Tamil News | Online Tamil News |
- மின் நிலையம் 'மக்கர்' பண்ணாம செயல்படணும்...! 'கிடா' வெட்டி பூஜை போட்ட அதிகாரிகள்
- 'அக்ரிக்கு' பொருட்கள் வாங்கித் தர சிறை வார்டன்களுக்கு திடீர் தடை
- 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்': ஆந்திர போலீசார் எச்சரிக்கை
- 'கொட்ட போகிறது ரூ.1 லட்சம் கோடி': டில்லியில் தமிழக அரசு அதிரடி
- காங்., - எம்.பி.,க்களிடம் பங்களாக்கள் பறிப்பு
- நேதாஜியை நேரு உளவு பார்த்தாரா?
- 36 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குகிறது இந்தியா
- மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் லக்வி விடுதலை: பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கண்டனம்
- கோவில் தங்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டத்துக்கு வரவேற்பு: அரசின் புது திட்டம் மூலம் கோவில்களுக்கும் வருமானம்
| மின் நிலையம் 'மக்கர்' பண்ணாம செயல்படணும்...! 'கிடா' வெட்டி பூஜை போட்ட அதிகாரிகள் Posted: ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், வழுதூர் எரிவாயு மின் நிலையத்தின், இரண்டாவது யூனிட், பழுதின்றி செயல்பட வேண்டி, கோவிலில், ஏழு, 'கிடா'க்களை வெட்டி, அதிகாரிகள், ஊழியர்கள் பூஜை நடத்தினர். இந்த எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில், 95 மெகாவாட் மின்திறன் கொண்ட முதல் யூனிட், கடந்த, 2004ம் ஆண்டிலும், 92.2 மெகாவாட் மின்திறன் கொண்ட, இரண்டாவது யூனிட், கடந்த, 2008ம் ஆண்டிலும் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, டிச., இறுதி வாரத்தில், இரண்டாவது யூனிட்டில், மின் உற்பத்தியை அதிகரித்தபோது, உதிரி பாகங்கள் உருகியதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்து, கடந்த ஜன., 22ல், மீண்டும் ... |
| 'அக்ரிக்கு' பொருட்கள் வாங்கித் தர சிறை வார்டன்களுக்கு திடீர் தடை Posted: திருநெல்வேலி: நெல்லை மத்திய சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் சிறை வார்டன்கள் நெருங்கிப்பழக, பொருட்கள் வாங்கித்தர சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதாகி நெல்லை மத்திய சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வந்த புதிதில் கொளுத்தும் வெயிலால் சிரமப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் குறைந்த வெப்பத்தால் தப்பியுள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை, மதுரையை சேர்ந்த வக்கீல் விஸ்வநாதன் தினமும் சந்தித்து வருகிறார். நெல்லை மத்திய சிறையில், திங்கள், புதன், ... |
| 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்': ஆந்திர போலீசார் எச்சரிக்கை Posted: வேலூர்: 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால், சுட்டுத் தள்ளுவோம்' என, ஆந்திர மாநில போலீசார் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.ஆந்திராவில், போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர்; இது, தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், ஆந்திர மாநிலம், செம்மரம் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் ஏ.எஸ்.பி., மல்கோத்ரா, சித்தூரில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தின் சொத்து செம்மரம்; செம்மரம் வெட்டவும், அதை கடத்தவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், ... |
| 'கொட்ட போகிறது ரூ.1 லட்சம் கோடி': டில்லியில் தமிழக அரசு அதிரடி Posted: 'தமிழகத்தில், தொழில் முதலீட்டுக்கான சூழ்நிலைகள் சிறப்பாக உள்ளன. அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பின், தமிழகத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான, தொழில் முதலீடுகளை எதிர்பார்க்கப்படுகிறது' என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. |
| காங்., - எம்.பி.,க்களிடம் பங்களாக்கள் பறிப்பு Posted: புதுடில்லி: காங்கிரசை சேர்ந்த மூன்று எம்.பி.,க்கள் உட்பட, ஐந்து எம்.பி.,க் களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. அது போல, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கிற்கு டில்லியில் ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவும் பெறப்பட்டுள்ளது.அமைச்சர்கள், எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா, இல்லங்கள் ஒதுக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கும், வீட்டு வசதி தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.* காங்கிரசை சேர்ந்த, சஞ்சய் சிங், ... |
| நேதாஜியை நேரு உளவு பார்த்தாரா? Posted: புதுடில்லி: நம்மை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டீஷாருக்கு எதிராக, 'இந்திய தேசிய ராணுவம்' என்ற பெயரில், தனி ராணுவத்தை ஏற்படுத்திய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்த பின், அவரின் குடும்பத்தினரை, அப்போதைய பிரதமர் நேரு உளவு பார்த்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஐ.பி., உளவு அமைப்பு, சில கோப்புகளை சமீபத்தில் அழித்ததாகவும், அந்த கோப்புகள், நேதாஜி குடும்பத்தினரை உளவு பார்க்க, அப்போதைய பிரதமர் நேரு உத்தரவிட்டது தொடர்பானது எனவும் செய்திகள் வெளியாயின. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1897ல் பிறந்து, 1945ல் மறைந்தார். அவர் இறந்து ... |
| 36 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குகிறது இந்தியா Posted: பாரீஸ்: நான்கு நாள் பயணமாக, நேற்று முன்தினம் பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, நேற்று அந்நாட்டின் அதிபர் ஹோலந்தே மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். இதன் பின்னர்,பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, பிரதமர் மோடி - அதிபர் ஹாலாந்தே இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. பிரான்ஸ் தொழிற்சாலைகளை இந்தியாவில் துவக்க வேண்டும்; மகாராஷ்டிராவின் ஜெய்தாபூரில், 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்திக்கான அணு உலைகள் அமைப்பது, ரபேல் போர் விமானங்களை பெறுவது தொடர்பாகவே இருந்தது. பிரான்ஸ் அதிபர் ஹோலந்தேயுடன், செய்னெ நதியில், ... |
| மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் லக்வி விடுதலை: பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கண்டனம் Posted: லாகூர்: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட, லஷ்கர் - இ - தொய்பா தலைவர் ஜகியுர் ரகுமான் லக்வி, 55, ஆறு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், நேற்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டான். லக்வி கைது தொடர்பான, பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவை, தள்ளுபடி செய்த லாகூர் ஐகோர்ட், லக்வியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது. |
| Posted: புதுடில்லி : இந்து கோவில்களில் உள்ள தங்கத்தை வங்கிகள் மூலம் பெற்று, அதற்கு ஈடாக வட்டி அளிக்கும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் செலவாகும் அன்னிய செலாவணியை வெகுவாகக் குறைக்கவும், கடத்தல் தங்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோவில்களும் அதிக அளவு வட்டி பணத்தைப் பெற்று, கோவில் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை, பலரும் வரவேற்றுள்ளனர்.முந்தைய அரசுகளைப் போல இல்லாமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, புதுமையான பல ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 11,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |