Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கடலில் மிதக்க விடப்படும் ஆயுதம் தாங்கி ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர் கப்பல்

Posted:

புதுடில்லி: இந்திய கடற்படையின் பலத்தை இரு மடங்காக்கும் வகையில் கட்டப்பட்ட, ஆயுதம் தாங்கி போர் கப்பலான, ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் வரும் ஞாயிற்றுக் கிழமை கடலில் மிதக்க விடப்படுகிறது.'புராஜக்ட் -15பி'யின்படி, நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ஆயுதங்களை எடுத்துச் செல்லும் இந்த போர்க்கப்பலை, ராடாரால் கண்டுபிடிக்க முடியாது.

தரையில் இருந்து விண்ணில் தாக்கக்கூடிய, 32, பராக் 8 ஏவுகணைகள், இந்த கப்பலில் நிறுவப்படுகின்றன. இஸ்ரேலின், 'மல்டி பங்ஷன் சர்விலன்ஸ் திரெட் அலர்ட் ராடார்' முறையில், இது கட்டப்பட்டுள்ளது.
இந்த ராடார், கப்பலின் கட்டுப்பாட்டு அறையில் ...

சதாசிவத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு

Posted:

புதுடில்லி:கேரள கவர்னர் பி.சதாசிவம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவதை எதிர்த்து, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சி.அகர்வால், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் உள்ள விவரம்:சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
சதாசிவம், தன்பதவியை தவறாக பயன்படுத்தி, சட்டப் புறம்பாக, தமிழக அரசிடம் இருந்து, தன் சம்பந்திக்கு (மகனின் மாமியார்), நிலம் வாங்கி, அதை தன் மருமகள் பெயருக்கு மாற்றியுள்ளார். மேலும், கோவையில், தன் மகனுக்காக, மாருதி ...

ஜெ., அப்பீல் வழக்கில் தீர்ப்பு வழங்க மே 12 வரை அவகாசம்: அதுவரை ஜாமினையும் நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் ஜாமின், அடுத்த மாதம், 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க அளித்த அவகாசத்தையும் சுப்ரீம் கோர்ட் நேற்று நீட்டித்து உத்தரவிட்டது. வருமானத்திற்கு அதிக மாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, ஜெயலலிதா மீது, சுப்பிரமணியன் சாமி, 1996ல் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை ...

'ஆதார்,' ஜன் தன் வங்கி கணக்கு, மொபைல் போன் விவரங்கள் இணைகிறது: தகவல் தொகுப்பை உருவாக்கி முறையாக மானியம் கிடைக்க ஏற்பாடு

Posted:

புதுடில்லி : திட்டக்கமிஷனுக்கு மாற்றாக, மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்,' மானியங்களை சீர்படுத்த, மானிய பலன்களை முறையாக பயன்படுத்த, சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. அதன் படி, 'ஆதார்,' ஜன் தன் வங்கிக் கணக்கு மற்றும் மாநிலங்களில் சமூக, பொருளாதார கணக்கெடுப்புகளை ஒன்றிணைத்து, தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மானியம் கிடைக்க, பெரிய அளவில் வியூகம் வகுத்து வருகிறது.மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த மத்திய திட்டக்கமிஷன் ரத்து செய்யப்பட்டு, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ...

பிரதமர் மோடியின் மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் வெற்றி!

Posted:

வான்கூவர்: பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கான, பிரதமர் மோடியின், 10 நாள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த பயணத்தில், பல முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன; புதிய உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.இந்தியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ்சுக்கும் இடையே, பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ரபேல்' போர் விமான ஒப்பந்தங்கள், இழுபறியில் இருந்தது.நான்கு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் ஹோலண்டேயை சந்தித்து பேசியதும், 36 விமானங்களை உடனடியாக ...

ராகுலின் வெளிநாட்டு பயணம் பற்றிய தகவல், பிரதமர் அலுவலகத்திற்கு தெரியும்: பரபரப்பு தகவல்

Posted:

ராகுலின் வெளிநாட்டு பயணம் பற்றிய தகவல், பிரதமர் அலுவலகத்திற்கு தெரியும் என்றும், அவரது பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசனைகள் மேற்கொண்டபடி இருந்தனர் என்றும், பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணவில்லை:
இதுகுறித்து, நேற்று டில்லியில், மத்திய அரசின் உயர் வட்டாரங்களில் கூறப்பட்டதாவது:கடந்த பிப்., 23ம் தேதி, பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியபோது, ராகுலை மட்டும் காணவில்லை. பார்லிமென்ட்டிற்கு அவர் வரவில்லை என்பதை வைத்துதான், இவ்விஷயமே, வெளியுலகத்திற்கு தெரியவந்தது. உண்மையில், பிப்., 16ம் தேதியே அவர், வெளிநாட்டிற்கு ...

சீனாவின் 'பட்டு பாதை'க்கு போட்டியாக 'பருத்தி பாதை'

Posted:

புதுடில்லி : சீனாவின், பட்டுப் பாதை' திட்டத்திற்கு போட்டியாக, 'பருத்திப் பாதை' அமைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.சீனாவின் பட்டுப் பாதை திட்டம், ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய கண்டங்களை சாலை, ரயில் மற்றும் கடல் வழியாக இணைக்கிறது. இது, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் என்ற போதிலும், இத்திட்டம் காரணமாக, இந்துமாக் கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமோ என, இந்தியா அஞ்சுகிறது.அதனால், சீனாவின் பட்டுப் பாதை திட்டத்திற்கு போட்டியாக, பருத்திப் பாதை திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்து ...

செம்மர கடத்தல்காரர்களின் வழிப்பாதையில்மாற்றம்: திருவள்ளூரை தவிர்த்து பெங்களூரு பயணம்: தமிழகத்தில் தீவிரமடையுமா விசாரணை?

Posted:

திருப்பதி: ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரம் கடத்துவோர், தற்போது, தமிழகத்தைத் தவிர்த்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு வழியாக, தங்கள் கடத்தல் பாதையை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம், சேஷாசல வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை, சிலர் முறைகேடாக வெட்டி, தமிழகத்தின், திருவள்ளூர் - சென்னை துறைமுகம் வழியாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். தற்போது, சேஷாசல வனப்பகுதியில், போலீசார் ஆய்வு அதிகரித்து உள்ளதால், செம்மர கடத்தல்காரர்கள், தங்கள் பாதையை மாற்றியுள்ளனர். அதன்படி, நல்லமல்ல வனப்பகுதியில் இருந்து, கர்நுால் - பல்லாரி - அனந்தபுரம் ...

ராணுவ கொள்முதலில் அந்தோணி கொள்கை ரத்து

Posted:

புதுடில்லி: ராணுவ கொள்முதலில், முந்தைய அமைச்சர் அந்தோணி பின்பற்றிய நடைமுறைக்கு மாற்றாக, புதிய முறையை, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பின்பற்ற உள்ளார். இதன்படி, ஊழல் முறைகேடுகளில் சிக்கியதாக புகார் எழுந்தாலும், அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது; கொள்முதல் நடவடிக்கைகள் தொடரும். அதே நேரத்தில், முறைகேடு தொடர்பான புகார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.விசாரணை முடிவில், அந்த நிறுவனம் மீதான புகார்கள் உறுதிபடுத்தப்படுமானால், அதிக அபராதம் அல்லது பிற தண்டனைகள் பற்றி முடிவெடுக்கப்படும். பல நாடுகளின் ராணுவ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ...

நன்கொடை விவரங்களை தர மறுக்கும் அரசியல் கட்சிகள்

Posted:

புதுடில்லி: நன்கொடை விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற, சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்பது குறித்து, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.தேர்தல் சீர்திருத்தம் குறித்து, சட்ட ஆணையம் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமை தேர்தல் ஆணையம் வரைவறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 20 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை திரட்டிய அரசியல் கட்சிகள், 20ஆயிரம் ரூபாய் வரை பெற்ற தொகை அல்லது திரட்டிய மொத்த தொகையில், 20 சதவீதத்திற்குள் வந்த பணம் குறித்த விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். நன்கொடை விவரங்களில், 'தில்லுமுல்லு' செய்யும் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மசரத் ஆலம் சிறையிலடைப்பு

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவரான மசரத் ஆலம் பட் நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.அங்குள்ள ஒரு நகரில், பிரிவினைவாதிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்டதோடு, அந்நாட்டின் தேசியக் கொடியையும் துாக்கி வந்தனர்.இதுகுறித்து அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு - காஷ்மீர் முதல்வர், பி.டி.பி., கட்சியை சேர்ந்த, முப்தி முகமது சயீத்தை போனில் தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்தார்; இது போன்று நடக்காமல் பார்த்துக் ...

கர்நாடகாவில் இன்று 'பந்த்'

Posted:

பெங்களூரு: கன்னட அமைப்புகள், மேகதாது திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று போராட்டம் நடத்தவுள்ளதால், கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.கர்நாடகாவில், குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்காக, மேகதாது அருகில் காவிரி நதி குறுக்கே அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில்...:
இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகா அரசு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்பட்டது. தமிழக அரசைக் கண்டித்தும், மேகதாது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™