Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்

Posted: 13 Apr 2015 02:50 PM PDT

புதுடெல்லி: - - பெரும்பாலான மக்களிடையே பிளவு, வேறுபாட்டை ஏற்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப் படுகின்றன. அந்த விருதுகள் வழங்கப்படுவதைக் கண்டிப்பாக மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பத்ம விருதுகள் நேர்மையற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது பத்ம விருதுகளை நிறுத்த வேண்டும் என்றும் சரத்யாதவ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ...

ஒரு நிமிடக் கதை: இழப்பு

Posted: 13 Apr 2015 02:44 PM PDT

- – அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி. "ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!" "ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?" சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர். "எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல ...

நவீன மகளிர் மட்டும்

Posted: 13 Apr 2015 02:43 PM PDT

நீ மெல்லமாய்க் காதல் மொழிவதை ரசித்துக்கொண்டே இருப்பேன்....... என்றாலும் இம்முறை கொஞ்சமேனும் உரக்கச் சொல்லி விடு...!! இசைத் தெரிவாளனின் அதிர்விசை ஆர்வமிகுதிகள் எகிறிக்கொண்டிருக்கிறது....... உதடுகள் அழகாயிருப்பதாய் சொல்கிறேன்.... அப்போ உதட்டுச் சாயம்.....? முறைக்கிறாய்.... அது பூச்சு என்கிறேன்...... பூசியிருக்க மாதிரியா இருக்கு....?!!! மறுபடியும் முதலிலிருந்து.... குதிகால் உயரங்களில் உறைந்த நான்... கை பற்றிக்கொள்ள வருகிறேன்... வலதுகண் உயரத் தூக்கி வேண்டாமென மறுக்கிறாய்... முடுக்கத்தில் ...

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்!

Posted: 13 Apr 2015 02:27 PM PDT

சைத்ர விஷூ புண்ணிய காலம் என்பார்கள் சித்திரை மாதப் பிறப்பை. ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை வசந்த ருது என்பார்கள். அற்புதமான இந்த மாதத்தில் உரிய வழிபாடுகளும் திருக்கோயில் தரிசனமும் செய்து நம் வாழ்வையும் வசந்தமாக்கிக் கொள்ளலாம்! சித்திரை முதல் நாளன்று பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு. இந்த தினத்தில் வீடுகளில் மட்டுமல்ல கோயில்களிலும் பஞ்சாங்கம் படிப்பார்கள். திதி, ...

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Posted: 13 Apr 2015 02:19 PM PDT

சித்திரை மாதம் பிறப்பதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் `சித்திரை திருநாள் ` வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் ...

நான் கொண்டாடும் புத்தாண்டு..!

Posted: 13 Apr 2015 02:14 PM PDT

- ஆசான் இல்லாமல் கற்றுக்கொண்டேன் காதல் என்ற பாடத்தை..! – ————————— – நான் கொண்டாடும் புத்தாண்டு உன் பிறந்த நாள்..! – —————————– – அடிக்கடி கண்ணாடி பார்க்கிறேன் என்னைப் பார்ப்பதற்கு அல்ல உன்னைப் பார்ப்பதற்கு..! – ——————————- – அவள் தவிக்க விட்டு மட்டுமல்ல தாடியையும் தந்து விட்டுத்தான் போனாள்..! – ——————————- – காதலர்கள் இறந்தும் காதலுக்கு வெற்றி கல்லறையில்..! – ——————————— லி.நொஷத் என் மனசுக்குள் எப்படி வந்தாய் -கவிதை தொகுப்பிலிருந்து

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Posted: 13 Apr 2015 02:09 PM PDT

இனிமேல்....ஈஸியாக, வாட்ஸ் ஆப்பில்... போட்டோ அனுப்ப முடியாது! யூ- டியூபில் படம் பார்க்க முடியாது. ஸ்கைபில் பேச முடியாது. புதுசு புதுசாக கண்ணில் படும் ஆப்ஸ்களை எல்லாம் டவுன் லோடு செய்து பயன்படுத்த முடியாது. ஏர்டெல், ரிலையன்ஸ்... என்று யாருடைய சர்வீஸை பயன்படுத்துகிறோமோ அந்த சர்வீஸ் புரோவைடர்கள் சொல்லும் ஆப்ஸை மட்டுமே டவுன் லோடு செய்து... அவர்கள் காட்டும் மெசெஞ்சரில் மட்டுமே செய்திகளை பரிமாறிக் கொண்டு அவர்கள் சொல்லும் வலைத்தளத்தில் மட்டுமே வீடியோக்களைப் பார்க்கும் அடிமைகளாக வெகு சீக்கிரமே ...

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

Posted: 13 Apr 2015 02:02 PM PDT

திராவிட கழகதலைவர் கி.வீரமணி, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலி அகற்றும் போராட்டமும், மாட்டுக்கறி உணவு சாப்பிடும் போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, அகில இந்திய இந்து மகாசபா, சிவசேனா போன்ற இந்து அமைப்புக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பில், திராவிட கழகம் அறிவித்துள்ள போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், போராட்டத்தை அறிவித்துள்ள திராவிட ...

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Posted: 13 Apr 2015 11:40 AM PDT

வணக்கம்

கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.

தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.

ராஜா

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Posted: 13 Apr 2015 10:31 AM PDT


-

-

மன்மதக் குழந்தை !

Posted: 13 Apr 2015 10:13 AM PDT

மன்மதக் குழந்தை ! பத்துமாதம் பைசுமந்து பத்துமாதம் மடிசுமந்து ஐந்தாண்டு கை சுமந்து பின்பு ஆயுளெல்லாம் மனம் சுமக்கும் மாதாவை நாம் அறிவோம். அதுபோல் பனிரெண்டு மாதங்கள் இரண்டிரண்டாய் ருதுவாக பனிக்காலம் வெயில்காலம் இளவேனிர்க்காலமென பூகம்பம் வெள்ளங்கள் இவையெல்லாம் கடந்து இங்கே பெற்றுவிட்டாள் ஒரு குழந்தை மன்மதப் பெயர் கொண்டு புத்தாண்டு பிறந்ததடா பூமித்தாய் பெற்றுவிட்டாள் நாமவனை நன்றாய் வளர்த்திடவே நானொரு வழி சொல்வேன் நல்லதெனப்பட்டால் கேளுங்கள் அல்லதென்றால் அகன்றிடுங்கள் மன்மதக் ...

நான் ரசித்தவை - மிமீஸ்

Posted: 13 Apr 2015 10:10 AM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சி!

Posted: 13 Apr 2015 09:59 AM PDT

- – போர்ச்சுக்கல் நாட்டில் மெடீரா என்ற இடத்தில், சாலையை ஒட்டி, ஓர் நீர்வீழ்ச்சி உள்ளது. இதற்கு, நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சி என்று பெயர். இச்சாலையை கடக்கும்போது, காருக்குள் உட்கார்ந்தபடியே நீர்வீழ்ச்சியில் நனையலாம். இதனால், சிலசமயம், இந்த நீர்வீழ்ச்சியை கடக்க நீண்ட நேரம் ஆகி, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை கடப்பதற்குள் கார்கள் சுத்தமாகி, 'பளீச்'சென்று ஆகிவிடுகிறது. 'வாட்டர் வாஷ்' பணம் மிச்சம்! – — ஜோல்னாபையன்.

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Posted: 13 Apr 2015 09:11 AM PDT

வணக்கம் நண்பர்களே ....
எனக்கு இலவச ஈமெயில் ஐடி வேண்டும் அதாவது (சந்தோஷ்@கம்பெனிநேம்.காம்)


நன்றி .

மன்மதா நீ ஓடிவா

Posted: 13 Apr 2015 08:46 AM PDT

மன்மதா நீ ஓடிவா மன்மதா நீ ஓடிவா, வருடம்  முழுதும்   கூடவா !   மண்  மனம் மகிழ , அருள் பல தா ! மகிழ்ச்சிகள்   பல வரவாகட்டும்  நெகிழ்ச்சிகள்  சில  செலவாகட்டும்  அன்பும் அறனும்  சேமிப்பாகட்டும்  பண்பும் செயலும் வைப்பு நிதியாகட்டும்   மன்மத வருடம் -மனமகிழ் வருடம் .  மன்மதன் என்பவன் அழகன் உயரம் - சிலருக்கு அழகு உருண்டை முகம்- சிலருக்கு  அழகு கருங்கூந்தல்-  சிலருக்கு அழகு கருந்தோலும்- சிலருக்கு  அழகு பல்லழகு- சிலருக்கு  சொல்லழகு- சிலருக்கு  கையெழத்து அழகு- சிலருக்கு  தலையெழுத்து ...

ஒரு திருடன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்…! –

Posted: 13 Apr 2015 08:43 AM PDT

நேத்து ஒரு திருடன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்…! – இதுக்குத்தான் வீடு கட்டி முடிச்சதும் கையோட காலிங்பெல் வைக்கணும்னு சொல்றது..! – ஆர்.கவின்டோனி மார்ஷ் – —————————————- – இந்த ஆபிஸ்ல லஞ்சம் தலைவிரித்து ஆடுதுன்னு நினைக்கிறேன்…! – எப்படி சொல்றே? – பத்தாயிரத்துக்கு மேல் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு குக்கர், நான் ஸ்டிக் தவா போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்னு போர்டு எழுதி வெச்சிருக்காங்களே…! – ஜெ.கண்ணன் – —————————————— – அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே? – சுகர் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (108)

Posted: 13 Apr 2015 08:35 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா

Posted: 13 Apr 2015 08:13 AM PDT

மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்று, எரிச்சல் போன்ற பலவிதமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான நாப்கின் ஒன்றை, 'வனிஷா' நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. - - சென்னை ஹையாட் ரீஜென்சியில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பேசியதாவது... ''மனதில் ஏற்றுக் கொண்ட ஒன்று சில நேரங்களில் வார்த்தையாக வர மறுக்கும். அதுபோல் தான் பெண் சமுதாயம் முன்னேறி விட்டது என வார்த்தைகளில் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(364)

Posted: 13 Apr 2015 08:12 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

சூரியன் எரியும் கதை !

Posted: 13 Apr 2015 08:11 AM PDT

சூரியனும் சந்திரனும் ஒரு விருந்திற்கு சென்றார்கள்.அங்கே வடை ,பாயாசத்துடன் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. உணவை விரைவாக வயிறு நிறைய சாப்பிட்ட சூரியன் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டான். வீட்டிற்கு வந்த சூரியனைப் பார்த்து அம்மா கேட்டார், " வாடா, பெரியவனே விருந்தெல்லாம் முடிந்ததா ?" "முடிந்தது அம்மா ! ,இது போன்ற உணவை இதற்கு முன்பு உண்டதில்லை " "எங்கடா மகனே எனக்கு உணவு ?" சூரியன் மேலும் கீழும் விழித்தான். அப்போது சந்திரனும் வீடு வந்து சேர்ந்தான். சந்திரனிடமும் அதே கேள்விகளை அம்மா கேட்டார் ...

ந.க.துறைவன் புதுக்கவிதை

Posted: 13 Apr 2015 07:24 AM PDT

சுபம்….சுகம்….!! * பேரூந்தில், நடைபாதையில் திருமணக் கூட்டம் திருமண மண்டபங்களில் மாப்பிள்ளை – பெண் வரவேற்பு கலகலப்பானப் பேச்சுக்கள் இசைக் கச்சேரியின் இரைச்சல் வரிசையில் நின்று பரிசுப் பொருள்கள் அன்பளிப்புச் செய்து வாழ்த்துபவர்கள் சிரித்த முகத்தோடு வீடீயோ, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கைக் குலுக்குகிறார்கள். உணவு கூடத்தில் சத்தமிட்டு பரிமாறல்கள் தேவையானவற்றைக் கேட்டு விரும்பிச் சாப்பிடுபவர்களின் அவசரச் சத்தங்கள். முடித்தவர்கள் விரைந்து எழுந்துப் போய் கைகழுவி வெளியேறுபவர்களின் கைகளில் ...

மனிதா

Posted: 13 Apr 2015 06:51 AM PDT

---- மனிதா----- வாழ்கை என்னும் நீண்ட வெளியில் பிரயாணிக்கும் மனிதா! நீ வாழ..... மேகம் கருவுற்று நீரை பிரசவிக்க .... தென்றல் தேரேறி வந்து உயிர் கொடுக்க... உன்னை சுமப்பது தவிர வேறேதும் தெரியா பூமியென .... அடிப்படை அரண்களால்  ஆனந்தமாக இருக்கும் மனிதனே! உயிருள்ளவரை உள்ளதை கொடு !-இல்லை உள்ளத்தின் அன்பை கொடு! கரம் ,சிரம்,புறம் நீட்டாதிர் என்பது பேருந்து வாசகம்! கரம் நீட்டி .. சிரம் தாழ்த்தி.. இயலாமையைப் புறம் தள்ளி.. வாழ்வதே வாழ்க்கை! மயிலுக்குப் போர்வை.. முல்லைக்குத் ...

காதல்

Posted: 13 Apr 2015 05:38 AM PDT

காதல்
சிந்தனையும் உணர்ச்சியும் எதிர்மாறலில் கடும் போட்டியிட...
சிந்தனை அலுத்து உறங்கிய சில நொடிகளில் ...
சிரமமின்றி உள்நுழைந்தது உணர்ச்சி ...
காதலாய்!!!

என்னைப் பற்றிய அறிமுகம்

Posted: 13 Apr 2015 04:58 AM PDT

பெயர்: கட்டாரி (சரவணன் ஜெகநாதன் ) சொந்த ஊர்: பட்டுக்கோட்டை (தமிழ்நாடு ) இருப்பு : கோலாலம்பூர் (மலேசியா) ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் கவிதைகளுக்கான தளம் தேடி உலவியபோது  கண்டுகொண்டேன் பொழுதுபோக்கு: இசை ரசிப்பது. (இளையராஜா அவர்களின் பாடல்கள்  இல்லாத பொழுதுகள் போவதில்லை.) தொழில்: முதுநிலை மருந்தாக்கவியல் படித்திருக்கிறேன்.  கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன். மேலும் என்னைப் பற்றி: 1.தமிழை  இலக்கண விதிகளின் படி கற்றுத் தேர்ந்தவன் ...

கடன்கார நாடென்னும் போதினிலே..!

Posted: 13 Apr 2015 04:53 AM PDT

'மார்ட்டின் லூதர் கிங்குக்கு, அமெரிக்கா குறித்து பெரும் கனவு ஒன்று உண்டு. அதைப்போல, சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கும் உண்டு. வறுமை ஒழிப்பு, கல்வி, குடிநீர், துப்புரவு, பாதுகாப்பு, வளம், அமைதி... ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது லட்சியம். வரும் நூற்றாண்டில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என நான் கனவு காண்கிறேன்' - 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023' என்ற ஆவண வெளியீட்டு விழாவில், தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது இது. அந்தக் ...

இன்று அன்று | 1919 ஏப்ரல் 13: ஜாலியன் வாலாபாக்- துள்ளத் துடிக்கக் கொன்று குவித்த ஜெனரல் டயர்

Posted: 13 Apr 2015 04:02 AM PDT

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பொற்கோயிலுக்கு அருகில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடல். பிரிட்டிஷ் அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஆயிரக் கணக்கானோர் அங்கு கூடியிருந்தார்கள். (பலருக்கு ஊரடங்கு உத்தரவு பற்றி தெரியாது என்றும் கூறப்படு கிறது) அன்று சீக்கியர்களின் புனித நாளான பைசாகி தினம் என்பதால் சீக்கிய பக்தர்கள் அதிக அளவில் இருந்தார்கள். 1699-ல் இந்த தினத்தில்தான் ஏற்றத்தாழ் வற்ற தூய்மையான கால்சாவை உருவாக்கி னார் 10-வது சீக்கிய குரு கோவிந்த் சிங். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று ...

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்கத்தான் ஓட்டம்

Posted: 13 Apr 2015 02:53 AM PDT

- சென்னை: மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற, 'பிங்கத்தான்' ஓட்டம் சென்னையில் நடந்தது.தமிழகத்தில், பெண்களுக்கான மார்பக புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 30வயதுக்கு உட்பட்ட பெண்கள், உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும், என, அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக, பாரத ஸ்டேட் வங்கி ஒருங்கிணைப்பின் கீழ், நேற்று, 'பிங்கத்தான்' ஓட்டம் நடந்தது. தீவுத்திடலில், ஆட்டம், பாட்டத்துடன் ...

மாற்றம் வேண்டும்!

Posted: 13 Apr 2015 02:46 AM PDT

- ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து வைப்பதால், அவரது கல்வி பாதிக்கப்படும், சிறுவயதில் பிள்ளைப்பேறால் அவரது உடல் நலன் பாதிக்கப்படும் என்பதால் தான் திருமண வயதைக் குறைக்கக்கூடாது என்று யுனிசெப் வலியுறுத்துகிறது. இருப்பினும், குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடைபெறவே செய்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் கிராம்ப்புற பகுதிகளில், பெண் குழந்தைகளுக்கு 14 -18, வயதில் அதிக அளவில் அட்சய திருதியை நாளன்று திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது – இதை தடுக்க அம்மாநில சுகாதாரத் துறை ...

ஆரூடங்கள் பொய்த்த வாசற்படி

Posted: 13 Apr 2015 02:33 AM PDT

இவன் வாசற்படி ஏறிய நேரமாகவும் இருக்கலாம்... அப்பாவின் மரணம் குறித்த ஆரூடங்கள் இந்த அமாவாசைக்கும் தள்ளிப் போன உந்துதலில் நான் அவ்வாறாக வரையறுத்திருக்கையில்.... அவனும்.. ஒதுங்கியவாறே புன்னகைத்து நகர.... வருகைக்கு காத்திருந்த அப்பாவும்.... செருமிக்கொண்டே சிரித்துக் கொண்டார்..... இப்போதைக்கு அல்ல... மீதமுள்ள எப்போதைக்கும் அவரால் அதுமட்டும்தான் முடியும்... இவனுக்கு...நிறைய வேலையிருக்கிறது... மூத்திரக் கோவணம்.. மலம் கசிந்த வேட்டித்துணியென... துவைத்து... சர்க்கரை தின்றுவிட்டிருந்த கட்டைவிரல் ...

காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954

Posted: 13 Apr 2015 02:14 AM PDT

காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் ...

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!

Posted: 13 Apr 2015 02:03 AM PDT

சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச் சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா புதிரான உலகமடா _ உண்மைக்கு எதிரான உலகமடா _ இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா - இந்த வரிகள் திரைப்பாடலில் இடம் பெறவில்லை . குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் ...

டாக்டர், வக்கீல் பட்டங்கள் போலியாக அச்சிட்டு விற்பனை பெண் உள்பட 3 பேர் கைது

Posted: 13 Apr 2015 01:35 AM PDT

சென்னையில் டாக்டர், வக்கீல் படிப்பிற்கான பட்டங்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பார் கவுன்சில் செயலர் புகார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி சென்னை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கடந்த மாதம் 25–ந் தேதி அன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:– பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில், 3 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் போலியாக உள்ளது, ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. ...

13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது தாய் மீண்டும் கர்ப்பம்

Posted: 13 Apr 2015 01:32 AM PDT

பெர்லின்: 13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது கொண்ட ஜெர்மன் தாய் ஒருவர் மீண்டும் நான்கு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். அனிகிரிட்ரவுனிக் என்ற 65 பெண் ஒருவர் ஜெர்மனியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசி குழந்தையாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பெண் குழந்தையி்ன் விருப்பத்திற்கிணங்க மீண்டும் கர்ப்பமானார். தற்போது அவர் நான்கு குழந்தைகளைவயிற்றி்ல் சுமந்து வருகிறார். இச்சம்பவம் ஜெர்மனி நாட்டில் பெரும் பரபரப்பை ...

Net Neutrality - அதிகரிக்கும் இன்டர்நெட் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுங்கள்!

Posted: 12 Apr 2015 11:47 PM PDT

இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திய ஆப்ஸ்களான ஸ்கைப், வைபர், வாட்ஸப் போன்றவற்றை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்றால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே! இந்த கட்டணத்துக்கு எதிராக, அதாவது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக, ட்ராய் கேட்கும் 20 கேள்விகளுக்கும் உங்கள் பதிலைப் இங்கு பதிவு செய்யுங்கள். இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர் சொல்லும் கருத்தை வைத்து தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. உங்கள் பதில்கள் நாளைய செல்போன் கட்டணத்தை தீர்மானிப்பவையாக ...

திருக்குறள் காவியம்

Posted: 12 Apr 2015 11:45 PM PDT

இசை வடிவில் 1330 திருக்குறளையும் கேட்டு மகிழுங்கள்! MP3 யாகத் தரவிறக்கம் செய்ய! http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam_158MB.mp3 158MB 64 bitrate http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam.mp3 476MB 192 bitrate

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 12 Apr 2015 11:18 PM PDT

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™