ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்
- ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
- நகைச்சுவை துணுக்குகள்
- மருமகனுக்கு வைத்த விருந்தின் படம்
- சர்தார்ஜி நகைச்சுவைகள்
- சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்!
- உலகச் செய்திகள்!
- 2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?
- ஏமன் உள்நாட்டுப் போர்
- கடவுளுடைய கைகள்...!
- இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..!
- அழகு – ஒரு பக்க கதை –
- தலைமை தாங்கும் இசையரசி
- தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகை…!!
- உலகிம் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர்களின் பட்டியலில் மோடி, கேஜிரிவால்
- உணர்ந்து கொள்வோம் வாரீர் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- தமிழா, விழித்தெழு!
- சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!
- “ மன்மத ” - வா...வா...!! [ கவிதை ]
- திருமணத்தோடு இதை ஒப்பிட வேண்டாம்...! -
- இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891
- கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம்
- தோற்க…
- நாம் ஒவ்வொருவரும் மரம் வெட்டிகள்தான்…
- பொற்காலம்
- கண்ணீரை சேமி!
- விட வேண்டாம்
- ரமண மகரிஷி
- என் அவதாரங்கள்.
- கள்ளிப் பூ கூட அழகாயிருக்கிறது…!
- கேளுங்க…கேளுங்க…கேட்டுக்கிட்டே இருங்க..!!
- பறக்கும் காடுகள்
- அர்த்தமுள்ள இந்து மதம் mp3 வடிவில் தரவிறக்கம்
- ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !
- நியாயங்கள்
- தப்பும் தண்டனையும்…!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(365)
- பறவைகள் பலவிதம்..
- மலர்கள்
- பி. பி. ஸ்ரீனிவாஸ் – திரைப்படப் பின்னணிப் பாடகர்- நினைவு நாள்
- பசலைக்கீரை
- செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
- சாவுக்கு காத்திருக்கும் 8 ஆயிரம் பேர்
- ரமண மகரிஷி
| ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல் Posted: 14 Apr 2015 11:25 AM PDT புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்ற இரண்டு மந்திரச் சொற்கள் மனதில் நுழையாதபட்சத்தில் உறவுகளில் சிக்கல் வருகிறது. புரிந்து கொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குறிப்பாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக் கூடிய உரசல்கள் ஒழிந்து விடும். தனக்கு அடங்கியவளாக மனைவி இருக்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்ப்பதும், தன் பேச்சைக் கேட்டு நடப்பவனாக கணவன் இருக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பதும் மிகத் தவறான போக்கு என்பதை சுமார் 282 பக்கங்களில் விரிவாக எடுத்துக் ... |
| ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! Posted: 14 Apr 2015 11:22 AM PDT நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம். ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு ஒரு சிறு அன்பளிப்பையாவது கொடுத்துச் சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும். இந்தத் திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த ... |
| Posted: 14 Apr 2015 11:09 AM PDT நகைச்சுவை துணுக்குகள் (புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...) "நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க." "எதுக்குடா செல்லம்?" "நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" குறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை |
| மருமகனுக்கு வைத்த விருந்தின் படம் Posted: 14 Apr 2015 10:56 AM PDT விஜயவாடாவில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு வைத்த விருந்தின் படம் தான் இது ஒரு விருந்தில் என்னென்ன பரிமாறுவார்கள் இதைப்பார்த்த பின் நீங்கள் அசந்து போவீர்கள் எப்படி சாப்பிடுவது என்று நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியது புத்தாண்டு விருந்து , பத்தாது என சொல்ல முடியாது ரமணியன் |
| Posted: 14 Apr 2015 10:13 AM PDT சர்தார்ஜி : மிஸ் , நீங்கள் எனக்கு கால் பண்ணி இருந்தீங்களா? டீச்சர் : நானா? , இல்லையே ஏன்? சர்தார்ஜி : நேற்று என்னுடைய மொபைல் ஃபோனில் " 1 மிஸ் கால்" என்று இருந்தது ஜட்ஜ்: உனக்கு வெட்கமாக இல்ல , இதோடு 3 வது தடவையா நீ கோர்ட்க்கு வருகிறாய்? சர்தார்ஜி :நீங்கள் தினமும் கோர்ட்க்கு வருகிறீர்கள் , உங்களுக்கு வெட்கமாக இல்ல? ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிலுக்கும் என்ன வித்தியாசம்? சர்தார்ஜி : ஆரஞ்சோட கலர் ... |
| சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Posted: 14 Apr 2015 10:09 AM PDT ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், ... |
| Posted: 14 Apr 2015 09:28 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| 2020-ல் இந்தியா எப்படி இருக்கும்? Posted: 14 Apr 2015 09:26 AM PDT உலகிலேயே இளமை நாடாக இந்தியா இருக்கும். நாட்டின் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் வருமானம் ஈட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதே வேளையில் கடந்த தலைமுறைகளில் தாத்தாக்களுக்கு வந்த வியாதிகள், இப்போது அப்பாக்களுக்கும், மாமாக்களுக்கும் வந்து விடுகின்றன. இன்றைய தலைமுறை 40 வயது வரை ஆரோக்கியத்தை இழந்து பணம் சம்பாதிக்கிறார்கள். 40 வயதிற்கு மேல் தாங்கள் சம்பாதித்ததை எல்லாம் தங்களது ஆரோக்கியத்திற்காக செலவழிக்கின்றனர். நீரிழிவு, அதிக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், புற்று ... |
| Posted: 14 Apr 2015 09:22 AM PDT உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ... |
| Posted: 14 Apr 2015 09:17 AM PDT - சாப்பிட்டுவிட்டு கழுவாமல் கொண்டு வரப்பட்ட லஞ்ச் பாக்ஸை அடுத்த நாள் காலையில் திறந்து கோபமோ சலிப்போ இல்லாமல் கழுவும் கைகள் கடவுளுடையவை..! - வெ.பூபதிருத்ரன் - ------------------------------------ - ஹோட்டல்ல நல்லா மொரட்டு மீச வெச்ச ஆள சப்ளைக்கு போட்டுருக்காங்க.... மறு சோறு கேக்கவே டர்ராவுது...! - ரிட்டர்டு ரவுடி - -------------------------------------- - சூடா குடிக்கிற டீக்கு கைப்பிடி இல்லாத கிளாஸ், கூலா குடிக்கிற ஜூஸ்க்கு கைப்பிடியோட க்ளாஸ்...! - # இதுதான் வாழ்க்கை..! - சுந்தர ... |
| இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..! Posted: 14 Apr 2015 09:16 AM PDT குருஜி! உங்களை மாதிரி நானும் முற்றும் துறக்க ஆசைப்படுகிறேன்… – சொன்னா கேளு! போலீஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..! – யுவகிருஷ்ணா – ————————————— – என்னதான் ஒரு சைக்கிளை திரும்பத் திரும்ப ரிப்பேர் பண்ணி உபயோகப்படுத்தினாலும் அதையும் பைசைக்கிள்னுதான் சொல்ல முடியுமே தவிர, ரீ சைக்கிள்னு சொல்ல முடியாது..! – ஓட்டை சைக்கிளை வைத்து காலம் ஓட்டுவோர் சங்கம் – கே.ஆனந்தன் – ——————————————– – என்னய்யா இது, வந்ததுல இருந்து கூட்டம் கை தட்டிட்டே இருக்குது. ... |
| Posted: 14 Apr 2015 08:20 AM PDT பிரபல டி.வி.சேனல் நடத்திய அழகிய அம்மா போட்டியில் வெகு சுலபமாக கிரீடம் வென்றாள் வந்தனா – இவங்க ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாங்கிறதை நம்பவே முடியலையே. ஒரு காலேஜ் கேர்ள் போல நச்சுனு இருக்காங்களே…என்று அரங்கமே வியந்தது. – வந்தனா மேடம்…நீங்க ஸ்லிம்மா, கவர்ச்சியா, சினிமா நடிகை போல அழகை இருக்கீங்களே…உங்க அழகின் ரகசியம் என்ன? டயட்டா, உடற்பயிற்சியா? – நிருபர்கள் கேட்டபோது ,மென்று விழுங்கினாள் வந்தனா. – அது வந்து…நீங்க சொன்ன இரண்டும் இல்ல, என்குழந்தைகள்தான் என் அழகின் ரகசியம்! என்று வந்தனா ... |
| Posted: 14 Apr 2015 08:18 AM PDT சென்னை மாநகரில் ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத விழாக்களும் வரும். இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன. கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும் கெடாமல் காப்பதையே தன் பணியாக் கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின் விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை இழுப்பவை. பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம் அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச் செய்திருக்கிறார்கள். விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச் சங்கீத ... |
| தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகை…!! Posted: 14 Apr 2015 08:10 AM PDT தலைவர் எதுக்கு நான்கு மைக் கேக்கறார்..? – ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு மைக்ல திட்டுவாராம்..! – அ.ரியாஸ் – —————————————- – நம்ம தலைவரை காது குத்தல் விழாவுக்கு குப்பிட்டதுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாரே..ஏன்? – எலெக்ஷன் டைம்ல மட்டும்தான் அவரு காது குத்த வருவாராம்..! – வி.சாரதி டேச்சு – ——————————————– – நூறு ரூபாய் தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகைன்னு போர்டு வச்சிருக்கியே…அதென்ன சலுகை? – தர்மம் பண்றதை செல்ஃபி எடுத்து நீங்க விளம்பரம் தேடிக்கலாம்..! – எஸ்,ராமன் – ——————————————- – நகைப்பெட்டியில் ... |
| உலகிம் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர்களின் பட்டியலில் மோடி, கேஜிரிவால் Posted: 14 Apr 2015 07:41 AM PDT நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இணையதளம் மூலமாக சர்வதேச அளவில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவின் படி உலகிம் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பிரதமர் நரேந்திர மோடி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ராப் பாடகி சிஎல் 6.95 வாக்குகள் பெற்று பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பாப் பாடகி லேடி காகா 2.6 சதவீதம் வாக்குகளும் ரிஹானா 1.9 சதவீத வாக்குகளும், டெய்லர் ஸ்விஃப்ட் 1.8 சதவீத வாக்குகளும், ... |
| உணர்ந்து கொள்வோம் வாரீர் -கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 14 Apr 2015 06:51 AM PDT அர்த்தமான உலகில் அர்த்தமில்லா வாழ்க்கை ஏனோ? பெயருக்காக வாழும் மானிடா உனக்காக வாழ்ந்ததுண்டோ? உன் அம்மாவுக்கும் உனக்கும் தொப்புள் கொடியினால் தாய்ப்பாசம். உன் உள்ளத்திற்கும் எண்ணத்திற்கும் ஏனோ? இந்த வேசம். கடவுள் உலகில் படைத்தான் வீணாக வாழ்வதற்கல்ல?உன் நிரந்தர வாழ்க்கைக்கு பூமித்தாயில் ஓரிரு காணிக்கையை சேர்ப்பதற்குத்தான், உன் உள்ளமே உலகில் சிகரம் நல்ல எண்ணங்கள் அதில் அகரம். பொறாமைப்பட்டு வாழாதே தூசற்ற மனதோடு பேசி விடு வெற்றி பெறுவாய். எல்லா மனிதனும் சபிக்க பிறந்தவனில்லை.மண்ணில் ... |
| Posted: 14 Apr 2015 06:17 AM PDT எந்நாட்டிலும் தமிழருக்கு வாழ்வில்லை! எங்கேயும் அவருக்கு மதிப்பில்லை! தண்ணீருக்கும் கையேந்தி வாடுகிறான் பாமரராய் விலங்குகளாய் வாழுகிறான் சொன்னாலும் புரியாத இனமானான் சோற்றுக்கு அலைகின்ற ஜடமானான் தன்மானம் மறந்திட்ட தறுதலையா? தரங்கெட்டு வாழ்வது பழுதிலையா? உழைப்புக்கு ஏற்றதோர் ஊதியமில்லை உதைபடும் தருணத்திற்கு அளவில்லை பிழைப்புக்கு வழிதெரியாப் பேதையானான் போதையில் தடுமாறி வீழ்ந்துபோனான் தன்னாற்றல் வளர்த்திடத் தெரியவில்லை தகுதியோடு வாழுகின்ற நிலையுமில்லை சொந்தமொழி உறவுக்கே பகையானான் வேற்றுமொழி ... |
| சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Posted: 14 Apr 2015 06:15 AM PDT - சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இத்தகவலை இன்று பிரசன்னா அறிவித்தார். பிரசன்னா - சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதை தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று பிரசன்னா அறிவித்தார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: இந்தச் ... |
| “ மன்மத ” - வா...வா...!! [ கவிதை ] Posted: 14 Apr 2015 06:11 AM PDT " மன்மத " – வா…வா…!! [ கவிதை ] * மன்மதன் வருகிறான் ஆண்மை வீரன் வருகிறான் மலர்கள் ரதம் மீதிலேறி மன்மதன் வருகிறான். * மங்கையர் மையல் கொள்ளும் வேங்கை மார்பன் வருகிறான் கரும்பு வில்லை கையிலேந்தி கட்டழகன் வருகிறான். * காதல் ராணி ரதியுடனே காதல் மன்னன் வருகிறான் தங்க கிரீடம் தலையில் தரித்து மங்கையர் தலைவனாக வருகிறான். * சந்தனம் கமழும் மார்பில் ரதியை அன்பாய் அணைத்து வருகிறான் காம நதியில் முக்குளிக்கும்-மதனக் காம சுந்தரன் வருகிறான் * உயிர் மையத் தத்துவத்தை உலகுக் குணர்த்த வருகிறான் உலக ... |
| திருமணத்தோடு இதை ஒப்பிட வேண்டாம்...! - Posted: 14 Apr 2015 06:08 AM PDT - சில சோகமான சம்பவங்களே பின்னர் காமெடியாக உருமாற்றம் அடைந்து விடுகின்றன..! - # திருமணத்தோடு இதை ஒப்பிட வேண்டாம்...! - கார்டூனிஸ்ட் முருகு - -------------------------------------- - நம்மைத் தலைகுனிய வைத்து, தலை நிமிரச் செய்வது புத்தகம். - அதே போல் நம்மைத் தலைகுனிய வைத்து தலை குறப்புற விழுச் செய்வது செல்போன்..! - இளை#ராஜா டென்டிஸ்ட் - -------------------------------------- - சைக்கிளில் வந்த தக்காளி கூடை சரிந்து முக்கால் சிவப்பில் உருண்டது அனைத்து திசைகளிலும் பழங்கள - தலைக்கு ... |
| இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891 Posted: 14 Apr 2015 05:59 AM PDT பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ... |
| கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் Posted: 14 Apr 2015 05:49 AM PDT கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார். அடுத்த சில ... |
| Posted: 14 Apr 2015 05:41 AM PDT - - எனில் உனைத் தோற்க நீ துடிக்க, உனில் எனைத் தோற்க நான் துடிக்க, ஏனோ வாழ்வில் இங்கு மட்டுமே தோற்பது சுகமாய்…! – –மஹா சுமன் |
| நாம் ஒவ்வொருவரும் மரம் வெட்டிகள்தான்… Posted: 14 Apr 2015 05:33 AM PDT அடடடடா..! – |
| Posted: 14 Apr 2015 05:31 AM PDT - பள்ளிகள் விடுமுறை விட்டாச்சு பறவைகள் பல இடம் பறந்தாச்சு உள்ளத்தில் புது ஒளி பிறந்தாச்சு உலகத்தை வலம்வர முடிவாச்சு! பாடச்சுமைகள் போயாச்சு கதவுகள் எல்லாம் திறந்தாச்சு வீட்டுப்பாடச் சுமைகள் யாவும் புகழ்மிகு விடுப்பால் மறந்தாச்சு! உறவினர் வீடுகள் அடைந்தாச்சு உற்றார் பலரைக் கண்டாச்சு மறக்கமுடியா உறவுகளை மகிழ்வுடன் அணைக்க வந்தாச்சு! பள்ளியில் பறந்த குருவியெல்லாம் பற்பல இடங்களில் பறக்கிறது உள்ளத்தில் மகிழ்வலை ஒலிக்கிறது உண்மையில் விடுமுறை பொற்காலம்! – -நா.மு.நாச்சியப்பன் |
| Posted: 14 Apr 2015 05:25 AM PDT - கூர்வாள் பேச்சுக்கள் அடிபணிய வைக்கும் அதிகாரங்கள் ரத்தக் கண்ணீர் வரவழைத்து சித்தத்தையே கலங்கடிக்கும்! கண்ணீரை துடைத்தெறிந்தால் மட்டுமே தடைகளும், துன்பங்களும் உடையும்! கண்ணீரில் எந்தக் கவலையும் கரைவதில்லை! எல்லாம் இருப்பதற்காக ஆனந்தப்படவும் வேண்டாம் அதையெல்லாம் இழந்ததற்காக அழுதிடவும் வேண்டாம்! நம்பிக்கைப்பலம் உள்ளோர்க்கு கன்னத்தில் நீர் வழிவது நின்று விடும்! தன்னைத்தானே செதுக்கும் சிற்பிக்கு மட்டுமே கண்ணீருக்கு விடுமுறை கொடுக்க தெரியும்! ஆரா ரணங்களின் போது அழுது ... |
| Posted: 14 Apr 2015 05:20 AM PDT பெய்யும் பனியை வெயில் தின்னும் படர்கின்ற கோடையை மழை தின்னும் செய்கின்ற பணியை காலம் தின்ன சிதறும் வாய்ப்பு தர வேண்டாம் – தூண்டில் புழுவை மீன் தின்னும் துடிக்கும் மீனை நாம் தின்போம் நீண்ட கனவை தயக்கம் தின்ன நிச்சயம் வாய்ப்பு தர வேண்டாம் – மண்ணின் சத்தை மரம் தின்னும் மரம் விழுந்தாலோ மண் தின்னும் எண்ணிய வெற்றியை எந்த எதிர்ப்பும் எடுத்துத் தின்ன விட வேண்டாம் – கவிழ்கிற இருளோ பகல் தின்னும் கதிரவன் எழுந்து இருள் தின்னும் தவமாய் வளர்த்த கனவை அச்சம் தாவித் தின்ன விடவேண்டாம் – —————————— மரபின் ... |
| Posted: 14 Apr 2015 05:14 AM PDT ரமண மகரிஷி இந்த ஓவியத்தில் உள்ள மகான் யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. காரணம் , பால்பாயிண்ட் பேனாவால் வரையபட்டது.பால்பாயிண்ட் பேனாவால் வரையும்போது குற்றம் குறை இருந்தால் திருத்தமுடியாது. உருவத்தை மனதில் எவ்வளவு ஆழமாக பதிவு செய்து இருந்தால் ,இவ்வளவு சிறப்பாக , வரையமுடியும், என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன். கைத்திறன்,தவறின்றி வரையும் திறன் ,அவரை வாழ்த்த தோன்றுகிறது . அவர் தொழில் முறை ஓவியர் இல்லை. அவர் மருத்துவ விஞ்ஞானி தூரத்து ... |
| Posted: 14 Apr 2015 05:12 AM PDT - – என் தலைமுடியை பிடித்து உன் பச்சைநிற ரிப்பனில் உச்சிக் குடுமி போட்டுப்பார்த்தாய்… – உன் நெற்றி பொட்டு எடுத்து என்நெற்றியில் ஒட்டி அழகாகயிருக்கிறது என்று குதுகலித்தாய்… – சுடிதார் போட்டால் எப்படியிருப்பீங்க…! நீயே கற்பனை செய்துகொண்டு விழுந்து விழுந்து சிரித்தாய்…. – கொஞ்சுகையில் மீசை வேண்டாம் என்கிறாய் கெஞ்சுகையில் அதையே அழகு என்று.. என் மீசை எடுத்து உருமாற்றுகியாய்… – முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு… தூக்கிவிட்டிருந்த காலரை மடித்துவிட்டு நொடிக்கொருமுறை எனை அலங்கரிக்கிறாய்..! – வீட்டில் ... |
| கள்ளிப் பூ கூட அழகாயிருக்கிறது…! Posted: 14 Apr 2015 05:04 AM PDT மகளிர் கல்லூரி – தினசரிபூக்கும் குறிஞ்சிப் பூக்கள் – ------------------------------------------------------------- பார்வை – உன் தோட்டத்துக் கள்ளிப் பூக்கூட அழகாயிருக்கிறது தண்ணீர் விடுவது நீயாக இருப்பதால்…! – -------------------------------------------------------------- கருப்பை – அனைவருக்கும் கிடைக்கும் பத்து மாத முதல் வகுப்புச் சிறை! – ----------------------------------------------------------- சாதீ – சாதிக்க வேண்டும் – நண்பா சாதிக்க வேண்டும் நாம் சாதிப்பதற்கு ஏன் ... |
| கேளுங்க…கேளுங்க…கேட்டுக்கிட்டே இருங்க..!! Posted: 14 Apr 2015 04:59 AM PDT எல்லா மனிதர்களும் இருக்கிறார்கள் எல்லா மனிதர்களும் இறக்கிறார்கள் எல்லா மனிதர்களும் வாழ்கிறார்களா..? – இன்று கடவுளைச் சந்தித்தால் என்ன கேட்கலாம்…? நாளை என்றொரு நாளைக் கேட்கலாம். – நாம் தேடும் மகிழ்ச்சி, சுதந்திரம் மன அமைதி எல்லாம்… எப்போது நமக்குக் கிடைக்கும்..? – மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும்மன அமைதிக்கும்… நாம் காரணமாகிற போது கிடைக்கும்..! – அவமானங்களை எப்படி எதிர்கொள்ளலாம்? ரொம்பச் சின்ன அவமானமா? நிராகரிக்கலாம் கொஞ்சம் சின்ன அவமானமா? பார்த்து சிரிக்கலாம் பொருட்பொடுத்தக்கூடிய ... |
| Posted: 14 Apr 2015 04:57 AM PDT - - அம்பின் முனையொத்த வடிவத்தில் வானில் சென்று கொண்டிருந்தன புள்ளினங்கள்.எங்கோ பழந்தின்று இரை தேடி இடம் பெயர்கிறது என்றாள் பாட்டி பேரனிடம். காற்றை கிழித்துச் செல்லவும் நெடுந்தூரம் பறக்கவும் என இயற்பியல் பயின்றான் பள்ளி மாணவன் அழகியலின் தத்துவமாய் அதை வரைந்து கொண்டிருந்தான் ஓவியன். காட்டை சுமந்து கொண்டு பறந்து சென்று கொண்டிருக்கின்றன பறவைகள். ========= —ஐயப்பன் கிருஷ்ணன் |
| அர்த்தமுள்ள இந்து மதம் mp3 வடிவில் தரவிறக்கம் Posted: 14 Apr 2015 04:57 AM PDT அர்த்தமுள்ள இந்து மதம் விளக்கவுரையுடன் தமிழில் அதுவும் mp3வடிவில் தரவிறக்கம் செய்ய http://www.eegarai.com/mp3/Arthamulla_Hindu_Madham/Arthamulla_Hindu_Madham_1.mp3 http://www.eegarai.com/mp3/Arthamulla_Hindu_Madham/Arthamulla_Hindu_Madham_2.mp3 http://www.eegarai.com/mp3/Arthamulla_Hindu_Madham/Arthamulla_Hindu_Madham_3.mp3 http://www.eegarai.com/mp3/Arthamulla_Hindu_Madham/Arthamulla_Hindu_Madham_4.mp3 http://www.eegarai.com/mp3/Arthamulla_Hindu_Madham/Arthamulla_Hindu_Madham_5.mp3 http://www.eegarai.com/mp3/Arthamulla_Hindu_Madham/Arthamulla_Hindu_Madham_6.mp3 வாழ்க ... |
| ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Posted: 14 Apr 2015 04:57 AM PDT அன்புடையீர் : என் பேர் ரங்கராஜன் , வயது 66, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் வசிக்கிறேன் ! ஒய்வு பெற்றபின், மூலிகை தோட்டம் என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு ! சுமார் 150 மூலிகை மற்றும் பூ பழ வகைகள் என்னுடைய மொட்டை மாடி தோட்டத்திலும், வீட்டை சுற்றியும் வளர்த்து வருகிறேன். அழு கன்னி @ ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி கேள்விப்பட்டு கிட்டத்தட்ட 1 வருட காலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் ! கடல் ஓர உப்பு நிலத்தில் நிறைய காணலாம் என கேள்விப்பட்டேன் ஆனால் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சீ. ஆர் சாலை ஒட்டிய பகுதிகளில் ... |
| Posted: 14 Apr 2015 04:52 AM PDT - --- வாழை மரங்களை ஜோடியாக வெட்டி சாய்த்து பிரித்துக் கட்டி வைக்கிறோம் வாழ்க்கை ஜோடிகளை சேர்த்துக் கட்டி வைக்கக…! – ——————— ஆதி ஈசுவரன் சிறகுகளும் சிலுவைகளும்- கவிதை தொகுப்பிலிருந்து |
| Posted: 14 Apr 2015 04:49 AM PDT - இராதா… உனது கண்களின் வசியமோ எனது தாபத்தின் வேகமோ ரோஜா இதழ்களென்று முத்தமிட்டு விட்டேனே… …தப்பா…? – ஆமாம் கண்ணா… முள்ளை முள்ளால் எடுப்பது போல்… தண்டனை உனக்கு தந்தே தீருவேன்! – கொண்டு வா என் அருகில் உனது குறும்பு உதடுகளை…! – ——————————- ஆதி ஈசுவரன் சிறகுகளும் சிலுவைகளும்- கவிதை தொகுப்பிலிருந்து |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(365) Posted: 14 Apr 2015 04:45 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 14 Apr 2015 04:40 AM PDT பறவைகள் பலவிதம்.. 1.பையா எனும் பறவை மனிதனைப்போல் விசிலடிக்கும் திறனுடையது. 2.பெங்குவின் நீருக்கடியில் நீந்தும் திறனுடையது. 3. கிவி எனும் பறவைக்கு வயிற்றில் பல் உள்ளது. 4.நெருப்புக்கோழியானது கற்களைத்தின்னும் திறனுடையது. 5.வாத்து ஒருகண்பார்வை திறனுடையது. 6.ஆந்தையானது தனது கழுத்தை வட்டமாக சுழற்றும் தன்மையுடையது. 7.பிட்டா எனும் பறவை ஒன்பது வண்ணங்களையுடையது. 8.ஆண்டியன் காண்டர் எனும் பறவையாது சிறகையடிக்காமல் வெகுதூரம் பறக்கும் திறனுடையது. 9.பால்கன் எனும் பறவை வெகுதூரத்தில் ... |
| Posted: 14 Apr 2015 04:37 AM PDT [color:d6e8= #660000]பூமகளின் புன்னகைபோல் பூத்திடு வோமே - கம்பன் பாமணக்குந் தமிழினைப்போல் பரிமளிப் போமே. [color:d6e8= #009900] வண்ணவண்ணச் சேலைகட்டி மகிழ்ந்திருப் போமே- இந்த மண்ணகமும் விண்ணகமாய் மாறச் செய்வோமே. மங்கையர்க்கும் ஆடவர்க்கும் மணமுடிப் போமே - மன்னர் தங்கமுடி மீதும்நாங்கள் தங்கி வாழ்வோமே. கரும்பினிலு மினியரசம் கருதி வைப்போமே - அதை விரும்பிவரும் நண்பருக்கு விருந்தளிப் போமே. ஈசனருள் வேண்டிநிதம் இணையடி போற்றி - நல்ல வாசமெழு தூபதீபம் வழங்கி நிற்போமே. 1935 - ஜூலை - ... |
| பி. பி. ஸ்ரீனிவாஸ் – திரைப்படப் பின்னணிப் பாடகர்- நினைவு நாள் Posted: 14 Apr 2015 04:33 AM PDT - பி. பி. ஸ்ரீநிவாஸ் (Prativadi Bhayankara Sreenivas, செப்டம்பர் 22, 1930 – ஏப்ரல் 14, 2013) - - தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து 1951 இல் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. கனஹிபரது என்ற ... |
| Posted: 14 Apr 2015 04:29 AM PDT பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது. வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. புலாவ் , பருப்பு போட்டு கூட்டு செய்யலாம். பாலக் பனீர் ரொம்ப பிரசிதம். |
| செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Posted: 14 Apr 2015 03:52 AM PDT சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தனது ஜாமின் காலத்தை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., மனு செய்துள்ளார். - இந்த மனு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது. - |
| சாவுக்கு காத்திருக்கும் 8 ஆயிரம் பேர் Posted: 14 Apr 2015 03:17 AM PDT இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தூக்கு தண்டனை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலிபான்கள் தாக்குதலில் அப்பாவிகள் பலர் உயிர் இழந்ததால், அவர்களை தண்டிப்பதற்காக மீண்டும் தூக்கு தண்டனையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. முதலில் பயங்கரவாதிகளை மட்டுமே பாக்., அரசு தூக்கிலிட்டு வந்தது. தற்போது, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் தூக்கில் போட அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில், கொலை குற்றவாளி ஒருவரை ... |
| Posted: 14 Apr 2015 03:14 AM PDT ரமண பகவான் [அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான், ரமணமகரி"களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.] {எழுதியவர் திரு இ.ஆர்.கோவிந்தன், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
-