Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: இறுதிகட்ட வாதம் இன்று துவக்கம்

Posted:

புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராசா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உட்பட, 14 பேர் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளன.

டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், இந்த வழக்கில், சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்வது, கடந்த மாதம், 24ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, வழக்கறிஞர்களின் இறுதிகட்ட வாதம் இன்று துவங்கும் என, நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். அதன்படி, இன்று வாதம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊழல் வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி, அவரின் ...

'விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதை தொடர வேண்டும்'

Posted:

புதுடில்லி: 'விவசாயிகளுக்கான பயிர் கடனை, பழைய நடைமுறையில், அதாவது குறைந்த வட்டியில் வழங்குவதை, வங்கிகள் தொடர வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசின் சலுகை திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால பயிர் கடன்களுக்கு, வங்கிகள், ஏழு சதவீத வட்டி வசூலிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பயிர் கடனை விவசாயிகள் திருப்பிச் செலுத்தினால், அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, இந்த வட்டியில், மேலும், மூன்று சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, நான்கு சதவீத வட்டி மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்நிலையில், ஏப்ரல் முதல், ...

ரயிலில் நோயாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை

Posted:

புதுடில்லி: ரயிலில் பயணம் செய்யும் நோயாளிகளுக்கு, பிரத்யேக அடையாள அட்டை வழங்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், நோயாளிகளுக்கான சலுகைகள், பிறர் அனுபவிக்காமல் தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நோயாளிகள் ரயிலில் பயணம் செய்ய கட்டணச் சலுகை, முன்பதிவில் முன்னுரிமை என, பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. உண்மையான நோயாளிகளுக்கு இந்த சலுகைகள் சரிவர தெரிவதில்லை. அதனால், மோசடிப் பேர்வழிகள், டாக்டர்கள் சான்றிதழை மோசடியாக பெற்று, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதை தடுக்க, நோயாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க, ...

பயங்கரவாதிகள் சதி திட்டம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு: மும்பையை மீண்டும் குறி வைப்பதால் உள்துறை கவனம்

Posted:

மும்பை: நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை உட்பட, சில முக்கிய நகரங்களில், பாகிஸ்தானை சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், 'அனைத்து மாநிலங்களிலும், போலீசார் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாதிகளின் சதி குறித்து கவலைப்பட தேவையில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிவாஜி ரயில் நிலையம்:
கடந்த, 2008 நவ., 26ல், அரபிக் கடல் வழியாக மும்பை வந்த பாக்., பயங்கரவாதிகள், 10 பேர், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ...

ராகுலுக்கு கட்சி தலைவர் பொறுப்பை தராதீங்க: சோனியாவுக்கு ஷீலா தீட்சித் வேண்டுகோள்

Posted:

புதுடில்லி: ''காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் தலைமைப் பண்பு தொடர்பாக, பல்வேறு தரப்பிலும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, கட்சித் தலைவர் பதவியை அவருக்கு வழங்கக்கூடாது. தலைவராக சோனியாவே தொடர வேண்டும்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும், டில்லி மாநில முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், 77, தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா உட்பட, சில மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது, அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இழந்த பெருமையை மீட்க, அக்கட்சித் தலைவர்கள் ...

மதச்சார்பற்ற தன்மையை மொழி பாதிக்கக்கூடாது: ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு

Posted:

பெர்லின்: ''நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மொழி பலவீனமாக்கி விடக்கூடாது,'' என, பிரதமர் மோடி பேசினார். பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் நிறைவு செய்த நிலையில், மூன்று நாள் ஜெர்மனி சுற்றுப்பயணத்தை நேற்று முடித்தார். பிரதமர் மோடிக்கு, இந்திய தூதர் அளித்த விருந்தில் பங்கேற்ற பிரான்ஸ் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு, 'நோபல்' பரிசு பெற்ற, இந்திய விஞ்ஞானி, சர் சி.வி.ராமன் எழுதிய அறிவியல் குறிப்புகளை மோடி பரிசாக வழங்கினார்.

மெர்கலுக்கு ...

ஜெ., வழக்கு தீர்ப்புக்கு முன் தலைமை நீதிபதி மாற்றம் ஏன்?

Posted:

சென்னை: 'ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளிவருவதற்கு முன், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது, பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு, ஒடிசா மாநில நீதிபதியாக மாற்றியுள்ளது. கர்நாடகா போன்ற பெரிய மாநிலத்தின், தலைமை நீதிபதியை, அதற்கும் சிறிய மாநிலமான ஒடிசாவுக்கு மாற்றியுள்ளனர். ஒடிசா மாநில தலைமை நீதிபதி பணியிடம், பிப்ரவரி முதல் காலியாக ...

செல்வாக்கான தலைவர்கள் பட்டியல் மோடி, கெஜ்ரிவாலுக்கு இடம்

Posted:

நியூயார்க்: உலகின் செல்வாக்கான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.அமெரிக்காவின் பிரபல 'டைம்' பத்திரிகை தன் இணையதளத்தில் உலகின் செல்வாக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும்படி 100 பேரின் பெயர்களை பட்டியலிட்டிருந்தது. இந்தப் போட்டியில் அமெரிக்காவிலிருந்து 57 சதவீத வாசகர்கள் பங்கேற்றனர். இந்த கருத்துக் கணிப்பின் இறுதி முடிவை இந்த வாரத்தில் டைம் பத்திரிகை அறிவிக்க உள்ளது. நேற்றைய நிலவரப்படி உலகின் செல்வாக்கான ...

அடுத்தடுத்து போராட்டம், பொதுக்கூட்டம்: கட்சியினருடன் விஜயகாந்த் ஆலோசனை

Posted:

மக்கள் பிரச்னைகளை முன் வைத்து போராட்டம், கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்துவது குறித்து, விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொண்டாட்டம்:
சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கரின், 125வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம், நேற்று காலை நடந்தது. இதற்காக, தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும், கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், அவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அம்பேத்கரின், உருவப் படத்திற்கு, விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை ...

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மிரட்டல்: மறு தேர்வு நடத்துவதாக தனியார் பள்ளிகள் அடாவடி

Posted:

தனியார் பள்ளிகளில், துவக்க வகுப்புகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு, மறு தேர்வு நடத்துவதும், அதிலும் தேறாதவர்களுக்கு, 'டிசி' வழங்குவதாக, மிரட்டல் விடுப்பதும், பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெயில் ஆக்க முடியாது:
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, பள்ளி ஆண்டு இறுதியில் தேர்வு நடத்துவதோ, அதன் அடிப்படையில், அக்குழந்தையை தோல்வி அடைய வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், எட்டாம் வகுப்பு வரை, எந்தவிதமான பள்ளியிலும், மாணவ, மாணவியரை, பெயில் ஆக்க முடியாது. அதே போல், மாணவர் சேர்க்கையில், ...

போக்குவரத்து ஊழியர்கள் 'ஸ்டிரைக்' பிசுபிசுத்தது: போதிய பஸ்களை இயக்கி நிலைமை சமாளிப்பு

Posted:

தமிழகத்தில் நேற்று, போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், போக்குவரத்து கழகங்கள், போதிய பஸ்களை இயக்கி, நிலைமையை சமாளித்தன.போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 5.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, சி.ஐ.டி.யூ., - ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட, 14 தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புத்தாண்டு தினம்:
மேலும், நேற்று, ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, பஸ்கள் இயக்கத்தில் சிக்கல் எழுமோ என்ற ...

தமிழ் புத்தாண்டு நாளில் உழவர் பெருவிழா: அரசு கைவிரிப்பால் விவசாயிகள் ஏமாற்றம்

Posted:

வேலுார்: தமிழ் புத்தாண்டு நாளில் நடத்த வேண்டிய, உழவர் பெருவிழாவை, இந்த ஆண்டும் நடத்தாமல் அரசு கைவிரித்தது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.நாட்டு மக்களின் முதுகெலும்பு என சொல்லப்படும் விவசாயம், எப்போதுமே நலிவுற்ற நிலையில் தான் இருக்கிறது.எனினும், மத்திய, மாநில அரசுகள் தங்களால் முடிந்தவரை, விவசாயத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்கிறது.

ஜெயலலிதா அறிவிப்பு:
கடந்த, 2012ம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு நாளில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உழவர் பெருவிழாவை துவக்கி வைத்தார். இதை, மாநிலம் முழுவதும் கிராமங்களில் ...

அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல்

Posted:

நியூயார்க்: 'எவ்வளவு பெரிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்' என, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வீடியோ பதிவு:
இதுதொடர்பாக, சமூக வலைதளமான டுவிட்டரில், பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள, 11 நிமிட வீடியோ பதிவில், '2001 செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த, இரட்டை கோபுர தாக்குதல் போன்று மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை, அமெரிக்கா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என, மிரட்டி உள்ளனர். 'உலகின் எந்த மூலையில் உள்ள அமெரிக்கருக்கும் பாதுகாப்பில்லை' என, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™