Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மக்களவை இன்று கூடுகிறது: நிலம் கையக புதிய மசோதா தாக்கலாகிறது

Posted: 19 Apr 2015 12:57 PM PDT

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக மக்களவை திங்கள்கிழமை மீண்டும் கூடுகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நிலம் கையக சட்டத் திருத்த புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரி: அனைத்துக் கட்சிக் குழுவினருடன் பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும்

Posted: 19 Apr 2015 12:55 PM PDT

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பன்னீர்செல்வம் அனைத்துக் கட்சி குழுவினருடன் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தினர்.

காவலில் ஹுரியத் தலைவர்கள்: பாகிஸ்தான் கண்டனம்

Posted: 19 Apr 2015 12:54 PM PDT

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கும், பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கும் பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

தொடர்ந்து வீட்டுக் காவலில் ஹுரியத் தலைவர்கள்

Posted: 19 Apr 2015 12:53 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர்கள் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக், சையது அலி ஷா கிலானி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பரிசுப்பொருள் பெறுவதற்கு புதிய விதிமுறை

Posted: 19 Apr 2015 12:52 PM PDT

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.), இந்திய வனக்காவல் பணி (ஐ.எஃப்.ஓ.எஸ்.), ஆகிய 3 பிரிவுகளைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகள், ரூ.5ஆயிரத்துக்கும் மேல் பரிசு பெறுவதற்கு, மத்திய அரசிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி: தேர்தலை நேர்மையாக நடத்துவதே நோக்கம்

Posted: 19 Apr 2015 12:51 PM PDT

தேர்தலை நேர்மையாக நடத்துவதே நோக்கம் என்று இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.நஜீம் ஜைதி தெரிவித்தார்.

வளர்ச்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்: ஜேட்லி

Posted: 19 Apr 2015 12:49 PM PDT

கடந்த 9 மாதங்களில் இந்தியா கண்டுள்ள 7.4 சதவீத வளர்ச்சியானது, நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதை உணர்த்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் போராடும்: சோனியா உறுதி

Posted: 19 Apr 2015 12:48 PM PDT

"ஆட்சியில் இல்லாவிட்டாலும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்' என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

தவறாக வழி நடத்தினார்!

Posted: 19 Apr 2015 12:40 PM PDT

தவறாக வழி நடத்தினார்!

சீனர்களுக்கு மின்னணு இசைவுச் சீட்டு: மத்திய அரசு திட்டம்

Posted: 19 Apr 2015 12:31 PM PDT

சீனர்கள் இந்தியா வருவதற்கான அனுமதியை எளிதாக்க வகை செய்யும், மின்னணு இசைவுச் சீட்டு (இ-விசா) திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்கம்: டிஎம்ஆர்சி திட்டம்

Posted: 19 Apr 2015 12:31 PM PDT

தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் இரு வழித்தடங்களில், மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறைத் தொழில்நுட்பப் பெட்டிகளைக் கொண்ட ஓட்டுநர் இல்லாத ரயில்களை அறிமுகப்படுத்த தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) திட்டமிட்டுள்ளது.

எல்லையில் 2-ஆம் அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு திட்டம்

Posted: 19 Apr 2015 12:30 PM PDT

பயங்கரவாதிகள் ஊடுருவல்களைத் தடுக்கும் வகையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய சர்வதேச எல்லை அருகே, துணை ராணுவத்தினரை உள்ளடக்கிய 2-ஆம் அடுக்கு பாதுகாப்பு வளையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் காஷ்மீர் பிரச்னைக்கு முஃப்தியே தீர்வு காண்பார்

Posted: 19 Apr 2015 12:30 PM PDT

""ஜம்மு-காஷ்மீர் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான முஃப்தி முகமது சயீதை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், காஷ்மீர் பிரச்னைக்கு அவரே தீர்வு கண்டுவிடுவார்'' என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார்.

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்

Posted: 19 Apr 2015 12:29 PM PDT

ஹவாலா முறைகேடு தொடர்பாக மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இக்பால் மிர்ச்சியின் குடும்பத்தினரிடம், அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேக்கேதாட்டு விவகாரத்தில் முரண்பாடாக செயல்படுகிறது கர்நாடக அரசு

Posted: 19 Apr 2015 12:27 PM PDT

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முரண்பட்டு செயல்படுவதாக பாஜக முன்னாள் அமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றஞ்சாட்டினார்.

மாதிரி கிராமம்' திட்டம்:  எம்.பி.க்கள் எதிர்ப்பு

Posted: 19 Apr 2015 12:27 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் "மாதிரி கிராமம்' திட்டத்தில் சில குறைகள் உள்ளதாகக் கூறி, அதைச் செயல்படுத்துவதற்கு சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் மீது துப்பாக்கிச் சூடு

Posted: 19 Apr 2015 12:25 PM PDT

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஏற்பட்ட மோதலின்போது காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது துப்பாக்கியால் சுட்டதாக இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பண்டிட்டுகள் இல்லாமல் காஷ்மீரின் அடையாளம் பூர்த்தியாகாது: பாஜக

Posted: 19 Apr 2015 12:24 PM PDT

"பண்டிட்டுகள் இல்லாமல் காஷ்மீரின் அடையாளம் பூர்த்தியாகாது' என்று ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சுனில் சேத்தி தெரிவித்தார்.

ஹோமியோபதி ஆராய்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

Posted: 19 Apr 2015 12:23 PM PDT

ஹோமியோபதி மருத்துவத் துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக, மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது என்று ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் தலைவர் ஆர்.கே.மன்சந்தா தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: பாகிஸ்தான்

Posted: 19 Apr 2015 12:14 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையேயான வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பா? இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்பு

Posted: 19 Apr 2015 12:13 PM PDT

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்புத் தெரிவித்தது.

ரயில் பயணிகளின் உடைமைகளுக்கு காப்பீடு: அரசு திட்டம்

Posted: 19 Apr 2015 12:13 PM PDT

இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் ரயில் பயணிகளின் விலை உயர்ந்த உடைமைகளுக்கு "உடைமைக் காப்பீடு' வழங்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி) திட்டமிட்டு வருகிறது.

கேரளத்தில் இன்று மாநிலங்களவைத் தேர்தல்

Posted: 19 Apr 2015 12:12 PM PDT

கேரள மாநிலத்தில் இருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது.

கிறிஸ்தவர்களின் மத உரிமைக்கு பாதுகாப்பு கோரி வழக்கு

Posted: 19 Apr 2015 12:11 PM PDT

தில்லியில் தேவாலயங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, கிறிஸ்தவர்களின் மத உரிமைகளுக்கு பாதுகாப்பு கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கடன் மோசடி செய்தவர்களின் பட்டியலை அளிக்க வேண்டும்

Posted: 19 Apr 2015 12:11 PM PDT

நாடு முழுவதிலும் உள்ள பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டவர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

உ.பி.யில் குண்டு வெடிப்பு: சிறுவன் பலி

Posted: 19 Apr 2015 12:09 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூரில் குப்பை மேட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென குண்டு வெடித்ததில், அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் உயிரிழந்தான். 3 சிறுவர்கள் காயமடைந்தனர்.

பர்த்வான் குண்டு வெடிப்பு: ஜார்க்கண்டில் மேலும் ஒருவர் கைது

Posted: 19 Apr 2015 12:09 PM PDT

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர், ஜார்க்கண்ட் மாநில போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

குண்டும் குழியுமான கொடைக்கானல் சாலைகள்

Posted: 19 Apr 2015 12:08 PM PDT

கொடைக்கானல் நகரிலிருந்து முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சீசன் தொடங்கும் முன் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லிபியாவில் படகு விபத்து: நூற்றுக்கணக்கானோர் பலி?

Posted: 19 Apr 2015 12:08 PM PDT

ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக 700 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் தீண்டாமை கொடுமை அதிகரிப்பு: பாலபாரதி எம்.எல்.ஏ.

Posted: 19 Apr 2015 12:08 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் தீண்டாமை கொடுமை அதிகரித்திருப்பதாக பாலபாரதி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம அழகர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Posted: 19 Apr 2015 12:08 PM PDT

சின்னாளபட்டி ஸ்ரீராம அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குற்றவாளிகளை காப்பாற்றவே தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்: பழ.நெடுமாறன்

Posted: 19 Apr 2015 12:07 PM PDT

ஆந்திராவில் மரக் கடத்தல்காரர்களை காப்பாற்றுவதற்காக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

Posted: 19 Apr 2015 12:07 PM PDT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையம் சுமார் 35 ஆண்டுகளுக்கும் முன்பு, 64 சென்ட நிலப்பரப்பில் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 15 பள்ளிகளுக்கு பரிசு

Posted: 19 Apr 2015 12:07 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 5 அரசு பள்ளிகளுக்கு தலா 20 ஆயிரமும், 10 தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்க இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 19 Apr 2015 12:07 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

Posted: 19 Apr 2015 12:06 PM PDT

விருதுநகர் மாவட்ட சாலைப் பணியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் ஆசிரியர் இயக்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

Posted: 19 Apr 2015 12:06 PM PDT

ராமநாதபுரம் அரண்மனை முன் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நிறுவனங்களிடம் நன்கொடை: பாஜக, காங்கிரஸ் ஆதரவு

Posted: 19 Apr 2015 12:06 PM PDT

பெரு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையைத் தொடர வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜகவும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸூம் தெரிவித்துள்ளன.

பணிமனை உதவியாளர், இரவுக் காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

Posted: 19 Apr 2015 12:06 PM PDT

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய பணிமனை உதவியாளர் பணி காலியிடத்துக்கும், மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்துக்கு இரவுக் காவலர் பணிக்கும் பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி அரிமா சங்கம் சார்பில் நலத் திட்ட உதவிகள்

Posted: 19 Apr 2015 12:05 PM PDT

பரமக்குடி அரிமா சங்கம் சார்பில் ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை: 38 ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் நியமனம்

Posted: 19 Apr 2015 12:05 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் 38 ஊராட்சிகளில் குப்பைகள் அகற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட இருப்பதாக, ஆட்சியர் து. முனுசாமி சனிக்கிழமை தெரிவித்தார்

விவசாயிகள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

Posted: 19 Apr 2015 12:05 PM PDT

சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை நடந்தது.

உலக மயமாக்கலின் எதிரொலியே நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்

Posted: 19 Apr 2015 12:04 PM PDT

உலகமயமாக்கலின் எதிரொலியாகவே தமிழகத்தில் அணு உலை, மீத்தேன் வாயு, நியூட்ரினோ ஆய்வு ஆகிய மனித குல அழிவுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

Posted: 19 Apr 2015 12:04 PM PDT

ஒட்டன்சத்திரம் தொகுதியில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை முன்னாள் எம்பி என்.எஸ்.வி.சித்தன், அர.சக்கரபாணி எம்.எல்.ஏ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனர்.

பெரியகுளம் அருகே கோஷ்டி மோதல்: 26 பேர் மீது வழக்கு

Posted: 19 Apr 2015 12:04 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 2 பேரை போ

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தேவையற்றது: அரசு அலுவலர் ஒன்றியம் கருத்து

Posted: 19 Apr 2015 12:04 PM PDT

சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தேவையற்றது என தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் கூறினார்.

தேனியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 19 Apr 2015 12:03 PM PDT

தேனியில் மின் வாரியம் சார்பில் செவ்வாய்க்கிழமை(ஏப்.21) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

கொடைக்கானலில் கூடுதல் போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை

Posted: 19 Apr 2015 12:03 PM PDT

கொடைக்கானலில் சீசனை முன்னிட்டு கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல், தேனியில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 19 Apr 2015 12:03 PM PDT

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல், தேனியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சாணார்பட்டிக்கு புதிய பேருந்து வழித்தடம்

Posted: 19 Apr 2015 12:02 PM PDT

சிவகாசியிலிருந்து-சாணார்பட்டிக்கு புதிய பேருந்து வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு பேருந்தினை செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மனைவிக்குத் தெரியாமல் 2-ஆவது திருமணம்: கணவர் மீது வழக்கு

Posted: 19 Apr 2015 12:02 PM PDT

மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்தவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேத்தூரில் கட்டடத் தொழிலாளர்கள் பேரணி

Posted: 19 Apr 2015 12:02 PM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டடத் தொழிலாளர்கள் சங்க விருதுநகர் மாவட்ட 6 வது மாநாடு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இடி தாக்கி ரூ.7 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் சேதம்

Posted: 19 Apr 2015 12:01 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை இரவு இடி, மின்னல் தாக்கியதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து நாசம் அடைந்தன.

ராமேசுவரத்தில் சதுரங்கப் போட்டி

Posted: 19 Apr 2015 12:01 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் சதுரங்கப் போட்டி ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீட்டில் மதுபானக் கடை நடத்தியவர் கைது

Posted: 19 Apr 2015 12:01 PM PDT

கமுதி அருகே வீட்டில் மதுபானக் கடை நடத்தியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அருந்ததியினருக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

Posted: 19 Apr 2015 12:00 PM PDT

அருந்ததியினருக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அச்சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Posted: 19 Apr 2015 12:00 PM PDT

கமுதியில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டை இணைப்பு விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மனைவிக்குத் தெரியாமல் 2-ஆவது திருமணம்: கணவர் மீது வழக்கு

Posted: 19 Apr 2015 12:00 PM PDT

மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்தவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

Posted: 19 Apr 2015 11:59 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர்

Posted: 19 Apr 2015 11:59 AM PDT

பழனி

Posted: 19 Apr 2015 11:59 AM PDT

"இசை, கலாசார பாரம்பரியத்தை வலுப்படுத்த வேண்டும்

Posted: 19 Apr 2015 11:53 AM PDT

இசை, கலாசாரம், நாட்டியம் ஆகிய மூன்றிலும் உலகில் முதன்மையாக இந்தியா விளங்கி வருகிறது. இதனால், அவற்றை வலுப்படுத்துவதும், பாதுகாப்பதும் அவசியமாகும் என்று குடியரசுத் தலைவரின் ஊடகச் செயலர் வேணு ராஜாமணி வலியுறுத்தினார்.

வீடுகளின் கூரைகளில் சூரிய ஒளி தகடுகள்: என்.டி.எம்.சி.யின் திட்டம் அடுத்த மாதம் அமல்

Posted: 19 Apr 2015 11:52 AM PDT

தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில், வீடுகளின் கூரைகளில் சூரிய ஒளி தகடுகள் பொருத்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகிக்கும் திட்டத்தை, அடுத்த மாதம் முதல் அமல்படுத்த என்.டி.எம்.சி. திட்டமிட்டுள்ளது.

"அனைவரின் மனதையும் தொடுவது இந்தியப் பாரம்பரிய இசை'

Posted: 19 Apr 2015 11:52 AM PDT

கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை உள்ளிட்ட இந்தியப் பாரம்பரிய இசையானது அனைவரின் மனதைத் தொடும் என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கியது ஆம் ஆத்மி அரசு

Posted: 19 Apr 2015 11:52 AM PDT

தில்லி பட்ஜெட் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் ஆம் ஆத்மி அரசின் புதிய முயற்சியை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

அபு சலேமின் கூட்டாளி தில்லியில் கைது

Posted: 19 Apr 2015 11:51 AM PDT

நிழல் உலக தாதா அபு சலேமின் கூட்டாளிகளில் ஒருவரான ஜான் உஸ்மான் (எ) உஸ்மான் கான் (35) தில்லியில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருநங்கைகளை சேர்ப்பதற்காக கொள்கை வகுக்கும் தில்லி பல்கலைக்கழகம்

Posted: 19 Apr 2015 11:51 AM PDT

தில்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் படிவங்களில், பாலினக் கட்டத்தில் திருநங்கை என்ற வாய்ப்பு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை சேர்ப்பதற்கான நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை அப்பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

மெட்ரோ ரயிலில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது

Posted: 19 Apr 2015 11:51 AM PDT

தில்லி மெட்ரோ ரயிலில் நாட்டுத் துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக முன்னா பாண்டே (25) என்பவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

திரிலோக்புரியில் குடியிருப்புவாசிகள் இடையேயான மோதலால் பதற்றம்

Posted: 19 Apr 2015 11:51 AM PDT

கிழக்குத் தில்லியின் திரிலோக்புரியில் இரு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் இடையே சனிக்கிழமை மாலை திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த கல்வீச்சு சம்பவத்தில் சிலர்

தமீம் இக்பால் சதம்: தொடரை வென்றது வங்கதேசம்

Posted: 19 Apr 2015 11:50 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தமீம் இக்பால் சதம் அடித்து உதவ, வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என தொடரை வென்றது.

கணவரால் சுடப்பட்ட பெண் மாடல்

Posted: 19 Apr 2015 11:50 AM PDT

தெற்கு தில்லியின் ஆஷ்ரம் பகுதியில் பெண் மாடல் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு தனது கணவரால் சுடப்பட்டார்.

சஞ்சய் ஜோஷியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி பேனர்கள்

Posted: 19 Apr 2015 11:50 AM PDT

குறுந்தகடு சர்ச்சை காரணமாக கடந்த 2005-ஆம் ஆண்டு கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட, பிரபல பாஜக தலைவரான சஞ்சய் ஜோஷியை மீண்டும் கட்சி நடவடிக்கைகளில் இணைக்கக் கோரி அவருக்கு ஆதரவாக தில்லியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

தில்லி போக்குவரத்து போலீஸுக்கு கட் செவி அஞ்சல் மூலம் 85,000 புகார்கள்

Posted: 19 Apr 2015 11:50 AM PDT

தில்லி போக்குவரத்து போலீஸார் அறிமுகப்படுத்திய கட் செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) உதவி எண்ணில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக இதுவரை சுமார் 85,000 புகார்கள் வந்துள்ளன.

சர்வதேச செஸ்: ஆனந்த் மீண்டும் டிரா

Posted: 19 Apr 2015 11:49 AM PDT

ஆஸர்பெய்ஜானில் நடைபெற்று வரும் ஷம்கீர் செஸ் தொடரின் மூன்றாவது சுற்றை, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.

ரோஹித், உன்முக்த், சிம்மன்ஸ் அதிரடி: மும்பை 209

Posted: 19 Apr 2015 11:49 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூருக்கு எதிராக, ரோஹித் சர்மா, உன்முக்த் சந்த், லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்ட, மும்பை அணி 209 ரன்கள் குவித்தது.

தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

Posted: 19 Apr 2015 11:48 AM PDT

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஜேக்டோ) திருவள்ளூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி

Posted: 19 Apr 2015 11:48 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான்.

விளையாட்டுப் போட்டி: அரசு ஊழியர்களுக்குப் பரிசு

Posted: 19 Apr 2015 11:47 AM PDT

அரசு ஊழியர்களுக்கான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் பரிசுகளை வழங்கினார்.

கவரப்பேட்டையில் ரத்த தான முகாம்

Posted: 19 Apr 2015 11:47 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள தூய்மை, பசுமை அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இல்லத்தரசிகளின் பணிச்சுமையை எளிதாக்கவே விலையில்லா பொருள்கள்

Posted: 19 Apr 2015 11:47 AM PDT

இல்லத்தரசிகளின் அன்றாட பணிச்சுமைகளை எளிதாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் விலையில்லா பொருள்கள் வழங்கப்படுகின்றன என பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறினார்.

ரூ.15 ஆயிரம் மணியார்டர் கையாடல் தபால் ஊழியர் மீது போலீஸில் புகார்

Posted: 19 Apr 2015 11:46 AM PDT

திருவள்ளூர் அருகே மணியார்டர் தொகை ரூ.15 ஆயிரத்தை கையாடல் செய்தது குறித்து தபால் ஊழியர் மீது மப்பேடு போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 19 Apr 2015 11:46 AM PDT

குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கார் மெக்கானிக் கடத்தப்பட்ட சம்பவம்: பல் மருத்துவர் உள்பட 7 பேர் கைது

Posted: 19 Apr 2015 11:46 AM PDT

கார் மெக்கானிக் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பல் மருத்துவர் உள்பட 7 பேரை பூந்தமல்லி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சாலை ஆய்வாளர்கள் சங்கம் ஆலோசனை

Posted: 19 Apr 2015 11:45 AM PDT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாநில, மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஏகநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார்.

இளைஞர்களுக்கு திறன் எய்தும் இலவசப் பயிற்சி

Posted: 19 Apr 2015 11:45 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 250 இளைஞர்களுக்கான திறன் எய்தும் இலவசப் பயிற்சி முகாமில் தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகர

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

Posted: 19 Apr 2015 11:45 AM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஏப்ரல் 21 மின் தடை

Posted: 19 Apr 2015 11:45 AM PDT

இருளர்கள் குடியிருப்பைக் காலி செய்து பள்ளிக்குச் சுற்றுச்சுவர்

Posted: 19 Apr 2015 11:45 AM PDT

 கல்பாக்கம் அருகே இருளர்கள் வசித்து வந்த பட்டா குடியிருப்புகளைக் காலி செய்து அதில் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 19 Apr 2015 11:44 AM PDT

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞர் இறந்தார்.

தீக்குளித்த பெண் காவலர் சாவு

Posted: 19 Apr 2015 11:44 AM PDT

காஞ்சிபுரம் ஆயுதப்படை பிரிவு பெண் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

Posted: 19 Apr 2015 11:44 AM PDT

கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழி தவறி வந்த சிறுவனை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த போலீஸார்

Posted: 19 Apr 2015 11:43 AM PDT

கூடுவாஞ்சேரி ரயில்வே கேட் அருகே வழிதவறி அழுதுகொண்டிருந்த 13 வயது சிறுவன் மீட்கப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை ஆட்டோ ஓட்டுநர் பாபு மீட்டு கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விபத்தில் இளைஞர் சாவு

Posted: 19 Apr 2015 11:43 AM PDT

இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி இளைஞர் இறந்தார். திருவள்ளூர் மாவட்டம், புழல் கேம்ப் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜின் மகன் சதிஷ்குமார்

மதுராந்தகத்தில் ரூ. 9.25 கோடியில் நீதிமன்ற வளாகம் கட்ட பூமி பூஜை

Posted: 19 Apr 2015 11:43 AM PDT

மதுராந்தகம் நகரில் ரூ. 9.25 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜையை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

கல்லூரி வளாகத்தில் மாணவர், பெற்றோர் மீது தாக்குதல்

Posted: 19 Apr 2015 11:43 AM PDT

தனியார் கல்லூரியில் வளாகத்தில் மாணவர், பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய முகமூடிக் கும்பல் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கிணறு வெட்ட ரூ. 5ஆயிரமா? ரத்து செய்யக் கோரிக்கை

Posted: 19 Apr 2015 11:42 AM PDT

கிணறு வெட்ட ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

"ஏப்ரல், மே மாதங்களில் எள் விற்றால் அதிக லாபம்'

Posted: 19 Apr 2015 11:42 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த எள் தானியத்தை ஏப்ரல், மே மாதங்களில் விற்றால் அதிக லாபம் பெறலாம் என்று மாவட்ட வேளாண் வணிகத் துணை இயக்குநர்

படைவீடு கோயிலில் பக்தர்களுக்கு நிழற்குடை

Posted: 19 Apr 2015 11:42 AM PDT

போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

Posted: 19 Apr 2015 11:42 AM PDT

அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு

இந்து முன்னணியினர் சாலை மறியல்

Posted: 19 Apr 2015 11:42 AM PDT

வந்தவாசி அருகே சர்ச் கட்டுவதை தடுக்கக் கோரி இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™