Tamil News | Online Tamil News |
- கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்:சர்ச்சையை கிளப்பும் தத்துவின் உத்தரவு
- போலி சான்றிதழ்கள் மூலம் சுருட்டிய பணம் ரூ.100 கோடி: பல பல்கலைக்கழகங்களை திணறடித்த கும்பல்
- பழைய எண்ணங்களை மறந்து தொழில் துவங்க வாருங்கள்: ஜெர்மன் தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு
- இந்தியாவை 10 ஆண்டுகளாக உளவு பார்த்து வரும் சீனா!
- 'இணைய சமநிலை' கோரி இந்தியாவில் யுத்தம்!
- ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் பயணிகள் இல்லாமல் கிளம்பிய ரயில்: 16 லட்சம் ரூபாய் இழப்பு
- அ.தி.மு.க.,விடம் தேர்தல் நிதி மலையளவு தி.மு.க.,விடம் சிறுதுளியளவு: கருணாநிதி
- தமிழ் புத்தாண்டுக்கு ஜெ., வாழ்த்து முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்தில்லை
- பரபரப்பு அடங்கும் வரை கிருஷ்ணா நீர்: ஆந்திராவின் ரகசிய திட்டம் அம்பலம்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டி
- ஜனதா பரிவாரில் இணைய முலாயம் சிங் அடம்: நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு எட்டப்படுமா?
| கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்:சர்ச்சையை கிளப்பும் தத்துவின் உத்தரவு Posted: பெங்களூரு: கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த திரேந்திர ஹிராலால் வகேலா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு விரைவில் வழங்க உள்ள நிலையில் இந்த இடமாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி திரேந்திர ஹிராலால் வகேலாவை, ஒடிசாவிற்கு இடமாற்றம் செய்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ... |
| போலி சான்றிதழ்கள் மூலம் சுருட்டிய பணம் ரூ.100 கோடி: பல பல்கலைக்கழகங்களை திணறடித்த கும்பல் Posted: எட்டாம் வகுப்பு படித்தவருக்கு கூட, எம்.பி.பி.எஸ்., மற்றும் பொறியியல் சான்றிதழ் விற்ற கும்பல், அரசுத் துறைகள் மற்றும் பல பல்கலைக்கழகங்களை திணறடித்துள்ளது. இந்த கும்பல், போலி சான்றிதழ் விற்பனை மூலம், 100 கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த அருண்குமார், அழகிரி மற்றும் மதுரை வாலிபர் கார்த்திகேயன் ஆகியோர், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய, போலி சான்றிதழ்கள் அளித்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சில் செயலர், தட்சிணாமூர்த்தி, ... |
| பழைய எண்ணங்களை மறந்து தொழில் துவங்க வாருங்கள்: ஜெர்மன் தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு Posted: ஹனோவர்: ''இந்தியாவை, உலகின் உற்பத்தி மையமாக மாற்ற என்னென்ன திருத்தங்கள் தேவையோ, அவை எல்லாம் செய்யப்படும். அதனால், ஜெர்மன் தொழிலதிபர்கள் இந்தியாவைப் பற்றிய பழைய எண்ணங்களை மறந்து விட்டு, தற்போதைய புதிய சூழ்நிலையில், தொழில் துவங்க முன்வர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் தற்போது, ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹனோவர் நகரில் துவங்கியுள்ள கண்காட்சியில், இந்திய அரங்கத்தை திறந்து வைத்தார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின், அங்கு நடைபெற்ற இந்திய - ... |
| இந்தியாவை 10 ஆண்டுகளாக உளவு பார்த்து வரும் சீனா! Posted: புதுடில்லி: இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் கம்ப்யூட்டர் தகவல்களை, கடந்த, 10 ஆண்டுகளாக, சீனா உளவு பார்த்து வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, பையர் ஐ என்ற வலைதள பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:கடந்த, 2005ம் ஆண்டு முதல், கணினி நாசக்காரர்கள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய தகவல்களை திருடி வருகின்றனர்.குறிப்பாக, அரசு விவரங்கள், முக்கிய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களின் மின்னஞ்சல்கள், பொருளாதாரம், ராணுவம் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றை இலக்காக ... |
| 'இணைய சமநிலை' கோரி இந்தியாவில் யுத்தம்! Posted: புதுடில்லி: இந்தியாவில், 25 கோடி பேர், இணைய வசதியை பெற்றிருக்கும் நிலையில், 'இணைய சமநிலை' குறித்த காரசாரமான விவாதம், மறுபடியும் கிளம்பி இருக்கிறது.இது வரையிலும், இணைய சமநிலை கோரி, ஒரு லட்சம் இந்திய இணைய பயன்பாட்டாளர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அமைப்பிற்கு, இ - மெயில் அனுப்பியிருக்கின்றனர். எல்லோருக்கும் சுதந்திரமாக, சமமாக இணைய வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்பது தான், இணைய சமநிலை கொள்கையின் அடிப்படை.சட்டத்திற்கு புறம்பில்லாத தகவல் மற்றும் சேவைகளை இணையத்தில் பெறுவதில், இணைய சேவை வழங்குபவர்களும் அரசும், பாரபட்சம் காட்டக் ... |
| ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் பயணிகள் இல்லாமல் கிளம்பிய ரயில்: 16 லட்சம் ரூபாய் இழப்பு Posted: லக்னோ: ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, மும்பையில் இருந்து லக்னோவுக்கு வந்த சிறப்பு ரயில், பயணிகள் இன்றி காலியாக வந்தது.மும்பையில் இருந்து லக்னோவுக்கு, கடந்த 12ம் தேதி, மாலை 4:20 மணிக்கு, லோக்மான்ய திலக், 'ஏசி' சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயிலில், முதல் வகுப்பு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, 'ஏசி' மற்றும் மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டி என, மொத்தம், 900 படுக்கைகள் இருந்தது.ஆனால், ரயில் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன், பிற்பகல் 1:00 மணியளவில் தான், இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது. ஞாயிற்றுக் கிழமை என்பதால், மதியம் இரண்டு மணி வரை ... |
| அ.தி.மு.க.,விடம் தேர்தல் நிதி மலையளவு தி.மு.க.,விடம் சிறுதுளியளவு: கருணாநிதி Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த ஒரு மாதத்தில் தேர்தல் நிதி, இரண்டு கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 275 ரூபாய் சேர்ந்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியினர் நம்மோடு மோதுவதற்கு, ஏற்கனவே குவித்து வைத்திருக்கின்ற, பல தரப்பட்ட வகைகளிலும் சம்பாதித்து வைத்திருக்கின்ற நிதியையும், நாம் இன்று சேர்த்து வைத்திருக்கின்ற நிதியின் அளவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்களிடம் குவிந்திருப்பது மலையளவு; நம்மிடமோ சிறு துளியளவு.இந்த சிறுதுளி அளவைக் கொண்டு தான், அந்த மலை அளவைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.கிராமங்களில், 'வெறும் ... |
| தமிழ் புத்தாண்டுக்கு ஜெ., வாழ்த்து முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்தில்லை Posted: சென்னை: தமிழ் புத்தாண்டுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், வாழ்த்து தெரிவிக்கவில்லை; ஆனால், ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், ஆயுத பூஜை, விஜய தசமிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஜெயலலிதா சிறையில் இருந்தார்.ஜெயலலிதா ஜாமினில் வெளிவந்த பின், அவர் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவிப்பதில்லை.தமிழ் புத்தாண்டையொட்டி, ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தி:தமிழ் மக்கள், பண்டை காலம் தொட்டு, சித்திரை முதல் நாளை, தமிழ் புத்தாண்டு நாளாக, உற்சாகமாக கொண்டாடி ... |
| பரபரப்பு அடங்கும் வரை கிருஷ்ணா நீர்: ஆந்திராவின் ரகசிய திட்டம் அம்பலம் Posted: தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் வரை கிருஷ்ணா நீரை திறக்க, ஆந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், கடந்தாண்டு இதே நாளில், 2.97 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. தற்போது, 2.28 டி.எம்.சி., அளவே உள்ளது. சென்னையில், ஒருமாத குடிநீர் தேவை, ஒரு டி.எம்.சி., கோடைக்காலத்தில் ஏரிகளில் உள்ள நீர் அதிகளவில் ஆவியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், கிருஷ்ணா நீர் திறப்பை, கடந்த மாதம் 20ம் தேதியுடன், ஆந்திரா நிறுத்திக் கொண்டது. 2014 - 15ல், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 12 டி.எம்.சி., நீரில், 4.70 டி.எம்.சி., மட்டுமே தரப்பட்டது. ... |
| அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டி Posted: வாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக ஹிலாரி கிளிண்டன்,67 டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இத்துடன் ஒரு வீடியோவையும் மின்னஞ்சலையும் தன் ஆதரவாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கை நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கூறுகின்றனர். இத்துடன் தான் போட்டியிடுவதற்கான காரணங்களையும் ஹிலாரி விளக்குகிறார். அவரது உரை: அமெரிக்கர்கள் கடுமையான பொருளாதார சூழலில் இருந்து மீண்டுள்ளனர். அதன் பயன் பரவலாக ... |
| ஜனதா பரிவாரில் இணைய முலாயம் சிங் அடம்: நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு எட்டப்படுமா? Posted: தனித்தனியாக உள்ள ஜனதா கட்சிகளை இணைத்து, 'ஜனதா பரிவார்' என்ற பெயரில், ஒரே கட்சியாக இயங்குவது தொடர்பான ஆலோசனையில், கடும் இழுபறி நீடிக்கிறது. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், இதில் இணைவதற்கு தயங்குவதால், லாலு, நிதிஷ்குமார், தேவகவுடா உள்ளிட்ட தலைவர்கள், நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.லோக்சபா தேர்தலில், நரேந்திர மோடி தலைமையில், மிகப்பெரிய வெற்றியை பா.ஜ., பெற்றது. இதையடுத்து, ஜனதா கட்சிகளின் தலைவர்கள் பலரும், தாங்கள் ஒருங்கிணைய வேண்டுமென்பதில் ஆர்வம் காட்ட துவங்கினர். பீகார் அரசியலில் பெரும் பங்கு வகிக்கும், முதல்வர் நிதிஷ் குமாரும், முன்னாள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 14,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |