாளர்கள் தர வேண்டும் என்று மாலேகான் நகர ரோலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

பெங்களூரில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Posted: 02 Apr 2015 12:20 PM PDT

ஏப்ரல் 04 மின்தடை

Posted: 02 Apr 2015 12:20 PM PDT

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.4) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐடியூசி தொழிலாளர் சங்கக் கூட்டம்

Posted: 02 Apr 2015 12:18 PM PDT

எட்டயபுரத்தில் ஏஐடியூசி தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது

Posted: 02 Apr 2015 12:17 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அமலிநகரில் என்.எஸ்.எஸ். முகாம்

Posted: 02 Apr 2015 12:15 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அமலிநகரில் நடைபெற்றது.

வாகனம் மோதி மான் சாவு

Posted: 02 Apr 2015 12:14 PM PDT

கோவில்பட்டி அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் இறந்தது.

அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது

Posted: 02 Apr 2015 12:13 PM PDT

கயத்தாறில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட முயன்ற இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

நிஜமாவா இருக்கும்..!

Posted: 02 Apr 2015 12:12 PM PDT

பசுமைப் படை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 02 Apr 2015 12:11 PM PDT

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில் தேசிய பசுமைப் படை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் சிறந்த தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக அழைப்பு

Posted: 02 Apr 2015 12:10 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 02 Apr 2015 12:04 PM PDT

சாத்தான்குளத்தில் போலி மது மற்றும் கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 110 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

Posted: 02 Apr 2015 12:03 PM PDT

தூத்துக்குடியில் வியாழக்கிழமை தடை உத்தரவை மீறி கடையில் விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சிகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.

குமரியில் நான்குவழிச் சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு போதிய இழப்பீடு

Posted: 02 Apr 2015 12:02 PM PDT

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு தற்போதைய நில வழிகாட்டு பதிவேடு மதிப்பின்படி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

குலசேகரம் கன்னியாஸ்திரிக்கு அரசு விருது

Posted: 02 Apr 2015 12:00 PM PDT

குலசேகரம் கன்னியர் இல்ல தலைமை அருள்சகோதரிக்கு தமிழக அரசின் "வாழும் கைவினைப் பொக்கிஷம்' என்ற விருது வழங்கப்பட்டது.

திருத்துவபுரம் தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கு

Posted: 02 Apr 2015 11:59 AM PDT

திருத்துவபுரம் மூவொரு இறைவன் தேவாலயத்தில் வியாழக்கிழமை பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது. இச் சடங்கை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் மேற்கொண்டார்.

வியர்க்க வியர்க்க மணக்கும் வாசனைத் திரவியம்!

Posted: 02 Apr 2015 11:59 AM PDT

எவ்வளவு அதிகமாக வியர்க்கிறதோ, அந்த அளவுக்கு நறுமணம் அளிக்கும் புதிய வாசனை திரவியத்தை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

Posted: 02 Apr 2015 11:58 AM PDT

திருவண்ணாமலையில் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சிலுவைப்பாதை வழிபாடு

Posted: 02 Apr 2015 11:58 AM PDT

குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திக்ரித் படுகொலை: வீரர்கள் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தது

Posted: 02 Apr 2015 11:58 AM PDT

திக்ரித் நகரில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இராக் ராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டுள்ள இடம் கண்டறியப்பட்டது.

15ஆண்டுகளாகமூடிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

Posted: 02 Apr 2015 11:58 AM PDT

வந்தவாசியை அடுத்த மங்கலம் மாமண்டூர் கிராமத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சுமார் 15 ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடியே கிடக்கிறது.

ஆப்கனில் தற்கொலை தாக்குதல்: 16 பேர் சாவு

Posted: 02 Apr 2015 11:58 AM PDT

ஆப்கானிஸ்தானில் ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குலில் 16 பேர் உயிரிழந்தனர்.

"அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை'

Posted: 02 Apr 2015 11:57 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்தார்

சவூதியை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை: பாகிஸ்தான் எச்சரிக்கை

Posted: 02 Apr 2015 11:57 AM PDT

சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் எச்சரித்தது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

Posted: 02 Apr 2015 11:57 AM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நடைபெறுகிறது.

20 ஆண்டுகளில் விண்வெளியில் மின் நிலையம் நிறுவப்படும்

Posted: 02 Apr 2015 11:57 AM PDT

இருபது ஆண்டுகளில் விண்வெளியில் மின் நிலையம் நிறுவப்படும் என்றார் திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி ராஜீவன்.

"ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க ராணுவ நடவடிக்கைக்கும் தயார்'

Posted: 02 Apr 2015 11:57 AM PDT

ஈரான் அணு ஆயுத பலம் பெறுவதைத் தடுக்க ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் கையாளத் தயார் என இஸ்ரேல் உளவுத் துறை அமைச்சர் யுவால் ஸ்டீனிட்ஸ் வியாழக்கிழமை கூறினார்.

சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 02 Apr 2015 11:57 AM PDT

 வந்தவாசி அரசு மருத்துவமனை சார்பில்,தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வந்தவாசி மேற்கு பாடசாலையில் புதன்கிழமை நடைபெற்றது.

யேமன் சிறை மீது அல்-காய்தா தாக்குதல்: 300 பயங்கரவாதிகள் தப்பினர்

Posted: 02 Apr 2015 11:56 AM PDT

யேமனில் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறை மீது அல்-காய்தா நடத்திய தாக்குதலையடுத்து, 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தப்பினர்.

நாளை கணினிப் பயிற்றுநர்களுக்கான இணையதள கலந்தாய்வு

Posted: 02 Apr 2015 11:56 AM PDT

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள கணினிப் பயிற்றுநர்களுக்கான இணையதள கலந்தாய்வு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 4) நடைபெறுகிறது.

ஏப்ரல் 04 மின் தடை

Posted: 02 Apr 2015 11:56 AM PDT

மீன்பிடிக் கப்பல் மூழ்கி 54 பேர் சாவு

Posted: 02 Apr 2015 11:55 AM PDT

ரஷியாவில் மீன்பிடிக் கப்பல் கடலுக்குள் மூழ்கியதில் 54 மாலுமிகள் உயிரிழந்தனர். 15 பேரைக் காணவில்லை.

அரசுக் கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு

Posted: 02 Apr 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணி நிறைவு பெற்ற முதல்வருக்குப் பாராட்டு விழாவும், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் ஆண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழுதடைந்த சாலையால் அரசுப் பேருந்து நிறுத்தம்

Posted: 02 Apr 2015 11:55 AM PDT

செங்கத்தில் இருந்து மண்மலை, செ.நாச்சிப்பட்டு அமர்நாதபுதூர் வழியாக முன்னூர்மங்கலம் வரை செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால், அந்த வழியாகச் செல்லும் அரசு நகரப் பேருந்து அமர்நாதபுரத்துடன் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், பள்ளி மாணவர்களும், பொதுமக்களு

முஷாரஃபுக்கு எதிராக கைது உத்தரவு

Posted: 02 Apr 2015 11:55 AM PDT

பல முறை அழைப்பாணை விடுத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.

மர்மக் காய்ச்சல்: சிறுமி சாவு

Posted: 02 Apr 2015 11:54 AM PDT

திருவண்ணாமலையில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்தார். திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலை, சூர்யா நகரைச் சேர்ந்தவர் அமித் பாஷா (32).

1,171 பயனாளிகளுக்கு ரூ.47.62 லட்சம் மதிப்பிலான விலையில்லாப் பொருள்கள்

Posted: 02 Apr 2015 11:54 AM PDT

செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த கோவிலூர், அசனமாபேட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1,171 பயனாளிகளுக்கு ரூ.47.62 லட்ச மதிப்பிலான விலையில்லாப் பொருள்களை அமைச்சர் முக்கூர்.என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வழங்கினார்.

மணல் கடத்தலைத் தடுத்த எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 02 Apr 2015 11:54 AM PDT

செய்யாறு அருகே மணல் கடத்தலைத் தடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கடந்த நிதி ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு 31 சதவீதம் அதிகரிப்பு

Posted: 02 Apr 2015 11:54 AM PDT

கடந்த 2014-2015 நிதி ஆண்டின் இறுதியில் பரஸ்பர நிதி நிறுவனங்களில் செலுத்தப்பட்ட முதலீடுகள் 31 சதவீதம் அதிகரித்து, அதன் மதிப்பு ரூ. 11.88 லட்சம் கோடியாக உள்ளது என்று இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் தெரிவித்தது.

இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த முதியவர் சாவு

Posted: 02 Apr 2015 11:54 AM PDT

திருவண்ணாமலை அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார். திருவண்ணாமலை, வேங்கிக்கால், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™