Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணையில் தீர்ப்பு வருவது தாமதம்: அரசு வக்கீல் நியமன வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணம்

Posted:

புதுடில்லி: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கின் தீர்ப்பு, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வெளியாவதில் மேலும் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, அவர் ...

நாட்டின் முதல் ஸ்மார்ட் சிட்டி வந்தாச்சு: குஜராத்தின் காந்தி நகரில் மும்முரம்

Posted:

காந்திநகர்: நாட்டின் முதல், 'ஸ்மார்ட் சிட்டி' குஜராத் தலைநகர் காந்தி நகரில் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை, 900 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள இந்த நகரில், வீட்டுக்கு வீடு தகவல் தொடர்பு வசதி, குழாயை திறந்தால் நல்ல தண்ணீர், வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்ற, பெரும்பாலான இந்தியர்களுக்கு கிடைக்காத வசதிகள் உள்ளன.இதுபோன்ற ஸ்மார்ட் சிட்டிகள், ஆந்திராவின் விசாகப்பட்டினம் உட்பட சில இடங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றன.கிராமப்புறங்களிலும், நகர்புறங்களில் உள்ளது போன்ற வசதிகள், நகர்புறங்களில் அமைய வேண்டும். அத்தகைய நிலை ஏற்பட்டால், கிராமப்புறங்களில் ...

இதுவரை ரெண்டு தான்... இனி மூணு லட்சமாம்: பண மழையில் நனையும் எம்.பி.,க்கள்

Posted:

தொகுதி மக்களுக்காக, ஒவ்வொரு எம்.பி.,யும், தற்போது செய்து வரும் சேவையை, மேலும் விரிவுபடுத்தி, அதை விரைந்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, கூடுதலாக கம்யூட்டர், லேப்டாப், பிரின்டர், பேக்ஸ் போன்ற சாதனங்களை வாங்கிக் கொள்ளும் வகையில், எம்.பி.,க்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்த 2 லட்சத்தை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி.,யாகி, டில்லி சென்றவுடன், சம்பளம், படிகள் போக, கணக்கிலடங்காத சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதில், தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக, கணினி உட்பட மின்னணு சாதனங்களை வாங்கிக் ...

பிரிட்டன் பிரதமரை திணறடித்த இந்திய வம்சாவளி சிறுமி

Posted:

கிரேட்டர் மான்செஸ்டர்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு சிறுமியின் கேள்வி திணறடித்துள்ளது.

பிரிட்டன் பிரதமரிடம், குழந்தைகள் கேள்வி கேட்கும், 'நியூஸ் ரவுண்டு' என்னும் நிகழ்ச்சியை பி.பி.சி., ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில், கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள சால்போர்டு மாணவியான ரீமா, 10, பிரதமர் கேமரூனிடம், 'மே 7ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், உங்களை தவிர வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், யாரை, ஏன் தேர்ந்தெடுப்பீர்கள்?' என்று கேட்டாள். இந்த கேள்வியால் கலவரமடைந்த ...

5 ஆண்டுகளுக்கு யுரேனியம் தருகிறது கனடா

Posted:

ஒட்டாவா: கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் அணு உலைகளுக்கு தேவையான, 'யுரேனியம்' எரிபொருளை, ஐந்தாண்டுகளுக்கு வழங்க கனடா பிரதமர் ஒப்புக் கொண்டார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே, 12 ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.பிரான்ஸ் நாட்டில் நான்கு நாட்கள், ஜெர்மனியில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கனடா சென்றடைந்தார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு, கனடாவுக்கு சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி ...

சட்டமா, தார்மீகமா; நீதிபதி குமாரசாமி முடிவு என்ன? 17ம் தேதி தெளிவு பிறக்கும்

Posted:

முன்னாள் முதல்வர் ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை; ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

3 நீதிபதிகள் :
அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த மனுவை, நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.நீதிபதிகள் இருவரும், தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர். தீர்ப்பு மாறுபட்டதால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் ...

நியமன கமிஷன் வழக்கு விசாரணை தாமதம்: சிக்கலை சந்திக்கும் புதிய கமிஷன்

Posted:

புதுடில்லி: நீதிபதிகள் நியமன கமிஷனுக்கு, சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளதா என்பதை, தீர்மானிக்கும் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த நிலை யில், அந்த அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி, ஏ.ஆர்.தவே, அமர்விலிருந்து விலகியதால், அந்த வழக்கு பெரும் முட்டுக்கட்டையை சந்தித்தது.

மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. 'அமர்வுக்கு தலைமை வகிக்கும், நீதிபதி ஏ.ஆர்.தவே, நீதிபதிகள் நியமன கமிஷனின் உறுப்பினராக இருப்பதால், அவர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை ...

மன்மோகனை தவறாக வழிநடத்தினார் ராஜா:'2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில் சி.பி.ஐ., வழக்கறிஞர் வாதம்

Posted:

புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து வரும் டில்லி சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., நேற்று எடுத்து வைத்த வாதத்தில், 'தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க ஏதுவாக, பிரதமருக்கு தவறாக வழிகாட்டினார்' என, தெரிவிக்கப்பட்டது.முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அரசில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக, ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் நபர்கள், நிறுவனங்கள் என, 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த, 2011 அக்டோபரில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவர் ...

10 மாதங்களில் 217 டி.எம்.சி., காவிரி நீர் திறப்பு: முரண்டு பிடிக்காமல்தந்த கர்நாடகா

Posted:

எந்த இடையூறும்செய்யாமல், காவிரியில், தமிழகத்திற்கு, 217 டி.எம்.சி., நீரை தொடர்ச்சியாக கர்நாடகா திறந்து விட்டுள்ளது.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, ஆண்டுதோறும், தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, காவிரியில், 192 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா வழங்க வேண்டும்.இதில், சுற்றுசூழலுக்கான ஒதுக்கீடு, 10 டி.எம்.சி., மாதந்தோறும், எவ்வளவு தண்ணீரை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதையும், காவிரி நடுவர் மன்றம் நிர்ணயம் செய்துள்ளது. ஆண்டுதோறும், ஜூனில் துவங்கி, அடுத்தாண்டு ஜூன் வரை, இந்த தண்ணீர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. தமிழக - -கர்நாடகா எல்லையில் உள்ள, ...

உடன்குடி மின் நிலைய பணி இந்த ஆண்டு துவங்காது?அரசின் அனுமதிக்கு மின் வாரியம் காத்திருப்பு

Posted:

உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு, புதிய டெண்டர் வெளியிட, மின் வாரியம் முடிவு செய்து இருந்தாலும், தமிழக அரசு, அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது. தமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தலா, 660 மெகாவாட் திறன் கொண்ட, இரண்டு அலகுகள் உடைய, அனல்மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.

4 நிறுவனங்கள்:
இதன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தகுதி வாய்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம் சார்பில், 2013 ஏப்., மாதம், டெண்டர் கோரப்பட்டது. இதில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. தொழில்நுட்ப புள்ளியில், சீனாவை சேர்ந்த ஒரு ...

காதல் வலையில் சிக்கும் பள்ளி மாணவியர் :தேர்வு முடிந்ததும் வீட்டை விட்டு ஓடுவது அதிகரிப்பு

Posted:

கிருஷ்ணகிரி: பள்ளி பொதுத் தேர்வு முடிந்துள்ள நிலையில், காதல் வலையில் சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25 மாணவியர் மாயமாகி உள்ளனர்.

தொழில்நுட்ப சாதனம்:
கிருஷ்ணகிரி, கல்வியில் பின்தங்கிய மாவட்டம். குறிப்பாக பெண் கல்வி சதவீதத்தில், மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. பொருளாதார ரீதியில், பின்தங்கியிருப்பதால், படிக்கும் வயதிலேயே, குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் அதிகமாக உள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும், சினிமா, 'டிவி' உள்ளிட்டவை, பள்ளி மாணவியரை ...

நேதாஜியின் ரகசிய கோப்புகள் வெளியிட கமிட்டி அமைப்பு

Posted:

புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்புடைய ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, கமிட்டி அமைக்கப்படுகிறது.

கடந்த 1945, ஆகஸ்ட் 18ம் தேதி, தைவானில் நேதாஜியை கடைசியாக பார்த்ததாகவும், அதன் பின் அவர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. விமான விபத்தில் நேதாஜி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை, பலர் ஏற்கவில்லை. நேதாஜி குறித்த உண்மை தகவல்கள் அடங்கிய, 160 ரகசிய கோப்புகள் அரசிடம் உள்ளது. இந்த கோப்புகளை வெளியிட்டால் தான், நேதாஜியின் வாழ்க்கை குறித்து அனைவரும் அறிய இயலும். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு, ஜெர்மனி தலைநகர் பெர்லினில், நேதாஜியின் கொள்ளுப் ...

முலாயம் சிங் தலைமையில் உருவானது புதுக்கட்சி

Posted:

புதுடில்லி: உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்து வரும், பா.ஜ.,வின் செல்வாக்கை குறைத்து, அதன் வளர்ச்சியை தடுக்கவும், அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., - பா.ஜ., அல்லாத மாற்று அணி, மத்தியில் ஆட்சி அமைக்கவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தலைமையில், ஆறு மாநில கட்சிகள் இணைந்து, புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளன. இதற்கான முறையான அறிவிப்பு நேற்று வெளியானது.

பரிதாப நிலை:
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், நரேந்திர மோடி தலைமையில் போட்டியிட்ட பா.ஜ., வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று, மத்தியில் பெரும்பான்மை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™