Tamil News | Online Tamil News |
- பார்லி.,யில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை முறியடிக்க மோடி அரசு வியூகம்: நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேற்றி சாதிக்க தீவிரம்
- டில்லி விவசாயிகள் பேரணியில் சோனியா, ராகுல் சபதம்: நில மசோதாவுக்கு எதிராக போராட போவதாக அறிவிப்பு
- விவசாயிகளுக்கு ஆதரவானது எங்கள் அரசு: பிரதமர் நரேந்திர மோடி
- கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் நிதி தரலாம்: பா.ஜ., - காங்., இந்த விஷயத்தில் ஒற்றுமை
- 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் பரிசுப்பொருட்கள் வாங்கினால் தெரிவிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு உத்தரவு
- கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை: மத்திய அரசு புதிய முயற்சி
- சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு
- பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி குழு: முதல்வருக்கு விஜயகாந்த் கோரிக்கை
- வேட்டிக்கு மீண்டும் தடை: ஓட்டலில் இருவர் விரட்டியடிப்பு: தமிழக அரசு எச்சரித்தும் பலனில்லை
- டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்க முடிவு
- ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்
- 'வீண் கூச்சல் பயன் தராது': டிராய் தலைவர் ஆணவம்
| Posted: பார்லிமென்டில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற, நரேந்திர மோடி அரசு புதிய வியூகம் அமைத்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க முடியாத சூழல் உருவானால், பார்லி., கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனதுக்கு உள்ளான காப்பீட்டு மசோதா, நிலக்கரி சுரங்க மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் நிறைவேற்றி காட்டியது. இந்த ... |
| டில்லி விவசாயிகள் பேரணியில் சோனியா, ராகுல் சபதம்: நில மசோதாவுக்கு எதிராக போராட போவதாக அறிவிப்பு Posted: புதுடில்லி: ''தொழிலதிபர்களுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு பாதகமான, நிலம் கையகப்படுத்தும் மசோதா, எந்த வடிவில் வந்தாலும், அதை எதிர்த்து போராடுவேன்; தொழிலதிபர்களிடம் வாங்கிய பணத்திற்காக, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, தொழிலதிபர்களிடம் வழங்க, பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் பேசினார்.டில்லி, ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பேரணியில், ராகுல் பேசியதாவது:லோக்சபா தேர்தலில், மோடி எவ்வாறு வெற்றி பெற்றார் தெரியுமா... தொழிலதிபர்களிடம் ஏராளமான பணத்தை பெற்று, அதை தேர்தலில் ... |
| விவசாயிகளுக்கு ஆதரவானது எங்கள் அரசு: பிரதமர் நரேந்திர மோடி Posted: புதுடில்லி: ''இயற்கை சீற்றங்களின் போது, 50 சதவீத பயிர்கள் நாசமாகியிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என இருந்ததை மாற்றி, 33 சதவீத சேதம் இருந்தாலே இழப்பீடு வழங்கலாம் என, விதிமுறைகளை மாற்றி அமைத்து உள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.பார்லிமென்ட் இன்று கூட உள்ள நிலையில், பா.ஜ., - எம்.பி.,க்கள் மத்தியில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:நமது அரசு, ஏழைகளுக்கான அரசு; விவசாயி கள் நலன் காக்கும் அரசு. ஆனால், பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படும் காங்கிரஸ் போன்ற சில கட்சிகள், தொழிலதிபர்களுக்கு ஆதரவான அரசு என, பொய்யான புகார் கூறி ... |
| கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் நிதி தரலாம்: பா.ஜ., - காங்., இந்த விஷயத்தில் ஒற்றுமை Posted: புதுடில்லி: அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நிதியுதவி வழங்கலாம் என, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்திய நிலையில், 'அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நிதி அளிக்கக் கூடாது; அதை தடை செய்ய வேண்டும்' என, குட்டி கட்சிகள் தெரிவித்தன.தேர்தல் சீரமைப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து, மத்திய சட்டத்துறையுடன் இணைந்து, கடந்த மாதம், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.அந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் கருத்துகளின் அடிப்படையில் வரைவு அறிக்கை ஒன்றை தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது. ... |
| 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் பரிசுப்பொருட்கள் வாங்கினால் தெரிவிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு உத்தரவு Posted: புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், பிறரிடம் இருந்து, 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் பரிசுப்பொருட்கள் வாங்கினால், அதற்கு முன், மத்திய அரசுக்கு, அது குறித்து தெரிவிக்க வேண்டும். அதுபோல, நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏதாவது ஒரு நிதி அல்லது பொருளை பெற்றால், அதுகுறித்த தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன், 1,000 ரூபாய்க்கு மேல் பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்கள் பெற்றால், அது குறித்து அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என இருந்தது, இப்போது, தொகை, 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதுபோல, நண்பர்கள், ... |
| கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை: மத்திய அரசு புதிய முயற்சி Posted: புதுடில்லி: இன்று கூட உள்ள பார்லிமென்ட் கூட்டத்தில், கறுப்புப் பண மசோதா நிறைவேறினால், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்க, 'ஒத்துழைப்பு சாளரம்' என்ற பெயரில் சிறப்பு சலுகை அளிக்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இந்தியாவில் மற்றும் பிற நாடுகளில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சில இந்தியர்கள், வெளிநாட்டு வங்கிகள் சிலவற்றில் பதுக்கியுள்ளனர். அத்தகைய கறுப்புப்பண முதலைகள் பட்டியலை பெற்றுள்ள மத்திய அரசு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்காக, புதிய, கறுப்புப் பண மசோதாவை, கடந்த மார்ச் 21ல், ... |
| சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு Posted: புதுடில்லி: சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க, வெளியுறவுத் துறைக்கு, இந்திய உளவு அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சுற்றுலா அல்லது வேலைக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு, 'விசா' வழங்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவிலிருந்து, ரஷ்யா செல்ல விரும்புகிறவர்களுக்கு, ரஷ்யா, விசா வழங்குகிறது.இதன் மூலம், யார், யார் தன் நாட்டிற்கு வந்துள்ளனர்; அவர்கள் எண்ணிக்கை, விவரம் போன்றவற்றை, சம்பந்தப்பட்ட நாடுகள் பராமரிக்க முடியும்.அன்னியச் செலாவணியை அதிகரிக்கவும், சுற்றுலா துறையை மேம்படுத்தவும், விசா கட்டுப்பாடுகளை, மத்திய ... |
| பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி குழு: முதல்வருக்கு விஜயகாந்த் கோரிக்கை Posted: சென்னை: ''மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்திஉள்ளார். |
| வேட்டிக்கு மீண்டும் தடை: ஓட்டலில் இருவர் விரட்டியடிப்பு: தமிழக அரசு எச்சரித்தும் பலனில்லை Posted: சென்னை: 'வேட்டி அணிந்து செல்ல தடை விதித்தால், உரிமத்தை ரத்து செய்வோம்' என, தமிழக அரசு எச்சரித்துள்ள நிலையில், வேட்டி அணிந்து சென்ற இரண்டு பேர், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. |
| டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்க முடிவு Posted: புதுடில்லி: டில்லியில் இயக்கப்படும், 'மெட்ரோ' ரயில் திட்டத்தின் கூடுதல் புதுமையாக, விரைவில் செயல்படுத்தப்பட உள்ள, மூன்றாவது கட்ட மெட்ரோ வழித்தடங்களில், டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 58 கி.மீ., நீளம் கொண்ட, முகுந்த்பூர் - சிவ் விஹார் வழித்தடம் மற்றும் 34 கி.மீ., நீளம் கொண்ட ஜனக்புரி (மேற்கு) - பொட்டானிக்கல் கார்டன் வழித்தடத்தில், மெட்ரோ ரயில்களை இயக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள வழித்தடங்களில் இல்லாத, புதுமையான முறையாக, டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.அதுபோல, ... |
| ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம் Posted: புதுடில்லி: ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, ஐ.ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:நம் நாட்டில், தினமும், 20 லட்சம் பேர் ரயில்களில் பயணிக்கின்றனர். இவர்களில், 52 சதவீதம் பேர், இணையதளம் மூலம் டிக்கெட் 'புக்' செய்து பயணிப்பவர்கள். இவர்களுக்கு மேலும் பல வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பயணிகளின் உடைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு ... |
| 'வீண் கூச்சல் பயன் தராது': டிராய் தலைவர் ஆணவம் Posted: புதுடில்லி: ''இணைய பயன்பாட்டில் பாரபட்சமற்ற சமத்துவ நிலை வேண்டும் என, ஓங்கி கூச்சலிடுவதால் எதையும் சாதிக்க முடியாது,'' என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ராகுல் குல்லார் ஆணவமாக பேசியுள்ளார். மொபைல்போன்களில், 'வாட்ஸ் அப், ஸ்கைப்' போன்ற பயன்பாடுகளால், தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் புலம்புகின்றன. அதனால், இவ்வகை சேவைகளுக்கு கட்ட ணம் நிர்ணயிப்பது உட்பட, பல்வேறு அம்சங் கள் கொண்ட வரைவறிக்கையை, டிராய் வெளியிட்டுள்ளது. இந்த வரைவறிக்கை குறித்து, கருத்துக்களை தெரிவிக்க, மே 8ம் தேதி வரை அவகாசம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 20,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |